Friday, December 30, 2011

மூன்றாம்பாலின் மகத்துவம் சொர்கம்,பாம்பு,ஆப்பிள்,அறிவின் மரம்,ஆதம்-ஏவாள் இதற்க்கெல்லாம் அர்த்தம் என்ன?

தெய்வ வாக்கின் இரகசியங்கள்!

இறையே இயம்பி இறைத்தூதர் அருளியதாக நாம் அறிந்த்தது ,

வன்முறை தான் அடையாளமா?

இஸ்லாமியர்கள்,யார் இவர்கள்?

Thursday, December 29, 2011

Friday, December 23, 2011

என்ன கொடும சரவணன் சார்???


கனிமொழிக்கு பிணை கிடைக்கும் முன்பு வரை ,விகடன் குழுமப் பத்திரிகைகளில் பொதுவாக திருமதி . கனிமொழி பற்றி இயோ பாவம் வகையறாவில் வருத்தம் தோய்ந்த கட்டுரைகளாக வெளிவந்து கொண்டிருந்தது ,

Wednesday, December 21, 2011

சிறகை விரி ! பற !!-பாரதி பாஸ்கர்


மண்ணில் நல்ல வண்ணம் வாழ்வோம் -தமிழருவி மணியம்


காமராசர் - தமிழருவி மணியம்

விடாமுயற்சிகளும் விரக்திகளும்-"நீயா நானா "கோபிநாத்

"நீயா நானா " கோபிநாத் by cardionice

மொழி வாழ்த்து

அடலேறு வன்மொழி ஈந்து,அலையின்
கடலேறு இன்பத்தொல் நற்தமிழே -பட்டின்
மடலேறு மன்றத்தின் மாசற்றார் மன்னும்
உடலேறு முத்தவிழ் சொற்றமிழே வந்திற்
திடலேறு வண்டொளி வாழி
                                                       

மொழியின் சுவை

மலரிடையே றுந்தேனாம் தீஞ்சுவையின் மன்றுடையாம்
மல்லிடையள் ளுந்தையாம் வீறொன்றுடன் வாழுடையாம்
சொல்லிடைகா ணல்லவையி லங்கமையுஞ் சந்துடையாம்
பள்ளிடையேழ் கண்டொளிர்ந்த பண்டமிழை வணங்கேனே !!

ஜனவரி ஏன் ஜனவரி ?

ஜனவரி : இது கதவுகளின் ரோமனியக்கடவுளான ஜனசை குறிக்கும் மாதம்.இவருக்கு முகம் நேரெதிர் திசைகளை நோக்கியவாறு இருக்கும்,ரோமன் நம்பிக்கைப்படி ஒரு கழியும் வருடத்தையும் மறு முகம் புதிய வருடத்தையும் பர்க்கிரதாம் ஜனஸ் கடவுள்.

Tuesday, December 20, 2011

இதற்கு இவ்வளவு நேரம் மட்டுமே போதும்

நம்மால் ஒரு நிமிடத்திற்குள் என்ன செய்ய முடியும்? , யோசிப்பதற்குள் ஒரு நிமிடம் முடிந்துவிடும் அல்லவா?, ஆனால் சில நிகழ்வுகள் யோசிக்கும் அந்த வினாடிகளிலேயே முடிந்துவிடுகிறது.அவை ,

தமிழில் தட்டச்சு வெகு சுலபமாச்சு

 google - தமிழில் டைப் செய்ய  
      தமிழில் டைப் செய்ய தெரியலியா? கவலையை விடுங்கள்.

Saturday, December 17, 2011

100 கோடி தரியா? இல்ல!!!!!!!!!!???????

யாருக்கு 100 கோடி என்கிறீர்களா…. டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டுக்குத்தான் 100 கோடி வேண்டுமாம்.  தமிழ்நாட்டில், தமிழனின் உழைப்பில் வியாபாரம் நடத்திப் பிழைக்கும் டைம்ஸ் ஆப் இந்தியா நாளேட்டின் சென்னைப் பதிப்பு அலுவலகத்தில், மலையாளிகளின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறக்கிறது, செய்திகளைத் தாண்டி, மலையாள வெறி தெரிகிறது என்று தி வீக்என்ட் லீடர் இணைய தளம் ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது.

கேக்கறவன் கேனையா இருந்தா?????

கேக்கறவன் கேனையா இருந்தா கேப்பைலயும் நெய் வடியுதும்பாங்க..இதுல யாரு கேனையன் , நாம் சொல்லத்தேவை இல்லை இறுதியில் வாசிப்பவர்க்கே தெரிந்துவிடும், பொதுவாக பத்திரிக்கையின் முதல் பக்கம் நாட்டின் பற்றி எரிகிற பிரச்னையை எடுத்துரைப்பதால் அது அந்நியர்களுக்கு நம் நாட்டின் முகவரி போல் இருக்க வேண்டும். அல்லவா?  .இங்கு ஒரு பத்திரிக்கையின் முதல் பக்கத்தை பாருங்கள் ,

வேற்றுமையில் ஒற்றுமை இன்னும் எத்தனை காலத்திற்கு????


Rising emotions, falling objectivity, the truth behind Mullaiperiyar coverage in Chennai newsrooms

By Radhika Giri
17 Dec 2011
Posted 05-Dec-2011 
Vol 2 Issue Radhika Giri48
Closely following the reportage in the various English newspapers on the latest eruption of the Mullaiperiyar dam issue, I have some serious doubts over the professional integrity of journalists from Kerala.
If journalists writing for Malayalam newspapers seek to reflect the state government’s views and the local people’s sentiments without bothering about the truth, it is one thing. But when Malayalee journalists working for the English media, that too in Tamil Nadu, do that, it is a matter of concern.

ஷாலினி பாடல்

பாப் ஷாலினியின் பாடல்,அவர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது பாடியதாம்,இது அவரின் முதல் பாடல்.

உசேலே உசேலே பாடல்
 இந்த பாடலை யாரவது மறக்க முடியுமா,என்ன அருமையான பாடல். உசேலே உசேலே ஸ்ரீநிவாஸ் பாடல்தொகுப்பு.

மழையே மழையே பாடல்.பின்னணிப் பாடகி சித்ராவின் குரலில் ஒலிக்கும் இப்பாடல்  ,உசேலே உசேலே  எனும் பாடகர் ஸ்ரீநிவாஸ் பாடல் தொகுப்பில் உள்ள அழகான பாடல்.  

Friday, December 16, 2011


களஞ்சியம் என்றால் ??

சங்க காலங்களில் நெற்களஞ்சியங்கள் மிகவும் பிரசித்தி பெற்றது நம் தமிழகத்தில் , போரடித்து நெற்குவிக்கும் தமிழர் கூட்டம் என்று கூட சொல்வார்கள் , ஆனால்

Wednesday, December 14, 2011

நீதியா????கிலோ என்ன விலை


கடந்த ஆண்டு ஏப்ரல் 2010ல் சிபிஐ அதிகாரிகள், மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் என்பவரை, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்கப் பட்டார்.  இவர் கைதை ஒட்டி, சிபிஐ கேதன் தேசாய் கடைசியாக அனுமதி அளித்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை எடுத்து ஆராய்ந்தனர் சிபிஐ அதிகாரிகள். இந்தப் பட்டியலில் சிக்குவது பாலாஜி மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு,

Tuesday, December 13, 2011

மேலும் 394 சங்கத் தமிழ் படைப்புக்களைக் காண

இது மதுரை தமிழ் இலக்கிய மின்பதிப்புத் திட்டத்தின் இணைப்பு . பல சங்கத்தமிழ் நூல்கள் இங்கே குவிக்கப்பட்டுள்ளன.சங்கத் தமிழ் படைப்புகள், என்றால் ஒன்றல்ல இரண்டல்ல ஒட்டு மொத்தமாக 394  நூல்கள்.தமிழ் ஆர்வலர்களுக்கு இது ஒரு மொழி விருந்து.தன்னார்வத்தொண்டு எண்ணத்தோடு இலவசமாக அனைத்து நூல்களையும் தரவிறக்கம் செய்து கொள்ளும் வசதியையும் அளித்துள்ளார்கள்.

சிலப்பதிகாரம்

இளங்கோவடிகள்  - சிலப்பதிகாரம்

அம்மாவின் இன்னொரு முகம்

சிங்கத்த போட்டோ ல பார்த்திருப்போம் டிவி ல பார்த்திருப்போம், ஏன் கூண்டுலகோடா பார்த்திருப்போம் ,வெறித்தனமா தனிய நின்னு வேட்டையாடி பார்த்திருப்போமா? வெளியூர் பத்திரிக்கைகாரன குதறினத பார்த்திருப்போமா??இதோ பாருங்கள் தமிழ் சிங்கம் , நம் புரட்சி தலைவி.அன்பே உருவான நம்ம அம்மா தான் இது. பேட்டி கண்டவர் கரன் தப்பார், பிபிசி தொலைக்காட்சிக்காக, அப்போது நடந்தது தான் இந்த ரண களம்.

Monday, December 12, 2011

நினைவுகள் மூளையில் எப்படி பதிகின்றன?

மீன்வாடையுடன் சேர்ந்து வீசும் உப்புக் காற்றைப் பிளந்தபடி, கட்டுமர முகப்புக் கட்டையை மார்பில் ஏந்திக் கொண்டு, அலைகளைத் தாவித் தாவி சமாளித்துக் கொண்டு நான் ஓடுவேன். கழுத்தாழம் தண்ணீர் வந்ததும் கரை நோக்கிப் பாயும் அலையில் மரக்கட்டைமீது படுத்துக் கொண்டு அலை ஓடுவேன். எத்தனை முறை விளையாடினாலும் இந்த விளையாட்டு எனக்குச் சளைக்காது. உப்பு படிந்து காய்ந்துபோன என் முதுகு இழுத்துக் கட்டிய டமாரத்தோல் மாதிரி இருக்கும்.

மனம்

அதிகாலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு, நெற்றிக்கு இட்டுக்கொண்டு, நேற்று பாதியில் நிறுத்திவிட்ட பாடத்தைப் படிக்க ஆரம்பிக்கிறார் நமது நண்பர் முருகன். இந்த வேலைகளை செய்வதற்கு அவரது கண்கள் முதலான ஐம்புலன்களும் கால் கை முதலான உடல் கருவிகளும் உதவுகின்றன. கண் முதலான கருவிகளை அறிவுக் கருவிகள் என்றும் கை முதலான கருவிகளை செய்கருவிகள் என்றும் நாம் அழைக்கலாம். இவை யாவும் முருகனின் உடம்புக்கு வெளியே நிகழும் செயல்களுக்குக் காரணமாக உள்ளன. ஆதலால் இவற்றைப் புறக் கருவிகள் என்று அழைப்பது வழக்கம்.

கருத்துபெட்டிக்குள்,அனைத்து தலைப்புகளிலும் பலரது கருத்துக்களை,பல்வேறு நிகழ்வுகளை,பத்திரமாய் பாதுகாக்கும் பேழை இது.

திருக் குறள்


Friday, December 9, 2011

நீலிக்கண்ணீர், வேறென்ன...?

லண்டனில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிக்கு டெள கெமிக்கல்ஸ் நிறுவனம் புரவலர்களில் ஒருவராக இருக்கக்கூடாது என்று சர்வதேச ஒலிம்பிக் கமிட்டியிடம் எதிர்ப்பு தெரிவியுங்கள் என்று இந்திய விளையாட்டு அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.  டிசம்பர் 3, 1984ம் ஆண்டு போபாலில் நடைபெற்ற விஷவாயுக் கசிவுக்குக் காரணமான யூனியன் கார்பைடு நிறுவனத்தை வாங்கியுள்ள நிறுவனம்தான் டெள கெமிக்கல்ஸ். ஆகவேதான் இந்த எதிர்ப்பைத் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.  

GREETINGS

NICE ventures blogs crosses 1000 hits and may be it is small but it is one of our dream milestones.for which  without you it cannot be possible,so its our esteemed privilege for us to appreciate and thank for the encouragement and support from
                                                   friends,  
                                                   bloggers, 
                                                   internet surfers, 
                                                 healthcare workers, 
                                       and all others,without them this cannot be achieved.
And in this time we would like to  share our happiness with u all..HAPPY BLOGGING...

எம்பா வாத்திய கோஷ்டிலாம் ரெடி யா ?


Kanimozhi-_20110223symஅனைவரும்
     வந்திங்டுங்க...

    அவசியம்
    வந்திடுங்க...

    வானூர்தி
    நிலையத்திற்கு
    வரவேற்க
    வந்திடுங்க...

    வேகமாக
    வந்திடுங்க...

   வெறுங்கையா
   வந்திடாம

   பூமாலை
   பொன்னாடையோடு
   புயல்போல
   வந்திடுங்க!

ஆபத்பாந்தவன்-ஐய்யோ பாவம் நாடு!!

இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் சுப்ரமணியன் சுவாமியை டிசம்பர் 17 அன்று 2ஜி வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சி சொல்ல உத்தரவிட்டிருக்கிறது.  சுப்ரமணியன் சுவாமி 17 அன்று சொல்லும் சாட்சியின் அடிப்படையில், சிபிஐ இணை இயக்குநர் ஒருவரும் நிதி அமைச்சக அதிகாரி ஒருவரையும் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பது டிசம்பர் 17 அன்று முடிவு செய்யப் படும். அதன் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப் படும்.

Thursday, December 8, 2011

அலைப்பொலிகள்


NICE

கஞ்சா (morphine )- அறிவியல் குறிப்புகள்

அணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்?-பகுதி 2

கேரளா போலீஸ், தமிழக எல்லையருகே 5 பேருக்கு மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடி நிற்க தடை விதித்துள்ளது. தமிழக முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தில் கேரள மாநில பதிவுடன் வரும் வாகனங்கள்மீது தாக்குதல் நடாத்த வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழக-கேரள எல்லைப் பகுதியில் இரு பக்கத்திலும் தாக்குதல்கள் தொடருவதாக செய்திகள் வருகின்றன. இரு மாநில அரசுகளும் மத்திய அரசிடம் பஞ்சாயத்துக்காக சென்றுள்ளன.

அணை உடையட்டும்; தேச ஒற்றுமை உடைந்தால்?

பருவமழை நின்றுவிட்டது. முல்லைப் பெரியாறு நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை இல்லாததால் அணைக்கு வரும் நீர் வரத்தும் குறைந்துவிட்டது. அணையில் இப்போது இருக்கும் நீரின் அளவும் இறங்கிவந்துவிட்டது. ஆனால், இரு மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேலும் மேலும் விரிசலாகிக் கொண்டே போகிறது.  

சுதந்திர அடிமைகள்

எதிரிகளை மட்டுமன்றி, நாட்டில் நிலவும் உட்பகை குறித்தும் உளவு பார்ப்பது ஏற்கக்கூடியதாகவே இருந்து வருகிறது. ஆனால், ஒவ்வொரு மனிதனையும் ஒற்றுப்பார்த்து, அவர்தம் அந்தரங்க விவகாரங்களையும் தெரிந்துகொள்வது சரியா?, 

Wednesday, December 7, 2011

நெஞ்சம் உண்டு ; நேர்மை உண்டு

நீல நிறம் ; வானுக்கும் மண்ணுக்கும்

செந்தமிழ் பாடும்

சாம்ராட் அசோகா- சாருக் கான்

திருவிளையாடல்-நினைவில் நீங்கா அருமையான காவியம்

நல்ல நேரம் - புரட்சித்தலைவரின் பசுமையான படம்

காஞ்சிவரம்-பிரகாஷ் ராஜ் இன் சிறந்த நடிப்பு

திரைப்படங்கள்


சிங்கம் - இந்தி

ராஜா சார்

இனியதுமயக்கம் என்ன பின்னணி இசை

தரவிறக்கம்

இவ்வகம்

கணினி , தொழில்நுட்பம் போன்ற பல அறிவியல் நுணுக்கங்கள் அடங்கியுள்ளன .

பகுதிகள்

கொலவெறி பாடல்

தொகுப்புகள்


அடிடா அவனை


தனது வார்த்தைகளால் ஆட்களை அலறவைத்த ஒரு மாநகர் மேயர், இப்போது வெறும் வார்த்தைகளோடு நின்றுவிடுவதில்லை. கையை முறுக்கி அலற வைக்கிறார்.

Dont Make Mountain Out of Molehills - Joel Osteen

முல்லைப்பெரியார் அணை உண்மை நிலை

Staying Passionate.

Resisting Temptations

வகைப்பாடு

Britney Spears-I wanna Go

இசை வகைகள்

Justin Bieber

காலத்தின் கொடுமை

பொதுவாக திருட்டு இரண்டு வகைப் படும். ஒன்று சில்லறைத் திருட்டு, இரண்டு படுபயங்கரக் கொள்ளை. அது என்ன மாயமோ தெரில என்ன மந்திரமோ தெரில வயித்துப் பொழப்புக்கு,ஒரு நூறு ரூபா எவனாவது பிக் பாக்கெட் அடிச்சா, அவன நாயடி பேயடி அடிச்சு தொவச்சு இஸ்திரி போடாம விடமாட்டாங்க ஆனா அதுவே தொகை கொஞ்சம் பெருசா இருந்த அவ்வளவு தான் ராஜ மரியாத தந்து வழி அனுப்பிவிடுவாங்க.இதுக்குப் பேர் தான் கலி காலமா ?.

Tuesday, December 6, 2011

தம்பி 11 லட்சம்
annadurai_11இன்றைய சூழலில் யாராவது எங்காவது அண்ணாவின் ஆவி பேசியது என்றால் உண்மையான தி.மு.க.காரன் ஒப்புக்கொள்ளமாட்டான். ஆனால், இன்று உண்மையான தி.மு.க.காரன் என்று மார்தட்டி சொல்வதற்கு யாருக்குமே தகுதியில்லை என்று ஆகிவிட்ட பிறகு, அண்ணாவின் ஆவி பேசினார் என்று சொல்வதில் தவறேயில்லை.

காவல் துறை நமக்கு நண்பனா?

தோட்டம் காக்கப் போட்ட வேலி பயிரைத் தின்பதோ, அதைக் கேள்வி கேட்க ஆளில்லாமல் பார்த்து நிற்பதோ என்றார் கவிஞர் கண்ணதாசன்.  இது யாருக்குப் பொருந்துமோ இல்லையோ, தமிழக காவல்துறைக்கு நன்றாகவே பொருந்தும்.
கவின்மிகு காணொளி சித்திரங்கள், மாசு அளிக்காத சிந்தை தூண்டல் .
திரை இசை , மிகவும் ரசிக்கப் பட்ட இசைகள்
  எண்ணங்கள் மனிதனை ஆள்கின்றன , அந்த எண்ணத்தை வெளிக்காட்டும் வாய்க்கால் நீரிது .

Wednesday, November 30, 2011

அன்பளிப்பு


நீருண்ணும் உடம்பு; இறுதியில்,
மண்ணுக்கு பரிசாகும்

வாழ்வின் ஒளி

 
 முத்துகள் சிப்பிக்குள் தானே
தஞ்சம் கொண்டது, உன்னில் ஏன் ?
மென்மைக்கு பாடம் சொல்லும் 
செவ்விதழில் முந்தி நிற்குது.

ஆசைத்தீ

அடங்காத நதி குறுக்கே கல்பரப்பிப் போகின்றாய்,

கூந்தல்

காதலுக்கும் கீதம் உண்டு:
வார்த்தை இல்லா ஓசையது.

சுகம்

குளிர் தென்றல் கோவையிலே! சாரல் மழை வீசையிலே!

காதல் பொழுதுகள்

கனவு கண்ணில் இல்லாகிப்போனால்;
கண்கள் வேண்டாம், கனவே போதும் !

உன்னால் முடியும்

மரத்தினை காற்றசைக்கும்; கூடும்
 
மணற்குவி கல்அதனை புனல் அசைக்கும் ;
 

கரும்பினை எறும்பசைக்க;
---மனசே உன்
உருவத்திற்கு என்ன பயன்??????????????????? .
 

புலனடக்கம்

நிலமிசைச் சான்றோரும் மைவழி மக்கட்கு
குலதோங்க உரைத்ததுமீதோ -மடையோய்
புலத் துணர் உந்தன் உயிராய் பெறுதல்
நலத்தோடு நாய் விதி சேர்
                                            -நேரிசை வெண்பா  

Tuesday, November 29, 2011

Monday, November 28, 2011

பிரிவு

கட்டிக்கொள்ளும் கருத்தோட 
காத்திருக்கும் வேலையில 
கண்மறந்து  காலெடுத்த வேகம்மென்ன ?

வீங்கி போன புண் மனசு 
வெந்துபோகும் கொடுமைஎல்லாம் 
கண்ணால பார்த்த பின்னும் 
பறக்கும் ரெக்கை கொண்டதென்ன ?

புழு நெருப்பில் துடிக்குதுன்னு  
காதெல்லாம் கேட்டிருந்தும் 
நீரில்லா நதிகாட்டி 
காத்தோட போனதென்ன ?

வார்த்தைக்கு அடிமை என்றாய் 
என் கோட்டில் வாழ்வென்றாய் 
ஒரு சலனம் தோன்றியதும் 
பொய்யான தோற்றமென்ன ?

கணமான இதயத்தை 
தாங்குவதுன் கைகள்  தான்
ரண மான இப்போது 
திரும்பாத கரமென்ன?

விட்டில் தான் வெளிச்சத்தில்,
விட்டு விடும் தன்உயிரை !
ஆசை தீ எனை இழுக்க 
அழிவனென்று தெரிந்திருந்தும் 
அடைகாத்து ஆற்றாமல் 
அலை கடலைகடந்ததென்ன ?

விளக்கேத்த போறேன்னுன 
விளங்காம போயிநானும் 
விலங்காக ஆனா பின்னும் 
விரட்டாம நெருப்பெடுத்து
நீ பிடிச்ச ஓட்டமென்ன  ?

ஓடிப்போன கழுதைஎல்லாம் 
ஒரு நாளில் புத்தி பெற்று 
ஊரை நோக்கி ஊர்ந்து வந்தா 
ஆசையெனும் ஆழியிலே 
அத்தனையும்  அழிஞ்சிருக்கும் !
மீதமென்ன அங்கிருக்கும்? -
 ஆனாலும்!!!!!!!!!!!!!!!
குட்டிச் சுவரொன்னுவரவேற்கும்  
பின்ன கழுத கேட்ட குட்டிச் சுவர் தான !!!!!

ஆனந்த கடல்

மழை துளி ஏற்கும் மண்ணின் உருதனை
மணந்தாய் ஏற்றாய் என் மன வடிவே
                           
புண்ணிய நதியாய்  புலன்களை கழுவி

அன்பிலே சேர்ந்தாய் ஆனந்த கடலே


Sunday, November 27, 2011

அன்பு


வாடுமந்த வற்றிப்போன வோடைபார்த்து 
நீலகொண்டை அன்னமே!
நாடியதன் பிணியறுக்க அலகில் சேரும்
கயலும் அந்த வண்ணமே

தேடும் காதல் தெளியவைக்க
நாளும்வேண்டும் நமக்குஇந்த எண்ணமே 
ஏடுசொல்லி எர்க்கதோர் கொள்ளுங்கள் 
அன்பினுக்கு இதுமொரு சின்னமே !!

பெண்சாதி

உயிரில்  என்னில் நீ பாதி !
உடம்பால்  நீயென்  பெண்சாதி!
உறங்கும்போதேன்  போர்வையடி!
உணர்ந்தேன் எந்தன் மூச்சினில் நீ !

ஈன்ற  தாயும், எடுத்தியம்பும் எந்தையும்,
தோன்றும்  கழிவகற்றி வடிகட்டி யாமென் 
வடிவுக்கு அரசியுமாய் நீயாகி ;
ஈனப் பிறப்பெடுத்த என்றன் 
குலம் தழைக்க  குருத்தாய் 
அமைந்த இறையும்  நீ !!!!!

எண்ணம்

எண்ண அலைக் கூரையிலே
  என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
  நட்ட  இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
  கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
  சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
  உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
  தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
  வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
  கடவுளும் நம் அகமல்லோ !!


எயிறு

மாதுளை வரிசைகளில்
தேன்மழை நனைக்க,
என் தவம் செய்ததோ
இதழதை அணைக்க.

 

குறள்

ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கின்பம்
கூடி தழுவப் பெறின்

நரகம்கருநாகம் காத்திருக்கும் ! தெருநாயும் திரிநரியும்
சதைபிழந்ததை ருசிக்கும் !! மந்தி எள்ளி ,
மதயானை தள்ளி, பாதாளக் கர்கூர்மை
அங்கம் பிளந்து வெந்தழல், அடைவாய்!


(தீய பழக்கத்தை )

மறந்திடு மனமே ! பிறந்திடும் நலமே !!

உயிர்

மேகமகள் வெள்ளிமலர் உத்தரவு 
அடர்வனப் பூங்கா என் நிற 
துண்டு மர இருக்கை நேர் வந்தேன் 
பின்னோர் நெடு மரத்து  உச்சியில் 
வாண்டாய் மந்திக் கூட்டம்  ஆடும் 
தொடை  கண்ணப் பாலம் எழுப்பிய 
பிதாமகனாய் விழிமூடிய ஒருவன் 
அமர்ந்தான் கால் முன் சிறுகுட்டை 
முகம் விளங்கியது ஏனோ வாட்டம்?
பேரிடி அல்ல! : அதன் ஒலியால்!!,
திறந்தவன் விழியில் ஒரு துளி
மீனாய் அடையவும் மனையே ,
வனம் படித்து இனம் படித்து இறுதியில் 
அவன் மனமும் படித்தேன் ஒரு கேள்வி 
அறுகனதிற்கு வெடி மறப்பாய் ஏன்?
ஒரு கனதிற்கோ உயிர் துறப்பாய்!!
விழியொளி சிறுமுருவலோடு பதில் 
நீயார் எங்கிருந்து இவ்வொலி?
கருநிறதிருந்தும் தெரியலையோ? 
பாவம் !! அகன்றேன்  என் பேர் புகை!!!!!!!!!!!!!!!!!!!
 

ஏன்?

பதின் திங்கள் சுகமிழந்து மடியிருந்தது எதற்காக,