Tuesday, December 6, 2011

தம்பி 11 லட்சம்




annadurai_11இன்றைய சூழலில் யாராவது எங்காவது அண்ணாவின் ஆவி பேசியது என்றால் உண்மையான தி.மு.க.காரன் ஒப்புக்கொள்ளமாட்டான். ஆனால், இன்று உண்மையான தி.மு.க.காரன் என்று மார்தட்டி சொல்வதற்கு யாருக்குமே தகுதியில்லை என்று ஆகிவிட்ட பிறகு, அண்ணாவின் ஆவி பேசினார் என்று சொல்வதில் தவறேயில்லை.
ஆம். இன்று மாலை காற்று வாங்க மெரீனாவுக்கு சென்றேன். வழக்கம் போல, நடைப்பயிற்சி முடித்துவிட்டு, அண்ணா சமாதி அருகே சில நிமிடம் அமர்ந்துவிட்டு வருவேன். இன்று உட்கார்ந்த பிறகு, அண்ணாவின் குரல் கேட்டது. திடுக்கிட்டேன். மீண்டும் அதே குரல். அண்ணாவின் அசீரிரீ மாதிரி கேட்டது. ஒரு வேளை அண்ணாவின் ஆவியாக இருக்குமோ? ஆம். அண்ணாவின் ஆவி பேசியது நன்றாக கேட்டது.

”எனக்கு சமாதி கட்டியது கூட பரவாயில்லை. நான் எழுப்பிய தி.மு.க.வுக்கும்anna_karunanidhi_500 சேர்த்து சமாதி கட்டிவிட்டானே என் தம்பி கருணாநிதி. சமாதி கட்டுவதில் தம்பி சாமர்த்தியசாலி. அடுத்தவனுக்கும் சமாதி கட்டுவான். நான் வகுத்த கொள்கைகளுக்கும் சமாதி கட்டிவிட்டான். அதற்கு இத்தனை நாள் துணை இருந்த அன்பழகனை நினைத்தால் தான், கண்ணீர் வருகிறது.
இந்த நீச வேலையில் வேலையற்றதுகளும், வக்கறதுகளும் திக்கறதுகளும் பங்கேற்றன. ஆனால், அன்பழகனுமா… 90 வயதில் கூட உனது கெளரவம் காத்துக் கொள்ளக் கூட தெரியாதவனா நீ. யாரை வேண்டுமானலும் மன்னிக்கலாம். உன்னை?
வாயுக்கு வாய், “நான் பெரியார் பாசறையில் பயின்றவன். அண்ணா பள்ளியில் படித்தவன்” என்று சொல்லி சொல்லியே என்னையும்
அவமானப்படுத்தி, இன்று தி.மு.க.வையும் கேலிக்கூத்தாக்கிவிட்டானே என் தம்பி கருணாநிதி. மன்னியுங்கள் தமிழ் மக்களே. தம்பி என்று சொல்லவும் என் நா கூசுகிறது.
s2_600
கடைசி காலத்தில் பேரோடும் புகழோடும் சாக வேண்டும் என்று தான் எல்லாரும் நினைப்பான். ஆனால், என் தம்பி கருணாநிதி எதிலுமே வித்தியாசமானவன். ஊழலில் ஊழன்று, சிக்கலில் சிக்கி, பேரும் நாறிப் போய்… ஆம். அவன் ஆரம்பத்திலேயே வசூல் மன்னன். அவனுக்கு நான் வைத்த பெயர் 11 லட்சம். ஆம். அவன் லட்சத்திலேயே குறியாக இருந்தானே தவிர லட்சியத்தில் அல்ல.
வாரிசு அரசியல் என்ற பெயரில் கருணாநிதியின் குடும்பமே தி.மு.க.வை கபளீகரம் செய்து, இன்று கழகத்தை காலி செய்துவிட்டானே. அன்பழகா… நீயுமா… சி.ஐ.டி. காலனிக்குச் சென்று ஊழல் வழக்கில் சிக்கிய கனிமொழியை வரவேற்று விட்டு வந்திருக்கிறாய். இனி எனக்கு யாருமே தம்பிகளும் இல்லை. நான் உங்களுக்கு அண்ணனும் இல்லை.
அண்ணா இங்கே பிறக்க வேண்டியவர் இல்லை. வெளிநாட்டில் பிறந்திருந்தால், அவர் உலகத் தலைவர்களில் ஒருவராக போற்றப்பட்டிருப்பார் என்று கருணாநிதி பேசுவான். ஆம், தமிழ்நாட்டில் பிறந்ததற்காக, நான் வருத்தப்படுகிறேன். வேதனைப்படுகிறேன். வெட்கப்படுகிறேன்.
என் சமாதியை எடுத்துவிடுங்கள்.s11_600

ஊரெங்கும் இருக்கும் என் சிலைகளை அகற்றிவிடுங்கள்.
பாடப்புத்தங்களிலும், வரலாற்றிலும் அண்ணாதுரை என்ற பெயரே இல்லாது போனால், சந்தோஷப்படுவேன்.
கடமையும் போய், கண்ணியமும் போய் கட்டுப்பாடும் இல்லாத கூட்டத்தை வளர்த்த என்னைப் பற்றி எந்த தி.மு.க.காரனும் பேச வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
கடைசியாக… நான் காய்ச்சிய களங்கமில்லாத பாலில் ஒரு துளி விஷத்தை நானே ஊற்றிவிட்டு வந்துவிட்டேன். அந்த ஒரு துளி விஷம் யார் என்று நான் சொல்லி தெரிய வேண்டியதில்லை”
இதுதான் அண்ணா பேசியது.
ஆம். உடன்பிறப்புக்களே. அண்ணா ஆவி பேசியதா? இல்லை அண்ணாவின் ஜூவி பேசியதா என்ற ஆராய்ச்சியில் எல்லாம் ஈடுபடாமல் கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், கனிமொழியை வரவேற்கப் போன உண்மையான தி.மு.க.காரன் யாராவது இருந்தால், அவன் இருக்க வேண்டியதில்லை. ஒரு துளி விஷத்தை பருகிவிட வேண்டியதுதான்.
IMG_5188_600ஏன் இந்த கொலைவெறி என்று கேட்கலாம்?
கனிமொழிக்கு ஏனிந்த வரவேற்பு?
அவர் முல்லைப் பெரியாறு பிரச்னைக்காக டெல்லியில் 195 நாள் உண்ணா நோன்பு
இருந்து, பிரச்னையை தீர்த்துவிட்டு வந்தவரா?
தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்னைக்காக டெல்லியில் 195 நாட்கள் தொடர் போராட்டம் நடத்தி, மத்திய அரசை பணிய வைத்து, மீனவர்கள் வாழ்வாதரத்துக்கு உத்தரவாதம் வாங்கி வந்தவரா?
இலங்கைத் தமிழர்களின் பிரச்னைக்காக ஐ.நா. சபை அலுவலகம் முன்பு 195 நாட்கள் உண்ணாமல் இருந்து, இலங்கை அரசின் மீது உலக நாடுகள் தடை விதிக்க காரணமாக இருந்தவரா?
பின் எதற்காக இந்த வரவேற்பு?
IMG_5199_600

தேசமே வெட்கி தலை குனிந்த ஊழல் விவகாரத்தில் கனிமொழி கைதாகி ஜாமீனில் விடுதலையாகி இருக்கிறார். தி.மு.க.வின் கொள்கைப் பரப்புச் செயலாளர் ராசா இன்னும் திகார் சிறையில்தான் இருக்கிறார். இன்னும் வழக்கு விசாரணை முடியவில்லை. தீர்ப்பு வரவில்லை. இந்த நிலையில், சென்னை விமான நிலையம் வந்திறங்கிய கனிமொழிக்கு, விமான நிலையத்தில் இருந்து வீடு வரை வரவேற்பு.
குடும்பத்தில் யாரோ தவறு செய்துவிட்டு, சிறையில் இருந்தால் அவரை விட்டுவிட வேண்டும் என்று சொல்லவில்லை. அவரை அந்த குடும்பம் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அந்த குடும்பத்தினரும் அவரை கைவிட்டுவிட்டால்?
c2_600ஆக, கனிமொழி என்பவர் கட்சிக்காக சிறை செல்லவில்லை. அவர் ஓர் ஊழல் வழக்கில் சம்மந்தப்பட்டுள்ளார். அந்த வழக்கில் கைதாகி சிறையிலிருந்து வெளியே வரும் போது, அவரது குடும்பத்தினரும் நட்பு வட்டாரமும் தான் போய் வரவேற்றிருக்க வேண்டும்.
அதுவும் எப்படி? யாருக்கும் தெரியாமல் முக்காடு போட்டு அல்லவா அழைத்து வந்திருக்க வேண்டும். பிற்பகல் 1 மணிக்கு விமானம் என்றால், அந்த விமானத்தை சொல்லிவிட்டு, நள்ளிரவு 1 மணிக்கு வந்திறங்கும் விமானத்தில் வந்து, யாருக்கும் தெரியாமல் சென்றிருந்தால் அது கனிமொழிக்கும் நல்லது. அவர் சார்ந்த கட்சிக்கும் நல்லது.
ஆனால், நடந்து என்ன?
வழிநெடுக பேனர்கள். பிளக்ஸ்கள். தாரை தப்பட்டை. செண்டை மேளம். தப்பாட்டம் என்று கனிமொழிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றால், நாட்டு மக்கள் என்ன மாதிரி எடுத்துக் கொள்வார்கள்.
ஊழல் செய்யலாம் என்று தி.மு.க. புது கொள்கையை வகுத்துக் கொடுத்திருக்கிறதே? என்றுதான் மக்கள் பேசிக் கொண்டார்கள். ஆனால், இது தி.மு.க. தலைவர்களின் காதில் விழாத வண்ணம், செண்டை மேளச் சத்தம் ஒலித்துக் கொண்டிருக்கிறது. என்ன கொடுமை?
இதில் இன்னொரு கொடுமையை சொல்லியாக வேண்டும். அதாவது கனிமொழிc6_600 வரவேற்பில், சி.ஐ.டி. காலனி வீட்டு அருகே, எமன் போன்று உருவம் தரித்துக் கொண்டு ஓர் நாடகம் அரங்கேறியது. அதாவது எமன் போன்ற அரிதாரம் பூசியவர், கனிமொழியை கண்டு தோற்று ஓடுவது போல அந்த நாடகம். கனிமொழி வரும் போது, அந்த எமன் உருவத்தை கனிமொழி பார்க்க வேண்டுமாம்.
அப்படிப்பார்த்தால், இனி வாழ்க்கையில் எந்த வித “லைப் திரட்’ இருக்காது என்று கேரள ஜோதிடர் சொன்னாராம். அதைப் போலவே, அங்கே ஓர் எமன் போன்ற நபர் வீட்டை சுற்றிச் சுற்றி வந்து அலைந்துக் கொண்டிருந்தார்.
இப்படித்தான், கனிமொழி ஜாதகத்தில் கைது சம்பவமும், சிறை செல்லும் சம்பவமும் நடக்கும் என்று சொல்லப்பட்டதாம். அதற்காக, அவர் மீனவர் பிரச்னையை கண்டித்து மறியல் செய்து, கைதாகி வேனில் ஏற்றி, அன்று மாலையே அவரை விடுவித்தால், ஸ்பெக்ட்ரம் வழக்கில் கைது ஆக மாட்டார் என்று சொல்லி நாடகமும் நடத்தினார்கள். ஆனால், என்ன நடந்தது?
இந்த பகுத்தறிவு குடும்பத்தின் செயலை பார்த்தீர்களா? தி.மு.க. எம்.பி.யான ஆதி சங்கர் பொட்டு வைத்தால், இனிமேல் பொட்டு வைக்காதே என்று எச்சரிக்கும் தலைவர், இந்த கூத்துக்களை அனுமதிப்பார்.
ஆக, தி.மு.க.காரன் என்று சொல்லிக் கொள்ள இனி யாருக்கும் தகுதியில்லை. அந்த தகுதியை இழந்துவிட்டு திரிந்துக் கொண்டிருக்கும் திராவிட பின்னேற்ற கழகத்தை, நாறடித்துக் கொண்டிருப்பவர்களுக்கு… இனி ஊழல் செய்யுங்கள். குடும்பத்துடன் கொள்ளையடியுங்கள். சிறை செல்லுங்கள். குடும்பத்துடன் வாழ்க்கையை கொண்டாடுங்கள்.

நன்றி : தமிழ் லீடர்.

0 comments:

Post a Comment