Wednesday, September 26, 2012

குடி எப்படி குடியைக் கெடுக்கும்?


குடி குடியைக் கெடுக்கும் என்பது மற்றவர்களின் புலம்பல்,ஆனால் குடிமகன்களே குடிமகள்களே நீங்கள் குடிப்பதால் என்ன என்ன உடல் பாகங்களை எல்லாம்  இழக்கிறீர்கள் தெரியுமா?குடியால் முதலில் பறிபோகும் உறுப்பு உங்கள் மனமே,அடுத்து உங்கள் வயிறு,பின் கணையம்,ஈரல் இறுதியில் மூளை.இதயம் அப்புறம் அவ்ளோதான் சோலிமுடிஞ்சது.

முதலில் மனம்.
மனம் பறிபோனால் என்னாகும் உங்கள் மானம் போகும்.மானம் போய்விட்டால்???பிறகு நடைபிணம்தானே.
நல்ல மனைவி,நல்ல பிள்ளை நல்ல குடும்பம் எல்லாம் சிதைந்து போகும்.உன் மனைவிக்கு உன்னுடன் வாழப்பிடிக்காது.அதனால் விளையப்போவதை சொல்லத்தான் வேண்டுமா உனக்கு?

 அடுத்து பாதிப்பது -வயிறு.குடித்து குடித்து வயிற்று ஆசிட்டிடம் இருந்து காக்கவல்ல மியூக்கோசா கிழிந்து போய் எரோசிவ் ஆல்கஹாலிக் கேஸ்ட்ரைட்டிஸ் வந்துவிடும் அதனால் என்ன நடக்கும்??
அய்யோ அம்மா,வலி வலி வயித்த வலிக்குதே என்று காட்டுக்கத்து கத்த வேண்டியதுதான் உன் பாடு.எதையும் விழுங்க முடியாது உடனே வாந்திவரும்.சரியா வெளிக்கிகூடப் போகமுடியாதப்பா!

அடுத்தபடி எது பாதிக்கும் என்று சொன்னோம் ஈரல் அல்லவா? ஈரல் பாதிப்புனா எப்படி?புள்ளதாய்ச்சிங்க வயித்தப் பாத்துருக்கியா அப்படி உப்புனு வீங்கிக்கும்.
கேஸ்ட்ரைடிஸின் தாக்கம் இருக்கும் போதே உனக்கு ஹெப்படைட்டிஸும் உருவாகியிருக்கும்.
ஈரல் பீஸ் போயிடுச்சுன்னா,ரத்தம் கக்குவ,வெளிக்கி கருப்பாப் போகும்.உடம்புல உள்ள கெட்ட உப்புகள வெளியேற்றும் ஈரல் டமாரமாயிட்டதனால அந்த கெட்டதுகள்லாம் மூளைக்குப் போயி நரம்புகளத்தாக்கி உன் சுயநினைவிழக்கச் செய்திடும். சுயநினைவும் போயிடுச்சு,இரத்தமும் கக்கிக்கிட்டே இருக்கு அப்றோம் என்ன உன் உடம்பு ஆட்டோமேட்டிக்கா ஹைப்போவொலீமிக் சாக்கிற்குப்(hypovolemic shock) போய்விடும் உன்னைக்காப்பாற்ற அதுவே கடைசிதருணமாகிவிடும் அப்படியே விட்டா சீக்கிரமே மண்ணத்திங்கப் போவேண்டியதுதான்.இந்த நிலை முயற்சி செஞ்சாக்காப்பாத்தலாம்.ஆனா அதுக்கப்பறம் நல்ல படியா வாழ்ந்தரலாமுன்னு மட்டும் நினைச்சிராதப்பு.வயிறு உப்பியிருக்குல்ல அது அப்படியேதான் இருக்கும் அப்பப்ப இரத்தவாந்தி வரும் ,முக்கா பிணமாதான் உன்னால வாழமுடியும்.

ஈரல் மூளை ரெண்டு பாதிப்புக்கும் நடுவுல கணையம் வீங்கிக்கும்.அது உன்னை வலியோட உச்சத்துக்கே கொண்டுபோய்விடும்.Every action has an equal and opposite reaction என்பது நினைவிருக்குதுதா,அதுமாதிரி இத்தன நாளா குடிபோதைல எவ்வளோ சுகம் அனுபவிச்சையோ அதுக்கு ஈடான வலி உனக்கு வரும்.பச்சைதண்ணிகூட கொடுக்க மாட்டாங்க.மரண வலி.அய்யயோ அது கொடுமைடா சாமி.

இது எல்லாத்துலயிருந்தும் நவீன மருத்துவம் உன்னை காப்பாத்திட்டாலும்,சாராயம் ரத்தநாளத்தைக் கொஞ்சம் கொஞ்சமா தடிக்க வைச்சு ரத்தஓட்டத்தை தடுக்க ஆரம்பிக்கும்,அப்படி தடை படும் ரத்தஓட்டம் இதயத்தில் உள்ள ரத்தகுழாயா இருந்தா உனக்கு டிக்கெட் conform.ஏன்னா அது மாரடைப்பு - போய் சேர்ந்திட வேண்டியதுதான்.அதே தடை படும் ரத்தஓட்டம் மூளையி'ல் உள்ள ரத்தகுழாயா இருந்தா-மூலைல முடங்கிட வேண்டியது தான் .ஏன்னா அது பக்கவாதம்.


இத்தனையும் கேட்ட பிறகு மறுபடியும் நஷ்ட்டத்தில் இயங்கும் அரசுக்கு வருவாய் ஈட்டித்தர டாஸ்மாக் பக்கம் போனா, எமனோடஏஜென்ட்டான குப்பலாரி,ப்ரேக் பிடிக்காத தண்ணிலாரி மேல மோதி மூலைல ரத்தம் கசிஞ்சு சீக்கிரமே எமலோகம் போய் சேர்ந்திடலாம்.

இப்போது எது வேண்டும் உனக்கு  சொல் மனமே!கொக்கு விரட்டி,
தேன்மழை(அப்பாடா மூச்சு உடாம சொல்லி முடிச்சாச்சு - மச்சிஒரு க்குவாட்டர் சொல்லேன்!)


0 comments:

Post a Comment