Wednesday, October 29, 2014

Income Tax

நம்பி ஜெயிக்க வச்சவனே அஞ்சுக்கும் பத்துக்கும் நாட்டை விற்கும் போது ,மவராசன் கோடி கோடியா நமக்கு கொடுக்குதே,என்ற எண்ணம் பில் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேசன் தொடங்கிய நாளிலிருந்தே தோன்றியது .வள்ளல் பில் கேட்ஸ்.எல்லாருக்கும் அப்படி தான் தோன்றியிருக்கும் .அள்ளிக் கொடுத்த தொகை அப்படி .ஆனால் யோசியுங்கள்,அமெரிக்காவில் வருமான வரி படு பயங்கரம் .இந்தியாவை விட அதிகம் .இதுக்கே தகரம் லகரம் என்று பல ட்ரஸ்ட் பவுண்டேசன்கள் வந்து விட்டன.இங்கு80G போல அங்கு என்ன Gயோ?.லட்ச லட்ச கோடிகளைக் காக்க சில நூறு கோடிகளைத் தூக்கி ப் போடு .

IT


தேன்மழை

Tuesday, October 28, 2014

ஓட்டு துட்டு

தோராயமாகத்தான் சொல்கிறேன் .ஒரு முச்சத வருடங்களுக்கு முன்னால் நாட்டின் தலைநகரத்தில் கொடி யோச்சிய நவாப்புகள் ,ஆசை யாரை விட்டது ,துட்டுக்கு நாட்டை தூக்கிக்கொடுத்தனர்.

நாடு அடிமை ..ஒரு காந்தி கையில் கோலேந்தும் வரை .

நாடு சுதந்திரம் .எல்லாரும் இந்நாட்டு மன்னர்கள் ..ஆசை யாரை விட்டது .துட்டுக்கு நாட்டைக் குத்திக் கொடுக்கின்றனர்  .ஐந்தாண்டு குத்தகைப் போல .

நாடு?
காந்தி ?கோல் ?


தேன்மழை