Sunday, February 12, 2012

விஞ்ஞானத்தின் விந்தைகள்!


வெளுத்துப் போன அண்ட எல்லையாய்,
சளைத்துப் போகா அலையின் நீளமாய்,

பரவிக் கிடக்கும் அறிவியல் விந்தைகள்-
விரவிக் கிடக்கும் உலகில் இன்று,

இரவிக்கதிராய் கணக்கற் றாமே!




கல்லில் இருந்து நெருப்பை எடுத்தான்,
கடித்து உண்ண ஊனைச் சமைத்தான்.



நிலத்தைக்கொத்தி நீரைப் பாய்ச்சி,
விதைகள் தூவி பயிரைப் பெற்றான்.
 

அன்பின் பொருளை ஆன்மிகம் என்றான்,
ஆக்கும் பொருளை அறிவியல் என்றான்,



புற்றீசல் சிறகுகளாய்,துடித்தெழுந்த சித்திரமாய்,
புதியது கண்டு,புடைத்தது கண்டம்.

பறத்தலுக்கு ஏங்கி, விமானம் பெற்றான்.


எதிரொலி கேட்டு,வானொலி விற்றான்.




அனுவைப்பிளந்து ஆற்றலைப் பெற்றதும்,
காற்றிலிருந்தும்,ஆற்றிலிருந்தும்,



கதிர்ஊற்றிலிருந்தும்,மின்சாரம் உணர்ந்ததும்,





கால்கடுப்பை,தடுக்க உந்தெனவும்,
உப்புக்கடல் மேனி தழுவ கப்பலெனவும்.

பிறந்தவை யறிவியல் விந்தைகள் அன்றோ!
எடிசன்,ஆர்கிமிடிஸ்,ரைட் சகோதர்கள்,

ஸ்டீவன்,ஐன்ஸ்டீன்,ஃபாரடே,
நியூட்டன்,லூயிஸ் பஸ்டர் இவர்தாம்-

அறிவியற்தாய் ஈன்ற தவப் புதல்வர்கள் 
என்றால் வியப்பின்றி,விண்ணோர்தாமும் ஒப்பரே!



கடுந்தொலைவு சென்றோரை, காணும் வழிகாட்டி-
வெற்றிலை மையாய் கைகளில் உலவி,



பந்தல்ல உலகம்,சதுரமென மடிகளில் 
தவழும் கணினியின் விந்தைதான் என்னே!



சிந்தை அணுஒவ்வொன்றும் சிலிர்க்குது அடடா!!

இயம்பிய இலக்கினை, இகழாது இடித்தழிக்கும்
அன்றைய பிரம்மாஷ்திரங்களாய்,இன்றைய ஏவுகணைகள்



காற்றோடு கலந்திருக்கும் பற்பல வாயுக்களை,
கீற்றாக பகுத்தளித்து,பயன்விளைக்கும் இயந்திரங்கள்.



காற்றெனப் பறக்கும்,ஒலிமுந்தி விண்ணுர்திகள்,




ஆழ்கடலின் அடிப்பரப்பத் துழாவும் விந்தைக்கப்பல்கள்,

சந்திரமண்டலத்தியல் கண்டுதெளியும் விண்கலங்கள்
இருமலில் தொடங்கி,எய்ட்ஸிலும் தொடர்ந்து,


மூப்பினை விரட்டும்,ஏவா மருத்துவமும்
ஏட்டை நிரப்பும் ஏனைய பலவும்,



விஞ்ஞானத்தின் விந்தைகள் அன்றோ!-பூவுல
கன்னைக்கு,அவனியில் பூத்த அணிகலன்றோ!!


0 comments:

Post a Comment