Wednesday, September 26, 2012

குடி எப்படி குடியைக் கெடுக்கும்?


குடி குடியைக் கெடுக்கும் என்பது மற்றவர்களின் புலம்பல்,ஆனால் குடிமகன்களே குடிமகள்களே நீங்கள் குடிப்பதால் என்ன என்ன உடல் பாகங்களை எல்லாம்  இழக்கிறீர்கள் தெரியுமா?

Monday, August 27, 2012

கடவுள் எங்கே இருக்கிறார்???

நான் நாதீகன்.ஈரோட்டுக்காரனின் எண்ணத்தைப்பற்றி எப்பொழுதும் எத்தனிப்பவன்.

Tuesday, July 10, 2012

கடின உழைப்பாளிகள் புன்னகை மன்னர்கள்!!!


இந்த உலகில் வெற்றி என்பது நாம் எய்தும் பணம்,செல்வத்தையே குறிக்கிறது.
மனிதனின் எல்லாத்தேடல்களுக்கும் எல்லை பெரும்பாலும் பொருளாகவே இருக்கிறது.

Monday, July 9, 2012

அவர்கள் கடவுளுமல்ல,அது கோவிலுமல்ல

உயிரைக் காக்கும் இடம் கோவில் போல.ஆனால் கோயில் குப்பை மேடானால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.

Wednesday, June 27, 2012

மன்ணீரலும் மரணமும்

  • இரவு நேரம்,எந்த வாகனத்தில் எப்படி நடந்தது என்றே தெரியவில்லை-விபத்து,இருசக்கர வாகனத்திலாம்.அந்த 27வயது இளைஞன் ,திருமணம் ஆகி ஏழே நாள் ஆகியவன்,கோமா  நிலையில் எடுத்து வரப்பட்டான்.

Thursday, April 5, 2012

என் மாலை!

சுற்றிலும் புகைமண்டலம்-
கால்கள் தரையில் இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிந்தது!

Friday, March 23, 2012

ஈழச்சத்திரியனின் இழிவுச்சரித்திரம்!!-தளபதி ரமேஷ்!!!

நன்நெஞ்சே!

குழவி இறப்பினும்,ஊன்தடி பிறப்பினும்,
ஆள் அன்று என்று வாளின் தப்பார்;
தொடர்படு ஞமலியின் இடர்படுத்து இரீஇய
கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்
மதுகை இன்றி,வயிற்றுத்தீத்தணியத்
தாம் இரந்து உண்ணும் அளவை
ஈன்மரோ,இவ் உலகத்தானே!!!.

Wednesday, March 21, 2012

பணக்கார நாடாகிறது இந்தியா!!

நீங்கள் ஒரு நாளைக்கு 28 ரூபாய்க்கு சம்பாதிக்கிறீர்களா?
நீங்களும் பணக்காரன் தான்.
நம்பமுடியவில்லையா?இதை நாம்சொல்லவில்லை.இந்தியஅரசே சொல்கிறது.

Saturday, March 17, 2012

மரணமும் ஒரு விடுதலையே!

கொலைவாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!!

குகைவாழ்வரிப்புலியே!
உயர் குணமேவிய தமிழா!

Wednesday, March 14, 2012

குறுக்குவழியில் வாழ்வைத்தேடிடும் திருட்டு உலகமடா!

திருட்டு பல வகைப்படும்.
பிறர் நன்மைக்காக திருடுபவர்களும் உண்டு-???வீரப்பன்,மம்பட்டியான் போல்!!!
ஆனால்,இது கொஞ்சம் வேறு வகையான திருட்டு!

Friday, March 9, 2012

கடலுக்கடியில் உறங்கும் தமிழனின் தொன்மை வரலாறு!

தமிழன் என்றாலே கீழானவன். தமிழ் மொழியோ மிகவும் கேவலமான கீழான மொழி என்று கூறப்பட்டு.  தமிழும் தமிழரும் இழிவுபடுத்தப்பட்டு வருவதை நாம் நடைமுறையில் பார்க்கின்றோம். தமிழர்கள் கட்டிய தமிழர் சமயக் கோவில்களுக்குள் தமிழுக்கும் இடமில்லை. இப்படிப்பட்ட கொடுமையான காலத்தில் வாழும் நமக்கு. தமிழினம் மிகவும் பழமையான இனம். உலக மொழிகளை ஆராய்ந்தால் தமிழ்ச் சொற்களும். பெயர்களும் வெவ்வேறு வடிவங்களில் அவற்றில் இருக்கின்றன எனும் புதிய ஆராய்ச்சிக் கருத்துகள் உண்மையில் நம்மை வியக்க வைக்கின்றன.

Thursday, March 8, 2012

மார்ச் 8 கொண்டாட்டங்கள்!!!

இயற்கை அன்னையின் மறுபதிப்பாய் மண்ணில் உதித்த மங்கையரே!

இன்று மார்ச் 8,உங்கள் தினக்கொண்டாட்டங்கள் ஓய்ந்ததா?

Saturday, March 3, 2012

கடவுள் விற்பனைக்கு!!-சிரிப்(பு)புரம்!!!

இளநெஞ்சே வா!

சாமியை ஆட்டிப்படைக்கும் ஆசாமிகள்-பறந்து பட்ட விவாதப்பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை!

Wednesday, February 29, 2012

பேனர்களின் ஆட்டம் !!!

இளநெஞ்சே வா!

ஒரு விஷயத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு பல வழிகள் உண்டு. ரேடியோ, டிவி, இணையதளங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கதை புத்தகங்கள் போன்றவை. ஆனாலும், இந்த பேனரை வைத்து விளம்பரம் பண்றாங்களே அடேயப்பா !!!!! (இவங்க இம்சை தாங்கல)

Sunday, February 26, 2012

சென்னை என்கவுண்டர் பின்னணி?

சென்னையில்  குற்றவாளிகள் என்று கருதி காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல 5இளைஞர்களை சுட்டுத் தள்ளியது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த என்கௌன்ட்டர் பற்றி ஆணையர் அளித்த விளக்கமும்,அதில் நிலவும் ஓட்டைகளும்,மனதில் உறுத்தாத நெஞ்சங்களும் சிலவே!

Saturday, February 25, 2012

ரத்தக்காட்டேறிகளின் ராஜ்யமா தமிழகத்தில்?

நன்நெஞ்சே!

விடியலை நோக்கி நகர்ந்துகொண்டிருந்த காலையில்,பச்சிலைப்புடுங்கி வந்தான்.நேற்று தாய்க்கிழவி வடைசுட்டு குண்டாவில் போட்டு வைத்திருந்தாளாம்.அதை நோட்டமிட்டு, ஐந்து ஆட்டையாங்காக்காக்கள் அள்ளிச்சென்று விட்டதாம்.

Sunday, February 19, 2012

போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட???????

இந்த கொசுவிரட்டிப் பயல எங்கனுதான் தேடறது,எத்தன நாளு தான் தேடறது?சரி சும்மா கூகிள் ஆண்டவர்கிட்ட போய் கேட்டுப் பாப்போமேனு பாக்கும்போது,முகநூலில் ஒரு செய்தி தட்டுப்பட்டது, நம் எண்ணத்தை அது அப்படியே பிரதிபலிப்பதால் அதை அப்படியே பதிவிடுகிறோம், கேரளா கடற்பரப்பில் இத்தாலிய கப்பல் படையால் கொல்லப்பட்ட இரண்டு தமிழக மீனவர்கள். இதில் அலச வேண்டிய விடயங்கள் என்னவென்றால்.,

Tuesday, February 14, 2012

நெஞ்சுக்குள்ளே மின்னல்நதி! - பிப்-14

ஊரெங்கும் மின்தட்டுப்பாடு..ஆனால் உயிர்ச்சேதம் ஏற்படாத அளவில் இன்று மட்டும் இளைஞர்கள் உடலில் மின்சாரம் பாயும்.ஏன், நெஞ்சுக்குள்ளே சின்னச்சின்ன மின்னல்நதி கூட ஓடும்!.




உடல் இரண்டாகி,உயிர் ஒன்றாகிய நிலை-காதல்!

Sunday, February 12, 2012

விஞ்ஞானத்தின் விந்தைகள்!


வெளுத்துப் போன அண்ட எல்லையாய்,
சளைத்துப் போகா அலையின் நீளமாய்,

ஒரு நல்ல செயல்!

கொடுத்து வாழும் பண்பை ஈகை என்பர்.
இன்றைய அரசுகள் கொடுக்கும் இலவசங்கள் போல் அல்ல-அவை சோம்பலை வளர்ப்பவை.

Tuesday, February 7, 2012

வாளு போய்.., கத்தி வந்தது..!!!

நன்நெஞ்சே!

 கொக்குவிரட்டி எதையோ யோசித்துக்கொண்டே வந்தான், என்ன என்றதற்கு இவன் கொசு விரட்டியைத் தேடிச்சென்று கொண்டிருந்தானாம்,வழியில் தேனாற்றங்கரையைக் கடக்கும் போது  அரைமுங்கி முதலையும் பெருங்கொண்டை சிங்கமும் பெரும்கூச்சல் அரவத்தொடு விவாதித்து கொண்டிருந்தனவாம்.


Saturday, February 4, 2012

உண்ட வீட்டுக்கே ரெண்டகம்??!!

அடியேய்! எத்தன நாழியா வாசல்ல நிக்கறது சீக்கிரம் வா புள்ள!!

Wednesday, February 1, 2012

அடக்கமாகும் வரை அடக்கமாக இரு!

முப்பது ஆண்டுகளுக்கு முன்.
காரைக்குடியில் கம்பர் விழா; என் தலைமையில் கவியரங்கம்.இத்தகு சபையினில், சினிமாக்காரர்களை ஏற்ற மாட்டார் திரு.கம்பனடிப் பொடிகள் விதிவிலக்காக -

Tuesday, January 24, 2012

என் தமிழின் தகவு

பாட்டு எழுதிகிறோம்;

பணம் வருகிறது;

வேறென்ன வேண்டும்?

குறையொன்றுமில்லை, கோவிந்தா!

பிறையும் நானும்

1931 - அக்டோபர் மாதம் 29 - ஆம் தேதி - வியாழக் கிழமை, இரவு எட்டு மணியளவில்-

Octogenarian-வாலி

vaaliஸ்ரீனிவாச வரதனும் நானும், ஸ்ரீரங்கத்தில் கோலி விளையாடியவர்கள்; ‘தோஸ்து படா தோஸ்து’!

STATES-ல் இருப்பவன் சென்னை வந்தான்; ஒரு கல்யாணம்.

கலந்துரையாடினேன்.

“ஹை! வாலி! இப்பவும் பாட்டு எழுதிண்டிருக்கேனு தெரியும். நியூஜெர்ஸீல இருக்கிற நம்ம சீமாச்சுவோட நாலு வயசுப் பொண்ணு - ‘நாங்காய்!செங்காய்!’னு பாடறது! அதெல்லாம் இருக்கட்டும்; Now your are an Octogenarian! எப்படியிருக்கு Life?"

’Octogenarian'- எனும் ஆங்கிலச் சொல்- அகவை எண்பதில் அடியெடுத்து வைத்தோரைக் குறிக்கும்.

ஸ்ரீனிவாச வரதன் என்னைவிட நான்கு வயது சின்னவன்.

அவன் விடுத்த வினாவிற்கு - ஒரு புன்னகையை விடையாய் இறுத்துவிட்டு -

இரவு விருந்து முடிந்ததும், வீடு வந்து சேர்ந்தேன்.

புரண்டு புரண்டு படுத்தும் - துயில் தூர நின்றது, விழிகளோடு விரோதம் பாராட்டிக்கொண்டு.

தத்துவார்த்தமான சிந்தனைகள், என்னைத் தாக்கித் தகர்க்கத் தொடங்கின!

மலையாள

மகாகவி ஒருவன் பாடினான் -

‘மனுஷ்யன் - ஒரு

மா பதம்!’ என்று!

மனிதன் என்பது ஒரு மகத்தான வார்த்தையெனில் - அவ்வார்த்தையே நாளாவட்டத்தில், ஒரு வாக்கியமாய் நீளுகிறது.

மனித வாக்கியத்தின் முற்றுப் புள்ளியாய் மரணத்தைச் சொன்னால் - முக்கால் புள்ளியாய் முதுமையைச் சொல்லலாம்.

முதுமை - என் முதுகில் ஏறி உட்கார்ந்து கொண்டிருப்பதை நான் ஓராமலில்லை;

எவ்வளவு முக்கியப் புள்ளிகளையும் - முக்காற் புள்ளியும், முற்றுப் புள்ளியும் விட்டுவைப்பதில்லை என்பதும் எனக்குத் தெரியும்.

முதுமை குறித்துத்தான் எத்துணை விதமான மூதுரைகள்!

’விருத்தம் வந்துவிட்டதே - என

வருத்தம் வரலாமா? ஓ! மானிடனே!

எத்துணை பேர் முதுமையை -

என்னென்று பார்த்திருக்கக் கூடும்?

அதைப் பார்க்கும்

அதிர்ஷ்டம் -

உனக்குக் கிட்டியிருக்கிறதே என

உவகை கொள்!’

- ஆங்கிலக் கவிஞன் ஒருவன் இவ்வணம் அருளியிருக்கிறான்!

பத்தொன்பதாம் நூற்றாண்டில், பறங்கியர் ஆட்சியில் -vali1

முன்சீப் வேலை பார்த்த மாயூரம் வேதநாயகம் பிள்ளை அவர்கள் -

யாத்தருளிய கீர்த்தனைகளில், யானறிந்த ஒன்று - முதுமையின் கையறு நிலையை முழுமையாய்க் காட்டுகிறது.

’ஆசைக் கென்றோர் கறுப்பு

முடியேதும் இலையே;

அய்யய்யோ! கொக்கைப்போல் நரைத்தது தலையே;

காசுக் குதவாத

கிழம் என்பது நிலையே;

கன்னியர்க்கும் இனிநாம்

கசக்கும் வேப் பிலையே!’

- பாட்டில் இதனினும் பட்டாங்காகக் காட்ட முடியுமோ, விருத்தாப்பியத்தின் விளைவுகளை; விசனங்களை?

‘வெள்ளி விழா’ எனும் படத்தில் விசுவநாதன் சார் பாடிய ஒரு பாட்டு; அது, முதுமையைப் பற்றி அடியேன் எழுதியது.

‘கடந்த காலமோ திரும்புவதில்லை;

நிகழ்காலமோ விரும்புவதில்லை;

எதிர்காலமோ அரும்புவதில்லை;

இதுதானே அறுபதின் நிலை!’

- ஆம்; அறுபதிலிருந்துதான் ஆரம்பமாகிறது முதுமை; முதலில், முகத்தில் வரி விழுகிறது - அந்த முக வரிதான், முதுமையின் முகவரி!

அகவை கூடக் கூட, அவஸ்தைகளும் அவலங்களும் அதிகம்.

அஞ்சு பொறிகளும் இருக்கின்றன - அதனதன் இடத்தில்; அஞ்சு புலன்கள்தாம் - அந்தந்தப் பொறி வழியே பெற வேண்டிய பலன்கள் குறைந்து, நலன்கள் கெட்டு நிற்கின்றன.

செவி இருக்கிறது; ஆனால், செவிடாய் இருக்கிறது! விழி இருக்கிறது; ஆனால் விழிக்கிறது - தரையெது தண்ணீரெது எனத் தவித்த துரியோதனன் போல்!

கன்னத்தில் இருந்த குழியைக் காணோம்; தேடினால், கண்ணுக்குள் இருக்கிறது!

பாதம் இருக்கிறது; கூடவே, வாதம் இருக்கிறது!

‘வழுக்கை இருக்கிறதே

வழுக்கை - அது

முடியில் இருந்தால் முதுமை; தேங்காய்

மூடியில் இருந்தால் இளமை!

பாழும் இயற்கைக்கு பாரபட்சம் இருக்கிறதே, என் சொல்ல?

வாரிசுகள் மேல் வைக்கிறோமே பாசம் - அது, வயோதிகத்தில் - படாத பாடுபடுத்தும்.

இதைத்தான் - பட்டுக்கோட்டை பாடி வைத்தான் ‘பாசவலை’ படத்தில் -

‘பாசவலையில் மாட்டிக்கிட்டு -

வவ்வா போலத் துடிக்குது!’ என்று.

பாசம் இருக்கிறதே

பாசம் - அது

குளத்தில் இருந்தாலும் வழுக்கும்;

உளத்தில் இருந்தாலும் வழுக்கும்!

பெரும்பாலும் முதுமை எய்திய பெற்றோர் புலம்புவதுண்டு -

‘என் பிள்ளைகுட்டிகள் என் பேச்சைக் கேட்பதில்லை!” என்று

இவ் வினாவிற்கு - அப்பவே விடை சொல்லிப் போனார் அய்யா திருக்குறள் முனுசாமி அவர்கள்.

‘பெற்றோர்களே! ஒன்றை யோசித்துப் பாருங்கள்; உங்கள் பிள்ளைகள் பிற்பாடு வந்தவர்கள். நீங்கள் பிறக்கும்போதே - உங்களுடன் வந்தவை காலும் கையும்!

வயதாகி விட்டால் - அவைகளே, உங்கள் பேச்சைக் கேட்பதில்லையே! வாரிசுகள், கேட்காததில் வியப்பென்ன கிடக்கிறது?!’

- இன்னணம் முனுசாமி அய்யா அவர்கள் எடுத்துரைத்ததைக் கேட்டு, முதியோர் பலர், ஞானம் பெற்றதுண்டு!

அவமானங்களுக்கும் அலட்சியங்களுக்கும் இடையே -

முக்கலும் முனகலுமாய்க் கிடக்குமே முதியோர் வாழ்க்கை என்றுதான் -

ஸ்ரீனிவாச வரதன் என்னைக் கேட்டான் -

‘எண்பது வயதை எட்டிவிட்டாயே; வாழ்க்கை எப்படி இருக்கிறது?’என்று.

கேள்வி நியாயமானதுதான்; ஆனால், அடியேனை முதுமையால் மனம் முறிந்து விடாமல் -

நாளும் போதும் எனைக் காத்து நிற்கும், நண்பர்கள் உடன் இருக்கிறார்கள்; அவர்கள் - உற்றுழியில் உதவும், உடுக்கை இழந்தவன் கைகள்!

வயோதிகம் என்பது வாழ்க்கையின் மாலைப் பொழுது; இந்த மாலைப் பொழுதில், மாலைப் பொழுதைக் கழிப்பதுதான் கஷ்டம்; படப் பாடல்கள் எழுதியது போக - மிச்ச நேரத்தில் பழைய நினைவுகள் என்னைப் பிறாண்டிப் பிடுங்கித் தின்றுவிடாமல் -

என்னை, நதிபோல் ஓடவிட்டுப் பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இந்த நண்பர்களே!

‘வெங்கிட்டு’ என் நான் வாஞ்சையுடன் அழைக்கும் திரு. எஸ்.வெங்கடாசலம் - அமரர் திரு. சூர்யாப் பிள்ளையின் அருமந்தப் புதல்வர். என் உடலில் ஈ மொய்க்கும்; அதைக் காணில் வெங்கிட்டு விழியில் தீ மொய்க்கும். பெருந்தனமும் பெரிய மனமும் ஒருசேரப் பெற்ற அவர். என்னிலிருந்து வெளியே நிற்கும் இன்னொரு நான்!

‘கொங்கு நாட்டுத் தங்கம்’ என நான் கொண்டாடும் திரு.வி.கிருஷ்ணகுமார் - அருளாளர் திரு.ஆரெம்வீயால் எனக்கு அறிமுகப்படுத்தப்பட்டவர்; செந்தணல் ஓம்பும் அந்தணர் குலமாயினும் - சகலராலும் சினேகிக்கப்படும் சமரச சன்மார்க்கர்; வாரந்தோறும் என் வாசல் வரும் வசந்தம் அவர்; வெறுங்கையோடு வர மாட்டார்; சாரு நிவேதிதாவையும், நாஞ்சில் நாடனையும், தொ.மு. பரமசிவத்தையும், கலாப்ரியாவையும் சுமந்துகொண்டு வருவார்.

செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்; விளம்பரமில்லாமல் அவர் ஏற்றி வைத்த விளக்குகள் - ஆங்காங்கு எரிந்துகொண்டு இருக்கின்றன.

தொய்ந்து விடாமல் எனைத் தாங்கிப் பிடிப்பது அவரது இரு கை; எனவே, எனக்கு வாலிபம் தருவது அவரது வருகை!

‘தலைவா! தலைவா!’ என்றழைத்து, என்னைத் தழுவி நிற்கும் ஆழ்வார்க்கடியான் மை.பா. நாராயணன் இல்லையேல் -

கட்டுரையும் கவிதையும் இந்த வயதில் நான் எங்கே எழுதுவது? தொலைந்து போன என் இளமையைக் கண்டுபிடித்து என் கையில் கொடுத்தது நாராயணன்தான்!

‘அய்யா! அய்யா!’ என விளித்து அவ்வப்போது என் வீடுவந்து - உற்சாக ஊசிகளை என் உள்ளத்தில் ஏற்றுவது -

கவிஞர் பழநிபாரதியும்; கவிஞர் நெல்லை ஜெயந்தாவும்! இவ் இருவரும், தங்கள் எழுத்துக்களால் தனித்துவம் பெற்றவர்கள். இருப்பினும் - என் எழுத்துப் பதாகையை ஏந்திப் பிடித்து - என்னை ஒரு கைக்குழந்தையாய் தமது கைத்தலத்தே தாங்கி, என் வயது எனக்கே தெரியா வண்ணம் என்னை ‘வாலிப வாலியாகவே வைத்திருக்கிறார்கள்.

கவிஞர்கள் கருத்தொருமித்து ஒரு நேச மாளிகைக்குக் கால்கோள் விழா நிகழ்த்த முடியும் என்று நிரூபித்த -

பழநிபாரதியும் நெல்லை ஜெயந்தாவும் என் இல்லம் வரும்போதெல்லாம் -

முதுமை, என் முதுகை விட்டு இறங்கி, மூலையில் போய் நிற்கிறது!

எஞ்ஞான்றும் என்னை - இளைமையிலேயே இருத்தி வைப்பவர் - என் எழுத்துகளுக்கு எல்லாம் உரைகல்லாய் இருக்கும் கவிஞர் பெருந்தகை திரு.முத்துலிங்கம் அவர்கள்.

கவியரங்கங்களானாலும், பத்திரிகைகளானாலும் -

முத்துலிங்கத்திடம் ஒப்புதல் வாங்காமல் வெளியே விட மாட்டேன், என் கவிதகளை!

முப்பதாண்டுகளுக்கு மேல் கோடம்பாக்கத்தில் கோலோச்சி வரும் - மேனாள் அரசவைக் கவிஞரான திரு.முத்துலிங்கம் -

என் தமிழை நிறுத்து எடை சொல்லும் தராசு!

இத்துணை பேர்களையும் என்னோடு இணைத்தது தெய்வமல்ல;

தெய்வத் தமிழ்!

மூப்படைந்த பின்னும் - முந்தா நாள்

பூப்படைந்த பெண்போல் -

இளமை நலத்தோடு

இருப்பது...

தமிழ் மட்டுமல்ல;

தமிழை மாந்துவோரும்தான்!

அதனால்தான் - பாரதிதாசனார் பாடிவைத்தார் -

‘தமிழுக்கும் அமுதென்று பேர்!’

நன்றி : கவிஞர் வாலி (நினைவு நாடாக்கள்)

[மூலம்]

கெடுபிடி கூடாரத்தில் உதயசூரியன் ஒற்றர்கள்?

நமக்கு அவ்வளவா வெவரம் பத்தாதுங்க,

Sunday, January 15, 2012

ஒரு நாடு செழிக்க,ஒரு ஊர் பலியா?

சப்பான் நாட்டில், புகுசிமாவில் நிகழ்ந்த அணு உலை விபத்திற்குப் பின்னர், அத்தகைய விபத்து கூடங்குளத்தில் ஏற்படாதபடி பாதுகாப்பு செய்யாதிருப்போமா என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் யோசிக்க வேண்டாமா

ஒரு புத்தகம் மனிதனை மாற்றுமா?

manianசென்னை புத்தகக் காட்சியில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற இலக்கிய நிகழ்ச்சியில் "தீதும் நன்றும் புத்தகம் தரும்' என்னும் தலைப்பில் தமிழருவி மணியன் பேசியது:

நன்றியில் கூட நஞ்சைக் கலக்கிறாரே


06th_pala_karuppiah_522102a‘என்னை முதலமைச்சராக்கினார் எம்.ஜி.ஆர்’ என்று சட்டப்பேரவையில் கருணாநிதி

வேலில போற ஓணான இது?

mark7-monorailஉலகெங்கும் உள்ள பெரு நகரங்களில் அதிகரித்து வரும் மக்கள்தொகையால் நகர்ப்புறப் போக்குவரத்து நெருக்கடியானதாக மாறிவருகிறது.

குரல் கெட்ட குயிலே கேள்’


bharathidasan1பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் ஆரம்ப காலத்தில் ‘சுப்ரமணியர் துதியமுது’, ’கதர்ராட்டினப் பாட்டு’ ஆகிய கவிகள் புனைந்து மகாகவி பாரதியின் வழியில் தெய்வத்திற்கும் தேசியத்திற்கும் தொண்டு புரியலானார்.

Thursday, January 5, 2012

மகாகணம் பொருந்திய இவர்கள் - சுயநல கயவர்கள் தானா?

நன்நெஞ்சே!

நேற்று பொதுவாக உரையாடிக்கொண்டுஇருக்கும் போது,


 


திடீரென்று அவசர அவசரமாய் கங்காணி ஓடிவந்தான்.

Tuesday, January 3, 2012

இதெல்லாம் ஒரு பொழப்பா?

நன்நெஞ்சே!

தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளா மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது.கருத்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாகத் தான் அவை இன்று இருந்து வருகிறது.சரி அது வேற விஷயம்.ஆனா மக்களை மையமா வைத்து அவர்கள் கொள்ளையும் அடிக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?.

Monday, January 2, 2012

நம்மொழி பயனற்றதா?

மேற்கத்தியர்கள் 5000 ஆண்டுகளுக்கு முன் மொழியற்று காட்டுவாசிகளாய் இருந்த போதே இங்கே கலாச்சாரம் தோன்றி சிலப்பதிகாரமும், குறளும் இயற்ற பட்டு விட்டன

போய்வா-2011

இரவோடு இரவாக நீண்ட நாள் நண்பன் பிரிவதைப் போல்,செல்கிறது

Sunday, January 1, 2012

இதையெல்லாம் ரூம் போட்டு யோசிப்பாங்களோ?!

குட்டக் குட்ட இன்னும் எத்தனை நாள் தான் குனிவது?


New Delhi, Dec 31: 

A hike of about Rs 2.10-2.13 per litre in petrol price is needed because of weakening Indian currency, but oil companies are unlikely to revise rates on Saturday as scheduled and instead may do so on Monday-"thehindubusinessline".

முதல்ல இவங்க மேல பாறாங்கல்ல போடணும்!


மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும்.

When I am not the President

நாங்கல்லாம் அப்பவே அப்படி இப்போ கேக்கவா வேணும்

சாப்டாச்சு அப்புறம்?


சாப்பிட்ட பின்பு பின்பற்றகூடாத ஏழு செயல்கள்:

எது வேண்டும் சொல் மனமே?


நம்முடைய தினசரி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளை நாம் எதிர்கொள்ளும் விதத்தை இந்தக் கட்டுரை மாற்றிவிடும் .

அப்படி இந்தக் கொள்கையில் என்னதான் இருக்கிறது?