Saturday, February 4, 2012

உண்ட வீட்டுக்கே ரெண்டகம்??!!

அடியேய்! எத்தன நாழியா வாசல்ல நிக்கறது சீக்கிரம் வா புள்ள!!
என்ற பச்சியக்காவின் சத்தத்தைகேட்டு,வெளியே வந்தேனுங்களா,கூடை,ஆட்டுக்குட்டியோட பச்சியக்கா நின்னுகிட்டுஇருந்தாங்க.மேய்ஞ்சமேட்டுக்கு போகதயாராகிட்டாங்கனு நினைச்சுக்கிட்டு,நானும் நம்ம மந்தைய ஓட்டிட்டு கிளம்பிட்டனுங்கோ.போகும் போது, நீ வர்றதுக்கு இவ்வள நேரமா?ன்னு கேட்டாங்க.அம்மா டி.வில வாத்தியாரு படம்பாத்துக்கிட்டு இருந்ததுல நேரம்போனதே தெரிலக்கான்னேன்.
அடிபொசகெட்டபுள்ள அந்த டி.வி ல எங்க நல்லபடம்லாம் போடறாங்க,இங்க இந்த வீட்டுமனைஇருக்கு,மோதிரத்தில இந்தகல்லப்போடு வாழ்க்கை நல்ல இருக்கும் அப்படிதான அந்த டி.வி ல வந்துகிட்டு இருக்கு,பேசிகிட்டே மேய்ஞ்சமேட்டுக்கு வந்துட்டோம்.

ஏங் கா!அந்த அம்மாதான முதலமைச்சர்,அப்றமும் ஏன் இப்படி விளங்காத நிகழ்ச்சியாப்போடறாங்க? என்று நான்கேட்டதுக்கு,அட அதே கேள்விதான் புள்ள எல்லாருக்கும் இருக்கு.இத்தனைநாளா தன்னோட இருந்த குப்பையெல்லாம் கூட்டிப்பெருக்கினாங்கல்ல,இப்போஅடுத்து அந்த டிவிளையும் களைபுடுங்கப்போறதா பேசிக்கிறாங்க புள்ள.


இவர்கள்ஆளும்கட்சியா இருந்தபோது ஆரம்பித்த சூரியகுடும்பத்து டி.வி.லாம் அருகுபோல் முளைத்து,ஆல்போல் பெருகி இன்னைக்கி சக்கபோடு போடுது,


 

ஏன் நேத்து ஆரம்பிச்ச மஞ்சதுண்டு தலைவர் டி.வி கூட 2ஜி,பஜ்ஜினு ஏதேதோ பிரச்சனை இருந்தாலும் நிகழ்ச்சிகள்ல வெளுத்துவாங்குது. ஆனா எப்படி அம்மா டி.வி மட்டும் சோபிக்கவே மாட்டேங்குதுனு எனக்கும் அந்த சந்தேகம் இருக்கத்தான் செஞ்சிது,நேத்து நம்ம வனப்பட்சி போட்ட துண்டுஓலைய பாத்ததுக்கப்புரமாதான் தெரிஞ்சது என்னென்ன வில்லங்கம் அதில ஒளிஞ்சிகிட்டு இருக்குன்னு.

வில்லங்கமா என்னக்காசொல்றே?ன்னேன்.ஆமா புள்ள கேளு,இவங்க எதிர் கூடாரத்துல இருப்பவங்கல்லாம் வருஷம் 600கோடி-800கோடின்னு கல்லாகட்ரப்போ, இந்த டி.வி ஆரம்பிச்சு 14வருஷம் ஆகுது, ஆனா வருமானம்  மாசம் 4 கோடியத்தாண்ட மாட்டேங்குதாம்.இத்தனைக்கும்
இவங்களுக்கு இப்போ பல டி.வி.க்கள் இருக்கு அப்படி இருந்தும் அதே நிலைதான்.

என்ன ஏதுன்னு,பாக்கும்போது தான்,சில விசித்திரமான தகவல்கள் வந்து விழுந்திருக்குது.அந்த குப்பைகூட்டம் இருந்த போது இந்த டி.வி.க்கு TTV.தினகரன்,மனைவி அனுராதா தான் தலைமைபொறுப்பில இருந்தாங்களாம்.
ஆனா டி.வி யின் வருமானம் நேரா இன்னொருத்தர் வயித்துலேயே லபக்குனு போய் விழுந்திருக்கு.என்னக்கா சொல்ற யாரது,இவங்கள விட அது பெரியஆளா?ன்னேன்.குறுக்ககுறுக்க பேசாதபுள்ளனுட்டு தொடர்ந்தார்,பாலசுவாமிநாதன் இந்த பேர கேள்விபட்டிருக்கியா?,
 நான் இல்லன்னேன்,அவரே தொடந்து,
நானும் கேள்விபட்டதில்ல,இவர் முதல்ல விகலன் குழுமத்துல வேலையில இருந்தாராம்,1999ல வர்த்தக தலைமை பொறுப்பில டி.வில சேர்ந்திருக்காரு,முதல்ல TTV.தினகரன் இருந்த வரைக்கும் இவரோட பாச்சா பளிக்களையாம்.அவரு விலகி ,டி.வி அனுபவம் இல்லாத அனுராதா தலைமைக்கு வந்ததும் ,இவரோட தில்லாலங்கடி வேலையெல்லாம் ஆரம்பிச்சிருக்கு.

இன்னொன்னு  சொல்றேன் கேளு, இவரு சேர்ந்தப்போ இவரு சம்பளம் மாசத்துக்கு ரூபாய் 45,000மாம்.இப்போ 1,90,000ரூபாயாம்.அதுசரி,இவர் பண்ணிய அந்த தில்லாலங்கடிய கேளேன் ரொம்ப சுவாரசியாம இருக்கும்.சொல்லுக்கா கேட்டுகிட்டு தானஇருக்கேன் ன்னேன்.அப்போது அந்தபுல்வெளியும்,சிலுசிலு காத்தும் மிகவும் இதமா இருந்தது.


அவரே தொடர்ந்து,ஒரு டி.விக்கு வருமானம் பெரும்பாலும் விளம்பரங்களில் இருந்துதான் வரும்.அதிலும் இந்த டி.விக்கு பாதி விளம்பரம்- ப்ராக்டர் & கேம்பிள், ஹிந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் சில பன்னாட்டு நிறுவங்கள் மூலம் வருவன.இவைகள் தங்களுக்கென்று சொந்த விளம்பர நிறுவனம் வைத்து அதன் மூலமே விளம்பரம் தந்தன ஆனால் மீதிபாதி விளம்பரம் நம்ம உள்ளூர் விளம்பரங்கள் தான்.இங்குதான் வர்த்தகதலைமை கைவரிசை காட்டியிருக்கிறது.
இடையில் அந்தக்கா ஆட்டுகுட்டி ஒன்று மேட்டுஉச்சியைநோக்கி ஓடியது.நான் எழுந்து வேகமா ஓடி அதை பிடித்து இழுத்து வந்தேன்,வேகமாய் ஓடியதில் மூச்சு இரைத்தது.அக்கா கூடையில்இருந்த தண்ணிகுவளையை கொடுத்தார்.குடித்துவிட்டு அவரை மேலும் சொல்லச்சொல்லி கேட்க அமர்ந்தேன்.

இவர் என்ன பண்ணிருக்காரு,பாலா ads அப்படின்னு ஒரு  விளம்பர நிறுவனத்த தொடங்கி,நான் சொன்னேனே அந்த உள்ளூர் பார்ட்டிகளை இவரோட இந்த விளம்பர நிறுவனம் மூலமா அம்மா டி.விக்கு  விளம்பரம்கொடுக்க வச்சிருக்காரு.அதுக்கு 15%இவருக்கு கமிஷன்.இதுல கூத்துஎன்னன்னா இந்த விளம்பர நிறுவனத்துக்குனு ஒரு அலுவலகமோ,ஊழியர்களோ கிடையாது,
இப்படி அவர் என்ன பெருசா சம்பதிச்சிட்டார்?ன்னேன்.போபுள்ள நீ வேறே இவரு இந்த டி.வில சேர்ரப்போ 2000ரூபாய்க்கு வாடகைவீட்ல குடியிருந்தாராம்.இப்போ இப்போ போயஸ் கர்டன்ல அம்மாவுக்கு பக்கத்துக்கு வீட்ல இருக்காராம்.ஆஆஆ னு ஆச்சரியப்பட்டேன்.வாயைமூடுபுள்ள கொசுகீது உள்ளபோயிடப்போகுதுன்னு சொல்லிட்டு இன்னும் தொடர்ந்தார்.

ஒரு வருசத்துக்கு முன்னாடி,இந்த டி.வில நடக்கிற இந்த மாதிரி தில்லுமுள்ளுகளையும்,அனுராதாவின் முறையற்ற செயல்திறனையும் கண்டு அம்மா நிர்வாகத்தில் மாற்றம் கொண்டுவர நினைச்சாங்களாம்,ஆனாலும் அத ஏனோ பாதிலேயே அம்மா விட்டுட்டாங்கன்னாலும்.அத எப்படியோ மோப்பம் புடிச்சிகிட்டு,தன்னை தற்காத்து கொள்வதற்கும் ,தன் கொள்ளை தொடர்வதற்கும் ரகு,வைத்தி,சூரி மற்றும் ஜெயச்சந்திரன் னு தனக்கு ஆமாஞ்சாமி போட்ரவங்களை விகடன்லஇருந்து கூட்டியாந்து, தன்னமாதிரியே ரகு ads, வைத்தி adsனு  ஆளுக்கு ஒரு விளம்பரநிறுவனம் ஆரம்பிச்சு கொடுத்திருக்காருஏங்க்கா விளம்பரத்த மட்டும் வச்சு அவளவு சம்பாதிக்கமுடியுமா?ன்னேன்.அதற்கு பச்சியக்கா,கிறுக்குபுள்ள அதுமட்டுமில்ல இன்னொன்னும் இருக்கு,அம்மா டி.வில நெறையா பாட்டு நிகழ்ச்சியா வருதே கவனிசிருக்கியா?அது மத்த டி.விலஎல்லாம் பட்டைய கிளப்பர அந்த முக்கியமான நேரதிலையும் அந்த பாட்டுநிகழ்ச்சி வரும் கவனிச்சிருக்கியா?ஆமாக்கா!பாத்துருக்கேன்,ஆனா உன்னிப்பா கவனிக்கலையேன்னேன்.சரிவிடு இனிமே பாருன்னு தொடர்ந்தார்,
காட்சிதொடர்பு பட்டதாரி சுபஸ்ரீ தணிகாச்சலம்,

இவருக்கு இசைல நிறையா ஆர்வமாம்.இவரு தான் அந்த இசைநிகழ்ச்சிகளையெல்லாம் செய்றதாம்.
சரிக்கா!இவங்களுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம் ன்னேன்.
அங்க  இருக்கு விசயம்,இவர்களுக்குள் உள்ள ரகசிய புரிந்துணர்வு காரணமத்தான்,அந்த முக்கிய நேரத்தில் இசைநிகழ்ச்சி வருதாம்.சமீபத்துல கிளீவ்லாண்ட் தியாகராஜர் உற்சவம்ங்கற நிகழ்ச்சிகாக அமெரிக்க போயிருக்காங்க சுபஸ்ரீ,அதுக்கு செலவுல்லாம் கிளீவ்லாண்ட் தமிழ்சங்கம் ஏத்துக்கிட்டாலும்,பாலா 20லட்சம் ரூபாய கொடுத்திருக்கார்.

அதான் செலவுல்லாம் கிளீவ்லாண்ட் தமிழ்சங்கம் ஏத்துக்கிட்டாங்களே அப்புறம் எதுக்கா இவருவேற பணம் கொடுக்கிறார் ன்னேன்.

கிறுக்குபுள்ள அப்படிகொடுத்து அதிலயும் நல்லா கமிசன் கட்டலாமில்ல என்றார்.நானும் விடாமல் இவ்வளவு நடக்குதே டி.வியோட தலைமை'ல இருக்குற அனுராதாவுக்கு தெரியாம எப்படிக்க நடக்கும் என்றேன்.
உடனே பச்சியக்கா,உனக்கு ஒரு விசயம் சொல்லமறந்துட்டேனே,அந்த பாலா Ads விளம்பர நிறுவனத்த குத்துவிளக்கேத்தி தொடங்கிவச்சதே அனுராதா தானாம்.என்னக்கா கத எங்கெங்கோ போய் கடைசில மறுபடியும் குப்பமேட்டுக்கே வருதுன்னேன்.
மேல கேட்காத புள்ள நாமளும் அப்புறம் அந்த குப்பைல தான் புரளனும் என்ற பச்சியக்கா,சிறிது நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக மேய்ந்துகொண்டிருந்த ஆடுகலையே பார்த்துக்கொண்டிருந்தார்.திடீரென என் பக்கமாக திரும்பி, உண்ட  வீட்டுக்கே ரெண்டகம்னு கேள்விபட்டுருக்கியா,அது இதுதான் புள்ள என்றார்,எதற்காக அப்படி சொன்னாங்கன்னே தெரியல.எனினும் ஆமாம் என்பது போல் தலைய ஆட்டிவிட்டு, கிளம்புவதற்கு ஆயத்தமானோம்.


அம்மா செய்திகள் டி.வியும் பெருசா எடுபடலையே,சமீபத்துல ஆரம்பிச்ச புதிய தலைமுறைலாம் துள்ளிகிட்டு செய்திகள்,விவாதம்னு ஏதேதோ போட்டுமக்களை கவர,ஏன்இங்க மட்டும் அப்படியே இருக்குக்கா நடையை கட்டிக்கொண்டே கேட்டேன்.
அதுக்கு செய்திபிரிவு துணை தலைவர் மற்றும் தில்லையோட ஆசிரியர் 
KP சுனில் செய்த சில தவறுகள் தான் காரணமாம்,அம்மா விலைஏற்றத்த அறிவிச்சப்போ, அத குறித்தநேரத்தில் ஒளிபரப்பாம டி.வில சிலகுளறுபடிகள் நடந்துச்சு.அதெல்லாம் மன்னிச்சு இப்போ இவருக்கு இரண்டாம் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாம் என்றார் பச்சியக்கா.

 

எதுஎப்படியோ,இனியும் அம்மா புராணம் மட்டும் பாடாம,நாட்டுநடப்புகள சரியா சொன்ன சரிதான் என்றேன்.ஆடுகளை ஓட்டிகொண்டு நடந்தோம்,அந்தி சாயும் நேரம்தான்.
வரும்வழியில் காட்டுசிறுக்கி எதிர் வந்தாள்,அவளோடு கொஞ்ச நேரம் நின்று பேசினோம்.அப்போது தான் வனப்பட்சி கொடுத்ததாகச்சொன்ன அந்த மூலத்தையும் எங்கள் இருவருக்கும் காண்பித்தார் பச்சியக்கா.
அந்த மூலத்தை பார்த்ததும்,காட்டுசிறுக்கி முன்பு எப்போதோ பார்த்த ஒரு இன்னொரு துண்டு ஓலையையும் இடுப்பிலிருந்த சுருக்குப்பையிலிருந்து எடுத்துக்காட்டினாள்.
காலம் கலிகாலமக்கா என்று விசனப்பட்டுக்கொண்டே அவள் நடையைக்கட்டினாள்.

நாங்களும் வெடுக்கென நடந்ததில் வீடுவந்துவிட்டது.
-குப்பாயி

0 comments:

Post a Comment