Saturday, November 15, 2014

அழகே உன்னை ஆராதிக்கிறேன் -Think! Rethink!?!

என் கைகளில் ஒரு பூ.

இருந்தாலும் அவள் அவ்வளவு அழகாக இருந்திருக்கக் கூடாது .யப்பயப்பயப்பா .தாங்க முடியவில்லை .பனி இரவு நேரம் தான் .நடுநசி .லயோலா கல்லூரி அருகில்  நெல்சன் மாணிக்கம் சாலையில் தான் உலாத்திக் கொண்டிருந்தாள்.எத்தனையோப் பெண்கள் இருக்க நான் ஏன் அவளை தேர்ந்தெடுத்தேன் .அழகு .வீட்டிற்கு கூட்டி வந்து விட்டேன் .அடுத்து வேறென்ன .ஆடைகள் கழட்டப் பட்டன .முத்தத்தில் தான் ஆரம்பித்தேன் .உடல்கள் நனைய ஆரம்பித்திருந்தது.இந்த முறை Spooning போரடித்துப் போனதால் Missionary யே ..ம்ம்ம்!!!!!!!வெயிட் வெயிட் .கற்பனையைக் கொஞ்சம் ஸ்லோ ஆக்குங்கள் .இன்னும் சிறிது நேரத்துக்கு முன் விளையாட்டு தான் .அட அட அடா ...டிவைன் !அவளும் கண்கள் சொருகிப் போய் தான் இருந்தாள் ..அவளே எதிர்பாரா நேரத்தில் குத்தி விட்டேன் .சரக் .அவள் வலி கத்தினாள் .ஆஆ .விடுவேனா மீண்டும் சரக் .அடா அடா அடா .டிவைன் .ட்ரூ டிவைன் இது தான் ..



நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think! 
Rethinkable?

Thoughts can be blocked by emotions like fear, anger, sex and excitement.

 ---------------------------------------------------------------------------------------------------------------------------,


என் கையில் ஒரு ரோஜாப்பூ ரத்தம் சொட்ட!,நிற்கிறேன் .

விடிந்து விட்டது .நான் போக வேண்டும் .அவனைப் பார்க்க வேண்டும் .நாங்கள் Medical Representatives .எல்லா இடங்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம் .உடல்கள் ஒன்று போல் இருந்தாலும் மனம் அப்படி இல்லை.இரட்டையராய் பிறந்ததில் நான் வருத்தப்படும் தருணம் அவை.He is obsessed .பைத்தியமாக திரிய ஆரம்பித்தான் எதில் தெரியுமா ?அழகு .

Wait!

நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think!! 
Rethinkable!! 


Thoughts can also be fixed, brought up,stimulated by emotions.

----------------------------------------------------------------------------------------------------------------------------,



சமாதியில் அந்த பூவை வைத்து விட்டேன் ,கிளம்புகிறேன்.

அவனை என்ன சொல்லி அழைத்தும் வரவில்லை .பிடிவாதக்காரன்.ஆனால் நாளாக நாளாக அவன் உடல் நிலை மோசமாகிக் கொண்டே போனது.ஆனாலும் அவன் திருந்துவதாயில்லை.அவனே ஏதேதோ மருந்து போட்டு அப்பப்போ சரியாக்கிக் கொள்வான்.பார்க்கவே ரொம்ப மெலிந்து விட்டான்.பாவமாக இருந்தது.அழைத்துப் பார்த்தேன் .அப்போதும் கூட என்னோடு வர மறுத்து விட்டான் .எப்படி வருவான் போதையல்லவா?.சண்டையிட்டு விட்டுதான் என்னால் வர முடிந்தது . அன்றிலிருந்து நான்கு மாத்ததில் செத்தே போய் விட்டான் .இறப்புச் சான்றிதழில் Consequential cause of death :AIDS,என்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் ,'இதற்கெல்லாம் மூல காரணம் எது-அழகு'.சும்மா எப்படி இருக்க ?


நான் ஏதேனும் சொல்லிக் கொண்டிருந்தேனா???


Think!!! 
Rethinkable???? 

Thoughts can be blocked also by confusion.




 x--------------------------------------------------------------------------------------------------------- x

0 comments:

Post a Comment