Wednesday, November 12, 2014

"ஐப்பசி-அய்யோப்பசி!"

10.11.2014
8.45am:

சிவப்பு..! .சாயமில்லை! .கொழ கொழ வென இருக்கிறது .Grease மை!????? .இருக்காது!! .அந்தளவு ஒன்றும் கொழ கொழ இல்லையே! .இரத்தம்??
?? .நீரின்நிலை எண்ணெய் போல ..!! ம் .!!!!..இருக்கலாம் .!

துகள்கள் !!.மண்ணல்ல.!!நர நர வென்று தான் இல்லையே!.பஞ்சு?? .அப்படியா பொசு பொசு வென்று இருக்கிறது .???? ஊஹெம்...இதுவேற....நாற்றம் வேறு அடிக்கிறது .மஞ்சள் .....ஏய் இது கொழுப்பு .

..இவை  எப்படி என் கைகளில் .என் முன் இருக்கும் கூட்டத்திற்கு தெரிந்திருக்கும் ..நீங் ........................???????????????????????????????????????????------------------?-----?-------------?

10.11.2014
3.10pm:

கட்டை .??இப்படியா மொழு மொழு வென்று இருக்கும்? .இது பிளாஸ்டிக் .!! நடுவில் ஓட்டை வேறு இருக்கும் போலிருக்கிறது .குழாயா..?அதை எதற்கு வைத்துத் தொலைந்துள்ளீர்கள்.??
பேசவே முடியவில்லை .!
எடுத்துத் தொலையுங்கள்..!

வாயிலிருந்து!!!!

வெண்ணிற உருவம் .அரை மங்கலில் அவ்வளவு தான் தெரிகிறது .அம்மா.........ப.........................................??????????????????????????????????????????????---------??----------------?-----------?-------?---------------------------------------?

11.11.2014
12.50pm:

அய் ...!!!!!!!!!!!!!!
எங்கப்பா வண்டி ....!
இது சென்னை சென்ட்ரல் போகும் சாலை யல்லவா...!
வெள்ளைக் கட்டிடம் ....பேருந்துகள் கூட்டம் ..வெளியே ஏதாவது எழுதி இருக்கும் .பார்ப்போம். பல்லவன் மாளிகை .??????????
சம்பந்தமே இல்லையே .!
அதோ அவரே வருகிறாரே அவரிடமே கேட்கலாம் .
"அரசின் தவறின்மையால் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது-வட்டார போக்குவரத்து அலுவலர் ".
இதை கிழித்து எறிந்து விட்டு எங்கே அவ்வளவு அவசரமாக ஓடுகிறார் .?

நான் இங்கே தானே இருக்கிறேன் .!!!!!!!!!!!!!!!

11.11.2014
1.30pm:
கந்தசாமி மிகவும் நல்லவர் .நேற்று விழுந்த இடி அவர் தலையில் விழுந்திருந்தால் கூடத் தாங்கியிருப்பார்.!
ஆனால் ஓரே மகனையும் மனைவியையும் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் இழந்ததை எப்படித் தாங்கிக் கொள்வார்......?

மகனைப் பள்ளியில் விட்டுவரத் தானே போனாள்?...போனவள் போனாளே !
சோற்றில் மண்ணள்ளிப் போட்டுப் போனாளே!!!

அய்யோ....................!!!!!

11.11.2014
1.24pm:

"இறக்கும் முன் உயிர் சைக்கான்களாய் (psychon) விரும்பும் இடம் செல்லும் ...",மனிதனுக்குள் மிருகம் ...மதனின் நூல் .
அடுத்த பக்கத்தைத் திருப்ப முடியவில்லை .
ஒட்டிக் கொண்டது.
திண்ணும் போது இரண்டு பருக்கை விழுந்திருக்கலாம் .
அந்த சமயத்தில் படிப்பது தான் அவள் வழக்கம் .கிழியாது பிரிக்க முயன்றாள் .

அலைபேசி ..பேசி முடித்ததும் பேயரைந்தது போல் விழுந்தாள் அவள் அம்மா .

21L பஸ் ஓட்டுனர் தான் அப்பா.

10.11.2014
9.50am:

"டேய் நான் என்னடா பண்ணட்டும்? .பொசுக்கென்று அந்த பொம்பள ரோட்ல விழுந்தா!!!!

அவளா ...?
அது...!நேத்து இரத்திரி பூரா மழை பெய்ஞ்சதில்லையா ...ரோடே தண்ணீல மூடிக்கிச்சுபா..பாவம் அதுக்குத் தெர்ல அங்க பெர்ச்சா ஒரு குழி இருக்குனு .!
வண்டிய உட்றுச்சு .உழுந்திருச்சு....!

ஆமா பாவம் தான் .!
முன்னாடி ஒரு பையன் வேற இருந்திருக்கான் .அதோடப் புள்ள போல..அவனுக்குத் தலைல தான் அடினு சொன்னாங்க .

நான் இப்ப போரூர் ல ஒரு construction இடத்துல இருக்கேன் .AOக்கிட்ட சொன்னேன், இப்டி சார்னு ...அவர் தான் அந்த பொம்பள ஸ்பாட் அவுட்ங்கறதால நீ கொஞ்ச நாள் வெளிய வராத ......பணம் செலவாகும் ரெடி பண்ணிக்கனுன்னாரு .அது தான் உனக்குப் பண்ணேன் ...

கைலயா...?
ஒரு 10000இருக்கும் .இன்னும் 50000வேணும்னு நினைக்கிறேன் .சரி ...!!எப்பனு சொல்றேன் .!!!

ஆனா..அந்த பொம்பள மேல பஸ் வீல் ஏறுனதுக்கப்புறம் பாக்கனுமே...அய்யோடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ....வயிறே நசுங்கி ...!
குடல்லாம் பிதுங்கி வெளிய வந்து ...!!
கொழுப்புலாம் தெரிச்சு .!!!

த்தா...!!!!பாக்கவே நாராசமா இருந்துச்சு.

பையனுக்கா ..?அவனுக்குக் கீழே விழுந்ததில தலை ல அடி ...!
ஆஸ்ப்பத்திரி ல சீரியசா இருக்கானு சொன்னாங்க ...

பஸ் நம்பரா???21L

10.11.2014
8.45pm:
அடைமழை ..!
இடி மழை ..!
சென்னையின் சீதோஷ்ணத்தையே மாற்றியிருந்தது.!

போரூர் ப்ரைம் சிஸ்ட்டி Prime Shisti அடுக்குமாடி கட்டிடத்தையும் தான் .!

அப்பொழுது விழுந்த இடி தான் கட்டுமானத்தில் இருந்த அக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று builder கட்டுமானர் மீனாட்சி சுந்தரேசன் டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்.







13.11.2014

மழை வடிந்திருந்தது!.

"அந்த !!"குழியிலும் தான்.

தார்,இலை,தழை,மண்,கல்,சேற்றோடு "சோற்றுப்" பருக்கைகளும் இருந்தன.!! மாநகராட்சி அடுத்த ஒட்டலுக்குத் தயாராகியிருந்தது!!!!!!!!!!!

தேன்மழை

0 comments:

Post a Comment