Saturday, November 15, 2014

அழகே உன்னை ஆராதிக்கிறேன் -Think! Rethink!?!

என் கைகளில் ஒரு பூ.

இருந்தாலும் அவள் அவ்வளவு அழகாக இருந்திருக்கக் கூடாது .யப்பயப்பயப்பா .தாங்க முடியவில்லை .பனி இரவு நேரம் தான் .நடுநசி .லயோலா கல்லூரி அருகில்  நெல்சன் மாணிக்கம் சாலையில் தான் உலாத்திக் கொண்டிருந்தாள்.எத்தனையோப் பெண்கள் இருக்க நான் ஏன் அவளை தேர்ந்தெடுத்தேன் .அழகு .வீட்டிற்கு கூட்டி வந்து விட்டேன் .அடுத்து வேறென்ன .ஆடைகள் கழட்டப் பட்டன .முத்தத்தில் தான் ஆரம்பித்தேன் .உடல்கள் நனைய ஆரம்பித்திருந்தது.இந்த முறை Spooning போரடித்துப் போனதால் Missionary யே ..ம்ம்ம்!!!!!!!வெயிட் வெயிட் .கற்பனையைக் கொஞ்சம் ஸ்லோ ஆக்குங்கள் .இன்னும் சிறிது நேரத்துக்கு முன் விளையாட்டு தான் .அட அட அடா ...டிவைன் !அவளும் கண்கள் சொருகிப் போய் தான் இருந்தாள் ..அவளே எதிர்பாரா நேரத்தில் குத்தி விட்டேன் .சரக் .அவள் வலி கத்தினாள் .ஆஆ .விடுவேனா மீண்டும் சரக் .அடா அடா அடா .டிவைன் .ட்ரூ டிவைன் இது தான் ..நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think! 
Rethinkable?

Thoughts can be blocked by emotions like fear, anger, sex and excitement.

 ---------------------------------------------------------------------------------------------------------------------------,


என் கையில் ஒரு ரோஜாப்பூ ரத்தம் சொட்ட!,நிற்கிறேன் .

விடிந்து விட்டது .நான் போக வேண்டும் .அவனைப் பார்க்க வேண்டும் .நாங்கள் Medical Representatives .எல்லா இடங்களுக்கும் நாங்கள் இருவரும் சேர்ந்தே போவோம் .உடல்கள் ஒன்று போல் இருந்தாலும் மனம் அப்படி இல்லை.இரட்டையராய் பிறந்ததில் நான் வருத்தப்படும் தருணம் அவை.He is obsessed .பைத்தியமாக திரிய ஆரம்பித்தான் எதில் தெரியுமா ?அழகு .

Wait!

நான் என்ன சொல்லிக் கொண்டிருந்தேன்?


Think!! 
Rethinkable!! 


Thoughts can also be fixed, brought up,stimulated by emotions.

----------------------------------------------------------------------------------------------------------------------------,சமாதியில் அந்த பூவை வைத்து விட்டேன் ,கிளம்புகிறேன்.

அவனை என்ன சொல்லி அழைத்தும் வரவில்லை .பிடிவாதக்காரன்.ஆனால் நாளாக நாளாக அவன் உடல் நிலை மோசமாகிக் கொண்டே போனது.ஆனாலும் அவன் திருந்துவதாயில்லை.அவனே ஏதேதோ மருந்து போட்டு அப்பப்போ சரியாக்கிக் கொள்வான்.பார்க்கவே ரொம்ப மெலிந்து விட்டான்.பாவமாக இருந்தது.அழைத்துப் பார்த்தேன் .அப்போதும் கூட என்னோடு வர மறுத்து விட்டான் .எப்படி வருவான் போதையல்லவா?.சண்டையிட்டு விட்டுதான் என்னால் வர முடிந்தது . அன்றிலிருந்து நான்கு மாத்ததில் செத்தே போய் விட்டான் .இறப்புச் சான்றிதழில் Consequential cause of death :AIDS,என்பதைப் பார்க்கும் போதெல்லாம் எனக்குத் தோன்றும் ,'இதற்கெல்லாம் மூல காரணம் எது-அழகு'.சும்மா எப்படி இருக்க ?


நான் ஏதேனும் சொல்லிக் கொண்டிருந்தேனா???


Think!!! 
Rethinkable???? 

Thoughts can be blocked also by confusion.
 x--------------------------------------------------------------------------------------------------------- x

Friday, November 14, 2014

குஜிலி குண்டிலினிப் பவுடர் !

முன்பெல்லாம் பொசுக்கு பொசுக்கென்று படபடப்பாகி வெடித்து கதறி விடுவான் .அப்போதெல்லாம் அவனுக்கு அது பெரிதாகத் தெரியவில்லை .

இப்போது சுருக்கம் வேறு வந்து விட்டது .இனிமேலும் இப்படியே விட்டால் மவுசு போய் விடும் என்றதனால் ஒரு டம்ளர் குடித்து விட்டு இஸ்த்த லக்கடி லாலா சுந்தரி கோல கொப்புர கொய்யா ,என்று சொல்லி விட்டு அணைத்தான் விளக்கையும் .இரவும் முடிந்தது .காலை .
அப்பாடா என்று தடவிப்பார்த்தான் டவுசர் .கடுப்பாகிவிட்டான்.சுருக்கமும் போகல ஒரு கரும்மும் போகல.

உடனே போன்பண்ணி விட்டான்.டே கோந்து மவனே!என ஆரம்பித்து அர்சனையைத் தொடர்ந்தான் .

புத்தியக் காட்டிட்டலடா என்று போனைத் துண்டித்தான் அந்த மவன்.

பள்ளி நாட்களில் இருந்தே இப்படித்தான் ஆனா ஊனா எந்திரிச்சிடுவான்,டவுட் சார் என்று .அதுவே காலப்போக்கில் மறுவி டவுசர் ஆகி விட்டது .அந்த சர் விகுதி பிடித்துப் போனதால் அவனும் அதைப் பெரிதாய் கண்டு கொள்ள வில்லை.

சின்ன வயசில்லெல்லாம் தண்ணியிலேயே ஊறிக்கிடப்பான்.காய்ந்தே போனாலும் தண்ணியிலிருந்து வரமாட்டான் .காய் பற்றியெல்லாம் அப்பொழுது கவலை இல்லை .

முந்தா நாள் அமைதி யாகப் போய்க் கொண்டிருக்கும் போது திடுதிப்பென்று விழுந்து விட்டான் .எழவே முடியவில்லை .என்ன எழவுடா என பார்த்தான் டவுசர் .எங்கும் சுருங்கி இருந்தது.

என்னடா இது வம்பு என்று, கோந்து சாமி -அவன் நண்பனிடம் சொன்ன போது தான் அந்த சாமியாரைப் பற்றி சொன்னான் .

அந்த சாமியார்தான் குஜிலி குண்டிலினி பவுடரைக் கொடுத்து அந்த மந்திரத்தையும் சொல்லிக் கொடுத்தார்.சொன்னது மாதிரியே டவுசரும் பவுசாக இரவு டம்ளர் தேனில் கலந்து குடித்து விட்டு மந்திரத்தைச் சொல்லிவிட்டு படுத்தான் .

ஒரு சோதனைக்காக கட்டிலில் இருந்து விழுந்து பார்த்தான்.எழவே முடியவில்லை .அதற்கு டவுசரின் பொண்டாட்டி சொன்னாள் "குண்டிலீனியராச்சு இப்ப குஜிலி கேக்குதா?"

Thursday, November 13, 2014

முட்டாளே மேல்!


Lucy-படம் பார்த்திருக்கிறீர்களா?
மனிதன் 100% மூளையை உபயோகித்தால் என்னவாகும் என்று காட்டியிருப்பார்கள்.முக்காலமும் உணரலாம் ,கடவுள் நிலை கூட சாத்தியம் என்பார்கள் .
100%கூட வேண்டாம் ,IQ-140தாண்டினால் நிகழும் விபரீதங்கள் தான் மேலே உள்ள படம் .
அமைதியின்றி,அடிமையாகி ச்சே,இதுக்கு முட்டாளாகவே இருந்திடலாம் போலயே !
பல சமயங்களில் வரம் எது தெரியுமா ?
அறியாமை தான் .
அறிய வேண்டாதவைகள் ,ஏன் தீயப் பழக்கங்களையே எடுத்துக் கொள்வோம் ,எதற்கு இவற்றைத் புரிந்திட முனைய வேண்டும் .இவை எல்லாம் புரிந்து முடிபவை தானா?
அறிய அறிய அடங்காத அரிப்பல்லவா அவை .!
கண் முன் தெரியாமல் கண்டதையும் போட்டு உழட்டிக்கொள்ளவேண்டாம்.மனம் ..........very fragile ...

Wednesday, November 12, 2014

"ஐப்பசி-அய்யோப்பசி!"

10.11.2014
8.45am:

சிவப்பு..! .சாயமில்லை! .கொழ கொழ வென இருக்கிறது .Grease மை!????? .இருக்காது!! .அந்தளவு ஒன்றும் கொழ கொழ இல்லையே! .இரத்தம்??
?? .நீரின்நிலை எண்ணெய் போல ..!! ம் .!!!!..இருக்கலாம் .!

துகள்கள் !!.மண்ணல்ல.!!நர நர வென்று தான் இல்லையே!.பஞ்சு?? .அப்படியா பொசு பொசு வென்று இருக்கிறது .???? ஊஹெம்...இதுவேற....நாற்றம் வேறு அடிக்கிறது .மஞ்சள் .....ஏய் இது கொழுப்பு .

..இவை  எப்படி என் கைகளில் .என் முன் இருக்கும் கூட்டத்திற்கு தெரிந்திருக்கும் ..நீங் ........................???????????????????????????????????????????------------------?-----?-------------?

10.11.2014
3.10pm:

கட்டை .??இப்படியா மொழு மொழு வென்று இருக்கும்? .இது பிளாஸ்டிக் .!! நடுவில் ஓட்டை வேறு இருக்கும் போலிருக்கிறது .குழாயா..?அதை எதற்கு வைத்துத் தொலைந்துள்ளீர்கள்.??
பேசவே முடியவில்லை .!
எடுத்துத் தொலையுங்கள்..!

வாயிலிருந்து!!!!

வெண்ணிற உருவம் .அரை மங்கலில் அவ்வளவு தான் தெரிகிறது .அம்மா.........ப.........................................??????????????????????????????????????????????---------??----------------?-----------?-------?---------------------------------------?

11.11.2014
12.50pm:

அய் ...!!!!!!!!!!!!!!
எங்கப்பா வண்டி ....!
இது சென்னை சென்ட்ரல் போகும் சாலை யல்லவா...!
வெள்ளைக் கட்டிடம் ....பேருந்துகள் கூட்டம் ..வெளியே ஏதாவது எழுதி இருக்கும் .பார்ப்போம். பல்லவன் மாளிகை .??????????
சம்பந்தமே இல்லையே .!
அதோ அவரே வருகிறாரே அவரிடமே கேட்கலாம் .
"அரசின் தவறின்மையால் தங்களின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது-வட்டார போக்குவரத்து அலுவலர் ".
இதை கிழித்து எறிந்து விட்டு எங்கே அவ்வளவு அவசரமாக ஓடுகிறார் .?

நான் இங்கே தானே இருக்கிறேன் .!!!!!!!!!!!!!!!

11.11.2014
1.30pm:
கந்தசாமி மிகவும் நல்லவர் .நேற்று விழுந்த இடி அவர் தலையில் விழுந்திருந்தால் கூடத் தாங்கியிருப்பார்.!
ஆனால் ஓரே மகனையும் மனைவியையும் நேற்று நிகழ்ந்த கோர விபத்தில் இழந்ததை எப்படித் தாங்கிக் கொள்வார்......?

மகனைப் பள்ளியில் விட்டுவரத் தானே போனாள்?...போனவள் போனாளே !
சோற்றில் மண்ணள்ளிப் போட்டுப் போனாளே!!!

அய்யோ....................!!!!!

11.11.2014
1.24pm:

"இறக்கும் முன் உயிர் சைக்கான்களாய் (psychon) விரும்பும் இடம் செல்லும் ...",மனிதனுக்குள் மிருகம் ...மதனின் நூல் .
அடுத்த பக்கத்தைத் திருப்ப முடியவில்லை .
ஒட்டிக் கொண்டது.
திண்ணும் போது இரண்டு பருக்கை விழுந்திருக்கலாம் .
அந்த சமயத்தில் படிப்பது தான் அவள் வழக்கம் .கிழியாது பிரிக்க முயன்றாள் .

அலைபேசி ..பேசி முடித்ததும் பேயரைந்தது போல் விழுந்தாள் அவள் அம்மா .

21L பஸ் ஓட்டுனர் தான் அப்பா.

10.11.2014
9.50am:

"டேய் நான் என்னடா பண்ணட்டும்? .பொசுக்கென்று அந்த பொம்பள ரோட்ல விழுந்தா!!!!

அவளா ...?
அது...!நேத்து இரத்திரி பூரா மழை பெய்ஞ்சதில்லையா ...ரோடே தண்ணீல மூடிக்கிச்சுபா..பாவம் அதுக்குத் தெர்ல அங்க பெர்ச்சா ஒரு குழி இருக்குனு .!
வண்டிய உட்றுச்சு .உழுந்திருச்சு....!

ஆமா பாவம் தான் .!
முன்னாடி ஒரு பையன் வேற இருந்திருக்கான் .அதோடப் புள்ள போல..அவனுக்குத் தலைல தான் அடினு சொன்னாங்க .

நான் இப்ப போரூர் ல ஒரு construction இடத்துல இருக்கேன் .AOக்கிட்ட சொன்னேன், இப்டி சார்னு ...அவர் தான் அந்த பொம்பள ஸ்பாட் அவுட்ங்கறதால நீ கொஞ்ச நாள் வெளிய வராத ......பணம் செலவாகும் ரெடி பண்ணிக்கனுன்னாரு .அது தான் உனக்குப் பண்ணேன் ...

கைலயா...?
ஒரு 10000இருக்கும் .இன்னும் 50000வேணும்னு நினைக்கிறேன் .சரி ...!!எப்பனு சொல்றேன் .!!!

ஆனா..அந்த பொம்பள மேல பஸ் வீல் ஏறுனதுக்கப்புறம் பாக்கனுமே...அய்யோடி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! ....வயிறே நசுங்கி ...!
குடல்லாம் பிதுங்கி வெளிய வந்து ...!!
கொழுப்புலாம் தெரிச்சு .!!!

த்தா...!!!!பாக்கவே நாராசமா இருந்துச்சு.

பையனுக்கா ..?அவனுக்குக் கீழே விழுந்ததில தலை ல அடி ...!
ஆஸ்ப்பத்திரி ல சீரியசா இருக்கானு சொன்னாங்க ...

பஸ் நம்பரா???21L

10.11.2014
8.45pm:
அடைமழை ..!
இடி மழை ..!
சென்னையின் சீதோஷ்ணத்தையே மாற்றியிருந்தது.!

போரூர் ப்ரைம் சிஸ்ட்டி Prime Shisti அடுக்குமாடி கட்டிடத்தையும் தான் .!

அப்பொழுது விழுந்த இடி தான் கட்டுமானத்தில் இருந்த அக் கட்டிடம் இடிந்து விழுந்ததற்குக் காரணம் என்று builder கட்டுமானர் மீனாட்சி சுந்தரேசன் டிவியில் சொல்லிக் கொண்டிருந்தார்.13.11.2014

மழை வடிந்திருந்தது!.

"அந்த !!"குழியிலும் தான்.

தார்,இலை,தழை,மண்,கல்,சேற்றோடு "சோற்றுப்" பருக்கைகளும் இருந்தன.!! மாநகராட்சி அடுத்த ஒட்டலுக்குத் தயாராகியிருந்தது!!!!!!!!!!!

தேன்மழை

Monday, November 10, 2014

முத்தப் போராட்டம்

இளநெஞ்சே வா!
சமீபத்திய முத்தப் போராட்டம் பற்றி ஏதாவது எல்லாருக்கும் தெரிந்துஇருக்கும் .கேரளாவில் நடந்ததல்லவா?

அட விரட்டிப் பயலே உனக்கு அதில்லென்ன என்கிறான் பச்சிலைப் புடுங்கி.அவனுக்கு பரிதி சாமி சொன்னது தெரியாது .முத்தம் .எப்படி கொடுக்கறானுவ பார்த்தீர்களா .அன்பு பாசம் என்றால் ஏன்டா வாயில் போய் கொடுக்கிறீர்கள் என்று கேட்டானா அந்த பச்சிலைப் புடுங்கி .கணவன் மனைவிக்குள் என்றால் கூட பரவாயில்லை .அன்பர்களாம் காதலர்களாம் .

சரிதான் .இப்போது முதல் படத்தைப் பாருங்கள் .அது ஹெர்பெஸ் நோய் .உமிழ் நீரால் பரவுவது.முத்தத்தால் பரவுவதென்றும் சொல்லலாம் .இன்னொன்றும் இருக்கிறது .எப்ஸ்டீன் பார் வைரஸ் .இவை இரண்டும் அதிக பட்சமாக மூளைக் காய்ச்சல் இரத்தப் புற்றுநோய் அவ்வளவு தான் உண்டாக்கும் .அதனால் என்ன என்று எண்ணும் எந்நெஞ்சங்களும் அறிக அப்படி முத்தப் போராட்டத்தில் இவை point source epidemic ஆக உருவாகி ஏதுமறியப் பச்சிளங் குழந்தையைக் கூடப் போய் சேரும் .ஒரு nuclear fission போல .இந்த இரு வைரஸ்களும் எயிட்ஸ் போல ஒரு முறை வந்தால் அழிக்கக் கூட முடியாது.புற்றுநோய் அளவுக்கு இல்லாவிட்டாலும் அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒன்று வாழ்க்கைத் தரம் .இளமையின் ஆற்றல் .சக்தி .வலிமை .அனைத்தையும் உறிஞ்சி சோம்பேறியாக்கி மூலையில் முடக்கி விடும் .இதற்குத் தானே ஆசைப்படுகிறீர்கள் பாலகுமாரர்களா?.
Enjoy .

All You have created is not history ,but A Point Source epidemic .
இச்சைகளைக் கொண்டு இம்சிக்கவும் வேண்டாம் .இம்மியளவும்வாழ்வில்  நசுங்க வேண்டாம் .

சமீபத்தில் கூட Roger Federar டென்னிஸ் ஆட்டத்தில் தோற்ற போது மோனோ நியுக்கிலியஸ் Mononucleosis தொற்றால் என்ற பேச்சு வந்தது நினைவிருக்கிறதா?

பொது வெளியில் சாக்கலேட் சாப்டுற மாதிரி "இச்"யிடும் மேலை நாட்டை உதாரணமாக எடுத்தீர்கள் என்றால் .அவன் எப்போதும் லேசான சரக்கு போதையிலேயே இருப்பான் அல்லது இருப்பாள் .நீங்களோ நானோ அப்படியா?

இச்சை போல் இருந்து வாழ ஈப்புழு எறும்பு கோரும் உச்சமாம் மனித ஜென்மம் இச்செயலை மறந்து வாழ்ந்து தொலைப்போமாக!

கொக்கு விரட்டி


தேன்மழை