Sunday, November 16, 2014

குரங்கு மனுசா!-@Random Thoughts

இது நடந்தது சுமாராக 4லட்சம் வருடங்களுக்கு முன்
.மனிதனுக்கும் குரங்குக்கும் நிகழ்ந்த கருத்து வேற்றுமைகளில் முதன்மையானது ,"முடியும் ,முடியாது"!.முடியாதென்றவர்கள் இன்றும் வயிற்றுப் பிழைப்புக்கு 'அடுரா ராமா 'தான் போட்டுக் கொண்டுள்ளார்கள் சாலையில் .ஏனையோர் வேலையில் ,ஓலையில் !
சங்க காலத்தில் பேப்பர் இருந்ததா என்ன ..?(ஓலை =பேப்பர் )
 ----------------------------------------------------------------------------------------------------------

மூங்கிலென்ன முகிலென்ன?
ரோஜாவின் இதழன்ன!
மெல்லிதழ் கள்வ!நின்!
பன்னீரின் இதந்தன்னில் !
குத்திய முள் மறந்தேன் .
-மீசை !

=================================================================

மூடி வைத்தல்-

எங்காவது சாப்பாட்டை மூடி வைத்து சாப்பிட்டுப் பார்த்ததுண்டா?
இல்லை,
எங்காவது அழுகிய ஊசிப்போனப் பண்டத்தை மூடாமல் வைத்துப்பார்த்ததுண்டா?
இரண்டும் பட்சணங்கள் தானே!
ஆனால்,
அதே உணவை இன்னொரு இடத்துக்கு எடுத்துச் செல்லும் போது மூடித்தானே எடுத்துப் போகிறோம் .மூடாமல் போனால் பிறகு அது காக்காய் கழுகுகளுக்குத்தான் இரையாகும் .
அப்படி ஒரு பண்டம் பெண் உரு எனக் கொள்க!
மகளிர் தமக்கைகளே,தயவுசெய்து மூடிக்கொள்ளுங்கள், காக்காய் கழுகுகள் பல ஊளையிட்டே உலவுகின்றன ,கவ்விட்டுப் போனபிற்பாடு கூப்பாடு போட்டாலும் போச்சே போச்சே வட போச்சே  தான் .

###########################################################################

ஈன்று புறந்தருதல் எல்லா தாய்மார்கள் கடமை .அந்த மகன் உலக மக்கள் ,தன் சமுதாய மக்கள் மெச்சும் படி தீங்கிழைக்காத நல்வழி நடக்கும் மனிதனாக்கி அறிவடைத்துக்காக்க கடவது தந்தை .அது அவரின் பிறவிக் கடன் .அதாவது நீ ஒரு தாயாகவோ தந்தையாகவோ ஆவாயே ஆனால் இச்செயல்கள் தானாகவே இயங்கிக்கொள்ளும்.
ஒரு கேள்வி தோன்றுகிறது .அப்படியானால் ஒரு இளைஞன் இளைஞியின் பிறவிக் கடன் யாது ?.அம்மகவைப் பெறல் .
அதற்கு
ஈர்த்தல் ஈர்க்கப்படுதல் இளமையின் பெறும் பொறுப்புஅல்லது கடன்கள் ஆகின்றன .முடிவில் இயற்கை என்னிடமோ உன்னிடமோ யாரிடமும் வேண்டுவது வாழ்வு சங்கிலியின் சுழல் தொடர்ச்சி.

---------------------------------------------------------------------------------------------------------------------

அதுக்கு நீ சரிப்பட மாட்ட !!

உசுப்பேத்தி உடம்பை ரணகளமாக்குவது என்பது உணர ஆரம்பிக்கிறது.கட்டியவளாயினும் கண்டவளாயினும் காவ காகாவும் ஒன்று தான் ..சொரணையற்ற சடங்கள்.ச்சை இதை விரும்பினோம் ?அருவருப்பாக உள்ளது .ஒரு ஆண் குடிகாரன் ஆவதற்கு ஒரு பெண்ணே போதுமான காரணமாயிருக்கிறாள்.ஆணுக்கோ- போதை அவசியத்திலும் அத்யாவசியமாகிறது.இந்த இழவெடுத்த பிறப்பெடுத்த காரணமோ பல சமயம் உணர்வுகளில் மங்கிவிடுகிறது.சமூகம் பெண்ணை வைத்து காசு பார்த்து கொழுக்க ,அதுவே ஆணின் ஏமற்றத்துக்கு அடிதளமாகிறது.குரங்கு மனதுக்கு சொல் புத்தி கிடையாது ,சுயபுத்தி மட்டும்தான் .சொன்னாப்புரியாது?பித்து பிடித்து தான் போகிறது .அறிவியல் மொழியில் சொல்ல வேண்டுமானால் டோப்பமைன் ,டெஸ்டோஸ்டிரோன் குவியல் கூடுதல் நிறைதல் நிரப்புதல் .உண்மையான ஆண் பித்தனாகவே வாழ்கிறான் .ஆண்ட இறைவனுக்கும் இது பொருந்தும் .ஆதாம் காலங்களில் நம் ஒவ்வொருவருக்குள்ளும் திரிந்த ஒரு மிருகத்தை வெளிச்சம் இல்லாத சத்தம் கேட்காத அறைக்குள் பூட்டிவிட்டோம்.கடமை கண்ணிய கட்டுப்பாடுகளின்  உணர்வலைகள் கதவாக இவ்விலங்கு  சிலிர்த்த போதும் திடமாக இத்தனை காலமும் காத்து விட்டது .ஆனால். இனி?

உணர்ச்சி வெள்ளத்தில் நீந்தி வாழும் இக்காலத்தில் .?அக்கதவுடைந்து மீண்டும் ஆதாம் காலம் துளிர்க்கிறதோ என ஐயமாக உள்ளது.

=======================================================================

வலி -

மனித இருத்தல் இயக்கம் இவற்றின் குறியீடு .
சில வேளைகளில் அளவுக்கு மிஞ்சும் வலி நஞ்சாகி விடும் .

நாலைந்து வேதிகள் சேர்ந்து மனதில் எழும் வலி இருக்கிறதே!ம்ம்ம்..இதுதான் மனம் எனத்தெரியத்தொடங்கும் நாளிலிருந்து பிடிக்கும் சனியது.

பூங்காகள் சென்றிருப்போம் தோட்டக்காரர் தலையை க்ராப் வெட்டுவது போல செடிகளை வெட்டுவதைப்பார்த்திருப்பீர்கள் ,அது மாதிரி களை யான எண்ணங்களையும் வெட்டியெறிய நல்ல சமுதாயம் நிச்சயம் வேண்டும் .

நல்ல சமுதாயம் என்பது அறிவார்ந்த பெற்றோர் ,கற்ற நண்பர் ,குற்றமில் சுற்றம் என பல குவியல்களின் முகமது .இதில் எங்கு பிளவென்றாலும் ,தொல்லை தனி மனிதனுக்கு மட்டுமல்ல என்பதை இவ்வூர ர் இம்மையில் உணர்வதற்கு குற்றாலீசுவர முயற்சி செய்தாலும் முடியாது .

மனம் பத்திரம் அங்கு தான் உங்களை ஆளும் கடவுள் எண்ணங்களாய் வசிக்கிறார் .

ஆளும் என்ற வார்த்தையை உபயோகித்தேன் ,அதன் பொருள் எனக்கு பிடிக்குமோ பிடிக்காதோ எதையும் செய்ய வைக்க வல்ல ஆணை பிறப்பிக்கும் அரசு போன்றது .அதனால் அங்கு நல்லவற்றையே காட்டுங்கள் ,தீயவை தீய பயத்தலால் !

-தேன்

~~