Showing posts with label அறம். Show all posts
Showing posts with label அறம். Show all posts

Wednesday, December 21, 2011

மொழி வாழ்த்து

அடலேறு வன்மொழி ஈந்து,அலையின்
கடலேறு இன்பத்தொல் நற்தமிழே -பட்டின்
மடலேறு மன்றத்தின் மாசற்றார் மன்னும்
உடலேறு முத்தவிழ் சொற்றமிழே வந்திற்
திடலேறு வண்டொளி வாழி
                                                       

மொழியின் சுவை

மலரிடையே றுந்தேனாம் தீஞ்சுவையின் மன்றுடையாம்
மல்லிடையள் ளுந்தையாம் வீறொன்றுடன் வாழுடையாம்
சொல்லிடைகா ணல்லவையி லங்கமையுஞ் சந்துடையாம்
பள்ளிடையேழ் கண்டொளிர்ந்த பண்டமிழை வணங்கேனே !!

Sunday, November 27, 2011

அன்பு


வாடுமந்த வற்றிப்போன வோடைபார்த்து 
நீலகொண்டை அன்னமே!
நாடியதன் பிணியறுக்க அலகில் சேரும்
கயலும் அந்த வண்ணமே

தேடும் காதல் தெளியவைக்க
நாளும்வேண்டும் நமக்குஇந்த எண்ணமே 
ஏடுசொல்லி எர்க்கதோர் கொள்ளுங்கள் 
அன்பினுக்கு இதுமொரு சின்னமே !!

எண்ணம்

எண்ண அலைக் கூரையிலே
  என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
  நட்ட  இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
  கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
  சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
  உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
  தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
  வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
  கடவுளும் நம் அகமல்லோ !!






உயிர்

மேகமகள் வெள்ளிமலர் உத்தரவு 
அடர்வனப் பூங்கா என் நிற 
துண்டு மர இருக்கை நேர் வந்தேன் 
பின்னோர் நெடு மரத்து  உச்சியில் 
வாண்டாய் மந்திக் கூட்டம்  ஆடும் 
தொடை  கண்ணப் பாலம் எழுப்பிய 
பிதாமகனாய் விழிமூடிய ஒருவன் 
அமர்ந்தான் கால் முன் சிறுகுட்டை 
முகம் விளங்கியது ஏனோ வாட்டம்?
பேரிடி அல்ல! : அதன் ஒலியால்!!,
திறந்தவன் விழியில் ஒரு துளி
மீனாய் அடையவும் மனையே ,
வனம் படித்து இனம் படித்து இறுதியில் 
அவன் மனமும் படித்தேன் ஒரு கேள்வி 
அறுகனதிற்கு வெடி மறப்பாய் ஏன்?
ஒரு கனதிற்கோ உயிர் துறப்பாய்!!
விழியொளி சிறுமுருவலோடு பதில் 
நீயார் எங்கிருந்து இவ்வொலி?
கருநிறதிருந்தும் தெரியலையோ? 
பாவம் !! அகன்றேன்  என் பேர் புகை!!!!!!!!!!!!!!!!!!!