Thursday, January 5, 2012

மகாகணம் பொருந்திய இவர்கள் - சுயநல கயவர்கள் தானா?

நன்நெஞ்சே!

நேற்று பொதுவாக உரையாடிக்கொண்டுஇருக்கும் போது,


 


திடீரென்று அவசர அவசரமாய் கங்காணி ஓடிவந்தான்.
என்ன சேதி என்று கேட்டதற்கு,ஏதோ முக்கிய விசயமாக இஞ்சியும், கணவன் நஞ்சனும் ஆற்றைக் கடக்க கட்டுமரத்தில் ஏறினார்களாம்,பிறகுதான் தெரிகிறது அது அரைமுங்கி முதலைஎன்று,முங்கி இஞ்சியை விழுங்கிவிட நஞ்சன் முங்கியை கொன்றுவிட்டானாம்.முங்கியை இழந்ததால் மற்ற எல்லா முங்கிகளும் கரையில் நின்று கண்ணீர் வடிக்கிறதாம்.
 


இதனால் வன மக்கள் ஆற்றைக் கடக்க முடியாமல் கலங்கி நிற்கிறார்களாம்,என்ன செய்யலாம் பஞ்சாயத்து? என்றான் கங்காணி.

"சொல்கிறேன் இரு" என்று எங்கள் உரையாடலைத் தொடர்ந்தோம்.

அப்போது வனப்பட்சி, தினமணி எழுதி அனுப்பியதை வாசித்தது,
-------------------------------------------------------------------------------------------------------------


“தூத்துக்குடி டாக்டர் சேதுலட்சுமி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலைநிறுத்தம் செய்தனர். சக மருத்துவர் படுகொலையில், அனைவரும் வேதனைப்படுவதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால், ஒரு கிளீனிக்கில் நடந்த சம்பவத்தை ஏன் அரசு மருத்துவமனையோடு முடிச்சுப் போட வேண்டும்?

டாக்டர் சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனையின் தலைமை மருத்துவர். ஆனால், அரசு மருத்துவரின் சிகிச்சையில் குறை கூறியோ அல்லது அரசு மருத்துவமனை வளாகத்திலோ இந்தக் கொலை நடந்திருக்கவில்லை. அவர் தனியாக நடத்தி வரும் சுபம் கிளீனிக்கில் நடந்த சம்பவம் இது.

ஒரு கர்ப்பிணிப் பெண்ணுக்கு நடத்திய அறுவைச் சிகிச்சை; அதன்பின் நேர்ந்த சிக்கல்; அந்தப் பெண்ணின் மரணம்; "பணம் கொண்டு வந்து தரும்வரை மனைவியை பெரிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லவில்லை' என்று கொலைக்குற்றவாளி சொல்லும் குற்றச்சாட்டு என அனைத்து விவகாரங்களும் சுபம் கிளீனிக்குடன் தொடர்புடையவை.

மேலும், மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்வதாக கொலையாளி மிரட்டிச் சென்றுள்ளார். அது குறித்து காவல்நிலையத்தில் டாக்டரே புகார் கொடுத்துள்ளார். கொலை மிரட்டல் விடுத்தவரை காவல்துறை கைது செய்திருக்கலாம் அல்லது சமரசம் பேசியிருக்கலாம். மருத்துவ உலகம் முதலில் கண்டிக்க வேண்டியது காவல்துறையைத்தான்.

இவை எல்லாவற்றையும் மறந்துவிட்டு, இறந்துபோன சேதுலட்சுமி இஎஸ்ஐ மருத்துவமனை தலைமை டாக்டர் என்பதை மட்டுமே முன்னிலைப்படுத்தி, அனைத்து அரசு மருத்துவமனைகளையும் ஸ்தம்பிக்கச் செய்வது முறையானதுதானா? நோயாளிகள் வெளியூர்களிலிருந்து வந்து சிகிச்சை பெற வழியில்லாமல் முதியோரும் சிறுவர்களும் பெண்களும் ஆங்காங்கே, காய்ச்சலாலும் வேறு நோயாலும் முடங்கிக் கிடந்த காட்சி பரிதாபகரமானது. தனியாக சுபம் கிளீனிக் நடத்திய அரசு மருத்துவரின் படுகொலையின் துயரத்தை அரசு மருத்துவமனைக்கு வரும் அனைத்து நோயாளிகளின் முதுகிலும் ஏற்றிவிடுவது நியாயமல்ல.

சக மருத்துவரின் படுகொலைக்கு வருந்தும் மருத்துவ உலகம்,

கொல்கத்தாவில் 90 பேர் இறந்த நாளில் கருப்பு பேட்ஜ் அணிந்து, நோயாளிகளின் மரணத்துக்காகத் தங்கள் வேதனையைத் தெரிவிக்கவில்லை. இந்த 90 பேர் மரணமும் வெறும் ரூ.3 லட்சத்தை மிச்சப்படுத்தப்போய் நேர்ந்த சம்பவம். கீழ் தளத்தில், ஸ்டோர் ரூமுக்கு எதிராக இரவில் இறக்கி வைத்த பஞ்சு மற்றும் மருந்து பெட்டிகளில் ஏற்பட்ட தீயை, ரூ.3 லட்சம் மருந்துகள் என்று கணக்குப் பார்க்காமல் தண்ணீரை ஊற்றியிருந்தால், 90 உயிர்கள் இறந்திருக்க நேர்ந்திருக்காது என்று ஆய்வறிக்கை தெளிவுபடுத்திய பின்னராகிலும், அந்த மருத்துவமனையை மருத்துவ உலகம் கண்டிக்கவில்லை. இந்த நேரத்தில் இவற்றையும் நினைக்கத்தான் வேண்டியிருக்கிறது.

ஒவ்வொரு மருத்துவமனையிலும் அவசர ஊர்திகள் மட்டுமல்ல, அமரர் ஊர்திகளும் இருக்கின்றன. அன்றாடம் யாரோ ஒருவர் இறக்கின்றார். "டாக்டரும் எவ்வளவோ முயற்சி செய்தார்; முடியவில்லை' என்றுதான் உறவினர்கள் இந்தச் சடலங்களை வீட்டுக்குக் கொண்டு செல்கிறார்கள். யாரும் கொலைவெறி கொள்வதில்லை. சில நேர்வுகளில் உறவினர்கள் ஆத்திரம் கொள்கிறார்கள் என்றால், அதற்குக் காரணம் இறந்தவர்களின் மரணத்தைவிட, மருத்துவமனையில் உறவினர்கள் சந்திக்க நேர்ந்த சம்பவங்கள்தான் என்பதை மருத்துவ உலகம் ஏன் சிந்திக்கவில்லை

புத்தாண்டு நள்ளிரவில் கோவை அரசு மருத்துவமனைக்கு, பைக்கில் விழுந்து காயமடைந்து வந்த இளைஞர் தனக்கு சிகிச்சை அளிக்கவில்லை என்பதற்காகப் பயிற்சி மருத்துவரை அறைந்த சம்பவமும், அதைத் தொடர்ந்து போராட்டமும் நடைபெற்றது. அந்த இளைஞர் குடித்திருந்தார் என்பதும், அவருக்கு சிகிச்சை அளிக்க இயலாது என்பதும் உண்மைதான். ஆனால், அறைகின்ற அளவுக்கு சுயநினைவுடன் இருக்கும் அவருக்கு முதலுதவி செய்திருந்தால் இந்தச் சம்பவம் நடந்திருக்குமா?

"அரை மணி நேரத்துக்கு முன்பாகக் கொண்டுவந்திருந்தால் காப்பாற்றியிருக்கலாம்' என்று டாக்டர் சொல்வதை உறவினர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். நோயாளியைக் கொண்டு வந்து இரண்டு மணி நேரம் ஆனபிறகும் டாக்டரைக் காணாமல், தேடிப்பிடித்து அழைத்துவந்து சிகிச்சை அளித்த பிறகு நோயாளி இறந்தால், தாமதமான சிகிச்சைதான் மரணத்துக்குக் காரணம் என்று உறவினர்கள் ஆத்திரமடைந்தால், அதை மட்டும் ஏன் மருத்துவ உலகம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறது? இத்தகைய தகராறுகள், வன்முறைகள் யாவற்றுக்கும் உயிரிழப்பு காரணம் அல்ல. உயிரிழந்த நோயாளிக்குக் காட்டப்பட்ட அலட்சியம்தான் உறவினர்களின் உணர்வுகளை தீக்கொழுந்தாக்குகிறது.


வேலூர் மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில், காலையில் கையெழுத்துப்போட்டுவிட்டு, பகல் 10 மணிக்கே தினமும் சென்னைக்கு சென்றுகொண்டிருந்த 4 டாக்டர்களை காட்பாடி ரயில்நிலையத்தில் பொதுமக்கள் அடித்து உதைத்து, ரயில்வே போலீஸாரிடம் ஒப்படைத்தார்களே அவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்களுக்கு எதிராக மருத்துவ உலகம் ஏன் போராட்டம் நடத்தவில்லை? இதே மருத்துவ உலகின் ஒற்றுமைதானே அவர்களைக் காப்பாற்றி வைத்திருக்கிறது.

மணப்பாறையில் தன் மகனைக் கொண்டு அறுவைச் சிகிச்சை செய்ததாக ஒரு டாக்டர் மீது புகார் எழுந்ததே, அது என்னவாயிற்று? சேலம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி மரணம் தொடர்பாக பெரும் ஆர்ப்பாட்டத்துக்கு பிறகு டாக்டர்கள் குழு விசாரித்ததே, அதன் முடிவு என்ன? எல்லாவற்றுக்கும் ஒரே விடைதான்: "பொய்யான புகார்'. "சாவுக்கு டாக்டரின் சிகிச்சை காரணமல்ல'.தூத்துக்குடியில் டாக்டர் சேதுலட்சுமியால் சிகிச்சை அளிக்கப்பட்டு இறந்த பெண்மணி பிரசவத்தில் இறக்கவில்லை. ஆறுமாத கர்ப்பிணியான அவருக்கு திடீரென்று வலி ஏற்பட்டபோது, தொடர்ந்து சிகிச்சை அளித்துவந்த மருத்துவரான டாக்டர் சேதுலட்சுமியின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அளித்த சிகிச்சை பலனளிக்காமல் இறந்திருக்கிறார். உடனடியாக வேறு மருத்துவமனைக்கு அந்தப் பெண்மணி அனுப்பப்பட்டிருந்தால் ஒருவேளை பிழைத்திருக்கலாம். ஆனால், பணம் கட்டிவிட்டுத்தான் அபாயகரமான நிலையில் உள்ள நோயாளியை எடுத்துச் செல்ல அனுமதித்திருக்கிறது அந்த மருத்துவமனை என்றால், அதைக் கண்டிக்காமல் இருக்க முடியவில்லையே..

தனது மனைவியின் மரணத்துக்குக் காரணமான டாக்டரைக் கொலை செய்த கணவரை மன்னிக்க முடியாதுதான். அதைத் தீர்மானிக்க காவல்துறையும் நீதிமன்றமும் இருக்கின்றன. அதற்காக வேலை நிறுத்தம் என்ற பெயரில் ஆயிரக்கணக்கான அரசு மருத்துவமனை நோயாளிகளை மருத்துவர்கள் சிகிச்சை அளிக்காமல் தண்டிப்பது என்ன நியாயம்? தங்களது சமுதாயப் பொறுப்பை மறந்துவிட்டு, பணத்துக்காக மட்டுமே இயங்கும் இதயமில்லாத இயந்திரங்களாக மருத்துவர்கள் மாறும்போது அதனால் ஏற்படும் எதிர்வினைகள் தான் இதுபோன்ற சம்பவங்கள். வேலை நிறுத்தத்தில் ஈடுபடும் மருத்துவர்கள் ஸ்டெதாஸ்கோப்பைத் தங்கள் இதயத்தில் வைத்துக் கேட்டால், ஒருவேளை அது உண்மை சொல்லும்.”
-------------------------------------------------------------------------------------------------------------

“எல்லோரும் ஏன் மருத்துவர்களை இப்படி ஏசுகிறார்கள்.உங்கள் வீட்டில் ஒரு சொந்தத்தைக் கொன்றால் பக்கெட்டில் கறுப்புக் கொடியோடு எதிர்ப்பை முடித்து கொள்வீர்களா?மருத்துவர்கள் கடவுள் என்று நீங்களாக நினைத்துக் கொண்டால் அவர்கள் என்ன செய்வார்கள்?பாவம்!.அவர்கள் மட்டும் என்ன அமிர்தம் குடித்து விட்டா பிறந்தார்கள்?சதையும் வயிறுடனும் தானே பிறந்திருக்கிறார்கள்.

Dr.Sethulakshmi

மருத்துவர் படுகொலை செய்யப் பட்டதைக் கண்டித்து அரசு மருத்துவர்கள் அனைவரும் ஒரு நாள் வேலை நிறுத்தமும், இன்று தனியார் மருத்துவர்களும் இணைந்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தமும் செய்வது எந்த வகையில் தவறாய் போயிற்று?ஒரு நாள் தானே ஒரு வாரமா இருக்கப்போகிறார்கள்.


அதற்குள் மருத்துவம் என்பது மற்ற பணிகளைப் போன்று அல்லாமல் சேவை மனப்பான்மை உள்ளவர்கள் மட்டுமே மேற்கொள்ள வேண்டியது.அந்தச் சேவை மனப்பான்மை மட்டுமே மருத்துவர்களை , பாதிக்கப்பட்ட நோயாளிகளும் அவர்தம் குடும்பத்தினரும் கடவுளாகவே பார்கிறார்கள்.அப்படிப்பட்ட சேவையைச் செய்பவர்கள் தங்கள் கடமையையை உணர்ந்து செயல்பட வேண்டும்,இப்படி குய்யோ முய்யோ என்று கத்துவதால் என்ன பயன்?”இப்படி கேட்ட பச்சிலைப்புடுங்கியின் கேள்வியிலும் அர்த்தம் தொனித்தது.

என்ன தான் சங்கதி?"மகேஷ்(ஆட்டோ ஓட்டுனர்)-புத்தாண்டுக்கு இரண்டு நாள் முன்பு, 6 மாச புள்ளத்தாச்சியான நித்யாவை அந்த டாக்டரிடம் காட்டினாராம்,ஏன் காட்டினார்?

தீவிரமான வயிற்று வலி ஒன்று ,இரண்டு பேறுகாலத் தொடக்கம் முதலே இவரிடம் தான் சென்றுள்ளார்கள் தம்பதிகள்.குழந்தை இறந்ததுள்ளது எனத் தெரிந்ததும் அறுவை சிகிச்சை செய்துள்ளார்.நிலைமை மோசமாகவே AVM தனியார் மருத்துவ மனைக்கு அனுப்பியுள்ளார்,ஆனால் வழியிலேயே இறந்துவிட, உணர்ச்சிவசப்பட்டு ஈமச் சடங்குகளை முடித்த கையோடு,உங்கள் தவறால் தான் என் மனைவி இறந்தாள் என்று ஜன 2 இரவு 10.30 மணிக்கு அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டான் கணவன்" என்றான் கொசுவிரட்டி.


அப்படியே,அனைவரையும் முந்திக்கொண்டு இந்த தகவலைச் சொன்னான் கொக்கு விரட்டி,INDIAN MEDICAL ASSOCIATION கவுரவ செயலாளர்,டாக்டர் ரவிசங்கர்,என்ன சொல்றாருனா,


“இது போன்ற சம்பவம் தமிழகத்தில் நடைபெற்றது இதுவே முதல் முறை .இந்திய மருத்துவ சங்கம் இந்த கொடுஞ்செயலை வன்மையாகக் கண்டிக்கிறது .இது போன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்காமல் இருக்க அரசு தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளுக்கும்,மருத்துவர்கள்,ஊழியர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்.


பொதுமக்களுக்கு விழிப்புர்ணவை ஏற்படுத்த வியாழக்கிழமை அனைத்து தனியார் மருத்துவமனை மருத்துவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளோம்.தமிழக மருத்துவர்கள் போராட்டத்திற்கு புதுவை ,கேரளா,ஆந்திரா,கர்நாடக மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்துள்ளார்கள்.அரசிற்கு எங்களது கோரிக்கையை அந்தந்த மாவட்டத் தலைநகர கலக்டர்களிடமும்,சென்னை மருத்துவத்துறை செயலாலரிடமும் மனுவாக அளிப்போம்.


பொதுமக்களுக்கும் மருத்துவர்களுக்கும் சுமூக உறவு இருக்க வேண்டும்.சமீபகாலமாக மருத்துவர்கள் பொதுமக்கள் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது.ஆபத்தான நிலையில் இருப்பவர்களையும் இருப்பவர்களையும் காப்பாற்ற வேண்டும் என்று தான் சிகிச்சை அளிக்கிறோம் அதனையும் மீறி நோயாளி இறக்கும்போது மருத்துவரைக் குறை சொல்வது எப்படி நியாயம் ஆகும்?”


“ஆமாம் நியாயம் இல்லை தான். டாக்டர்.சேதுலட்சுமி உண்மையில் ஒரு மகளிர் நல மருத்துவரோ, அறுவை சிகிச்சை நிபுணரோ அல்ல, மயக்கமருந்து மருந்து நிபுணர்,

அதுவும் MD (anesthesiology) அல்ல D.A(diploma in anesthesiology).ESI மருத்துவர், அரசு மருத்துவர்,பல வருடங்கள் அனுபவமான மருத்துவர் இந்த தகுதிகளோடு மட்டுமே அந்த 26வயது இளம் பெண்ணின் வயிற்றைக் கிழித்து இறந்த குழந்தையை அகற்ற முயற்சித்திருக்கிறார் மருத்துவர்.

வயிற்றிலேயே 6மாத குழந்தை இறந்து,HELLP syndrome ஆல் பாதிக்கப் பட்டு உயிருக்கே மோசமான நிலையில் வந்திருக்கும் பெண்ணை ICU வில் வைத்து ஒரு மகளிர் நல மருத்துவர் பார்த்திருக்க வேண்டுமே அல்லாது மயக்க மருந்து நிபுணர் அல்ல.அதென்ன HELLP syndrome பேறுகாலத்தில் இரத்தக் கொதிப்பால் உண்டாகும் மோசமான தீவிளைவு.
இந்த நோயாளியைப் போல் மிகுந்த வயிற்று வலியோடு வரும் இந்நோயில் hemolysis,liver enzymes elevation,low platelets,ஆகிய பண்புகள் இருக்கும், திடீரென ரத்த அழுத்தம் குறைந்து மரணமே நிகழும்.இது ஒரு obstetric emergency.இதை ஒரு obstetrician,anesthetist,hematologist ஆகியோர் கூட்டு முயற்சியில் தீவிர சிகிச்சைப் பிரிவில் மட்டுமே வைத்து,eclampsia நிலைக்கு போகாமல் தடுக்க-magnesium sulphate

corticosteroids

ரத்தம் கசிந்து-ரத்த அழுத்தம் குறையாதிருக்க-platelet transfusion,fresh frozen plasma transfusion

caesarian section

போன்ற சிகிச்சைகளை மிகுந்த கண்காணிபோடு அளித்திருக்க வேண்டும்,
 

ஆனால் தன்னுடைய சாதாரன கிளினிக்இல் எப்படி, இப்படிப்பட்ட அபாயகரமான(risky) சிகிச்சை அளிக்க முனைந்தார் என்பது தெரியவில்லை.அறுவை சிகிச்சை எல்லாம் செய்த பின் நிலைமை மோசமாகவே,AVM hospitalக்கு அனுப்பியுள்ளார்,போகும் வழியிலேயே அதிக ரத்தம் கசிந்து,ரத்த அழுத்தம் குறைந்து,மயங்கியுள்ளார் நோயாளி.


AVM hospital லில்"நோயாளி வரும் போதே இறந்து விட்டார்,(brought dead)" எனக் கூறி விட்டனர்.நித்யா இறந்துவிட்டார்.


கனகலக்ஷ்மி-இறந்த நோயாளியின் மாமியார் கூறுவதைக் கேட்டால் இன்னும் பகீர்,10,000ருபாய் முன்பணம் செலுத்தும் வரை மருத்துவர், நோயாளியைத் தொடவே இல்லையாம்.இரண்டு மணி நேரம் கழித்து கணவன் பணத்தோடு வந்த பிறகு தான் சிகிச்சையையே துவங்கினாராம் அந்த மருத்துவர்”.

மருத்துவர் முதலிலேயே நோயாளியை சகல வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.(refer to tertiary centre,அந்த tertiary centre ன  என்ன டா -கொசுவிரட்டி.நம்ம மெட்ராஸ் பெரியாஸ்பத்திரி மாதிரினு வச்சிக்கயேன்-கொக்கு விரட்டி)

மேலும்,

Indian Penal Code, 1860 sections 52, 80, 81, 83, 88, 90, 91, 92 304-A, 337 and 338 contain the law of medical malpraxis in India.

A physician can be charged with criminal negligence when a patient dies from the effects of anesthesia during, an operation or other kind of treatment, if it can be proved that the death was the result if malicious intention, or gross negligence. Before the administration of anaesthesia or performance of an operation, the medical man is expected to follow the accepted precautions

“Gross Lack of competency or gross inattention, or wanton indifferences to the patient’s safety, which may arise from gross ignorance of the science of medicine and surgery or through gross negligence, either in the application and selection of remedies, lack of proper skill in the use of instruments and failure to give proper attention to the patient.” (Hampton v State; State v Lester)ஆக ,sec 304-A பிரிவின் படி இது ஒரு அப்பட்டமான MEDICAL CRIMINAL NEGLIGENCE இல்லையா?

இந்த கொடும் குற்றச்செயலுக்கு வக்காலத்தாகத்தான் மருத்துவர்கள் போராடுகிறார்களா?


சரி,இந்த போராட்டம் நடத்திய டாக்டரில் யாரேனும் ஒருவர் அந்த டாக்டர் தவறே செய்யவில்லை என்று உறுதி செய்துவிட்டு அதன் பின் போராட்டம் நடத்தி இருந்தால் இந்த டாக்டர்களை நாம் பாராட்டலாம், கோயில் கட்டி கூட கும்பிடலாம்.ஆனால் யாரவது செய்தார்களா?

நம் தேன்மழையின் இவ்விடத்தில் MEDICAL NEGLIGENCE பற்றி மேலும் அறிந்துகொள்ளலாம்.


இதே அமெரிக்க,லண்டன் போன்ற அயல் நாடுகளில் நடந்திருந்தால் டவுசரை உருவி டங்குவாரை அத்திருப்பார்கள்.

ஆனால் இது இந்தியா ஆயிற்றே! இங்கே மருத்துவர்கள் கடவுள் அல்லவா?அதனால் தான், நம்மை என்ன செய்து விட முடியும் நம்மில் என்ன குற்றம் கண்டு விட முடியும் என்ற ஆணவத்தில்,இருமாப்பில்,உயிர்களை காக்கவும் செய்வோம் சாகவும் விடுவோம் என்று திமிரோடு இன்று வேலை நிறுத்தம் செய்கிறார்கள்.

சரி,இவ்வளவு பொறுப்பான மருத்துவர்கள்,வேலை முடிந்தவுடன் முதல்வரையோ ஆளுனரையோ சந்தித்து மனு கொடுக்கலாம் இல்லையா?அதெல்லாம் செய்ய மாட்டார்கள்,”நாங்க அப்படித்தாண்ட என்னடா பண்ணுவீங்க?” என்பது போல அடாவடித்தனம் செய்யும் இப்படிப்பட்ட மருத்துவர்களை ,இந்த சமூகம் இனி எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறது எனத்தெரியவில்லை.

கடகடவென தான் அறிந்த செய்திகளை மழை பெய்து ஓய்ந்தது போல் பொளந்துதள்ளிவிட்டு அமர்ந்தாள் காட்டுச்சிறுக்கி.

அவள் அமர்ந்ததும் தலையை கீழே குனிந்துவைத்துக்கொண்டாள்,அடுத்த நொடியே,ஒரு சொட்டு நீர் அவள் கண்களில் இருந்து நிலத்தில் விழுந்தது.

படிச்ச புள்ளைல அதான் வெவரம பேசுது,இளித்துக்கொண்டே சொன்னான் கொக்கு விரட்டி.

ஆனால் கொசு விரட்டியின் முகத்தில் ஈயாடவில்லை.

இந்த காலத்தில் அனைத்தும் வணிகமயம் ஆகிவிட்டது.ஒன்னுக்கு போறதுக்கு கூட காசு கொடுக்க வேண்டிய நாட்டில்,


இந்தியர்களை அந்நியர்களுக்கு விற்க தயாராகிக்கொண்டிருக்கும் நாட்டில்.ராமன் ஆண்ட என்ன ராவணன் ஆண்ட என்ன என்று கோவணத்துக்கு சமமான ஓட்டையே விற்கும் நாட்டில்,
ஒரு குறிப்பிட்ட வர்க்கத்தினர் மட்டும் நீதி,நேர்மை,எருமை,கருமை என்று இருப்பதற்கு முட்டாள்களா? ,மடையர்களா?.

மேலும் மருத்துவத்தின் இன்றைய நிலை பற்றி நம் தேன்மழையில் நீதியா? கிலோ என்ன விலை!!!! என்ற தலைப்பில் வெளிவந்துள்ளது.(பாக்காதவுங்க பாத்துக்குங்கப்பா..அப்புறம் காட்ல..ஆட்லனு சொல்லக்கூடாது!!-பச்சிலைபுடுங்கி கத்தினான்)


அரசு மருத்துவர்களே உங்களில் எத்தனை உள்ளசுத்தியுடன் பணியாற்றுகிறீர்கள்,நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள்.24மணிநேர இலவச ஆரம்ப சுகாதார நிலையங்களில் எத்தனைபேர் 24மணி நேரம் பணியாற்றுகிறீர்கள்.மைய மருத்துவமனைகளுக்கு எத்தனை பேர் நேரத்திற்கு செல்கிறீர்கள்.


தனியார் மருத்துவமனைகளில் 400,500 என நீங்கள் கேட்கிற பணத்தைக் கொடுத்து,கால்கடுக்க காத்திருந்து,நீங்கள் கிழித்துத் வீசுகிற கோழிக்கிறுக்கல்களை பொருக்கி செல்லும் அந்த அப்பாவி நோயாளிகளின் ஏழ்மைமுகம்,

 

அன்பு கணவனின் கண்ணீரும் ஆசை மனைவியை இழந்த வலியும், (அன்புக் கணவனா,யோவ் ஒரு கொலை செஞ்சிட்டு ஜெயிலுக்கு போனவன்,இன்னொரு attempt murder வேற இவனுக்கெல்லாம் அன்பு ஒரு கேடா-கொசுவிரட்டி கொக்குவிரட்டியிடம் கேட்டான்,அதற்கு அவன் ,"ஏன் கொலைகாரப் பயலா இருந்தா ஒத்த பொண்டாட்டி மேல அன்பு இருக்க கூடாதா? அதுவும் புள்ளத்தாச்சி வேற,எனக்கொரு மகன் பிறப்பான்னு அவன் என்னைப்போலவே  இருப்பான்னு ஆசைப்பட்டிருக்கக் கூடாதா? அந்த அளவுக்கு பாசம் இல்லாம,எதுக்கு கொலை பண்ணனும் டாக்டர்க்கும் இவனுக்கும் என்ன சொந்த தகராற இல்ல சொத்துத் தகராற,அவன் மிருகம் அதை மிருகத்தனமவே காட்டீட்டான்"என்று சொன்னான்.
கொசுவிரட்டி சலித்துக் கொண்டே"போங்கடா நீங்களும் உங்க வெளக்கங்களும்!,இதுல போட்டோ வேற!!!!".  )


உங்கள் கண் முன் வந்திருந்தால் இந்த போராட்டம் தேவையேபட்டிருக்காது.


அதற்காக அவன் கொன்றது சரி என்று இந்த பஞ்சாயத்து கூறவில்லை.நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே,ஆனால் ஆத்திரத்தில் அறிவு இழந்து சட்டத்தை தன்கையில் எடுத்த அந்த ஆட்டோக்காரனுக்கும், ஆறேழு வருசங்கள் அச்சடித்த ஆசார கோவையை படித்த மகாகணம் பொருந்திய மருத்துவர்கள் சட்டத்தைக் கையில் எடுத்ததற்கும் இந்த பஞ்சாயத்திற்கு பெரிதாய் வித்யாசம் தெரியவில்லை.

80,90களில் பசுந்தோல் போர்த்திய புலிகளை பார்த்த மறத்தமிழன்,இன்று இறைதோல் போர்த்திய சுயநல கயவர்களை அல்லவா கப்பம் கட்டிப் பார்த்துக்கொண்டிருக்கிறான்.

இதற்கெல்லாம் தீர்வே இல்லையா? முதலில் ஒன்றை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும், மக்கள் பணி என்பது மகேசன் பணி, ஏன் என்றால்?யோசித்துப் பாருங்கள்.இந்த உலகம் தோன்றி கோடி கோடி..2G ஊழல் கோடி வருடத்திற்கு மேலாகிவிட்டது என்று இறைவன் ஒரு மணிநேரம் நிறுத்தி வைத்தால் என்ன ஆகும்,


சூரியனுக்கு வயதாகிவிட்டது என்று ஒரு நாள் மட்டும் வராமல் இருந்து விட்டால்?அது தான் மகேசன் பணி.அதைப் போலத்தான் மருத்துவப் பணியும்.இது ஒரு தொழில் அல்ல-சேவை. 


எவனோ ஒருவனுக்கு என்ன  ஆனால் எனக்கென்ன ? என்று திமிரெடுத்து வேலை நிறுத்தம் செய்யும் மகாகணம் பொருந்திய மருத்துவர்கள் சேவை மனப்பான்மையோடு இருப்பார்களா அல்லது தொழில் முனைப்போடு இருப்பார்களா?அடுத்தவன் வீட்டில் எழவு விழுந்ததால் வீதிக்கு வந்து வேஷம் கட்டுகிறார்கள்,இதே நிலைமை அவர்கள் குடும்ப உறுப்பினர்களுக்கு நேர்ந்திருந்தால்?

நம்ம பச்சிலைப்புடுங்கி அடிக்கடி சொல்வது போல் தனக்குனு வந்தாதான் தயிர்வடையும், தலைவலியும் என்னான்னு தெரியும்.

இங்கு சேவை செய்வோரின் கூடாரம் கிழிக்கப்பட்டு,தொழில்முனைவோரின் பாதணிக்கு உப்பசம்போக்க சாமரம் வீச ஆரம்பித்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டது என்பது தான் வருத்தத்திலும் வருத்தம்.

(என்னடா இன்னும் government அ உள்ள இழுக்கலையே-கொசு விரட்டியின் mind voice நன்றாகக் கேட்டது) ஒரு சிறந்த அரசின் கடமை பொது மக்களை காப்பது தான். அடவாடித்தனம் பண்ணுபவர்களை அல்ல. அதனால் மக்களை பாதுகாக்கும் அளவிலும், தவறு செய்யும் டாக்டர்கள் மற்றும் மருத்துவமனைகளை தண்டிக்கும் வகையிலும் ஏற்ற சட்டத்தை உருவாக்க வேண்டுமென்பதுதான் அதை நம் இந்திய அரசாங்கம் செய்யுமா என்பதுதான் எல்லோருடைய எதிர்பார்ப்பாக இருக்க முடியும்.

அப்ப அவங்க டங்குவார அத்துவிடறதுதான் முடிவா வெளிப்படையாகவே கேட்டான் கொசுவிரட்டி.ஏசுநாதர் சொன்னது போல் உங்களில் யார் யோக்கியர்களோ அவர்களே கல்லெடுத்து வீசுவீர்களாக.!!


இந்நேரத்தில் காட்டுச்சிறுக்கிக்கு விருப்பமான பாடலைக் கூறுவது பொருத்தம்-நல்லவர்க்கெல்லாம் சாட்சிகள் ரெண்டு-ஒன்று மனசாட்சி,இன்னொன்று தெய்வத்தின் சாட்சியம்மா!!!தெய்வம் நின்று தான் கொல்லும் ஆனால் கொல்லும்.

எல்லா மருத்துவர்களையும் காயப்படுத்த வேண்டும் என்பது பஞ்சாயத்தின் நோக்கம் அல்ல.இன்றும் மருத்துவத்தை மறையாய் போற்றி மக்கள் மனதில் இறையாய் வாழும் நல்மனங்களும் இருக்கத்தான் செய்கின்றன.அவர்களை என்றுமே இந்த பஞ்சாயத்து சிரம் தாழ்த்தி வணங்கிக் கொள்கிறது.


அதனால் நல்வழியில் மருத்துவம் செய்யும் டாக்டர்கள் இதை தவறாக எடுத்து கொள்ள வேண்டாம்.தவறாகவும் எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.நமது எண்ணமெல்லாம் மருத்துவத்தை பிடித்த நோய் ஓடிப்போகவேண்டும் என்பது மட்டும்தான்.அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

இறுதியாக இந்த பஞ்சாயத்து கேட்பதெல்லாம்,டாக்டரைக் கொன்றது மன்னிக்க முடியாத குற்றம்.,துளி கூட மனிதத் தன்மை  அற்ற செயலே,மிக மிக மிக மோசமான அரக்கத்தனமான கொடுஞ்செயல் தான்.ஆனால் அதேசமயம், அதை வெளிக்காட்டிய விதம் சரியா? என்பதே ஆகும்..


ஆதாரங்களை அளித்து, சீர் தூக்கி பேர் நோக்க உதவிய medindia,dinamani,deccan chronicle,expressbuzz,chennaionline,webmd,emedicine,facebook இன்ன பிற இணையங்களுக்கும் இந்த பஞ்சாயத்து நன்றி கலந்த வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறது.

பஞ்சாயத்து கூறி முடித்ததும்,ஏதோ தெளிந்தவன் போல ஆற்றங்கரை பக்கம் வந்த வேகத்தோடு ஓடினான் கங்காணி.

14 comments:

 1. Sir, ippa kooda, antha oru naaal doctor leave potutu, avanga avanga clinic open panni sambhathika thaan poraanga. neenga vera.

  nalla nokkathoda intha muyarchi panniruntha, it is very much appreciable. panrathu thappu, aprom kayo muyo nu aarpaatam panna vendiyathu.

  Most of the people are selfish in India.

  ReplyDelete
 2. Anyone reading this post, pls go through this comment fully with an open mind.

  Am surprised to see that after so much research into the issue, the author being carried away with the news from the media as any other person.

  It is difficult to reply to each and every sentence in this post in this comment section, but every sentence needs a reply for sure. For God's sake, the doctor in question was trained in obstetrics specially and according to law, she is entitled to do the surgery. Please dont listen to half baked news and judge an already dead person.

  Anyways here is a copy of a post from facebook - a true account about the issue by first hand persons- it will answer most of the parts -

  Thangavel Ponravi :

  I knew her very well for the past 16 yrs. She has worked with me at GH, Tiruchendur.She is MBBS DA trained in OG by Govt. She has done a lot of Caesareans and Hysterectomies. The incedent happened in her private clinic only. not in ESI hospital.The patient was 6 months pregnant lady with IUD.She induced labour and tried to deliver normally. But she couldnt. Then she did hysterotomy with the help of another anaesthetist giving anaesthesia. The patient went for coagulation failure. She immediately called for the help of an Obstetrician. The obstetrician also couldnt control the bleeding. So the patient was referred to nearby multispeciality hospital. She accompanied the patient in the ambulance. but they couldnt save the patient. All this happened on 31-12-2011. She never demanded any money. The patinet’s husband threatened her that he will kill her. She informed the matter to police. Police pacified her that ‘these are only emotionl threats. you need not worry’. But There are 2 other murder cases pending against the patient’s husband. Police didnt take that seriously. On 2nd Jan. at 10pm a gang of nine members came to her clinic . 4 of them went inside and murdered her in her own consultation room. I went to her home on 3rd Jan ti see her husband and had a view of her consultation room where the murder happened. It was very horrible. The room was a small room. She must be helpless during the attack. I could see the bood stains on her chair and the floor. I can also see blood spurts at a height of 6ft on all the 3 walls and the glass door. The muder was a gruesome murder. This type of death shouldnt have come to nice lady like her.

  For the remaining, please read the post in the link along with the comments - http://meribakbak.wordpress.com/2012/01/04/kill-the-doc-the-most-insane-form-of-grievance/

  ReplyDelete
 3. ////மருத்துவர் முதலிலேயே நோயாளியை சகல வசதிகள் கொண்ட மருத்துவமனைக்கு அனுப்பியிருக்க வேண்டும்.(refer to tertiary centre,அந்த tertiary centre ன என்ன டா -கொசுவிரட்டி.நம்ம மெட்ராஸ் பெரியாஸ்பத்திரி மாதிரினு வச்சிக்கயேன்-கொக்கு விரட்டி)////அன்பர் பதிவினை சரியாகப் படித்தாரா என அறியோம்?சில அன்பர்கள் வாசகங்களை குதித்துக் கடந்து விடுவதால் தான் பதிவில் இவ்வளவு படங்கள், இருப்பினும்,அவற்றை எதையுமே நோக்காது,தன் முனைப்பே சரியெனக் கொள்ளுதல் முறையல்ல!அன்பர் விட்டிருக்கும் மறுமொழிக்கு நமது பதிவிலேயே தெளிவாக விவரித்துள்ளோம்நன்கு நோக்கி உண்மை விளங்காய் நன்நெஞ்சே!-தேன்மழை

  ReplyDelete
 4. பணத்திற்காக துளியும் சஞ்சலப்படாமல் கண்ணும் கருத்துமாக கடமையாற்றும் கடவுள்களே வாழ்க பல்லாண்டு! #டாக்டர்ஸ்

  ReplyDelete
 5. எதுக்காக பையனா டாக்டர்க்கு படிக்க வைக்கனுமினு நினைக்கிறீங்கனு பசிலைப்புடுங்கியின் பக்கத்து வீட்டுகாரரை கேட்டுள்ளான் கொசுவிரட்டி,அதற்கு பயலுக்கு முதலுக்கு மோசமில்லாத வருமானம் வருமில்ல என்றாராம்..அப்படியே போகும் வழியில் பள்ளி மாணவர்களிடமும் இதே கேள்வியை கேட்டுள்ளான்.அவர்கள் நெறையா சம்பாதிச்சு,எங்க அப்பா அம்மாவ சந்தோசமா வாழ வைக்க வேண்டாமா என்று அவனிடமே எதிர் கேள்வி கேட்டுள்ளார்கள்.பிறகு "காசு காசு எல்லாம் காசு "பினாத்திக் கொண்டே எங்கோ மேற்குப் பக்கமாய் தயிரு மலை நோக்கிச்சென்றானாம்.
  அவனை எங்காவது யாரேனும் கண்டால் தெரியபடுத்துமாறு மிகத்தாழ்மையோடு கேட்டுகொள்கிறான் இந்த கொக்குவிரட்டி.

  மறுமொழிந்த அனானிக்கு நன்றி -தேன்மழை

  ReplyDelete
 6. If all doctors in private sectors start sending emergency cases to 'TERTIARY CARE' centers, the public death rate will definitely rise, because the patients may expire on the way!!! BE THANKFUL THAT DOCTORS ACCEPT TO DO WHAT THEY CAN even in their small setups! In this situation, try to think of the dead doctor's family - STOP protesting against doctors and try to see some light - for God's sake.

  ReplyDelete
 7. மறைந்த மருத்துவரின் குடும்பத்துக்கு தேன்மழை ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறது.அன்பரே!பதிவை வாசித்தமைக்கு தேன்மழையின் நன்றிகள்.நாங்கள் இங்கே obstetric emergency எனும் வார்த்தையை பயன்படுத்தியதை நினைவு படுத்த விரும்புகிறோம்.emergency case பொறுத்தவரை primary care setup இல் முதலுதவி அளிக்கலாமே அல்லாது முழுசிகிச்சையும் அளிக்க இயலாது இதை யாரும் மறந்திடலாகாது.அன்பர் கூறுவது போல் முழுவசதி இல்லாமல் அரைகுறை வசதியோடு,நானே எல்லா சிகிச்சையையும் அளிப்பேன் என்று எம்மருத்துவராவது கூறினால்,அதற்கான விளைவையும்,இழப்பையும்தான் நாம் தற்போது சந்தித்து உள்ளோம் என்பதை நினைவேற்றுங்கள் என தேன்மழை வேண்டிக்கேட்டுகொள்கிறது.
  Remember DO NO HARM (even if you cant do good)-HIPPOCRATES.
  மருத்துவர்களை எதிர்ப்பது நமது நேக்கமே அல்ல.நல்ல மருத்துவர்களும் உள்ளனர்.ஆனால் நம் சாடல் யாவும் புரையோடிப்போன medical businessmanகளை நோக்கித்தான்.
  மறுமொழிந்தமைக்கு நன்றி-தேன்மழை

  ReplyDelete
 8. Definitely read your post fully! If only a lengthy post will do, here it is-

  About sending to a "tertiary care" hospital which in the private sector would mean that the cost of treatment is very much higher! Also when the person has a setup which is equipped with an operation theater where a hysterectomy can be done, it is not a small one!!! When the person is competent enough to deal with such cases in her own setup, no one will send the patient to somewhere else . Yes she was competent, if that doubt arises, bcos she has done many hysterectomies before apart from caesarean sections. Important point to note is that the coagulation failure was developed during the course of surgery. Causes for the sudden coagulation failure in this case can be many. Please refer to the complications of retaining a dead fetus in the uterus.

  So when she knew she was competent, she took up the case. When she felt the need for help from experts, she did the right thing by asking it and not shying away from it. If she had not done that, then it is wrong. Also even the best of experts will not know everything because science is so vast that noone knows everything. That is why research and new discoveries are there always.

  So if she had sent the patient expecting an unexpected complication and suppose it didn't happen - what will be the reaction from public when every such case is sent to the higher centers - enada ivanga eppodhum vera periya hospital poga solranga..(where the cost of treatment is more ), ivangalukum indha hospitalkum connection iruku. cuts kidaikudhu.
  True or not?
  Now that the contrary has happened in this case, people wont tell that.
  Ippadi endral appadi pesuvadhum, appadi endral ippadi pesuvadhum irukkathane seiyyum eppodhum indha ulagil.

  And about the strike and profession. Every profession is a service to the humanity in one or the other way and has equal rights. But with the increased responsibility of medical profession, the strike was done well within the limits - In patients and emergency services were taken care of. Noone is left to die as you mentioned. Only the not very sick out-patients were asked to come the next day. Thanks to media, it was hyped. So in this Gandhian land, if the common public, or the farmer or the govt officers or any other group can protest in a non-violent way, then doctors can also do the same in a non-violent, atleast within the limits of humanity which were not crossed. Right?

  About the negligence and corruption in medicine, the 90percent cannot be blamed for the 10 percent. Though your post says - there are 'some' proper doctors, it actually generalizes the remaining, which is not proper.
  In this issue it is definitely not that.

  In the very definition of the law you have posted, Please note the words " gross negligence" and "malicious intention" which are the two most important words. Here this case seems to be neither of the two.
  The arguments here may seem like one in a court, but it is very much needed in this "panchayat". So it would have been nicer to have avoided phrases like "indha kodunkolayali ", this issue is " appatamana medical criminal negligence" before knowing the exact truth. The exact truth is still not out and i also don't know more than the news and the account given by some people who were at the scene. Using such words create such a negative impact not only on the issue or the medical fraternity but also a negative influence for the whole of the society!

  And thaangal koora ninaithadhai pol ennudaya muyalukku moondru kaal alla. unmaiyaga ethanai kaal irukkiradho athanai dhan'. As i have said before, am always ready to change my views and even edit my post if truth turns out to be contrary and it hasn't till now!

  ReplyDelete
 9. தோழர்,
  அருமையான பதிவு, ஆனால் சுருக்கமாக சொல்லி இருந்தால் படிக்க பலருக்கு எளிமையாக இருந்திருக்கும்...

  ReplyDelete
 10. why you fuckers go to non specialist doctors.initially u idiots go to tertiary care hospital.u idiots beg the doctors for help when the out come is poor u cannot accept the fact

  doc should treat u with out asking money he should be available 24hr u will kill him if the out come is poor

  why should we treat u fuckers' why should we give care to killers

  ReplyDelete
 11. It is agonising to see media reports which question why Dr.Sethulakshmi did private practice,why she didnt refer the case to a bigger hospital or to a gynaecologist.Remember this patient did not die due to a surgical error;rather she died because of complications from the dead fetus which triggered a coagulation failure.The fact of the matter is that she died because she tried to save her patients life.The fact that she accompanied the patient to a bigger hospital shows she had no malafide intentions. This could have happened in any big hospital also and to any experienced gynecologist. As medical doctors we should only
  ask for protection while we discharge our duties. The fact that the police didnt give Dr.Sethulakshmi protection when she mentioned about the threat that existed to her life shows that the police were negligent in this case.This is what the IMA should take up as a follow up legal point to get the authorities do something about.I hope the IMA state office will move forward in this matter. Media is well known for distorting facts and that is what they are good at. Though we need public support, we should not be shy of stating facts or fighting for our rights!

  ReplyDelete
 12. ///Also when the person has a setup which is equipped with an operation theater where a hysterectomy can be done, it is not a small one!!!/////
  அதாவது ஒரு அறுவைசிகிச்சைக் கூடம் இருந்தாலே போதும்,அம்மருத்துவமனையை சகல வசதிகள் கூடிய tertiary care centre ஆகிவிடும் என்கிறார் அன்பர் bharathram.இது எவ்வாறு சரி என்பதை ,நம் தேன்மழையின் வாசக நன்நெஞ்சங்களே பதில் அளிக்க வேண்டும்.
  ///Important point to note is that the coagulation failure was developed during the course of surgery.///அறுவைசிகிச்சைக்கு முன் coagulation profile எனும் investigation test எந்த ஒரு சாதாரண அறுவைக்கு முன்னும் செய்தல் அவசியம்,இப்படிப்பட்ட very critical caseக்கு அது எந்த அளவுக்கு அவசியம் என்பதையும்,அந்த testஐ செய்திருந்தால் அன்பரால் சொல்லப்படுகிற sudden coagulation failureஐ கண்டுபிடித்திருக்க முடியாதா?உடனே platelets and fresh frozen plasma மேலும் மேம்பட்ட சிகிச்சைகள் அளிக்கக்கூடிய வசதி இருந்திருந்தால் coagulation failureஐயே தவிர்த்திருக்க முடியாதா?atleast failure ஐ delay செய்திருக்க முடியாத என்பதையும் வாசஅன்புள்ளங்களின் முடிவுக்கே தேன்மழை விட்டுவிடுகிறது.
  ///Causes for the sudden coagulation failure in this case can be many. Please refer to the complications of retaining a dead fetus in the uterus.///அன்பர் வேண்டியுள்ளமையால் ,referencesகள் ஒவ்வொன்றாக இணைக்கப்படும்,

  தற்சமயம்,இரண்டு refenceகளை தேன்மழை இணைக்கிறது.

  http://books.google.co.in/books?id=CohpI6bGuiIC&pg=PT563&dq=complications+of+retaining+a+dead+fetus+in+the+uterus&hl=en&sa=X&ei=PHgIT9rVBIHQrQeZntHdDw&ved=0CF8Q6AEwCA#v=onepage&q=complications%20of%20retaining%20a%20dead%20fetus%20in%20the%20uterus&f=false
  http://books.google.co.in/books?id=dvtEBZaBOe0C&pg=PA66&dq=sudden+coagulation+failure+treatment&hl=en&sa=X&ei=wnwIT_qQD8TorAfwtuQF&ved=0CC8Q6AEwAA#v=onepage&q=sudden%20coagulation%20failure%20treatment&f=false

  இதன் மூலம் வாசநல்லுள்ளங்களின் ஐயங்களை தெளிவுபடுத்த உதவியதற்கு வாய்ப்பளித்து,மறுமொழிந்த bharathramக்கு நன்றி-தேன்மழை

  ReplyDelete
 13. ///Anonymous said...

  why you fuckers go to non specialist doctors.initially u idiots go to tertiary care hospital.u idiots beg the doctors for help when the out come is poor u cannot accept the fact

  doc should treat u with out asking money he should be available 24hr u will kill him if the out come is poor

  why should we treat u fuckers' why should we give care to killers
  7 January 2012 8:32 PM ///இந்த மறுமொழியை அளித்தது யாரென தேன்மழைக்கு தெரியவில்லை,ஆனால் why should we treat u fuckers' why should we give care to killers,இந்த வாசகங்களில் வரும் we எனும் சொல்,மறுமொழிந்தது ஒரு மருத்துவர் என்றே தெரியவைக்கிறது.மகாகணம் பொருந்திய இம்மருத்துவருக்கு தேன்மழை பதில் அளிக்கத்தான் வேண்டுமா?நாம் கடவுளாக வாங்கும் இவர்களின் தரம் இது தானா?இறைதோல் போர்த்திய சுயநல கயவர்கள் என்று பஞ்சாயத்து சொன்ன வார்த்தைகள் மெய்யாயிற்றே!!!!!
  மேலும் இந்த மகாகணம் பொருந்திய மருத்துவரின் மறுமொழிக்கு நம் வாசகஅன்புள்ளங்களே தக்க கருத்தளிக்க வேண்டுமாய் தேன்மழை கேட்டுகொள்கிறது.மேலும்,///About the negligence and corruption in medicine, the 90percent cannot be blamed for the 10 percent. Though your post says - there are 'some' proper doctors, it actually generalizes the remaining, which is not proper.
  In this issue it is definitely not that///இதைப் போன்ற மருத்துவர்களைதான் அன்பர் bharathram ஆதரிக்கிறாரா?
  நம் பஞ்சாயத்து எடுத்த முடிவு சரிதான் என்பதை இதற்கு மேலும் விவாதிக்கத்தான் வேண்டுமா?-தேன்மழை

  ReplyDelete
 14. மேற்படி அனானிக்கு கூறிக்கொள்வதெல்லாம்,மகாகணம் பொருந்திய மருத்துவரே!நாங்கள் படிக்காத பாமர்கள்,தங்களைப்போல் உயர்பட்டமேதும் நாங்கள் பெற்றிடவில்லை,இந்த பாமர்களுக்கு அந்த அளவுக்கு மருத்துவஅறிவு இருந்திருந்தால் நீங்கள் சொல்வதுபோல்///why you fuckers go to non specialist doctors.initially u idiots go to tertiary care hospital///நாங்கள் பெரியமருத்துவமனைக்கே முதலிலேயே சென்றிருப்போம்,ஆனால் நாங்கள் பாமர்கள் ஐயா!.மேலும்,"ஏன் மக்கள் பணி என்பது மகேசன் பணி "என்பதை நம் பஞ்சாயத்து விளக்கியதை ஒரு முறை மீண்டும் வாசித்துக் கொள்ளுங்கள்.அப்படிப்பட்ட இறைவன்பணியில்,ஏற்பட்ட இதைப்போன்ற நோயிலிருந்து காக்க,ஒரு கிருமிநாசினி ஔதடத்தை கண்டுபிடிக்கும் நாள் எந்நாளோ?அந்நாள் விரைவில் வர எல்லாம் வல்லஇறைவனை அனைவரும் வேண்டிக்கொள்வோம்.-தேன்மழை

  ReplyDelete