Tuesday, January 3, 2012

இதெல்லாம் ஒரு பொழப்பா?

நன்நெஞ்சே!

தொலைக்காட்சிகள் தொல்லைக்காட்சிகளா மாறி ரொம்ப காலம் ஆகிவிட்டது.கருத்து மாசு ஏற்படுத்தும் தொழிற்சாலைகளாகத் தான் அவை இன்று இருந்து வருகிறது.சரி அது வேற விஷயம்.ஆனா மக்களை மையமா வைத்து அவர்கள் கொள்ளையும் அடிக்கிறார்கள் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?.



ஒரு உதாரணத்துக்கு,
“உங்கள் வாழ்க்கையையே மாற்றக்கூடிய
ஒரு கேள்வி – இதில் ஏதாவது ஒரு கேள்விக்கு பதில் தெரிந்தால் கூட கோடியில் ஒருத்தராக அல்ல கோடிஸ்வரர்களில் ஒருத்தராக மாறமுடியும்.பதில் சொல்லி -ஒரு கோடியை வெல்ல  வாருங்கள்."இதில் பங்கு பெற உங்கள் மொபைலில் இருந்து ........இந்த எண்ணிற்கு sms அனுப்பவும்.
 

இப்படி யாராவது சொல்லி அழைத்தால் நம் மனம் என்ன சொல்லும்,அட ஒரு ரூபா,ரெண்டு ரூபா போறதில குடியாமுழுகப்போகுது.இதுதானே??

ஆனால் அங்கே தான் மறைந்துள்ளது அவர்களின் குள்ளநரித்தனம்.

மிக  மிக சுலபமான (அட L.K.G படிக்கிற குழந்தைகள் கூட சொல்லுகிற மாதிரி) ஒரு கேள்வி:

தமிழ்த்தாய் வாழ்த்தின் முதல் வார்த்தை என்ன?

1)பேராரும் 2)ஈராரும் 3)நீராரும் 4)சீராரும்

தமிழ்நாட்டில் தமிழ்த்தாய் வாழ்த்தைத் தெரியாதவர்கள் யாரவது உண்டா?அப்படியே தெரியலனாக்கூட ஒரு நல்ல தமிழ் பேராசிரியர் கிட்ட கேட்டு sms அனுப்பிடலாமில்ல!
!



மற்றொன்று,

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள,அணுமின் நிலையத்துடன் தொடர்பு கொண்ட இடம்-கீழ்க்கண்ட 4 பதில்களில் எது சரி ? -

1) காங்கேயம்     2) கூடங்குளம் 3) கோயம்புத்தூர்    4) கோவில்பட்டி

இன்றைய தேதியில், தினந்தோறும் செய்தியில் அடிபடும் கூடங்குளம் அணுமின் நிலையம்பற்றி அறியாதோர் எத்தனை பேர் தமிழ் நாட்டில் இருப்பார்கள் ?

 இவர்கள இப்படியே விட்டா எட்டுக்கால் பூச்சிக்கு எத்தன கால்னு கேட்டாலும் கேப்பாங்க!

சரி,இதையெல்லாம் பார்க்கிற மறத்தமிழன் என்ன நினைப்பான்?

ஆஹா-இவ்வளவு சுலபமான கேள்விகளா?,எனக்கு இந்த கேள்விக்கு பதில் நல்லவே தெரியுமே! என்று  கவர்ந்து இழுக்கப்பட்டு,உடனடியாகபதில் அனுப்ப வேண்டும் என்கிற அவா–டெம்ப்டேஷன் -ஏற்படாதவர்களே இருக்க முடியாது. பதில் அனுப்பும் முறையோ – படு சுலபம்.அவர்கள் கொடுத்திருக்கும் எண்ணுக்கு செல்போனில் sms அனுப்பலாம்.அல்லது அவர்கள் கொடுத்திருக்கும்4 எண்களில் எதாவது ஒன்றிற்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பதிலை பதிவு செய்யலாம்.

சரி -  இதில்  மக்கள் எந்த விதத்தில் ஏமாற்றப்படுகிறார்கள் ?

ஒன்று- அநேகமாக அத்தனை பேருமே சரியான விடை அனுப்பி இருக்கக்கூடிய நிலையில், அடுத்த நிலைக்குப் போட்டியாளர்களை எப்படி தேர்ந்தெடுக்கப் போகிறார்கள் என்பது எங்கும் விளம்பரப்படுத்தப்படவில்லை.

சரியான விடை அளிக்கும் அத்தனை பேரும் அடுத்த நிலைக்கு அனுமதிக்கப்படமாட்டார்கள் என்பதும் எங்குமே சொல்லப்படவில்லை.

போட்டியின் முக்கியமான விதிமுறை எங்குமே சொல்லப்படாமலே போட்டிக்கு வலை வீசப்படுகிறது!எப்படி இருக்குது பாருங்க கூத்து!!.
இரண்டு– இது மிக பயங்கரமான ஒரு மோசடி.

கோடிக்கணக்கான  நபர்கள் தொலைபேசி அல்லது sms மூலம் தொடர்பு கொள்வார்கள் என்கிற நிலையில்,தொலைபேசி நிறுவனங்களுடன் ஒப்பந்தம்செய்துகொண்டு,  இந்த விளம்பரம் வாயிலாக வரும் அழைப்புகளுக்கு ஒரு அழைப்புக்கு இவ்வளவு ரூபாய் நிகழ்ச்சி அமைப்பாளர்களுக்கு தரப்பட வேண்டும் என்கிற வகையில் ஒரு ஏற்பாடு.

இந்த பணத்தை தொலைபேசி நிறுவனங்கள் தங்கள் பங்கிலிருந்துகொடுக்க வேண்டாம்.அதை உபயோகிப்பாளர்களிடமிருந்து வசூலித்து  கொடுக்க வேண்டும் – அவ்வளவு தான். அதெப்படி – உபயோகிப்பாளர்கள் அவ்வளவு

சுலபமாகக் கொடுத்து விடுவார்களா?இங்கு தான் இருக்கிறது ட்ரிக்.

சாதாரணமாக  ஒரு  sms க்கு 50 காசுகள் என்றால்,இந்த அழைப்பிற்கு மட்டும்

சில கம்பெனிகளுக்கு 5 ரூ.,சிலவற்றுக்கு 6 ரூ., ஒரு கம்பெனிக்கு ரூபாய் 6.99 . …என்று பில்லில் சேர்த்து வசூலிக்கப்படும்.இதற்கு ஒத்துக்கொண்டு தான் நீங்கள் இந்த வசதியை பயன்படுத்துகிறீர்கள் !



நாங்கள் எப்போது ஒத்துக்கொண்டோம் என்கிறீர்களா ?அந்த விளம்பரங்களுக்கு கீழேயே கண்களுக்குப் புலப்படாத எழுத்துக்களில் இந்த கண்டிஷன்கள் அச்சடிக்கப்பட்டிருக்கின்றன.இந்த தொலைபேசி வசதிகளை  நாம் உபயோகித்து பதிலை அனுப்புவதன் மூலம், அதை  படித்து,

ஏற்றுக்கொண்டு தான் பயன்படுத்துகிறோம் என்பதை  நாம் உறுதி செய்கிறோம்.(நமக்கு தெரியாமலே!).

உங்கள் வீட்டில் இந்த விளம்பரங்கள் கொண்ட பத்திரிகைகள் இருந்தால் மீண்டும் எடுத்துப்பாருங்கள்.நாம் ஏமாந்திருப்பது புரியும்.

 

ஆரவக்கோளாறில்   சிலர் 4, 5 முறை பதில்கள் அனுப்பியிருப்பார்கள்.  சிலர் வெவ்வெறு தொலைபேசிகளை பயன்படுத்தி பல பதில்களை அனுப்பியிருப்பார்கள்

இப்போது  புரிகிறதா இந்த கோடீஸ்வரர் நிகழ்ச்சியும், அம்பானியின் நம் கோமனத்தை உருவும் தந்திரமும்.....எல்லாம் சரி, விஜய் டிவி நிகழ்ச்சியில் அம்பானி எங்கிருந்து வந்தார்னு கேக்குறீங்களா? இந்த நிகழ்ச்சியின் ஒரிஜினல் தயாரிப்பாளர் அம்பானியின் பிக் சினர்ஜி" எனும்  நிறுவனம் தான்.

அந்த Terms and Condtion களை பார்க்காதவர்களுக்கு,தேன்மழையில் இங்கு பார்க்கலாம்.சரி,உண்மையிலே அறிவு சார்ந்த நிகழ்ச்சியாக இருந்தால் எதற்கு இந்த ஸ்பெஸல் நம்பர்? டோல்ஃப்ரீ நம்பர் அல்லவா கொடுக்க வேண்டும்?.

நான் ரெடி! நீங்க ரெடியானு?கேப்பீங்களா சார்?
 
இதெல்லாவற்றிக்கும் எது மூலதனம் என்கிறீர்கள்?

 ஆசை  தான்!!

மக்களின் ஆசை,

டிவியில் தோன்ற ஆசை – போட்டியில் வெல்ல ஆசை !!

இந்த ஆசை யாரை விட்டது.

ஆனால் நம்முடைய மூடத்தனமான ஆசையே இன்னொருவனுக்கு மூலதனமாகிவிடுகிறது,பார்த்தீர்களா??


  இந்த தொலைபேசி அழைப்புகளின் மூலம்,  sms களின் மூலம் தொலைபேசி நிறுவனங்கள் மூலமாக பல கோடி ரூபாயை நம்மிடமிருந்து – நமக்குத் தெரியாமலே அபகரித்துக்கொண்டு,அதிலிருந்து, அப்படி கொள்ளை அடித்த பணத்திலிருந்து ஒரு பகுதியை பரிசாககொடுக்கப் போகிறார்கள்!

எப்படி?எப்படி??

ஊரான் வீட்டு நெய்யே என் பொண்டாட்டி கையேங்கற மாதிரி.

கிட்டத்தட்ட இதுவும் ஒரு லாட்டரி மாதிரி தான்.ஊரில எல்லோரிடம் இருந்தும் புடுங்கி ஒருத்தனுக்கு கொடுக்கறது லாட்டரி மாதிரி தான?.

இப்பேர்ப்பட்ட ஒரு மெகா மோசடியை எப்படி யாரும் கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பது தான் புரியவில்லை.

காவல்துறை இத்தகைய மெகா திட்டங்கள், போட்டிகளை கண்காணித்து உரிய  எச்சரிக்கைகளை கொடுத்திருக்க வேண்டும்.

போட்டி தொலைக்காட்சிகள் பல  இருக்கின்றன-அவையும் காட்டிக் கொடுக்கவில்லை.(ஒரு வேளை பின்னால் அவர்களும் இதே வழியில் இறங்கத் தீர்மானித்திருக்கலாம் ).பத்திரிகைகளாவது விழிப்புணர்வுடன் இவற்றை எல்லாம் கவனித்து  மக்களுக்கு எச்சரிக்கை கொடுக்க வேண்டாமா?ofcourse– ஒரு பத்திரிகை விடாமல், அத்தனை பத்திரிகைகளையும் “கவனித்து” கொண்டிருக்கிறார்கள்.எல்லாவற்றிற்கும் அரை அரை  பக்கங்களில் ஏகப்பட்ட விளம்பரங்கள்,அதுவும் காரணமாக இருக்கலாம் !


பண்டிகை காலங்களில் அனுப்பப்படும் வாழ்த்துச்செய்திகள் அடங்கிய smsகளுக்கு அதிக தொகை வசூலிப்பதை கூட ஆட்சேபித்திருக்கும் தொலை தொடர்பு ஒழுங்குமுறைஆணையம்  இதை, இந்த முறைகேட்டை, மோசடியை கவனிக்க வேண்டும்.  உடனடியாக நடவடிக்கை எடுத்து மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுவதை தவிர்க்க வேண்டும்.

இந்த ஒரு நிகழ்ச்சி மட்டும் தான் இப்படி என்றில்லை,

 ”இந்த படத்தில் மறைந்து இருக்கும் பிரபலம் யார்னு,இந்த பாடலை எழுதியது யார்னு?இந்தப் படத்தை இயக்கியது யார்னு”

ஒவ்வொரு தொலைகாட்சிகளிலும் கேட்டு அதற்கு பதில..........இந்த நெம்பர்க்கு sms அனுப்பவும் call பண்ணவும்னு சொல்ற எல்லா நிகழ்ச்சியுமே இந்த வகைதான்.

இதைப்பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் பெரிய அளவில் இல்லாததும் இவ்வகை கொள்ளைக்கு காரணமாகிவிடுகிறது.

இது எல்லாவற்றுக்கும் காரணம் என்னவாக இருக்கும்?பணம்.பணம் சம்பாதிக்கணும்தான்.ஆனா அடுத்தவன ஏமாத்தி புடுங்கி, அனுபவிக்கறது எல்லாம் ஒரு பொழப்பா?

ஆயிரம்தான் சொன்னாலும் ஏமாறுகிறவர்கள் இருக்கிற வரை ஏமாற்றுபவர்கள்  இருக்கத்தான் செய்வார்கள். நாம்  தான் ஏமாறுவதிலேயே - பெருமை கொள்பவர்கள் ஆயிற்றே!
.இந்த பஞ்சாயத்து மூலமாக அந்த கொள்ளைக்கூட்டத்திற்கு சொல்லிக்கொள்வதெல்லாம்,இதுதான்,

இப்பதிவை இடுவதற்குத் தூண்டுதலாக இருந்த கவேரிமைந்தனுக்கும்,ஆதாரங்கள்,படங்கள் அளித்த அனைத்து இணையங்களுக்கும் இந்தப் பஞ்சாயத்து நன்றி கலந்த வணக்கங்களைத் தெரிவித்துக்கொள்கிறது.

1 comments:

  1. Interesting one !!

    All People, even after knowing all this, still keep sending sms. People will never change because of selfishness and money.

    Makkalae, konjam thookathilirinthu elunthuringa. people are making the country worst rather than the politicians. I will blame the people only.


    Enna padichu enna projinam !!!

    ReplyDelete