
மிரிண்டா குடித்துவிட்டால் ஆட்டோவை எடுத்து கண்டபடி ஊர் சுற்றிவிட்டு காசு கொடுக்க வேண்டாம்..
ஐந்து ரூபாய் கொடுத்து க்ளோசப் பேஸ்ட் வாங்கி பல் தேய்த்தால் ஒரு அழகான பெண் உங்களுடன் காதல் கொண்டு விடுவாள்

இந்த உலகையே மாற்ற வேண்டும் என்றால் மாதவிடாய்க்கான நாப்கினை வாங்கி கட்டிக் கொள்ள வேண்டும்
அடுத்தவன் மனைவியை அபகரிக்க zatak என்ற பாடி ஸ்ப்ரே அடித்துக் கொண்டால் அவள் முதலிரவன்றே கணவனை விட்டு ஓடி வந்து விடுவாள்
பெப்சி, கோகா கோலா போன்ற பானங்களை குடித்தால் எந்த பேரழகியும் உங்களை பின்னால் வருவாள்


காதலியை ஏமாற்ற ஸ்ப்ரைட் குடிக்க வேண்டும்

பெண்களை அடைய ரொம்பவும் கஷ்ட பட வேண்டாம். AXE பாடி ஸ்ப்ரே அடித்து சென்றால் அவர்களாகவே தமது செல் நம்பரை உங்களுக்கு தருவார்கள்
சுவீட் எடு கொண்டாடு என்பதற்காக சாப்பிடும் முன் சிறு குழந்தை சாப்பிடும் காட்பரீஸ் சாக்லேட்டை பிடுங்கி வயதானவர்கள் சாப்பிடலாம்

ஹீரோ ஹோண்ட பைக் ஒட்டி சென்றால் காரில் செல்லும் பெண் உங்களிடம் மயங்கி உங்களை காதலித்துவிடுவாள்
ஹமாம் சோப்பை உபயோகித்து வந்தால் எந்த புதருக்குள்ளும் சென்று வரலாம் எந்த தோல் வியாதியும் வராது

கில்லட் பிளேடு கொண்டு சவரம் செய்தால் யாரவது அழகிய பெண் உங்களாது கன்னங்களை தடவி விடுவாள்
கார்னியர் தயாரிப்புக்களைக் கொண்டு உங்களை பத்தரமா பார்த்துக்கொள்ளலாம்
ஒரே ஒரு மென்தால் சாக்லேட் சாப்பிட்டு எப்பெர்பாட்ட கொடிய வெப்பத்திலும் குளிர்ச்சியாக உணரலாம்

ஐடியா மொபைல் போன் வாங்கி நடந்துகிட்டே போன் பேசினால் எல்லா நோயும் தீர்ந்து விடும்...டாக்டரெல்லாம் காற்று வாங்கவேண்டியத்துதான்.

நன்றி: டி.வி விளம்பரங்களும் அதன் பயன்களும்-மர்மயோகி.
0 comments:
Post a Comment