Wednesday, December 14, 2011

நீதியா????கிலோ என்ன விலை


கடந்த ஆண்டு ஏப்ரல் 2010ல் சிபிஐ அதிகாரிகள், மருத்துவக் கவுன்சிலின் தலைவராக இருந்த கேத்தன் தேசாய் என்பவரை, ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி வழங்குவதற்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடிக்கப் பட்டார்.  இவர் கைதை ஒட்டி, சிபிஐ கேதன் தேசாய் கடைசியாக அனுமதி அளித்த மருத்துவக் கல்லூரிகளின் பட்டியலை எடுத்து ஆராய்ந்தனர் சிபிஐ அதிகாரிகள். இந்தப் பட்டியலில் சிக்குவது பாலாஜி மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு,
பாஸ்கர் மருத்துவக் கல்லூரி, ஹைதராபாத், இன்டெக்ஸ் மருதவக் கல்லூரி இந்தூர், வினாயகா மிஷன் மருத்துவக் கல்லூரி, தமிழ்நாடு, ரோஹில்கன்ட் மருத்துவக் கல்லூரி, பரேலி, லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி, பாண்டிச்சேரி, கேபிசி மருத்துவக் கல்லூரி, கொல்கத்தா, ஆதேஷ் மருத்துவக் கல்லூரி, பாதின்டா மற்றும் கீதாஞ்சலி மருத்துவக் கல்லூரி, உதய்ப்பூர்.


இதில் பாலாஜி மருத்துவக் கல்லூரி மற்றும் லட்சுமி நாராயணாவின் உரிமையாளர் கல்வித் தந்தை ஜெகதரட்சகன்.
324343

இப்போது லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரிக்கு வருவோம்.  இந்தக் கல்லூரியைப் பற்றி சிபிஐ விசாரிக்கத் தொடங்கிய உடனேயே தினம் தினம் சிபிஐக்கு முட்டுக் கட்டைகள். எப்படியெல்லாம் நீதிமன்றத்தின் மூலமாக இந்த விசாரணையை தடுக்க வேண்டுமோ, அப்படியெல்லாம் தடுத்தார் ஜெகதரட்சகன்.

முதலில், லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி தொடர்பாக சிபிஐ எப்ஐஆர் பதிவு செய்ததே தவறு என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வழக்கு தொடரப்பட்டது.   இந்த வழக்கு நீதியரசர் சி.டி.செல்வம் முன்பு விசாரணைக்கு வந்த போது, சிபிஐ விசாரிக்கவே கூடாது என்று தடை விதித்தார்.   அதாவது சிபிஐ விசாரணை என்ற பெயரில் இந்தக் கல்லூரிக்குள் நுழைந்து மாணவர்களின் படிப்புக்கு (???) இடையறு விளைவித்து விடுவார்களாம்.
 pr300309b
பிறகு, சிபிஐ மீண்டும் நீதிமன்றத்தை அணுகி இந்தத் தடையை ரத்து செய்த பிறகு விசாரணை மீண்டும் தொடங்கியது.  விசாரணை தொடங்கிவுடன், எங்கே கைது செய்யப் பட்டு விடுவோமோ என்று பயந்த ஜெகதரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தும், மகள் ஸ்ரீநிஷா இளமாறன் ஆகியோரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன் ஜாமீன் கோரி, அதுவும் வழங்கப் பட்டது.

சரி.. இந்த லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி அப்படி என்னதான் தப்பு செய்து விட்டது ? மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு கடுமையான விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உள்ளன.  எம்சிஐ எனப்படும் இந்திய மருத்துவக் கவுன்சிலுக்கு மருத்துவக் கல்லூரி தொடங்கும் நபர் விண்ணப்பிக்க வேண்டும்.   அதன் பிறகு, மருத்துவக் கவுன்சிலைச் சேர்ந்த ஒரு நிபுணர் குழு சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்வார்கள்.  அவர்கள் அளிக்கும் ஆய்வறிக்கை மருத்துவக் கவுன்சிலின் உயர்நிலைக் குழுவுக்கு அளிக்கப் படும்.  அந்த உயர்நிலைக் குழுவின் பரிந்துரை மத்திய அரசின் சுகாதாரத் துறைக்கு அளிக்கப் படும்.  இறுதி முடிவை மத்திய அரசு எடுக்கும்.   இந்த நிபுணர் குழு, ஒவ்வொரு ஆண்டும் மருத்துவக் கல்லூரியை ஆய்வு செய்ய வேண்டும்.  ஏன் இந்த விதிமுறை என்றால், முதல் ஆண்டு மட்டும் தேவையான வசதிகளைச் செய்து விட்டு, அனுமதி கிடைத்தவுடன் விட்டு விடுவார்கள் என்பதால் இந்த வரைமுறை.   முதல் ஆண்டுக்கு 100 மாணவர்களுக்கு அனுமதி என்றால், அதற்கு தனி ஆய்வு, தனி அனுமதி.  அடுத்த ஆண்டுக்கு 120 மாணவர்களுக்கு என்றால் அதற்கு தனி ஆய்வு, அதற்கு தனி அனுமதி.

இப்படி நான்கு ஆண்டுகளாக அனுமதி பெற்று லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி நடைபெற்று வந்தது.   ஐந்தாவது ஆண்டு ஆய்வு செய்த நிபுணர் குழு இந்தக் கல்லூரியில் போதுமான வசதிகள் இல்லை என்று அறிக்கை கொடுத்து விட்டது.

இந்த நிபுணர் குழு ஆய்வு எப்படி ஆய்வு நடத்தும் தெரியுமா ?  எந்த நாளில் ஆய்வு நடத்துவோம் என்பதை முன்னதாகவே தெரியப் படுத்தி விடுவார்கள்.  அந்த நிபுணர் குழுவில் உள்ளவர்களின் விருப்பத்திற்கு ஏற்றார் போல தேவையான ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகம் செய்து தர வேண்டும்.  அதாவது, மது, மாது, நகை, பணம் என்று அத்தனையும் தயாராக இருக்க வேண்டும்  அவற்றுக்கு தகுந்தாற் போல, ஏற்பாடுகளைச் செய்து விட்டால், அந்த நிபுணர் குழு, புது தில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவக் கழகத்தை விட சிறந்த முறையில் வசதிகள் உள்ளன என்று அறிக்கை அளிக்கும்.

நான்கு ஆண்டுகளாக சிறந்த முறையில் போய்க் கொண்டிருந்த இந்த நிபுணர் குழு ஆய்வு, 2010-2011 ஆண்டு ஆய்வு நடத்தும் போது சிக்கலில் மாட்டிக் கொள்கிறது.   அந்த ஆண்டு நிபுணர்களாக வந்தவர்கள், வீணாய்ப் போனவர்கள்.  மது, மாது எதுவும் வேண்டாம் என்று சொல்லி விட்டார்கள்.
 1
Untitled-2
லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் ஆய்வு நடத்தி முடித்த பிறகு அவர்கள் அளித்த அறிக்கையில் லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் கீழ்கண்ட வசதிகள் இல்லை என்று அறிக்கை அளித்தனர்.
 1)     Animal House facility (for research activities)
 2)     Medlar facilities
 3)     ECG facilities not available 
 4)     IITV (Image intensifier)
 5)     C.T.  Scan not functional
 6)     Glove inspection Machine not functional
 7)     Ultra Sound cleaning instrument not available
 8)     Roller Steam Press not available
 9)     XRay machine not functional
10)    Non-respiratory gas monitor not functional
11)    Drip infusion not available

இந்த அறிக்கை மருத்துவக் கவுன்சிலின் தலைவர் கேதன் தேசாயிடம் அளிக்கப் படுகிறது.    அவர், நானே ஒரு பெரிய நிபுணர், நான் எந்த நிபுணர் அறிக்கையையும் ஏற்க மாட்டேன் என்று போடா வெண்ணை என்று ஐந்தாம் ஆண்டுக்கும் அனுமதி அளித்து விடுகிறார்.  அது மத்திய அரசுக்கு சென்றவுடன், அப்போது சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த மருத்துவர் சின்ன அய்யா அனுமதி அளித்தார்.

இந்த நிலையில்தான் கேதன் தேசாய் சிக்கியவுடன், சிபிஐ விசாரணையை தொடங்குகிறது. சிபிஐ விசாரணையில் பல திடுக்கிடும் விஷயங்கள் அம்பலமாகின்றன.   ஒரு மருத்துவக் கல்லூரியில் 750 பேர் அமரக் கூடிய வகையில் ஒரு ஆடிட்டோரியம் இருக்க வேண்டும். லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரியில் 380 பேர் அமரக் கூடிய ஆடிட்டோரியம் தான் இருக்கிறது.  மருத்துவக் கவுன்சிலின் விதிமுறைகளின் படி, ஒரு மருத்துவக் கல்லூரியில் பணி புரியும் பேராசிரியர்கள் அனைவரும் நிபுணர் குழு பார்வையிட வரும் அன்று பணியில் இருக்க வேண்டும்.  அவர்கள் அனைவரும் நிபுணர் குழு முன்னிலையில் கையெழுத்திட வேண்டும்.

cbi1312630
சிபிஐ விசாரணையின் போது, அந்தக் கல்லூரியில் பேராசிரியர்களாக பணி புரிபவர்கள் என்று நிபுணர் குழுவின் அறிக்கையில் பதிவு செய்யப் பட்டிருந்த 75 மருத்துவர்கள், தாங்கள் அது போல பணிபுரியவில்லை.  ஒரு நாள் மட்டும் வந்து கையெழுத்து போட்டால் பணம் தருகிறேன் என்று சொன்னார்கள். அதனால் வந்தோம்.   நாங்கள் அந்தக் கல்லூரியில் பணி புரியவில்லை என்று சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.

சமுதாயத்தில் மதிப்பும் அந்தஸ்தும் வாய்ந்த மூத்த மருத்துவர்கள் பணத்துக்காக வேசிகளைப் போல எப்படி சோரம் போயிருக்கிறார்கள் பார்த்தீர்களா ?

மேலும், ஒரு மருத்துவக் கல்லூரியில் 150 மாணவர்களுக்கு 750 உள் நோயாளிகள் இருக்க வேண்டும் என்பது விதி.  சிபிஐ விசாரணையின் போது, அந்தக் கல்லூரி அமைந்துள்ள இடத்துக்கு அருகாமையில் உள்ள கிராமங்களில் உள்ளவர்களை ஒரு நாளைக்கு 100 ரூபாய் தருகிறோம் என்று அழைத்து வந்தார்கள் என்று சாட்சியம் அளித்துள்ளார்கள்.

இப்படிப் பட்ட மருத்துவக் கல்லூரியில் படித்து வெளி வரும் நபர்கள் தங்களை மருத்துவர்கள் என்று அழைத்துக் கொள்வார்கள்.   அவர்கள் எத்தனை கொலை செய்யப் போகிறார்கள் என்பதற்கு காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.   இப்போது சொல்லுங்கள் ஜெகதரட்சகன் கொலைகாரரா இல்லையா ?

கதை இதோடு முடியவில்லை.   கடந்த வாரம் சிபிஐ பதிவு செய்துள்ள இந்த எப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்று தொடர்ந்திருந்த வழக்கு நீதியரசர் ஆறுமுகசாமி முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.  இந்த வழக்குக்காக லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி சார்பில் ஆஜரானவர் மூத்த வழக்கறிஞர் உதய் யு.லலித். பெயர் கேள்விப் பட்ட மாதிரி இருக்கிறதா ?

இவர் வேறு யாரும் இல்லை.  சிபிஐ சார்பாக, டெல்லி சிபிஐ நீதிமன்றத்தில் 2ஜி வழக்கு விசாரணையை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட அதே யு.யு.லலித்தான் இவர்.  யு.யு.லலிர் ஆஜராவதற்கு முன்பாக ஜெகதரட்சகன் சார்பாக இது வரை ஏகப்பட்ட வழக்கறிஞர்கள் ஆஜராகியுள்ளார்கள். என்.ஆர்.இளங்கோ, பி.எஸ்.ராமன், சண்முகசுந்தரம்,  மாசிலாமணி, சங்கர் மஹாதேவன் ஆகிய மூத்த வழக்கறிஞர்கள் இதே வழக்கில் ஆஜராகியுள்ளனர். இவர்கள் வரிசையில் கடைசியாக ஆஜரானவர்தான் யு.யு.லலித்.
 galilawyers04
உதய் யு.லலித்
கடந்த சனிக்கிழமை அன்று நீதிபதி ஆறுமுகசாமி முன்னிலையில் தனது வாதத்தை தொடங்கிய லலித், “ஒரு மருத்துவக் கல்லூரிக்கு அனுமதி கொடுக்க வேண்டும் என்பது சட்டத்தின் படி மருத்துவக் கவுன்சிலுக்கு கொடுக்கப் பட்டுள்ள உரிமை.  அதன் பரிந்துரையின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரிக்கு அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது.  மத்திய அரசு அனுமதி வழங்கிய  பிறகு அதைக் கேள்வி கேட்பதற்கு எந்த அமைப்புக்கும் உரிமை கிடையாது.   தற்போது பிப்ரவரி 2011ல் இந்த மருத்துவக் கல்லூரிக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ளதை (வௌங்கிடும்) கவனத்தில் கொள்ளவேண்டும்.”

ஆறுமுகசாமி உடனே குறுக்கிட்டு, தற்போது அங்கீகாரம் வழங்கப் பட்டுள்ள நிலையில், முன்னர் மட்டும் எப்படி அங்கீகாரம் வழங்காமல் இருந்திருக்க முடியும் என்று கேட்கிறீர்கள்   இல்லையா ? (உங்களுக்கு தெரியாத சட்டம் இல்லை மை லார்ட்) என்று கேட்டார்.

ஆம் என்று பதில் அளித்த லலித், தொடர்ந்து “எப்ஐஆர் பதிவு செய்து ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யப் படவில்லை. இது தேவையற்ற சிரமத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது” என்றார்.  உடனே குறுக்கிட்ட சிபிஐ வழக்கறிஞர் சந்திரசேகர், நீதிமன்றம் தடை விதித்ததால்தான் தாமதம் என்றார்.  ஆனால் அவரை யாருமே கண்டு கொள்ளவில்லை.

தொடர்ந்த லலித், சிபிஐயின் எப்ஐஆரின் படி, முறைகேடான வழியில் அனுமதி பெற்று, லட்சுமி நாராயணா மருத்துவக் கல்லூரி மத்திய அரசை ஏமாற்றியுள்ளது என்று உள்ளது.  ஆனால் மத்திய அரசிலிருந்து யாருமே புகார் கொடுக்காத போது எப்படி சிபிஐ வழக்கு பதிவு செய்ய முடியும்” என்றார்.  இது எப்படி இருக்கிறதென்றால், ஒரு நபரை கொலை செய்து விட்டார்கள் என்றால், கொலை செய்யப் பட்ட நபர் புகார் கொடுக்காமல் எப்படி எப்ஐஆர் போடலாம் என்பது போல் இருக்கிறது.

யு.யு.லலித் அவர்களின் வாதத்தை நீதிமன்றத்தில் கேட்டுக் கொண்டிருந்த போது ஆ.ராசா, கனிமொழி போன்றவர்களை நினைத்து மிகவும் பரிதாபமாக இருந்தது.  ஒரு மணி நேரம் கேட்டதற்கே காதில் ரத்தம் வருகிறதென்றால், ஏறக்குறைய ஒரு மாதமாக தினமும் யு.யு.லலித்தின் வாதத்தை கேட்டுக் கொண்டிருப்பதே பெரிய தண்டனையாயிற்றே… !!  அனேகமாக, லலித் வாதங்களை தொடர்ந்து ஆ.ராசா கேட்பாரேயென்றால், போதும் நிறுத்துங்கள். குற்றத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று சொன்னாலும் ஆச்சர்யப் படுவதற்கில்லை.

அடுத்து தனது வாதத்தை தொடங்கிய சந்திரசேகரன், யு.யு.லலித் போல சுற்றி வளைக்காமல், “விசாரணையில் ஏற்பட்ட தாமதம், நீதிமன்றத்தின் தடை உத்தரவாலேயே.   லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின் கீழ் நடக்கும் விசாரணைக்கு மிக மிக விசித்திரமாக நீதிமன்றம் தடை விதித்தது.  அந்தத் தடையை ரத்து செய்த பிறகே விசாரணை தொடர்ந்தது. இது வரை சிபிஐ 125 சாட்சிகளை விசாரித்துள்ளது.  750 ஆவணங்களை சேகரித்துள்ளது.  சிபிஐயின் விசாரணையின் போது, ஒரு சாதாரண மருத்துவமனையில் இருக்க வேண்டிய அடிப்படை உபகரணங்கள் கூட அந்த மருத்துவக் கல்லூரியில் இல்லை.  இது போன்ற கல்லூரியை நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகவே சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. சிபிஐ இது வரை நடத்திய விசாரணையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து தாக்கல் செய்துள்ள ரகசிய அறிக்கையை பாருங்கள்.  அதில் எல்லா விபரங்களும் உள்ளது” என்றார்.

உடனே களத்தில் இறங்கினார் ஆறுமுகசாமி. ஏகே 47 துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் பாய்வது போல சராமாரியாக சந்திரசேகரனை கேள்விகளால் துளைத்தார்.
 photo01
இடமிருந்து வலதாக இரண்டாவதாக இருப்பவர்தான் ஆறுமுகசாமி
“ஜுன் 2011க்குள் விசாரணையை முடிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்குப் பிறகும் ஏன் முடிக்கவில்லை.  பாதிக்கப் பட்டவரை நீதிமன்றத்தின் கதவுகளுக்கு வெளியே (ஜெகதரட்சகன் பாதிக்கப் பட்டவராம்… அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்) எத்தனை நாட்களுக்கு நிற்க வைக்க முடியும் ?  மனுதாரருக்கு எதிராக எத்தனை பேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள்,  எந்த சாட்சி மனுதாரருக்கு எதிராக சாட்சியம் அளித்திருக்கிறார் (எதுக்கு. வீட்டுக்கு ஆட்டோ அனுப்பறதுக்கா ?) என்று கூறுங்கள்” என்றார்.

சந்திரசேகரன் “திங்கள் வரை அவகாசம் கொடுங்கள்.  விரிவாகக் கூறுகிறேன். அல்லது நீதிமன்றம் விரும்பினால் 125 சாட்சிகளின் வாக்குமூலங்களையும் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்கிறேன்” என்றார்

உடனே நீதிபதி, “எல்லாவற்றையும் நான் படித்துப் பார்ப்பது போல நடிக்க முடியாது.  நான் படித்துப் பார்க்கவும் விரும்பவில்லை. அது சரியானது இல்லை.  ஒரு வழக்கின் புலன் விசாரணைக்குள் நான் நுழைந்து பார்க்க விரும்பவில்லை (உங்க நேர்மை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு).  குறிப்பாக எந்த சாட்சி மருத்துவக் கல்லூரிக்கு எதிராக சாட்சி சொல்லியிருக்கிறார் என்பதைச் சொல்லுங்கள்.”

சந்திரசேகர் மீண்டும் திங்கள் அல்லது செவ்வாய் சொல்லுகிறேன் என்று கூறினார்.  ஆனால் ஆறுமுகசாமி விடுவதாக இல்லை.  உடனே சொல்லுங்கள்.   எப்ஐஆரைப் பற்றி நான் ஒரு முடிவுக்கு வந்து விட்டேன்.  (என்ன முடிவு லார்டுஷிப் ?) எத்தனை பேர் சாட்சி சொல்லியிருக்கிறார்கள் என்பதை உடனே சொல்லுங்கள்.   அதோ சிபிஐ அதிகாரி நீதிமன்றத்தில் இருக்கிறாரே… அவரை உங்கள் பக்கத்தில் வரச் சொல்லுங்கள்.  அவரிடம் கேட்டுச் சொல்லுங்கள்” என்றார்.  (என்ன அவசரம் லார்டுஷிப்….?  மறுநாள் உலகம் அழியப் போகுதா ?)

உடனே ஒரு சிபிஐ அதிகாரி, சந்திரசேகரன் அருகில் சென்றார்.  அவரிடம் கலந்தாலோசித்து விட்டு, இது வரை சிபிஐ நடத்திய விசாரணையில் 70 மருத்துவர்கள் தாங்கள் அந்தக் கல்லூரியில் பணியாற்றவேயில்லை.  வேறு மருத்துவமனைகளில் பணியாற்று வதாகவும், மருத்துவக் கவுன்சிலின் ஆவணங்களில் உள்ள கையெழுத்து தங்கள் கையெழுத்து இல்லை என்றும், சாட்சியம் அளித்திருக்கிறார்கள்.   அந்தக் கையெழுத்தை நிபுணர்களிடம் கொடுத்து பரிசீலித்ததில் அவை போலியான கையெழுத்துக்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.  மேலும், கல்லூரியின் வருமான வரிக் கணக்கை சரி பார்த்ததில் அந்த மருத்துவக் கல்லூரியில் மருத்துவர்கள் பணியாற்றியதற்கு வருமான வரி செலுத்தாதும், தொழில் வரி செலுத்தாதும் தெரிய வந்துள்ளது.  சம்பந்தப் பட்ட மருத்துவர்களின் தனிப்பட்ட வருமான வரிக் கணக்கை ஆய்வு செய்ததில், அவர்கள் ஒவ்வொருவரும் தாங்கள் தனிப்பட்ட முறையில் மருத்துவத் தொழில் செய்து வருவதாக வருமான வரி செலுத்துவதாக ஆதாரங்கள் கிடைத்துள்ளது” என்று தெரிவித்தார்.

உடனே நீதிபதி ஆறுமுகசாமி, வருமான வரி கட்டவில்லை யென்றால், அதை வருமான வரித்துறை பார்த்துக் கொள்ளும். (என்ன ஒரு கண்டுபிடிப்பு ?)  நீங்கள் எப்ஐஆரைப் பாருங்கள்.  எப்ஐஆரில் ஆக்சிஜனே இல்லை.  யாருமே புகார் கொடுக்கவில்லை.  சோர்ஸ் ரிப்போர்ட் என்று போட்டிருக்கிறார்கள்” என்றார்.

உடனே எழுந்த யு.யு.லலித் “சிபிஐக்கு இதே வேலையாகப் போய் விட்டது.  சிபிஐ நினைத்தால் சோர்ஸ் ரிப்போர்ட் என்று ஒரு வழக்கு போட முடியும். இதே போல நான்கைந்து சோர்ஸ் ரிப்போர்ட்டுகளை வைத்து சிபிஐ ஒரு கதையை ஜோடித்து விடும்.  யார் மீதாவது பொய்யான வழக்கை போட்டால் அதற்காக யார் மீதும் வழக்கு தொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. சிபிஐக்கு தனி நபர்கள் மீது வழக்கு தொடுக்க அதிகாரமே இல்லை (சார் 2ஜி கேஸ்ல ரிலையன்ஸ் நிர்வாகிகள் யார் சார் ?) இந்த வழக்கில் யாராவது தவறு செய்திருப்பார்களேயானால், அது மருத்துவக் கவுன்சில் மற்றும் சுகாதாரத்துறையில் பணியாற்றும் ஊழியர்களே.  சிபிஐ அரசியல் அமைப்புக்கு அப்பாற்பட்ட அமைப்பு அல்ல.   சிபிஐக்கு எல்லா அதிகாரங்களும் வழங்கப் படவில்லை.” என்றார். இந்த நபர்தான் சிபிஐ சார்பாக 2ஜி வழக்கில் ஆஜராகிறார் என்பதை மீண்டும் நினைவுப் படுத்திக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் நீதிபதி ஆறுமுகசாமி குறுக்கிட்டு, 75 டாக்டர்கள் இல்லை என்று சொல்கிறார்களே அதற்கு என்ன சொல்கிறீர்கள் என்றார்.  உடனே லலித், சம்பந்தம் இல்லாமல் ஏதோ பேச ஆரம்பித்தவுடன், ஆறுமுகசாமி, சிபிஐ கொடுத்த ரகசிய அறிக்கையை லலித்திடம் கொடுத்தார்.  எப்படி இருக்கிறது பார்த்தீர்களா ?  குற்றவாளியிடமே அவர் குறித்த அறிக்கையை கொடுக்கிறார் நீதிபதி ?

அதைப் பார்வையிட்ட லலித், “யாரோ ஒரு டாக்டர் நான் அந்தக் கல்லூரியில் வேலை செய்யவில்லை என்பதற்காக அந்தக் கல்லூரியையே மூடி விட முடியுமா ? கல்லூரி தொடர்பாக அதிகாரங்கள் மத்திய அரசு, மருத்துவக் கவுன்சில், யுஜிசி, பல்கலைகழகம் போன்ற அமைப்புகளிடத்தில்தான் உள்ளது.  சிபிஐயிடம் அல்ல.  வருமான வரி கட்டவில்லை என்பது ஒன்றும் பெரிய குற்றம் இல்லையே… அதற்காக கல்லூரியை மூடி விட முடியுமா” என்றார்.
 22ADVOCATE1.jpg.crop_display
நீதிபதி ஆறுமுகசாமி ஆமாம், வருமான வரி ஏய்ப்பு விவகாரம் ஒரு சிறிய தவறு என்றார் (Yes. Yes.  I.T evasion is a petty offence)

கையெழுத்து தவறாக இருக்கிறது, திருத்தப் பட்டிருக்கிறது என்றால், ஆய்வுக்கு வந்த நிபுணர் குழுவின் மீது தவறு.  அதற்காக கல்லூரியை எப்படி தண்டிக்க முடியும் என்றார் ?  (டேய் பச்சிலை புடுங்கி… அந்த கையெழுத்துக்கு கீழே, லட்சுமி நாராயணா கல்லூரியின் டீன் கையெழுத்து போட்டிருக்கிறாரே என்று நீதிபதி கேட்டிருக்க வேண்டும்.  ஆனால் கேட்கவில்லை)  லலித், “இந்தக் கல்லூரி எப்படி மோசடியாக அனுமதி வாங்கியிருக்கிறது என்று சொல்கிறார்கள்….   இந்தக் கல்லூரிக்கு அனுமதி கொடுத்த கோப்பில், அப்போதைய சுகாதாரத் துறை அமைச்சர் உட்பட 57 பேர் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். அவர்களை சிபிஐ விசாரித்ததா ?” என்றார்.

உடனே தலையிட்ட ஆறுமுகசாமி, சரி, வழக்கின் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.   நடந்த விவகாரங்களையெல்லாம் பார்த்து, ஏதோ இந்த வழக்கில் எப்ஐஆரை நீதிபதி ஆறுமுகசாமி ரத்து செய்து விடுவார், அமைச்சர் ஜெகதரட்சகனுக்கு ஆதரவாக செயல்படுகிறார் என்றெல்லாம் எண்ணி விடாதீர்கள்.   அவர் ஒரு நீதி அரசர்ர்ர்.   நியாயமான தீர்ப்பை வழங்குவார் என்று நம்புவோம்.

இந்த இரண்டு கல்லூரிகளைத் தவிர ஜெகதரட்சகனுக்கு தாகூர் பல் மருத்துவக் கல்லூரி, தாகூர் மருத்துவக் கல்லூரி வேறு இருக்கிறது.   அந்த இரண்டு கல்லூரிகளும் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருவதாகவும், பல் மருத்துவத்துக்கு ஆய்வுக் குழு வரும் போது பல் மருத்துவக் கல்லூரியாகவும், மருத்துவக் கல்லூரிக்கு ஆய்வுக்கு வரும் போது மருத்துவக் கல்லூரியாகவும் மாற்றம் செய்யப் படும் வசதிகள் அந்தக் கல்லூரியில் உள்ளது என்கிறார்கள்.  இது போக பாரத் யுனிவர்சிட்டி என்ற பெயரில் ஒரு நிகர்நிலைப் பல்கலைகழகம் வேறு.

கனிமொழிக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று சவுக்கு எழுதியது ஏன் தெரியுமா ?   ஜெகதரட்சகனின் இந்தக் கல்லூரிகள் அவர் உழைத்து சம்பாதித்த பணத்தில் கட்டியவை அல்ல.  2ஜி பணம் தான்.   ஆயிரம் கோடிக்கு மேல் 2ஜியில் பங்கு வாங்கியுள்ள இந்த ஜெகதரட்சகன் 2 கோடி ரூபாய் போர்ஷ் காரில் பவனி வரும் போது 200 கோடி வாங்கிய கனிமொழி 5 மாதங்கள் சிறையில் இருந்தது போதும் என்பதற்காகவே.

இந்த யு.யு.லலித் வந்து வாதாடிச் செல்வதற்காக, ஜெகதரட்சகன் சார்பாக சிகப்பு சுழல் விளக்கு பொருத்திய டொயோட்டா பார்ச்சூனர் கார் கொடுத்திருந்தார்.  இதற்கு அரசு சம்பளம் வாங்கும் பாதுகாப்பு அதிகாரி வேறு…. ஒரு குற்றவாளிக்காக ஆஜரான யு.யு.லலித்துக்கு சிகப்பு விளக்கு பொருத்தப் பட்ட கார் என்றெல்லாம் அதிகப்பிரசங்கித் தனமாக கேள்வி கேட்கக் கூடாது.  அதனால்தான் வல்லான் வகுத்ததே வாய்க்கால்.
 IMG-20111210-00015
IMG-20111210-00014
இன்னொரு முக்கிய செய்தி.   இந்த வழக்கை இழுத்து மூடுவதற்காக பிரயத்தனப்படும் மற்றொரு நபர், நாராயணசாமி என்கிற நரி நாராயணசாமி.  இவர் மத்திய அமைச்சராக இருக்கிறார்.  இந்த நாராயணசாமி, சிபிஐ இயக்குநரை அணுகி, இந்த வழக்கை இழுத்து மூடச் சொல்லி கோரியிருப்பதாக ஒரு தகவல். சரி நாராயணசாமி சொன்னால் சிபிஐ இயக்குநர் ஏன் கேட்க வேண்டும் என்றால், நாராயணசாமிதான் சிபிஐக்கு அமைச்சர்.  ஜெகதரட்சகனின் மருத்துவக் கல்லூரிகளில் நாராயணசாமிக்காக ஆண்டுதோறும் 10 சீட்டுகள் ஒதுக்கப் படும் போது, அவர் ஜெகத்துக்காக போராட மாட்டாரா என்ன ?

1-18-2011-24-union-minister-narayanasamy-meஇந்த ஜெகத்ரட்சகன் தான் நம் பாசத் தலைவருக்கு  பாராட்டு விழாவெல்லாம் எடுத்து,தலைவரை மானே தேனே பொன்மானே என்றெல்லாம் வருணித்தார் , தலைவரைப் பார்த்து தான் அரசியலே கற்றுக்கொண்டேன் என்றார், ஐயா மருத்துவம் புனிதமானது அதை ஒரு கேவலமான பிழைப்பாக்கிவிட்டீர்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள் , அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாகும் ,இது பூம்புகார் படைத்த கலைஞர் க்கு தெரியும் , தங்களுக்கு தெரியாதென்றால் இதையும் தலைவரிடமே கற்றுகொள்ளுங்கள், ஆனால் ஒன்று இந்தியாவில் நிதி மட்டும் இருந்தால் நீதி என்ன பால் வீதியையே விலை பேசிவிடலாம்.
நன்றி : சவுக்கு தளம்.

0 comments:

Post a Comment