Tuesday, July 10, 2012

கடின உழைப்பாளிகள் புன்னகை மன்னர்கள்!!!


இந்த உலகில் வெற்றி என்பது நாம் எய்தும் பணம்,செல்வத்தையே குறிக்கிறது.
மனிதனின் எல்லாத்தேடல்களுக்கும் எல்லை பெரும்பாலும் பொருளாகவே இருக்கிறது.
அத்தகைய பொருளை அடைய முயற்சி,பயிற்சி,மிக அவசியம் என்பது யாவரும் அறிந்ததே.
இவை இரண்டின் சாரமும் கடினஉழைப்புதான்.
கடின உழைப்பு ஒன்று மட்டுமே ஒருவனை உயர்த்திவிடுமா?



இல்லை என்பதன் எடுத்துக்காட்டாய் இருப்பவன் தான் இங்கே புகைப்படமாய் சிரிக்கிறான்.

இவன் கதைய இங்கே பேசுவதை விட சிலிக்கான் வெளி என்னும் திரைப்படத்தில், (யூட்டூபில்) பார்த்துக்கொள்ளுங்கள்.

இவன் கடின உழைப்பாளி தான் ஆனால் அதில் திறனோடு இருப்பவன்.
எல்லா இடங்களிலும் அரி வெல்வதில்லை.அரியாக மட்டுமே இருத்தல் போதாது,நரியாகவும் இருக்க வேண்டும்.


கடின உழைப்புக்கும் திறமையான உழைப்புக்கும் இடையில் உள்ள கோடு - அறிவு!!!

மூன்று முறை உலகைச் சுற்றிவந்து ஞானப்பழத்தை அடைய நினைத்தால் அது கடின உழைப்பு.
அம்மைஅப்பரே உலகம் என்று டுபாக்கூர் காரணம் சொல்லி அவர்களை சுற்றி வந்து ஞானப்பழத்தை அடைய எண்ணுவது திறமையான உழைப்பு.



இறுதியில் வெல்வது எது?

ஐந்து மாடிக் கட்டிடத்தில் இருந்து முதலாளி விழு என்று சொன்னதும் விழுந்து காலை உடைத்துக் கொள்வது கடின உழைப்பானால் , கீழே விழும் முன் எலும்பு முறியாமலிருக்க தேவையான உபகரணங்களைத் தயார் செய்து வைத்துக் கொண்டு குதிப்பது திறமையான உழைப்பு.

ஆகவே பெரியோர்களே தாய்மார்களே, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள்,கடினஉழைப்பை விட திறமையான உழைப்பே பெரிதும் வெற்றிக்கு உதவிடும்.

கடினஉழைப்பாளிகளாக மாத்திரம் இருந்தால், நீங்கள் புன்னகைமன்னர்களாகத் தான் இருக்கமுடியுமே ஒழிய,நிஜ மன்னர்களாக முடியாது.






அர்த்தம் ஆயிந்தா!!!!!!



-கொக்குவிரட்டி
தேன்மழை


0 comments:

Post a Comment