Monday, March 5, 2012

ஒரு தீக்குச்சி காட்டுத்தீயானால்??


நான் அடுத்த பில் கேட்ஸ் ஆகணும்.

 இந்த ஆசை இல்லாத மனிதன் உலகில் இருக்கவும் செய்வானா?
ஆனால்,ஆசைகள் ஒன்று தீக்குச்சியைப் போன்றது அல்லது காட்டுத்தீ போன்றது.
மேலே குறிப்பிட்ட ஆசை பலருக்கும் தீக்குசியைப் போன்றதே!அதற்கு ஆயுசும் அற்பமே!
அதனால்தான் ஒருவன் மட்டுமே பில் கேட்ஸாக இருக்கிறான்.

அந்த தீக்குச்சியை எளிதில் அணைக்ககூடிய தென்றல் காற்று, நாம் அனுபவிக்கும் நிகழ்கால சுகங்கள்!

வரலாற்றின் முதுகைப் பாருங்கள்,
எவ்வித சுகமும் தீண்டாத ஏழ்மையானவர்களே சூரவளியே சூரையாடினாலும் எதிர்த்து நிற்கும் காட்டுத்தீ போல்-வந்தனர்,வென்றனர்,சென்றனர்!

சுகங்கள் இறந்தகாலத்துக்குள் கைது செய்து பூட்டிவிடும்.
அவ்வாறு பூட்டிய இரும்புக்கதவுகளை உடைக்கும் சிம்புட்பறவைகளும் இங்கு சிலவே!
உடம்பிலுள்ள அனைத்துத் துளைகளையும், அடிப்படை சுகங்களை நிரப்பிக்கொண்டு நாட்கள் கடக்க,அவை சுமையாகும் நாளும் வரும், அறிக!
சுகித்து,சகித்து தேங்கும் மனமே சிலந்தி வலையின் மீனாய் மாறும்!

இற்றைய சுகங்கள் விடுதல் என்பது துறவறத்துக்கு ஒப்பானதல்ல!! துறைமுகத்தை விடும் கப்பல் போல;இங்கிருந்து கிளம்பி இன்னொரு வளமான இடத்தை அடையவே அப்புறப்பாடு!

அதற்கு கிழமையை அறிவிக்க வந்த கதிரவனாய் கிளம்புவீரே!

ஏனெனில், இக்கரைக்கு அக்கரை பச்சையானால்தான் அக்கரைக்கு செல்ல அக்கறையே வரும்!!
சுகத்தென்றல் சோர்ந்தால் மனதைச் சுடும் தீக்குச்சி கூட காட்டுத்தீயாக மாறும்.



மாறினால்???
யார் கண்டது அடுத்த பில்கேட்ஸ் நாமாவகவும் இருக்கலாம் !!!!!!!!!!!!!



உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளச்சுத்தியுடன்,
காட்டுச்சிறுக்கி
தேன்மழை

0 comments:

Post a Comment