Wednesday, March 21, 2012

பணக்கார நாடாகிறது இந்தியா!!

நீங்கள் ஒரு நாளைக்கு 28 ரூபாய்க்கு சம்பாதிக்கிறீர்களா?
நீங்களும் பணக்காரன் தான்.
நம்பமுடியவில்லையா?இதை நாம்சொல்லவில்லை.இந்தியஅரசே சொல்கிறது.

மேலும் கேளுங்கள்!!
நகர்ப்பகுதிகளில் தினசரி கூலி ரூ. 28-க்கு மேல் ஊதியம் பெறுபவர்களும், கிராமப்பகுதிகளில் ரூ. 22.42 மேல் பெறுபவர்களும் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாகக் கணக்கிடப்பட்டுள்ளனர்.

தாயே!உன்னிடம் 28ரூபாய் நிச்சயம் இருக்கும்.அப்படியானால் நீ ஒரு பணக்காரி!!பிறகேன் அடுத்தவனிடம் கையேந்துகிறாய்!

 இதன்படி நகர்ப்பகுதிகளில் மாத ஊதியம் ரூ. 859.60 பெறுவோரும், கிராமப் பகுதிகளில் மாதம் ரூ. 672.80 சம்பாதிப்பவர்களும் வறுமைக்கோட்டுக்கு மேலே உள்ளவர்கள் என கணக்கிடப்பட்டுள்ளது.

 2011 ஜூன் மாத நிலவரப்படி நாளொன்றுக்கு ரூ. 32 அதாவது மாத ஊதியம் ரூ. 965 பெறுவோரும், கிராமத்தில் நாளொன்றுக்கு ரூ. 26 என்ற அடிப்படையில் மாதம் ரூ. 781 பெறுவோரும் வறுமைக் கோட்டுக்கு மேலே உள்ளவர்களாக கணக்கிடப்பட்டுள்ளனர்.

 இதன்படி இந்தியாவில் வறுமைக்கோட்டுக்குக் கீழே வாழும் மக்களின் மொத்த எண்ணிக்கை 34.47 கோடி. இது 2004-05-ம் ஆண்டில் 40.72 கோடியாக இருந்தது.

இவரும் பணக்காரர்,இந்த பையனும் பணக்காரனாம் ...ஹய்யா நாம வல்லரசு ஆகிட்டோம்!!!!!!

கடந்த ஐந்து ஆண்டுகளில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்வோரின் எண்ணிக்கை ********7.3 சதவீதம்****** குறைந்துள்ளதாக திட்டக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எப்படி எப்படி எப்படி??
ரூ. 32இலிருந்து ரூ. 28 குறைத்து,வறுமைக்கோடு 7%குறைகிறதாம்.
முதலில் வருபர்க்கே முன்னுரிமை என்ற ஆண்டிமுத்து ராசாவின் கொள்கையை விட,ஏமாத்துக்காரத் தனமா இல்ல இருக்கு இது!

இமாசலப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிசா, சிக்கிம், தமிழ்நாடு(ஏய்யா திட்டம் போடுறவங்களேமுன்ன பின்ன தமிழ் நாட்டு பஸ்ல போய்ருக்கீங்களா), கர்நாடகம், உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை 10 சதவீத அளவுக்குக் குறைந்தது. அதேசமயம் அசாம், மேகாலயம், மணிப்பூர், மிசோரம், நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

டெண்டுல்கர் குழு பரிந்துரைத்த உத்தியின் அடிப்படையில் ஏழ்மை நிலையில் உள்ளவர்களின் விகிதம் கணக்கிடப்பட்டுள்ளது. சுகாதாரம், கல்வி, சாப்பிடும் உணவின் அளவு ஆகியவற்றின் அடிப்படையில் ஏழ்மை நிலை கணக்கிடப்பட்டுள்ளது.

நகைப்பூட்டினாலும் உண்மைநிலை இதுவே!!!


 மத அடிப்படையில்ஏழ்மையானவர்கள்-சீக்கியர்களாம்.

இதனால எல்லாம்  எனக்கென ?????
இருக்கே,
நீங்க பணக்காரங்களாகிட்டீங்களே,அதனால,அரசின் பெரும்பான்மையான திட்டங்கள் உங்களுக்குக் கிடைப்பது இனி சந்தேகம்தான்.

ஒரேஒரு சந்தேகம்,
 திரு.மான்டேக் சிங் அலுவாலியா கிட்ட கேட்கனும்.(அவருதான் இந்த பொன்னான யோசனைக்குத் தல னு வச்சிகங்களேன்.)
ஐயா சாமி !!!!நீங்க இந்தியாலதான் இருங்கிங்களா?????
அப்படி இந்தியாவுல இருந்தா,ஏசி வாழ்க்கைய விட்டுட்டு,முதல்வன் படம் மாதிரி ஒருநாள்,ஒரு நாள் சாதாரண இந்தியப்பிரஜை வாழ்ந்துபாருங்க!அப்புறம் போடுங்க உங்க திட்டத்த!!!!

ஆகவே,பெரியோர்களே,தாய்மார்களே,வாக்காளப்பெருங்குடி மக்களே!
இனி,நன்றாக பெருமைப்பட்டுக்கொள்ளுங்கள்,


"நீங்களும் பணக்காரர் தான்!!!!!!!!!!!!!!!!!"





-கொக்குவிரட்டி
தேன்மழை

1 comments:

  1. நாட்டு மக்களுக்கு எதுவும் செய்யக் காணோம். அவனை ஏழை என்றால் என்ன, பணக்காரன் என்றால் என்ன? அவன் நிலை அப்படியேதானே இருக்கப்போகிறது?

    ReplyDelete