

வந்திங்டுங்க...
அவசியம்
வந்திடுங்க...
வானூர்தி
நிலையத்திற்கு
வரவேற்க
வந்திடுங்க...
வேகமாக
வந்திடுங்க...
வெறுங்கையா
வந்திடாம
பூமாலை
பொன்னாடையோடு
புயல்போல
என்ன
பரபரப்பு?
எதுக்கு இந்த
பரபரப்பு?
யாரு வரப்போறாக?
எதுக்கு வரப்போறாக?

சிகரத்தை
எட்டிய
முதல் பெண்
பஜேந்திர பால்
வாராகளா?


புல்லென
ஏறி மிதித்த
சத்தியவான்
சாவித்திரி
மறுபடியும்
பிறப்பெடுத்து
மண்ணுக்கு
வாராகளா?

பரபரப்பு?
எதுக்கிந்த
பரபரப்பு?

இளமை வென்ற
மணிமேகலை
மறுபடியும்
மண்ணுக்கு
வாராகளா?

பீரங்கியை
பந்தாடிய
ஜான்சிராணி
மீண்டும்
பிறப்பெடுத்து
மீனம்பாக்கம்
வாராகளா?

பரபரப்பு?
எதுக்கிந்த
பரபரப்பு

விதவையாகி
ரத்தத்
திலகமிட்டு
நாடு காத்த
ராணி மங்கம்மா
மறுபடியும் நாடாள
மண்ணுக்கு
வாராகளா?

முத்துலெட்சுமி ரெட்டி
திரும்பவும்
பிறப்பெடுத்து
திரிசூலம்
வாராகாளா?


பரபரப்பு?
எதுக்கிந்த
பரபரப்பு?
விமானம் ஓட்டி
வியப்பிலாழ்த்திய
முதல் பெண்
துர்கா பானர்ஜி
வாராகளா?
இல்லை -

புதையாமலும்
காற்றில் கலந்தே
சாவிலும்
புதுமை செய்த
கல்பனா சாவ்லா
வாராகளா?

உயிர் கலந்த
இசை மீட்டும் மீரா
இங்கு
வாராகளா?
இல்லை -

காற்றை
சுத்திகரித்த
எம்.எஸ். சுப்புலட்சுமி
மீண்டும் வாராகளா?
மீண்டும்
வாராகளா?
ஏனிந்த
பரபரப்பு?
எதுக்கிந்த
பரபரப்பு?

கத்தியாக்கிய
கண்ணகி
வாராகளா?
இல்லை -
கணவன் காணா
உலகத்தை
காணேன் என்றே
தன் கண்ணைக்
கட்டிக் கொணட
காந்தாரி
வாராகளா?

பதக்கம்
வாங்கித்தந்த
பி.டி. உஷா
வாராகளா?


சின்னமான
சீதாபிராட்டி
சிறைமீண்டு
வாராகளா?
ஏனிந்த
பரபரப்பு?
எதுக்கிந்த
பரபரப்பு?

இன்னொரு உயிர்
இவ்வுலகில்
உள்ளவரை
யாரும் அனாதை
இல்லையென்று
வழிகின்ற நீர்
துடைத்த
வாஞ்சையுடைய
அன்னை தெரசா
மீண்டும்
பிறப்பெடுத்து
வராகளா?

வாராக?
எதுக்குத்தான்
வாராக?

ஒன்றுமில்லை -

ராசாவோடு
அந்தரங்கத்
திட்டம் தீட்டி
தேசத்தின்
சொத்தை
தேசவிரோத
கும்பலுக்கு
மோசடியாய் விற்று
இரண்டு லட்சம்
கோடிகளை
திருடிய குற்றத்தில்
திகாரில்
களி தின்ற
திருமதி கனிமொழி
திருமதி வாராகளாம்!

பாட்டியாலா வரை
தமிழினத்தின்
மானத்தை
சந்தி சிரிக்க
வைத்த சதிகாரி
கனிமொழி
பெயில் வாங்கி
வாராங்களாம்!

முழங்குது!
ஆட்டம்-பாட்டம்
நடக்குது!
குஷ்பு தலைமையில்
குத்தாட்டம்
இருக்குது!
‘களி’ மொழிக்கு
கட்சியில்
பரிவட்டம்
பாக்கி
இருக்குதாம்!

இந்த வேடிக்கை
பார்த்து
நாடே
நகைக்குது
ஹி... ஹி.... ஹி...!
- சித்ரகுப்தன் (நன்றி: டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.)
0 comments:
Post a Comment