Saturday, January 17, 2015

நோயும் தருவாள் சங்கீதா!-Desi Maane!

மேல் தட்டு மக்கள் கேட்டறியாத நோய்களுள் ஒன்று
எச்சில்புண் .
வாயில் உதடுகளின் ஓரத்தில் நீர்க்கொப்பளமாக ஆரம்பித்து பின் புண்ணாக மாறுவது.
உயிர் போகும் வலி வேறு வந்து தொலைக்கும்.
நான் சங்கீதா உணவகம் போன போது பார்த்தேன் .
பகீரென்றது.

வடநாட்டுக்காரன்.அஸ்ஸாம் அருணாச்சல் பிரதேசம் எது எனத் தெரியவில்லை.ஆனால் அந்த சைனா முகம் இவற்றுள் ஏதோ ஒரு ஊர்க்காரன் என்பதை உணர்த்தியது.
பல்லெல்லாம் கரை.பான் மசாலாவோ பீடாவோ.வாயோரத்தில் அந்த கருமம் வேற.

அவன் என்ன சாப்பிடறீங்க எனக் கேட்டது,எனக்கு "இவாளுக்கு ஹெர்பெஸ் மசாலா ரெண்டு செட் பார்சல் " என்று அவன் சொல்வது போலவே கேட்டுத் தொலைக்கிறது.

பிரஞ்சு கிஸ் பார்த்திருப்பீர்கள்.அப்படி எல்லாம் வாயை வைத்து நாக்கை சுழட்டினால் தான் இந்த பாழாப்போன புண் வருமென்பதில்லை.
அட சும்மா , வாயோரத்தில் 'பிக்கியதுயா',சொறிகிறான்!,அதே கையில் ரெண்டு இட்லி எடுத்து வைத்தாலே போதுமே சங்கு சத்தமில்லாமல் வந்து சேர்ந்திடுமே.நிற்க .

அவன் ஆர்டர் கேட்டான்.பேந்த பேந்த முழித்தேன்.பிறகு சொல்லியும் ஆகிவிட்டது.
கொண்டு வந்து வைத்தும் விட்டான்.திங்கலாமா வேண்டாமா ?.
சுற்றும் முற்றும் பார்த்தேன்.
அவன் பலருக்கும் சப்ளை செய்து,அந்த பலரும் பிரக்ஞையேதுமில்லாது உண்டுகளிப்பதைக் கண்டேன்.பிறகென்ன ,செவல ,தாவுடா தாவுதான்.

சிறு நம்பிக்கை .
ஆனால் நான் அவனை கவனித்துக் கொண்டுதானிருந்தேன்.நான் ஆர்டர் கொடுத்ததிலிருந்து,மேசையில் கொணர்ந்துசேர்க்கும் வரை. அவன் கை வாய்க்குப் போக வில்லை .
அதுதான் அந்த சிறு நம்பிக்கை .

சங்கீத உணவகம்.எவ்வளவு பெரிய சங்கிலி உணவகம்.ஒரு தோசை அம்பது ஓவாக்கு விற்கும் அவர்கள் , அவர்களின் லாபத்துக்காக குறைந்த சம்பளத்தில் எவனையாவது பிடித்துப் போட்டுவிட்டு ,வருபவர்களையே நோயாளியாக்குவது ,
நியாயமா.....ஆஆஆஆஆஆர்ர்ர்ர்ர்ரேஏஏஏஏ........?.

அங்கேயே நிலைமை இப்படி கதகளி ஆடினால்,கையேந்திகளை நினைத்துப்பார்க்கிறேன்.
நல்ல சோறு நல்ல காத்து நல்ல சனங்கள் இல்லாத ஊருக்கு பேர் நரகம் என்பார்கள் . அட டா,சென்னை இவ்வளவு சீக்கிரம் நரகம் ஆகுமென நான் எதிர்பார்த்ததில்லை.

சின்ன வயது .
'நான்' தனம் உருவாகாப் பருவம் .
ஒரு முறை நான் கீழ்சாதி தோழன் வீட்டில் தின்று விட்டேன் .என்ன சாதி என்பது இவ்விடத்தில் தேவையற்றது .
சோறும் பருப்புக் குழம்பு என நினைவு .
இரவு உண்டி அது .
என் பொற்றோருக்கு அது தெரிந்ததும் , குறிப்பாக தகப்பனாருக்குத் தெரிந்ததும் ,ஆடினாரே ஒரு ஆட்டம் ,ஆட்டனத்தி ஆதிமந்தி கூட அப்படி ஆடியிருக்க மாட்டார்கள் .
தின்றது வயிற்றுக்குப் போய் செறித்திருக்கக்கூட இருக்காது ,என் தோழன் வீட்டு சோறு ,அதற்குள்ளாகவே எந்தை என் இடக்கையில் முத்தமிட்டார்,அங்கு உண்டதற்காக ,
பழுக்கக் காய்ச்சிய கம்பியில்.!
இப்போது யோசிக்கிறேன்.

"அவா""ஆத்து"களிலேயும் இப்படித் தானே.
அபச்சாரம் என்பாளே .
அது எப்படி கீழ்சாதி காரன் அபச்சாரம் ஆவான் ,ஆனான்? .
கிருமிகள் ,தொற்றுகள் அதிகம் புழங்குவது அங்கு தானே! .

வாழ முடியாத கூடாத இடம் ;
மலிவான விலையில் கிடைக்கும் எந்த உணவும் சோறோ களியோ தின்று ;
மனமே அற்று ,அல்லது கண் போன போக்கில் மது மாது போதை என வாழும் , இன்னும் ஒரு படி வெளிப்படையாக சொல்வதானால் சாக்கடையில் வாழ்விடம்!,
பாக்டீரியா வோ ,வைரஸோ ,இன்னபிற பாராசைட்களோ இல்லாமல் போனால் தான் ஐயப்பட வேண்டும் .
ஆக அவன்  வாழ்க்கை அன்றாடம் காய்ச்சியாக ராக்காசியாக இருப்பது தானே அவனை தீட்டுக்காரன் தீண்டத்தகாதவன் ,அபச்சாரம் ஆக்கியது .

வரணாசிர தர்மம் என்ற பேரில் அவனை அவ்வண்ணம் ஆக்கியதே ஜெர்மன் மேட் "அவா"தானே .
தங்குண்டி சொகுசு வேண்டி அவனுக்கு பழசைத் தந்தார்.?அம்பிகளா?

தயை கூரு!,தமிழன் என்று தலைநிமிர உனக்கெல்லாம் என்ன யோக்கியதை இருக்கிறது ?வெங்காயம் !என்குது என் நெஞ்சு .எவனுக்கோ "ஆண்டே""எசமான்"போட்டு அடிமையாத் தானே இருந்த !
புலவன் புலம்பலும் ,கவிஞன் கழித்தலும் என்ன பெரிதாக கழட்டிப் புடுங்கியது.
மலத்தை அள்ளி முறத்தில் போட்டதா?
அன்றியும் அந்த போதை வாதியின் பலக்கை.. புளுத்த குறி அரிப்பை சொறிய தமக்கை! ஏன் தம்மகளே கூட!!..என அடிமை அடி பட்டு,அடி மட்டயே நீ   அடைந்தது என்ன ?

என் நெஞ்சே !
அறிவே தமிழனுக்குத் தரப்படவில்லையே.ஏன் எதற்கு கேள்வி கேட்டுவிடுவான் என என் இனத்துக்கே கல்வியை மறைத்து விட்டு புலையன் கீழ்சாதி என்று கூறுவதில் யாருக்கு எப்படியோ எனக்கு உடன்பாடில்லை.அன்று எந்தை வைத்த அந்த சூட்டை நினைத்துப் பார்க்கிறேன் .
வலிக்கவே இல்லை .
என் தோழனின் அந்த கள்ளமற்ற சிரிப்பு அதனை சில்லென்றாக்கிவிடுகிறது.பிறகு எப்படி சுடும் வலிக்கும் .தோழ் அல்லவா,என் தோள் அவன்.

                        எனக்கு அந்த பூணூல் பூனைகள் கண்டால் என்றுமே வியப்பாக இருக்கும்.
௧.
மனத்தை உணர்ந்தார்.

௨.
அதை அடக்கும் வழியறிந்தனர்.

அவர்கள் செயல்கள் ஒவ்வொன்றை கவனித்துப்பாருங்களேன்.ஆடல் ,பாடல்,இசை ,எழுத்து ,படிப்பு,கடவுள் கட்டமைப்பு என ஒவ்வொன்றும் ,I don't see a dalit singing carnatic or dancing bharatham over the period of pre independent era.நாம் பாடும் நாட்டுப்புற பாடல்களையும்,"அவா"க்களின் பாடல்களையும் நினைத்துப்பார்க்கிறேன்.மன வசியம் ஏனோ அவாக்களிடம் got struck.

௩.
அறிவே ஆயுதம் என்பதை அறிந்தனர்.

௪.
அவர்கள் நினைவு -இம் மனிதக் கடலில் , நான் நன்கு  வாழ ,அடி தடி அல்ல அதிகாரம் மிக அவசியம் .அடுத்தவன் கீழ்நிலை அடைந்தால் நாம automatically மேனிலை எய்திவிடலாமே!
அதற்காக ஒரு கடவுளையும் உருவாக்கிக் கொண்டனர்,சாத்திரம் ,சம்பிரதாயம் ,சாம்பிராணி இன்ன பிற.

இவையெல்லாம் எப்படி தெளிவாக இத்துணை நூற்றாண்டுகள் கடந்தும் ,அடி மேல் அடி என நடித்து,படித்து ,நாட்டையே பிடித்தும் வைத்திருக்கும்
"அந்தநார்"களை எண்ணுங்கால்,அடேயப்பா!அறிவுக்கு இவ்வளவு சக்தியா?
இப்போது நான் அந்த சங்கீதா ஊழியனை எண்ணுகிறேன்.அவனுக்கும் அந்த அறிவு இருந்திருந்தால்?

எனக்கு தோன்றுகிறது"அந்த சங்கீதா ஓட்டலையே .............",வேண்டாம் இது எனக்கே ஓவராகப் படுகிறது .அதனால் உங்கள் கற்பனைக்கே விட்டு விடுகிறேன் .


கொக்கு விரட்டி
தேன்மழை

0 comments:

Post a Comment