Monday, January 19, 2015

கழுவச் சேர்வை-உண்மை முகங்கள்!

கடவாப் பல்லில் கறித் துண்டு மாட்டிய அவஸ்தையை அனுபவித்ததுண்டா?
பல்லிருப்பவர்களுக்குத் தெரியும் அந்த கொடுமை!


இதுவும் அங்ஙனே இடைஞ்சல் கொடுக்கிறது .

அறிந்தவர் பறையலாம் இல்லாட்டி அறையலாம்,அவரவர் சித்தம்.

கடவுள் கலவியிருப்பாரா?

குடுமியை அள்ளி முடிந்து சீவக்கட்டையைத் தூக்கிக் கொண்டு இல்லையடா மாபாவி என்று துரத்த ஓடியாரும் அவாக்களைக் கேட்டுக் கொள்கிறேன் , மாமா ஓடறப்போ வேட்டியை மடிச்சிக்கங்கோ இல்லாட்டி விழுந்திடுவேள்.

இன்னொன்றும் இருக்கிறது கேட்க ,அயன் என்றால் பிரம்மா ,பிராமன். என்றால் படைப்பான்.ஆக,நீங்கோ தான் பெரும் படைப்பாளி,ஒத்துக் கொள்கிறான் இந்த கொக்கு விரட்டி ,ஆயினும் காண்க ,சாமியும் பூதமும் தவிர மனுசாளுக்கு உதவராப்பல என்ன படைச்சேள்.நெய் வேத்தியம் படைச்சேள்.ஓய் அதைக் கேட்கலங்கானும்.

இப்படியே கேட்டுண்டு இருந்தால் கேள வந்தது பாழாப் போகும்  ,

ஏன் மாமா ,கலவாக் கடவுளுக்கு , அதிலும்  முருகன் பெருமாளுக்கு எதற்கு இருபெண்கள்?,

அப்படி அனுப்பி அவர்களுடைய வாழ்க்கையையே பாழ்க்கிட்டேள் ஓய்.

எல்லாக் கோயில்களிலும் பள்ளி அறை எதற்கு சுவாமி ,பாடம் படிக்கவோ . சொல்லுங்கோண்ணா சொல்லுங்கோ.


கலவிடுவானப்பா கருநாகம் கழுத்தேறும் கயிலை நாதன் என்று ஆமோதித்து ஒரு முடிவு யாருக்கேனும் வருமானால்,

Mesolimbic dopamine system. This circuit (VTA-NAc) is a key detector of a rewarding stimulus such as food, sex,  In simplistic terms, activation of the pathway tells the individual to repeat what it just did to get that reward. It also tells the memory centers in the brain to pay particular attention to all features of that rewarding experience, so it can be repeated in the future. Not surprisingly, it is a very old pathway from an evolutionary point of view. The use of dopamine neurons to mediate behavioral responses to natural rewards is seen in worms and flies, which evolved 1-2 billion years ago. 

என்றாலும் sex is a feature of mortals how can an immortal be in that part.

ஒரு வேலை நம்முடைய அமெரிக்கா ஜான் ஹாப்கின்ஸ் டாக்டர் சொல்ராப்பிடி There are variants in genes that turn down the function of dopamine signaling within the pleasure circuit. For people who carry these gene variants, their muted dopamine systems lead to blunted pleasure circuits, which in turn affects their pleasure-seeking activities, -Lindan . 

என்றால் , Genetically Premature ஆதி மனிதனைத் தான் இந்த குருட்டுக் குடுமிகள் கடவுள் என மார்க்கெட்டிங் செய்கிறார்களோ ?மனித மனம் பற்றி சொல்ல வேண்டும் . அது கொரங்கு தான் . ஆனால் அதற்கு மூன்று முகங்கள் உண்டு .
Id,
ego,
superego .

எத்தனையோ புரட்டுக்கள் இருந்தாலும் மகாபாரதம் இதை எத்தனை ஆண்டுகள் என்று தெளிவாக தெரியவில்லை (தவறாக எழுதிவிட்டாயேடா விரட்டிப் பயலே என காவிகள் கட்டையைத் தூக்கிக் கொண்டு வரக்கூடும் ,பந்த் பஞ்சாயத்து எனநகர்ந்து எழுத்தாளன் தற்கொலை என்று இந்த கொக்கு விரட்டி அறிவிக்க விரும்பாததால் மகா பாரத காலத்தை நீங்களே முடிவுசெய்து கொள்ளவிட்டு விடுகிறான்.)

இப்போதைக்கு பன்னெடுங் காலமுன்பாக என்று போட்டுக் கொள்கிறேன்.(அட விரட்டிப் பயலே இதை முதலிலேயே போட வேண்டியது தானே என எவர் வரினும் ,வருக வருக என வரவேற்பது உங்கள் அபிமான கொக்கு விரட்டி.(ஏன்டா நீயே இப்படி மார்க்கெட்டிங் பண்ண அப்ப அவாள்லாம் எப்படி பண்ணுவா?அல்லது பண்ணிருப்பா?).


அர்சுனன் id
அவனுடைய தேரின் குதிரைகள் ego
கிருஷ்ணர் super ego.


Adult ஆகும் வரை உணர்ச்சிகளின் வாயிலாக மட்டுமே முடிவெடுகள் எடுப்பீர்கள் அது id -runs on primitive life drives food sex .

conscience- நான் என ஒன்றை உணர்வீர்களே அது Ego .

பிறப்பிலிருந்து நீங்கள் என்னென்ன நல்லன செய்வீர்களோ ,அவை நினைவாகும் .அவை பின் வாழ்வை வழி நடாத்தும் கிருஷ்ணரைப் போல. அந்நினைவுகள் தாம் என் நன்நெஞ்சே !'கடவுள்'.-super ego

you be a god or a Satan depends how on you grow .

I said you are a god.(noted?)

அப்படி கடவுள் தனம் நிறைந்தவர்களை "வாடா ,நீ போ "என ஒருமையில் விளிப்பது எங்ஙனம் முறை .மேன் மக்கள் அல்லவா.?

உம்மை எம்மை விட இம்மை மறுமையில்  மேல் நிலை எய்தியவர் அவர் இல்லையா!

அதுகாறுமல்லாது, IDஉணரச்சிகளின் பிடியிலிருப்பவன் அடிமை .கீழ் நிலைக்காரன் .அவனை ஒருமை அல்லது எருமை எனக் கூட அழைக்கலாம். அவனிடம் அந்த உணர்ச்சிகள் மட்டுமே மேலோங்கி இருக்கும் .அவனின் egoநான் தனமே அழித்து id மட்டுமே மிஞ்சும் கண் போன போக்கில் மனம் போகும்..அப்படி யானால் ஒருமை தானே.

If you have two in mind.ego to run,superego to command .I think two by number itself is plural.Apart from respect,மேன் மக்களை 'அவர்கள் ,அவங்க ,ங்க' எனப் பன்மையில் அழைப்பதன் காரணமும் இதுவாகத்தான் இருக்க வேணும்.

 இன்னும் கீழிறங்கி சொல்லட்டுமா? கடவுள் பாதி குரங்கு பாதி.id and superego characters both if present,call him both by plural.

 if id alone  குரங்கு புத்தி மாத்திரம் இருப்பவனை அவன் இவன் என்று ஏகா வசனத்திலேயே விளம்பலாம்.தப்பேயில்ல.


அதற்காக "மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே"என்று சட்டமன்றத்தில் மூச்சுக்கு மூச்சு சொல்கிறார்களே,அப்டீனா அவர் என்ன மேன் மகரா என்று எல்லாம் என்னிடம் கேட்கக்கூடாது.முன்பெல்லாம் மேன்மகர்கள் தான் அங்கே இருந்தாங்கள் ,இப்போதைப் பற்றி ஜெய நியூசைப் பார்த்துத் தெரிந்திடுக.

இருப்பினும் உயிர் தோழர்களை "டே,வாடா",என்போமே ,எனில் தோழன் கீழானவனா?

 அது அப்படி இல்லை ,


உங்களை என்றாவது இப்படி நீங்களே அழைத்திருப்பீர்களா? ,"அருமையா பண்றீங்க,விடிஞ்சிடிச்சு எழுந்திறீங்க,படிக்க சாப்புடுங்க "


யார் எப்படியோ நான் அப்படி கிடையாது .என்னை நான் ஒருமையில் அழைத்துக் கொள்வேன் .என்னில் ஒன்றானவனை  எப்படி பன்மை போட்டு அழைக்க?

நானே கடவுள் தனம் மிக்கவன் தான் பிறகேன் என்னை நான் ஒருமையில் அழைக்க வேண்டும் ,என்று பச்சிலைப் புடுங்கி இங்கிருந்தால் கேட்டிருப்பான்.

இதற்கு நம்ம கங்காணி சொல்வது போல் சொன்னால் தான் சரியாக இருக்கும்.

ஒரு  முறை இந்த கொசு விரட்டிப் பயல்,கங்காணியிடம் methane திட்டத்தைப் பற்றிப் பேசியிருக்கிறான்,அதற்கு கங்காணி இப்படிசொல்லியிருக்கிறான்.

லே லே லே லேய்.குதிரப் பணை வரதப்பனை யும்,மருதப் பனை மதுரப் பனையும்அடிச்சு விரட்டும் பார்லே!
(varathappan and madurai pot are made to run fast by horse herd and agricultural palm tree ),

ஊரை அடிச்சு ஒலையிலவச்சு மண்ணைத் தின்ன,மண்ணுக்குள்ள இருக்கிற காத்தையும் (methane) திங்கற,பன்னியாட்டம் ஒடம்ப வளக்கிரையே  நாய்க்கும் நரிக்கும் காக்கைக்கும் கழுகுக்கும் சதைய வளர்த்துவுடவா? 

இருக்கட்டும்.மேற் கேட்ட கேள்விக்கு பதில் -காரியம் .

முன் பின் தெரியாத ஒருவரை 'ங்க' போட்டு பன்மை விகுதியில் அழைப்பதற்கு காரணம் -காரியம் .

சில மாதங்கள் முன் நம் வனத்தில் இருந்து சென்னை வர துரந்தோ ரயிலில் ஏறினேன் .என் இருக்கையில் போய் அமர்ந்து கொண்டேன் . பாராக்கு பார்த்து கொண்டே ஐந்து மணிநேரப் பயணத்தை முடித்துவிடலாம் என்று எண்ணித் புத்தகங்களோ பாட்டு கேட்க. Head set எதுவும் கொணரந்திலை.ஏனெனில் நான் முன் பதிவிட்டது window seat. மிதமான acகுளிரில் அதிவேக துரந்தோவில் சன்னலிலிருந்து நகரும் வெளியைப் பார்க்க ,அப்டியே ம் ம் 'அப்டி' இருக்கும் . ரெயில் கொஞ்ச தூரம் நகர்ந்திருக்கும். ஐயா,நீங்கள் இந்த சீட்டுக்குப் போக முடியுமா ,என்று ஒருவர் கேட்கிறார் .

கோட்டை இடியும் ஓசையை அதுவரையில் நான் கேட்டதில்லை அன்று கேட்டேன் .

எங்க ரெண்டு பேருக்கும் வேற வேற இடத்தில் சீட் கொடுத்திருக்கிறார்கள்.இவ்வாறு என்னிடம் கேட்டது எழுபது வயது தாத்தா வும் பாட்டியும் . இதவே அவர்கள் ,டேய் ,எந்திரிடா இந்த சீட்ட எங்களுக்குத் தாடா என்றும் கேட்டிருக்கலாம்.டிடிஆரிடம் சொல்லியிருந்தால் சத்தமில்லாமல் சங்கதியை முடித்துக் கொடுத்திருப்பார் . ஆனால் அப்படி ஏதவாது நடந்திருந்தால் நான் அவர்களிடம் மறுத்திருப்பதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது .

ஆனால் அவர்கள் இறைஞ்சுகிறார்கள்.அவர்கள் காரியம் நடக்க வேண்டும்

அதற்கு என்னையும் ego என் இறைவனையும் superego கேட்கிறார்கள்.அதனால் வயது முதிர்ந்தாலும் இளைய என்னை பன்மை விகுதியுடன்
(நீ+கள்=நீங்கள்)அழைக்க வேண்டியுள்ளது. இந்த உடல் முன் பின் தெரியாத ஒருவருக்கு எந்த நல்வினை பயக்கவும்" இறை"துணை அவசியம் .

மறுக்கும் முடியாதெனக் அடம்பிடிக்கும் குரங்கு idஐ அடக்கி செயல் நடத்த இறைத்தனத்த superego வை வேண்ட வேண்டியுள்ளது.


அதுவே நண்பர்கள் மனதுக்கு idக்கு பிடித்தமானவர்கள்.idஎன்ன அவர்கள் சொன்னாலும் மறுக்காது .அதனால் super ego அழைக்க வேண்டியதில்லை. டேய் நான் சொன்னா கேட்பியா மாட்டியா? நீ சொன்னா இந்த பில்டிங்ல மேல இருந்து கூட குதிப்பன்டா என்று விஜய் சேதுபதி (நகொபகா)சொல்வது ஞாபகம் வருகிறதா?.


அப்படி ஒரு உயிர் நண்பன் வாடா டேய் என அழைத்த உடன் ஏறிக் கொண்டு , ஆசியாவின் நீண்ட கடற்கரைக்குப் போயிருந்தேன் .


இந்த குலைஞர் தாத்தா ஸ்டாலின் பெயலலிதா இவர்கள் எல்லாம் இப்படி கோடி கோடியாக சொத்து சேர்க்கிறார்களே அதுவும் அடுத்தவர்களை ஏமாற்றித் தின்கிறார்களே அவர்களுக்கெல்லாம் எப்படி நல்ல தூக்கம் வரும் .சிவன் சொத்து குலநாசம் போல மக்கள் காசும் குலத்தையே நாசமாக்கிவிடாதா?எனக் கேட்டேன்.

அதற்கு அவன் லிங்காப் படத்தையும் வா வு சி வாழ்க்கையும் வைத்து சொன்னான் பாருங்கள் ஒரு வியாக்கியானம்.

அவன் சொல்கிறான் .லிங்கேசுவரன் ராசாவாக இருந்து மக்களுக்கு இருக்கிற சொத்தையெல்லாம் விற்று அணைகட்டிக் கொடுக்கிறார்.கடைசியில் அவரை விரட்டி அடிக்கிறார்கள் அந்த மாக்கள்.அவர் பேரன் ஒரு திருடன் .
மக்களுக்காக பாடுபட்டு அவர் சுகத்தைக் கண்டார்.ஓட்டாண்டியாக ஓலைக்குடிசையில் வாழ்ந்து சாகிறார்.

வா உ சி யின் நிலையைப் பார் இந்த மக்களுக்காக சொத்தை வித்து கப்பல் விட்டு செக்கிழுத்து ,கடைசியில் ஒரணாவுக்கும் ஒன்றையணாவுக்கும் கடிதாசிப் போட்டுக் கொண்டிருந்தார். இருக்கிற சந்தோசமா jolly யா வாழனுமடா என்றான் .

சரிடா இப்ப குலைஞர் தாத்தா தான் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரர் .அவர் சந்தோசமாவா இருக்காரு?.ஒரு பக்கம் ஸ்காலின் மறுபக்கம் அழுகிரி இன்னொரு பக்கம் தனி மொழி .இவங்க கொடுக்கிற பதவிக் குடைச்சல்.அதுவும் இல்லாத 2ஜி ஊழல்ல பெத்த பொண்ணையே தூக்கி உள்ளப்போட்டுடாங்க,இப்ப பொண்டாட்டியும் உள்ள போடப்போறாங்க.பாரு இதுல தாத்தா எங்கிட்டிருந்து சந்தோசப்பட. நம்ம பெயிலலிதா அம்மாவை குற்றவாளினு சொல்லி உள்ள போட்டுட்டாங்க .எங்க இருந்து jolly யா இருக்க .இதுக்கு அவங்க சொத்து சேர்க்காமலே இருந்திருக்கலாம் என்றேன் .


அவங்க அந்த சொத்த சேர்க்காம இருந்திருந்தா இப்படி இப்போ வெளியே சுதந்திரமா நடமாட முடியுமா? ஆயிரம் கோடிகளை அமுக்கி சில நூறு கோடிகளைத் தூக்கிப் போட்டு எஸ்கேப் ஆகிக்க வேண்டியது தான் என்றான் அவன் .அடங்கோ . சரிடா நாளைக்கு பேரு கெட்டுப் போயிருமில்ல, வா உ சி யப் பத்தி படிக்கிறோம்.இப்போ அவரோட செயல்களை நினைத்துப் பெருமைபடுகிறோம்.அதுவே நாளைக்கு குலைஞரப் பத்தி படிக்கிறப்ப இவர் மக்கள் சொத்தைத் திருடித் தின்றார்னு சொன்னா நல்லாவா இருக்கும் .அவருடைய சந்ததிகளை நாளைய மக்கள் தூற்ற மாட்டார்களா?என்றதற்கு ஓரே வாக்கியத்தில் எனது வாயை மூடிவிட்டான்.

Live in the Present.அதாவது நாளைக்கு எப்படியோ இருந்துவிட்டுப் போகட்டும் நான் இன்று மகிழ்வுடன் இருக்க வேணும் .எல்லாம் என்னிடம் இருக்க வேணும்.நாளைக்கு சந்ததியினர் என்னைப் போலிருப்பது அவர்கள் திறமை .அதற்காக நான் என்னை வருத்திக் கொள்ள முடியாது.நான் இறந்த பிறகு என்னைப் போற்றினால் என்ன தூற்றினால் என்ன .என் வாழ்வென்பது நான் வாழும் நாள் மட்டுமே .அந்நாட்களை என்னால் என்னை எவருக்காகவும் வருத்திக் கொள்ள முடியாது . நான் வாயடைத்துத் தான் நின்றேன். இதை சுய நலமென்பதா? நல்ல வாழ்வு என்பதா ? சத்தியாமாகத் தெரியவில்லை .

மெரினா கடற்கரை .அலைகள் பின்னால் சென்றாலும் முன்னால் வருவதை மட்டும் நிறுத்த வில்லை.

நம்முடைய அரசியல் வாதிகள் கொள்ளை அனைவருக்கும் தெரிந்து தான் இருக்கிறது . ஆனால் சகித்துக் கொள்கிறோம். இதைப்பாருங்கள் 1.1.1989 ‘மக்கள் குரல்’ இதழில், ஜெயலலிதாவைப் பற்றி, எம்.ஜி.ஆர். கூறியதாக , "அம்முவின் அட்டகாசம் தாங்க முடியவில்லை. எதையோ நினைத்து அம்முவை அரசியலில் ஈடுபடுத்தினேன். பிள்ளையார் பிடிக்கப் போய் அது குரங்காய் முடிந்துவிட்டது. சூதும், வாதும், வஞ்சகமும், சூழ்ச்சியும் கற்ற இந்த அம்மு எனக்கே உலை வைக்கிறாள். சும்மா ஓடுகிற ஓணானை முகத்திலே நுழைய விட்ட கதையாக என் விஷயம் ஆகிவிட்டது இப்போது. இந்த அம்மு அபாயகரமானவள். யாரையும் அவள் தனக்காகப் பயன்படுத்துவாள். எதையும் செய்யத் தயங்கமாட்டாள். மிகவும் கெட்டவள்" என்று
சொல்லியிருக்கிறார்கள்.


டி.வி நாராயணசாமி நூலில் இவ்வாறு கூறியிருக்கிறார். 1964ம் ஆண்டு. எஸ்.எஸ்.ஆர் வீட்டிற்கு நள்ளிரவில் கருணா நிதியும் அவர் மனசாட்சியான மாறனும் காரில் வருகிறார்கள். டி.வி. நாராயணசாமியை பார்த்தவுடன் கருணா நிதி ஓவென்று கதறி அழுகிறார். “அண்ணாத்துரை என்னை திட்டி விட்டார்.கட்சிக்கு உன்னால் நன்மை இருப்பது போல தீமையும் இருக்கிறது என்று ஏசிவிட்டார்’’ ஆக நாம் சகித்துக் கொள்கிறோம்.

அந்த சகிப்புத்தன்மை மாதொருபாகனில் இல்லாமல் போனது ஏனோ? பிடிக்கவில்லையா நீயும் எதிர் நூல் ஒன்று வெளியிடு,எதிர் கருத்தைப் பரப்பு.அதை விடுத்து எழுதியவன் கைய வெட்டுவது சொப்பலாங்கித் தனமால்லவா?பேடித் தனம்,அறிவற்ற கிறுக்கர்கள் செயல்.

அசிங்கமான அச்சேற்ற முடியாத வார்த்தைகளை எழுபவர் சாரு(ஆத்தர் ஆப் எக்சைல் நாவல்) மட்டுமே என எண்ணி இருந்தேன் ஆனால் பெருமாள் முருகன் அதைத் தகர்த்து விட்டார் . லோக்கல் மொழியில் கெட்ட கெட்ட வார்த்தைகளையெல்லாம் அச்சேற்றியிருக்கிறார். உதாரணத்துக்கு புத்தகத்தின் கடைசி பக்கத்தைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
ஒருத்தனை திட்டுவதற்கு ஏன் எல்லாரும் sexual apparatus,sexual thoughts,erotiசத்தை பாடு பொருளாக்குகிறார்கள் எனத் புரியவேயில்லை.

eroticism is the feeling of excitement we experience at finding another human being who shares our values and our sense of the meaning of existence -Naomi Wolfகொக்கு விரட்டி
தேன்மழை

0 comments:

Post a Comment