Saturday, January 24, 2015

வடிகால் இல்லாக் கழனியிது!



அழுகையாகத் தான் வருகிறது .பிறகு வீட்டுக்குள் இருந்த அனைவரையும் அந்த பாம்பு கடித்து செத்துப் போனால் கையறுநிலையில் வேறென் செய.அது ஒரு ராஜநாகம் .

எவனோ வீட்டுக்குள் போட்டுவிட்டான்.சளதாரை போகும் சிறு துளை வழியாக .எப்பவும் பூட்டியே இருக்கும் வீடு.
வெளியேற வழியில்லை.அனைவரையும் போட்டுத்தள்ளிவிட்டு,என்னை நோக்கி ,என் இடுப்பளவு தலையைத் தூக்கி படமெடுத்து நிற்கிறது.
எனக்கு பயம்.
எப்படி வெளியேற?
தெரியவில்லை ?
இந்த வீட்டின் நுணுக்கங்கள்,இரகசிய வழிகள் எதையும்,எந்தையும் தாயும் குலாவியிருந்தார்களே அன்றி எனக்கு அவர்கள் கற்று கற்பிக்கவில்லை.
இராஜநாகம் என் முன் .சிறு எலியாய் நான் அதன் முன்.
கடிக்கத் தான் போகிறது .
நான் அழியத்தான் போகிறேன் .
ஒரே ஒரு சிந்தை உலகீர்,தயை கூர்ந்து ,என் சார்ந்தோர் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்,வாசலைக் கட்டிக் கொடுங்கள் ,நாங்கள் தப்புவோம் அல்லது அதனை தாட்டுவோம்.
அது போதும் .
அரவே ,இனி உன் பாடு ,இந்தா எடுத்துக் கொள் என்னை.
எவ்வளவு வேகமாக வருகிறது.அட டா இறைவன் தான் எத்தகைய மதியாளன் .என்னையும் படைத்து என்னை வீழ்த்த நச்சரவையும் கொடுத்து ?
இதோ கடித்து விட்டது .
கடித்ததும் அப் பாம்பைக் காணோம் .மறைந்து தான் விட்டது .
அடுத்து எவர் வீட்டுக்கள் நுழையப்போகிறதோ?.
உங்கள் வீட்டில் சளதாரை இருக்கிறது தானே?
எப்போது வேண்டுமானாலும் எந்த ரூபத்திலும் வரும் அந்த ராஜநாகம் எனும் காமம்!!!!பத்திரம் !!!!!!



நன் நெஞ்சே,
காமம் பல திசைகளில் இருந்து நம்மை நோக்கி வீசப்படுகிறது.நம்பால் உள்ள பணம் நேரம் கவனம் முதலானவற்றை குறிவைத்து நம் ஐம்புலன் வாயிலாகவே அவை வீசப்படுகிறது.ஒருவனை விட மற்றொருவன் விசையை கூட்டியே வீசுகிறான்.விசுகிறான்கள்.

விசிலடிச்சான் குஞ்சுகள் சிலவும் குறைமதியோடு குதுகலிக்கின்றன.

முடிவு அழிவு .


ஆழிதான் அழிக்க வேண்டும் என்பதில்லை ஆணின் ஆசையே போதும்.
வடிகால்இது தான் என்பதை சொல்லிவிட்டு பிறகு வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடுங்கள் .
நாங்கள் நாற்றாங்கால் எங்களின் கழனிக்கு நீர் வேண்டும் தான் நாங்கள் வளருவதற்கு.புனல் நீரைத் தாங்கிடலாம் ஆழிநீரையல்ல .


காரணம் :வடிகால் இல்லாக் கழனியிது.



-கொக்கு விரட்டி
தேன்மழை







 


(இந்த  கொசு விரட்டிப் பயலிடம் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல்,பச்சிலைப் புடுங்கி சொன்னான்னு இந்த படத்தை ஒரு sampleக் காக என்று போட்டுவிட்டான்.)

0 comments:

Post a Comment