Sunday, January 1, 2012

சாப்டாச்சு அப்புறம்?


சாப்பிட்ட பின்பு பின்பற்றகூடாத ஏழு செயல்கள்:



1) புகை பிடிப்பதை நிறுத்திவிடுங்களேன் ப்ளீஸ்..


சாப்பிட்டவுடன் பலர் சிகரெட் பற்ற வைக்கின்றனர்..(ஏதோ..இதுதான் கடைசி சிகரெட் என்பது போல)..சாப்பிட்டவுடன் புகைப் பிடிப்பது, மற்ற நேரங்களில் புகைப்பதைவிட பத்து மடங்கு தீமையை விளைவிக்கும்..இது ஆராய்ச்சி செய்து கண்டுபிடிக்கப்பட்டு நிரூபிக்கப்பட்ட உண்மை..காசநோய்க்கான வாய்ப்புகள்  அதிகம்..இன்னும் ஏன் அந்த வில்லங்கத்தை கையில் வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்..விட்டொழியுங்கள்...

2) பழங்கள்...


பொதுவாகவே பழங்கள் உடம்புக்கும் ஆரோக்கியத்திற்கும் சிறந்தவைதான்..ஆனால் தக்க நேரத்தில் சாப்பிடுவதுதான் உகந்தது. சாப்பிட்டவுடன் பழங்களை உண்ண வேண்டாம்..அப்படி உண்பதால் வாயுத்தொல்லைகள் ஏற்படும்..அப்படி பழம் சாப்பிட்டுதான் ஆகவேண்டும் என்றால்..சாபிடுவதறுக் ஒரு மணி நேரம் முன்போ அல்லது சாப்பிட்டு ஒரு மணி நேரம் கழித்தோ உண்ணலாமே..


3) தேநீர்

தேயிலையில் ஆசிட் அதிகம் உள்ளது. உணவுக்குபின் உடனேயே தேநீர் அருந்துவதால் நாம் சாப்பிட்ட உணவில் உள்ள புரோட்டீன் செரிமானம் ஆகுவது பிரச்சினை ஆகிவிடும்.
4) இறுக்கமான உடைகளை தளர்த்திக் கொள்வது.

விருந்துக்கு சென்றாலோ, நல்ல உணவு உண்ண சென்றாலோ சாப்பிடுவதற்கு முன் உடைகளை தளர்த்திக்கொள்வது சிலருடைய (பலருடைய) பழக்கம்.. அவ்வாறு தளர்த்திக்கொண்டு அதிகமான உணவுகளை சாப்பிட்டுவிட்டு, மீண்டும் உடைகளை இருக்கிக்கட்டுவதால்..உணவு வயிற்றிலேயே தங்கி சரியாக செரிமானம் ஆகாமல் உபாதைகளை ஏற்படுத்திவிடும்.. - எவ்வளவு சாப்பிட்டாலும் நமது உடல் தேவையான சத்துபோருட்களை மட்டுமே எடுத்து மற்றவைகளை கழித்து விடும்..அப்புறம் என்ன அளவோடு சாப்பிட்டு வளமோடு வாழ்வோமே..

5) குளிப்பது.

குளிப்பதால் இரத்த ஓட்டம் கை கால் மற்றும் உடம்பின் அனைத்து பாகங்களுக்கும் சீராகச் சென்றுகொண்டிருக்கும். சாப்பிட்டவுடன் குளிப்பதால், மற்ற இடங்களுக்கு செல்லவேண்டிய இரத்த ஓட்டம் வயிற்றுபகுதியில் தன் வேலையை விட்டு எல்லா இடங்களுக்கும் செல்வதால், செரிமான பிரச்சினை ஏற்ப்படும். சாப்பிட்டுவிட்டு குளிக்கலாமே? (கூழானாலும் குளித்தபின் குடி என்று சொன்னது இதனால்தானோ?)

6) நடப்பது..

சாப்பிட்டவுடன் 100 அடிகள் நடந்தால் 99 வருடங்கள் வாழலாம் என்று யாரோ சொல்லி இருக்கலாம்..ஆனால் இது உண்மையல்ல.. சாப்பிட்டுடன் நடப்பதால் போஷாக்குள்ள உணவை உடனேயே செரிமானம் செய்வதில் பிரச்சினை ஏற்படும்.

7) தூங்குவது.

சாப்பிட்டவுடனேயே தூங்குவதால் சாப்பிட்ட உணவு செரிமானம் ஆகாமல் வாயுத்தொல்லைகள் ஏற்படுகிறது...

ஆரோக்கியமாக வாழ ஆசை இருந்தால் மட்டும் போதாது..அதற்கான முயற்சிகளையும் செய்வோம்..

1 comments:

  1. ellaam nalla thaan irukku!!!

    aana yaarum follow panna maataangalae. namma makkal kitta poi nallathu elaam solreengalae. neenga vera.

    ReplyDelete