Monday, April 21, 2014

ரேணிகுண்டாவில் ஒரு Bottle!!!

திருப்பதி ...
ஏடு - கொண்டலு ..


வேண்டுதல்கள் என எண்ணிச் செல்வதையே மறக்க செய்து ,ஒரு நொடியின் 10ல் 2பங்கு நேரம் மட்டுமே தரிசனம் தந்து ,என்ன பார்த்தேன் என்பதையும் ஞாபகத்தில் இருந்து அழித்து ,


சர்க்கரை, கடலைப்பருப்பு, நெய், முந்திரி பருப்பு, உலர் திராட்சை, பச்சைக் கற்பூரம், குங்குமப்பூ, ஏலக்காய் போன்ற பொருட்களால் பிரத்தியேகமான முறையில் தயாரான மகா பிரசாதம் நாவூறும் லட்டை பிரத்தியேக பிரத்தியேகமா. வைத்துக் கொண்டு,

மறுபடி மறுபடி வந்து காணும் படி ஆன எண்ணத்தை எப்போதும் நெஞ்சில பதிய வைக்கும் பதி திருப்படி (அல்லது) திருப்பதி ..
இதற்கு அவன் மட்டும் விதி விலக்கா .... அவன் மனைவியோடு ரயில் ஏறினான் . ரேணிகுண்டாவில் இறங்கி பேருந்தில் பயணம் என்பது-திட்டம் !.

ரேணிகுண்டா............


அதிகாலையில் கிளம்பியதால் மதியத்துக்கு முன்னரே வந்துசேர முடிந்தது . அவன் மனைவிக்கு அவசரம் 1ரூபாய் வாங்கிப் போனாள் .

அவனும் அவன் எடுத்து வந்த பையும் ,காத்திருக்கும் சமயம், அவனைக் கடந்து சென்ற பாட்டி மயங்கி விழுகிறார் .
இப்போது அங்கு அவன் பை மட்டுமே .. அந்த ரயில் நடைபாதை யில். ஒரு திட்டு .அதில்தான் அதை வைத்து விட்டு காத்திருந்தான் பிறகு ஓடினான்.
அது ஒரு கட்டைப் பை!!நம் டி நகர் ரெங்கநாதன் தெரு சரவணா ஸ்டோர்ஸ் பை மாதிரி.. அதன் உள் துணி மணிகள் இன்ன பிற ஜக ஜக ஜிக ஜிகாக்களுடன் ஒரு காலிக்குடுவை .எளிய மொழியில் சொன்னால் பாட்டில் .நம்ம அண்ணாச்சி கடை கடலை மிட்டாய் ,தேன் மிட்டாய் போட்டு வைத்து இருப்பார்களே அதே மாதிரி .
ரொம்ப நாளா வீட்டில் மூடப்பட்டேதான் இருந்தது ..அவன் பார்த்தான் ,லட்டு எடுத்து வர அம்சமான பாட்டில் கிடைத்ததே என திறந்தால் யப்பா இன்னா கப்பு !!!!.அதனால் மூடியைக் கழட்டி விட்டான் .தற்சமயம் மூடி போடப்படாமல் திறந்தே உள்ளது பாட்டில் .
உலகப் பிரசித்தி பெற்ற மிகப்பெரிய இரண்டாம் எண் கழிவறை இந்திய ரயில் நிலையத் தண்டவாளங்கள் .ஈக்கள் பூக்கும் நந்தவனமவை .நடை மேடை திட்டில ஒரு திறந்த பை திறந்த பாட்டிலுடன் ..கீழ தண்டவாளத்தில் ஈ (ஒருமை) அல்ல (பன்மை )ஈக்கள்... பாட்டிலுக்குள் இருந்த கப்பு அதே பழைய நாற்றமேதான் , ஈக்களைக் கவர்ந்திருக்க வேண்டும் . ஒன்றன் பின் ஒன்றாக , பிறகு சர்ரென பலப் பல ஈக்கள் பாட்டிலுக்குள் நுழைந்தே விட்டன .

                                               பாட்டிலுக்குள் போனவை சும்மா இருக்குமா ? ஒரு ஈ என்றால் ஒன்றும் சொல்லும் படி நடந்திருக்க வாய்ப்பில்லை ,ஈக்கள் அல்லவா !! முதலில் மெதுவாக பாட்டில் ஆ! ஆ! ஆ !ஆ! ஆட ஆரம்பிக்கிறது. பிறகு கொஞ்சம் கொஞ்சமாக டண்டன்! டண்டன்டண்!!! ,பிறகு டண்டணக்கா டண்டணக்கா!! $$!@@%*&!!!!!!$!$$$$!!!!!!!!!!!! என்று ஆட்டம் அதிகமாக ,கட்டைப் பையும் ஆடுகிறது .சில மணி துளி தான் பை நிலத்தை அடைந்தது திட்டிலிருந்து மெதுவாக என்று சொல்ல முடியாது அதைவிட ஒரு படி கூடுதல் விசையுடன் .
ஆட்டம் அடங்கியதா என்றால் அடங்கியது..ஆனால் வேறு உருவில் தொடர்கிறது . பாட்டில் பிளாட்பாரத்தில் உருண்டு கொண்டே போய் தண்டவாளத்தில் டமார் !!.சுக்கு இருந்திருந்தால் சுக்கு நூறாயிருக்கும் ,இருந்ததோ வேறாயிற்றே!!அதனால் ஈக்கள் பல நூறாகப் பறந்து போனது .அடுத்து வந்த ரயில் பாட்டிலின் கதையை இனிதே நிறைவு செய்தது .
அவசர வேலை முடிந்து அவளும் , அடுத்தவர் வேலை முடிந்து அவனும் திரும்பினர் .பையின் நிலையைக் கண்டனர் .வேறு புதிய பாட்டில் வாங்கினர் .அவர்களின் பயணம் தொடர்கிறது .....
கதை இந்த அளவில் முடிகிறது .
ஆனால் இதில் நடித்துள்ள கதாபாத்திரங்கள் எவர் எவர் என்று தெரியாமல் முடித்தால் எப்படி !!!!!
ஆகவே ,பெரியோர்களே தாய்மார்களே!!!
இக்கதையின் கதாப்பாத்திரங்கள்:
 • பாட்டில் -(நடிகர் திலக் ரத்னா ) மனம்.

 • கட்டைப்பை -மனித உடல்

 • ஈக்கள் -  உணர்ச்சிகள் @ நினைவுகள் @உணர்வுகள்                  (கண்ராவிக்காட்சிகள்,கருமாந்திரக்கத்தல்கள் ,முடைநாற்றங்களும்  தீச்சுவைகளும்). 

 • அவன் அவள் -தாய் தந்தை

 • ரயில் -வாழ்க்கைப்பயணம்

 • ரயில் நிலையம் -வாழ்வின் களைப்பாறுமிடம்

 • தண்டவாளம் -பழக்க வழக்கங்கள் .

 • திருப்பதி -வாழ்வின் வீடு பேறு @ பிறவிப்பயன் .

 • நடனம் (the ஈ dance) -எண்ணங்கள் 

 • திட்டு-மேல் நிலை 

 • பிளாட்பாரம்-கீழ் நிலை

 • கதை இயக்கம் --+++---(உச்ச இயக்குநர் ) இறைவன் 

 
குறிப்பு :
மீண்டுமொரு முறை கதைப் பாத்திரங்களை வெட்டி அந்த இடங்களில் எல்லாம் மேலே சொன்ன நமது உண்மை யான பாத்திரங்களை ஒட்டி படித்துப் பாருங்கள் .......................
 • .
இதனால் சகலமானவர்களுக்கும் கூற வருவது ,

நம் மனம் அந்தக்கண்ணாடிக் குடுவை @ பாட்டிலைப் போன்றது ...
தினமும் கண்ட கருமத்தையும் பார்த்துத் தொலைகிறோமே அதுவும்,
நாராசமோ பாயாசமோ என்னனவோ கேட்கிறோமே அதுவும் ,
  அக்குடுவையின் வாயாகவும்.. புலன்களின் உணர்வுகளை ஈக்களாகவும் எண்ணீக்கொள்ளுங்கள்!!!,


குடுவையை; வாயை மூடியவன் -சித்தனாகிறான்.. அது வாய்த்தது அல்ல;..அவனால் வசப்படுத்தப்பட்டது..

ஆனால் சாதாரண மனிதன் ,உன்னுடைய ,என்னுடைய நிலை ??? நம் குடுவை எப்போதுமே திறந்தே தானே இருக்கு...
ஏதேதோ ஈக்கள் ...எங்கேயோ போகவேண்டியவை எல்லாம் குடுவைக்குள் நுழைகிறதே!!

எண்ணங்களின் ஆட்டம் ஒரு சிலரை மேலே ஏற; ஏற்ற!!!! ,வெகு பலரை கீழேயே தள்ளுகிறது!!!!!!!!!!!!!! .
இப்போது சொல்லுங்கள்,


 உங்கள் பாட்டிலை கீழ விழாமல் எப்படி காத்துக் கொள்வீர்கள் ? 
----தேன்!!!

0 comments:

Post a Comment