Wednesday, November 26, 2014

கழுவச் சேர்வை -இசை-சிபிலிஸ்-மனம்-facebook!

இந்த சமுதாயத்துக்காக நம் அடையாளங்கள் பல மாறியுள்ளது .உண்ணும் உணவாகட்டும் ,உடுத்தும் உடையாகட்டும்,ஏன் போகும் கழிவறையாகட்டும்.உங்களை, என்னை இந்த சமுதாயம் பல இடங்களில் செதுக்கியுள்ளது.தெரிந்தோ தெரியாமலோ நமக்குள் நான் எனும் பிம்பத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது .ஆனால் பாருங்க,அந்த நான் தன்மை செயற்கையானது.எப்போதும் மனம் இயற்கையைத் தானே நாடும்!!!

அல்லவா?
T எனும் சுயம் அழியும்  போது,அது வரை ஒளிந்திருந்த உண்மையான நாம் வெளிவரும் ,சமூக முக மூடி அழிந்து .இதைத் தான் காமம்,காதல்,புகை ,மது இன்ன பிற போதை வஸ்துக்களும் தருகிறது .மனமும் அதையே நாடுகிறது .விளைவு -மனிதன் அடிமை.ஆனால் நண்பர்களே!
இசையும் இந்த வரிசையில் தான் உள்ளது .அதைக் கூட உபயோகிக்கலாம் ,மனமும் உடலும் அடிமையாகாமல் சுதந்திரமாகவே !
**********----------------------

Annular Secondary Syphilis.பால் வினை நோய்.
பொதுவாக சிபிலிசு என்றால் பிறப்புறுப்பில்தான் புண் வரும் என்பார்கள் .இது அதில் வேறுபட்டது.
செந்தடிப்புகள் தோலில் எப்படி இருக்கிறது பாருங்கள் .
ஆனால் நான் சொல்ல வந்தது இந்த வேற்றுமையல்ல!
சிபிலிசே நம் நாட்டுக்கு வேற்றுமையானது .
It was a time of world exploration and Europeans took the disease to Calcutta in 1498,பிறகு தான் நம்மூரில் எல்லாம் படம் காட்ட ஆரம்பித்தது அந்த சிபிலிஸ் .
இதை நம்மூரில் எப்படி அழைத்தார்கள் தெரியுமா ,?
நம் ஊர் கிடக்கிறது , சிபிலிஸ் பிறப்பெடுத்த ஐரோப்பாவில் என்னவெல்லாம் சொல்லி அழைத்தார்கள் தெரியுமா ?
The French called it the ‘Neapolitan disease’, the ‘disease of Naples’  or the ‘Spanish disease’, and later grande verole or grosse verole, the ‘ great pox’, the English and Italians called it the ‘French disease’, the ‘Gallic disease’, the ‘morbus Gallicus’, or the ‘French pox’, the Germans called it the ‘French evil’, the Scottish called it the ‘grandgore‘, the Russians called it the ‘Polish disease’, the Polish and the Persians called it the ‘Turkish disease’, the Turkish called it the ‘Christian disease’, the Tahitians called it the ‘British disease’,
in India it was called the ‘Portuguese disease’,
in Japan it was called the ‘Chinese pox’, and there are some references to it being called the ‘Persian fire’
இதில் கவனித்துப் பாருங்கள் ,
ஒவ்வொரு நாட்டுக்காரனும் பகை நாட்டின் பேரை சிபிலிஸுக்கு வைத்திருக்கிறான்கள் .(றார்கள் )
பாத ரசத்தைத் தடவியும் மாத்திரையாகத் சாப்பிட்டும் இரண்டு நூற்றாண்டுகள் (16முதல் 18வரை)விழுங்கியிருந்திருக்கிறார்கள்.
பிறகு ஆர்சணிக் ,அப்புறம் தான் பென்சிலின் வந்து தீர்வு கட்டி யிருக்கிறது .
பாதரச வைத்தியம் நடப்பில் இருந்த போது ,அதன் வைத்திய முறையை இப்படிக் குறிப்பார்கள்.
“A night with Venus, and a lifetime with mercury”
இதில் விசேசம் ,
ஆர்சணிக் கண்டு பிடித்த எர்லிச்க்கும் பெனிசிலின் கண்டுபிடித்த பிளமிங் இருவருக்கும் நோபல் பரிசு கிடைத்திருக்கிறது.
அப்படி யானால் பாதரசம் கண்டு சொன்னவனை ஏன் மறந்தார்கள் என்றால்
Neuropathies, kidney failure, severe mouth ulcers and loss of teeth, and many patients died of mercurial poisoning rather than from the disease itself.
இது மாதிரியான பக்க விளைவுகளாலா?என்றால் ,
நிச்சயமாக இல்லை .
அதை விட முக்கியமான காரணம் ஒன்று உள்ளது .
பாத ரசம் பயன்படுத்தப்பட்ட 16ஆம் நூற்றாண்டில் நோபல் பரிசு என்பதே இல்லை .
அப்படியே இருந்திருந்தாலும் மேற்சொன்ன பக்க விளைவுகளால் மறுக்கும் வாய்ப்புகள் நிறைய உள்ளது .
பாதுகாப்பாக, பத்திரமாக , ஒரே அடியில் சிபிலிஸை வீழ்த்தி ,இனி வேறு எந்த மருந்துகளும் தேவையில்லை என்ற நிலையை பெனிசிலின் உருவாக்கி விட்டது .
அதனால் சிபிலிஸின் ஆட்டம் கட்டுக்குள் கொணர்ந்து கக்கத்தில் சுருட்டியாகிவிட்டது.
இதைப் போல  எய்ட்ஸ்க்கு நிகழ இன்னும் இரண்டு நூற்றாண்டு காக்க வேண்டுமா என்றால் ?
நிச்சயமாக இல்லை !
தற்கால ஆய்வுகளில் தெரிவது ,
அதை விட அதிகமாகத் தான் காக்க வேண்டும் .
ஆதலால் காக்க வேண்டியவைகளைக் காத்துக் கொள்ளுங்கள் , காக்கைகளும் காத்துக் கொண்டு தான் இருக்கிறது ,கவ்விக் கொண்டு போக!!!
***********----------------------
புகைப்பழக்கம் புற்றுநோயை உருவாக்கும் .
சினிமாவே பார்க்க மாட்டேன் என அடம் பிடிப்பவன் கூட இந்த வாசகத்தை எங்கேனும் , ஏன் அந்த சிகரெட் டப்பாவிலேயே கூட கண்டிருக்க முடியும் .
உலகில் அதிகம் பேரை அடித்துத் தின்னும் புற்று எது என்று கேட்டால் அது பஞ்சு போன்று மென்மையான நுரையீரலின் புற்று தான் .
ஆனால் அது மருந்து மாத்திரைகளில் அடங்கிவிடுவதில்லை .
தொழில் நுட்பம் தூங்கியிருந்த காலத்தில் வேண்டுமானால் சரி , இப்போதும் 'கட்டி யிருந்தால் வெட்டிப் போடு 'என்ற நிலை எப்படி சரியானதாகும்.
Crizotinib
இந்த மருந்து சமீபத்திய வரவு.ROS1 proto-oncogene receptor tyrosine kinase (ROS1) வேலையைத் தடுப்பானிது.நுரையீரலில் வரும் பெரும்பான்மைப் புற்றான non–small-cell lung cancers (NSCLCs)களை குணமாக்க வல்லது.
***********---------------------

கமகமக்கும் கட்டிலில்
அணைந்தது காமத்தீ
-முதலிரவு !
**********----------------------
நாயில்லாத வீடுகளில் கயிறோ கல்லோ தேவையில்லை.எண்ணிப் பாருங்கள் ,நீங்கள் நாயோ பூனையோ எலியோ வீடுகளில் வளர்க்கிறீர்கள் என வைத்துக் கொள்வோம்.எதுவும் செய்யாது சும்மா விட்டுப் பாருங்கள்.வெறுமனே அவுத்து விட்ட கண்ணுக்குட்டியாட்டம் தான் ஆட்டம் போடும் .அதை அடக்க நீவிர் ஏது செய்வீர் ?,
சங்கிலியோ கயிறோ வசதிக்கு ஏற்றாற்போல கட்டிப் போட்டு கம்முனு கடக்கச் சொல்லிவிடுவீர்கள் !
அல்லவா?
அந்த நாயும் பொட்டாம் பொதிகாளையாட்டம் கொடுத்த பணிமுடித்துப் பண்ணாட்டுப் பண்ணாமல் போய் படுத்துக் கொள்ளும் .
இளநெஞ்சே ,
எண்ணிப்பார் !
மனமே இல்லாதவனுக்குக் கோயில் என்ன? கடவுள் என்ன ?
அல்லது காரித் துப்பும் (80களில் அக்காலப் பாட்டிகள் புளுச் புளுச் என ஒரு டப்பாவில் துப்புவார்களே ,அந்த டப்பாவின் பேர் தெரியவில்லை ,ஆனால் அது தான் நான் இங்கு கூற வருவது )டப்பாவோ
தான் என்ன ?
எல்லாம் ஒன்னு தான் வெறும் மண்ணு தான் .
இருந்தும் பயண் தரா!!!!!!!
***********----------------------
நிறக்குருடுகள் .
நம்மூர்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருப்பவை .
மேலை நாடெகளில் சகஜம் .
அதிலும் இந்த சிகப்பு பச்சை கலவை நிறக்குருடு பாவத்திலும் படு பாவம் .
sex chromosome பிறழ்வுகளால் தொற்றும் இந்நோய் பெண்களைத் தொடுவதில்லை.
ஆணுக்கு ஒருxஒருy
பொண்ணுக்கோ இரண்டும் x
அதில் ஒன்று பிழையானால் என்ன ?
சமீபத்தில் கூட Whatsapp இல் நீள வண்ணம் ஒளிர்வால் பிரச்சனைகள் பல உருவாகிறது என கூக்குரல்கள் பல எழுந்ததே !
சொல்ல மறந்து விட்டேன் ,பாவப்பட்ட அந்த சிவப்பு பச்சை நிறக்குருடுகளுக்கு ஒரு தீர்வும் இருக்கிறது .
"பார்ப்பதை எல்லாம் நீளமாக்குக!!"

-தேன் !
(இதை நான் எழுதி முடித்துத் தலைப்பிடுகையில் கொக்குவிரட்டி ஙே என முழித்தான்.ஒன்னியும் புர்லையே என்றான் .அட விரட்டிப் பயலே கடலில் இருந்து எடுக்கும் முத்துகள் சுத்தமாகவா இருக்கும் என கேட்டேன் .கலீஜா தான் இருக்குமென்றான் .பிறகெப்படி சுத்தமாக பளிச்செனக் கோவையாக்கி முத்து மாலையாக கழுத்தில் அணிய முடிகிறது என்றேன் .அது ,சுத்தமாக க் கழுவி ஒன்னு ஒன்னாச் சேர்த்து மாலை யாக்கிக்கலாம் என்றான் .என்ன செய்வாய் கழுவி சேர்ப்பாயா?
இப்போது தலைப்பைப் பார் ! என்றதற்கு ,
கொக்கு விரட்டியின் தலையில் பல்ப் எரிந்தது !)

கழுவச் சேர்வை = Random thoughts

0 comments:

Post a Comment