Monday, June 30, 2014

என்னது சென்னையில் எல்லோருக்கும் பைத்தியமா????

இளநெஞ்சே வா!
                        
                                  ரத்தக்காட்டேரிகளைப் பார்த்திருக்கிறீகளா?van helsing  படத்தில் கூட காட்டி இருப்பார்கள்!போவோர் வருவோர்களிடமெல்லாம் கழுத்தில் கடித்து ரத்தம் குடிக்குமே?அப்படிப்பட்ட காட்டேரிகள் காசு பணத்தைக் குடித்தால்?.

அந்த இடத்தில் எல்லோருமே திருடர்கள் தான் ,அப்படி இல்லை என்பதை உறுதி செய்யும் வரை-அந்த இடத்தின் பெயர் சென்னை!

அஃறிணைகளுக்கு அறிவு கொடுத்தால் என்னவாகும்?கல்லாதவர்கள்,பண்பாடு அறியாதவர்கள்!தங்கள் செயலின் வருங்கால பயன் யாதென அறியாதவர்கள்!மடமையிலேயே வளர்ந்து மடமையிலேயே மடிந்து விடக் கூடிய இந்நாட்டின் மங்குனி மன்னர்கள்!

தொழில் என்னும் திரையை விளக்கிப் பார்த்தால் உள்ளே இருப்பது வெறும் திருட்டுக் குப்பைகள் தான்.எல்லாத் தொழிலும் அது,மருத்துவமானாலும் சரி,பிச்சையானாலும் சரி!பணம் கொட்டும் பம்ப்களைக் கொண்ட பெட்ரோல் பங்க்குகள் மிக முக்கியமாக!
நிச்சயமாக நல்ல மனநிலையில் உள்ள எவரும் இந்தப் பிழைப்புக்கு ஆளாக மாட்டார்கள்!பழைய ஈயம் பித்தளைக்குப் பேரிச்சம்பழக் கடைகளில்  எல்லாம் நிரம்பி வழிகிறதாம்,சென்னை வாசிகளின் மன சாட்சி!மனசாட்சி இல்லாத எவரையும் நாம் மனிதன் என ஏற்றுக் கொள்ளமுடியாது,வேணும்னா பைத்தியம்னு சொல்லிக்கலாம்..

Rich get Richer,poor get Poorer....ச்சை!!!கொள்ளை லாபம் என்பதற்கு அர்த்தம் விளங்குகிறது.அடித்துப் பிடுங்கும் காட்டு மிருகங்களை விடவும் மோசமானவர்கள்,இந்த பணப் பைத்தியங்கள்!சுயமாக சிந்திக்கக் கூட வக்கில்லாத வறியர்கள்,நரியரிகள்!நீதி,நியாயம்,நேர்மை போன்ற வெங்காயங்களுக்கு எல்லாம் விலக்களிக்கப்பட்ட ஊர்,சென்னை.!இங்கு பிழைக்க மிக முக்கிய விதி,Be Roman,While in ROME.


இவை எல்லாவற்றுக்கும் மூலகாரணம்,ஒரு சின்ன சமன்பாடுதான்.பணம்=சுகம்.மனிதன் யாருக்கும் தீங்கிழைக்காத சமூக மிருகம்....Man is a Social Animal.ஆனால் யார் நாசமாப் போனாலும்,ஜில் ஜில் ஒய்ன்ஸ்சரக்கும்,ஜல் ஜங் ஜக்கு களோடு உல்லாசமும் நிச்சயம் வேணும்,அது மட்டும் போதும் என்றிருப்பவர்கள் எப்படி Social Animal ஆக முடியும்.????? இத்தமிழ் சமுதாயம் வளராமைக்குக் காரணமானதை ஒரு சிறு கதை கொண்டு விளக்குவார்கள்.ஒரு கிணறு,சிறு கிணறுதான்,ரெண்டு எக்கில் மேலே வந்து விட முடியும்.இதில் மூன்று தவளைகள்.இம்மூன்றும் ஒற்றுமையாய் யோசித்து,முதலிரு தவளைகள்,முடிந்த அளவு எக்கி கிணத்துசுவத்தில் படிக்கட்டு போல் படிந்தன.மூன்றாம் தவள அவற்றின் மூலம் மேல் ஏறி மற்ற வற்றையும் ஏற்றி விட்டது.இத்தவளைகள் போன்றோர்கள் ஜப்பானியார்களோ,சீனர்களோ அல்லது உங்களுக்குத் தெரிந்த நாலு வளர்ந்த நாடுகளை வைத்துக் கொள்ளுங்கள்.

இப்ப நம்மூர்த்தவளைகள்,ஆனா பாருங்க நம்மூரில் தான் ஒற்றுமை விளக்கெண்ணெய்களும்,யோசிக்கும் யோக்கியர்களும் கிடையாது அல்லவா!அப்றோம் எப்படி மேல போக முடியும்.ஒரு வேளை,கடலில் சக்கரையைக் காண்பது போலத் தான்,இருப்பினும்,ஏதேனும் ஒன்று மேலே எக்கி சுவற்றில் ஓட்டினால்,மற்றவை'இந்த வெண்ணை எப்ட்றா நமக்கு மேலே போலாம்,,போட்றா அவன!"இப்டி எத்தவளை மற்றவைக் மாறி மாறி காலை வாரி,சோமாறி(சோம்பேறிதான்,சென்னைக்கு வந்த வுடன் -make up , பவுடர் எல்லாம் போட்டு சோமாறி யானது,என்று போகிற போக்கில் சொல்லி விட்டுப் போனான்,பச்சிலைப் புடுங்கி!)கிணற்றுத் தவளைகளாகவே இருந்து விட்டோம்,இருக்கிறோம்,இருப்போம் என்ற நம்பிக்கையும் மிகப் பிரகாசமாகத் தெரிகிறது.அந்த நம்பிக்கை ஒளியை அம்மா உணவகம்,அம்மா மருந்தகம்,அம்மா குடிநீர் போன்றவை மிக பயங்கரமாக பாச்சி அடிக்கிறது (ஒளியைத்தான்).நேற்று முன் தினம் மவுலிவாக்கத்தில் இடிந்து விழுந்த 11அடுக்குக் கட்டிடம் கூட,அனுதாபம் தந்து,மனதை அழுத்தவில்லை.பின்னே நரிகள் காட்டில்,நரித்தனமோ,நாதாரித்தனமோ தெரிவதில் வியப்பென்ன வாய்த்துத் தொலைக்கப் போகிறது.ஆயினும் ஒரு மகிழ்ச்சி,Why Blood,Same Blood என்று எவனோ ஒருவன் மட்டுமல்ல;எல்லோருமே கேட்டு சங்கல்பமோ!ஆறுதலோ அடைந்து கொள்ளலாம்.கடைசியாக ஒரு ஆசை,(பதிவு முடிக்கும் முன் கடைசியாக!!)இந்த பைத்தியக்கார,பணங்காட்டேரிகளை விட மிகப் பெரிய அப்பாடக்கரானபூதங்கள் ஐந்து உள்ளது.அவை நிச்சயமாக ஒரு நாள்
இவர்கள் முன் வரும்,வந்து நிக்கும்,வந்து நின்று காவு கேக்கும்.அப்போது,இவர்கள் ஆடும் ததிங்கிணத்தோம்களையும்,டண்டன்னக்காக்களையும் ,நாம் பார்க்க வேண்டும்,அந்நாள் வெகு தொலைவில் இல்லாத வரத்தைக் கொடு இறைவா!!!!


-கொக்குவிரட்டி ,
தேன்மழை

0 comments:

Post a Comment