ஆற்று வெள்ளம் பாய்ந்தடிதால்,
உன்னணையின் நிலையென்ன ??


நினைவலையில் நிதம் வாழ்ந்து ,
எனை எரிக்கும் ஆசைத்தீ!!


ஊரடித்து உலையில் இடும்.
உலகத்தையே ஒழித்து விடும்.
உலைவாயின் எரிநெருப்பு,,
உன் கண்ணடித் தடுப்பணையை உருக்காது பார்த்துக்கொள்.


வெண் மேகக்கூட்டுக்குள்,
காரிருள் தான் வந்தது;
மாரிமழை பெய்தது;
தூவானம் என்றாலும்,
கரிமேகம் போய்விடுமா ??


0 comments:
Post a Comment