Showing posts with label இன்பம். Show all posts
Showing posts with label இன்பம். Show all posts
Wednesday, November 30, 2011
Tuesday, November 29, 2011
Monday, November 28, 2011
பிரிவு
கட்டிக்கொள்ளும் கருத்தோட
காத்திருக்கும் வேலையில
கண்மறந்து காலெடுத்த வேகம்மென்ன ?
வீங்கி போன புண் மனசு
வெந்துபோகும் கொடுமைஎல்லாம்
கண்ணால பார்த்த பின்னும்
பறக்கும் ரெக்கை கொண்டதென்ன ?
புழு நெருப்பில் துடிக்குதுன்னு
காதெல்லாம் கேட்டிருந்தும்
நீரில்லா நதிகாட்டி
காத்தோட போனதென்ன ?
வார்த்தைக்கு அடிமை என்றாய்
என் கோட்டில் வாழ்வென்றாய்
ஒரு சலனம் தோன்றியதும்
பொய்யான தோற்றமென்ன ?
கணமான இதயத்தை
தாங்குவதுன் கைகள் தான்
ரண மான இப்போது
திரும்பாத கரமென்ன?
விட்டில் தான் வெளிச்சத்தில்,
விட்டு விடும் தன்உயிரை !
ஆசை தீ எனை இழுக்க
அழிவனென்று தெரிந்திருந்தும்
அடைகாத்து ஆற்றாமல்
அலை கடலைகடந்ததென்ன ?
விளக்கேத்த போறேன்னுன
விளங்காம போயிநானும்
விலங்காக ஆனா பின்னும்
விரட்டாம நெருப்பெடுத்து
நீ பிடிச்ச ஓட்டமென்ன ?
ஓடிப்போன கழுதைஎல்லாம்
ஒரு நாளில் புத்தி பெற்று
ஊரை நோக்கி ஊர்ந்து வந்தா
ஆசையெனும் ஆழியிலே
அத்தனையும் அழிஞ்சிருக்கும் !
மீதமென்ன அங்கிருக்கும்? -
ஆனாலும்!!!!!!!!!!!!!!!
குட்டிச் சுவரொன்னுவரவேற்கும்
பின்ன கழுத கேட்ட குட்டிச் சுவர் தான !!!!!
Labels:
இன்பம்
Subscribe to:
Posts (Atom)





