Monday, October 20, 2014

Mmm mom

நீரின்றமையா உலகு .பொய் ....தாயின்றமையா உலகு .ஆனால் தங்களின் தாயத்துக்கு இன்னும் எத்தனை இந்த சனம் மூழ்ம்

தேன்மழை

இடமில்லை வெளியே போ!

மாரி வருவன் ,
இருநாள் அமர்வன் ,
இடம் நீ அளிக்க
"எம் முன்னோர் சாற்றிய கூற்றும் பொய்யோ!"

அளிக்க ~அழிக்க ஆனது ,காலப்பிழையோ !
இருக்கும் இடம் திரிந்து அனைத்தும் அபகரிக்க ,உறையுள் இழந்து திரியும் நிலை காண்கிறேன் .இது யாவர் குற்றம் ?குன்றும் மாள குந்தித் தின்னும் குறுமதியாளர் குற்றமா?அரசியல் பிழைத்தும் அறம் கூற்றாகியும் அடிசில் தடவி அகம்புறந்த ஆள்வோர் குற்றமா?மண்ணோ மக்கும் மன்பதையும் மக்கும் கூட்டத்தில் மதனவிதனத்தில் களிக்கும் என் போன்ற மதோன்மத்தர்கள் குற்றமா?

குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை
குற்றம் பார்க்காவிடில் பிறகு சுற்றுப்புறமும் இல்லை .

ஆண்ட அவ லட்சணம் ஆழி மழைக் காட்டியும் அனுசரித்து அகழ்வது நிச்சயம் என் குற்றமே -என் செய??? கடவது கடவதுவே, என்றிலாது,கடவுள் தனம் காணும் நாள் எந்நாள் ?

அந்நாளே யாவருக்கும் தீப ஆவளி திருநாள் .அது வரை ???வெடித்துக் குமுறுங்காள் எம்மாக்களே!


தேன்மழை

EBOLA

எபோலா வைரசின் உட்கூறுகள் காட்டப்பட்டுள்ளது.கவனிக்க :இக்கிருமி 1980களிலும் ஆப்பிரிக்கநாடுகளில் ஆட்கொள்ளி வேலையைச் செய்துள்ளது .பிற்பாடு எப்படியோ அடங்கி இப்போது மீண்டும் மீண்டு மக்களை மண்ணுக்குள் அழைக்கும் வேலையை செம்மையாக செய்கிறது .என்ன வருத்தமென்றால் இத்தனை ஆண்டுகள் ஆகியும் மனிதம் விழிக்க வில்லையே .உயிர் இழப்பு அடங்கினபாடில்லையே!வேகமான நோய் தாக்கின ஒரிரு நாளிலேயே கொன்று விடும் அதனால் உயிரிழப்பு அதிகம் எனும் வாதத்தை உங்களில் யார் ஒப்புக் கொள்வீர்கள் ?நிச்சயமாக நான் மாட்டேன் !!


தேன்மழை

Sunday, October 19, 2014

Rains

அடை மழை யல்ல,அடைக்க முடியாத மழை.குடும்ப அடை காக்க முடியா மழை.இவை எல்லாம் மண்ணுக்குள் சென்றால் எத்தனை நாள் குடிநீர் பிரச்சினையை சமாளிக்கலாம்.ஆனால் மழைநீர் மண்ணுக்குள்ளும் செல்லவில்லை ,பெருச்சாளி அரசியல்வாதி சிறைக்குள்ளும் செல்லவில்லை .