இளநெஞ்சே வா!
சாமியை ஆட்டிப்படைக்கும் ஆசாமிகள்-பறந்து பட்ட விவாதப்பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை!
ஆனால்,அங்கு வானுர்தி ஏற்றி வழியனுப்புவதற்காக நாம் இங்கு வந்திலோம்!!
கறுப்பு சட்டையின் கரம் பிடித்து நடந்த நம் கண்முன் கண்ட கோலத்தை,ஜலத்தை இனம் பிடித்து காட்டவே தேன்மழை வழியாக இணைகிறோம்!!
சாமி = நல்ல எண்ணங்கள் + நல்ல செயல்கள் + தன்னம்பிக்கை
ஆசாமி = நல்ல/கெட்ட எண்ணங்கள் + நல்ல/கெட்ட செயல்கள் + நிறைய தன்னம்பிக்கை + மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் குணம் + சில மேஜிக் திறமைகள்
இந்த கணக்கைப் பிணக்கு என்று எண்ணி, ஆசாமியை சாமி என்று நம்பி ஏமாறும் அப்பாவித் தமிழினமே ஒரு நிமிடம்!!!
ஸ்ரீபுரம் கோவில் - தங்கக் கோவில் என்று அழைக்கப்படும் பெரிய மாளிகை!!!!ஆம் ,மாளிகை! வசந்தமாளிகை என்று எண்ணுகிறீர்களா அதுவும் சரிதான்!ஆதிகாலம் தொட்டே கடவுள் ஒரு நல்ல வர்த்தகப்பொருள்!
கடவுளை விற்பனை செய்யும், அந்த வர்த்தகத்தில் ஈடுபடும், அவ்விடத்தை வேறென்னவென்று அழைப்பது?
தொலைக்காட்சி விளம்பரங்களே தோற்கும்!!!,அந்த அளவிற்கு கோவிலை சுற்றி (நாடோடிகள் பட சின்னமணி போல) அக்கோவிலை நடத்தி வரும் சக்தி அம்மாவின் புகழ் தட்டிகள்!அங்கு மட்டுமல்ல, சினிமா சுவரொட்டிகள் போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நீங்கள் அதைக் காண நேரலாம்!
சுற்றி வரும் இடமெல்லாம் டீ, காபி, பிஸ்கட், கூல்டிரிங்க்ஸ், விற்கும் சின்னசின்னகடைகள், காணிக்கையை வாங்கி எழுதி வைப்பதற்கு நாலு பேர் வேற. இவற்றையெல்லாம் பார்க்கும் மனதுக்கு என்ன தோன்றும்???
அமைதி பரப்பி , நம்மதி இளைப்பாறி நிம்மதியை இடம்பெயர்க்கும் தெய்வபீடமென்றா????
இல்லை!!,உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளுவோர்க்கு தோன்றுவதெல்லாம்..................,
இது என்ன பிக்னிக் ஸ்போட்டா?
கோவிலில் நுழைய இலவசமாக இருந்தாலும், அங்கு பணிபுரியும் அதிகாரிகளே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூறுவது "ஒருத்தருக்கு 250 ருபாய் நுழைவு கட்டணம் செலுத்தினால் போதும் நீங்கள் ஒரு மணி நேரத்திலேயே வெளியே திரும்பி விடலாம்". ஆனால் உண்மை என்னவோ? இலவச கட்டணத்தில் உள்ளே சென்றாலே ஒரு மணி நேரத்தில் திரும்பலாம்.
அவ்வளவு பெரிய கோவிலில், ஒரே ஒரு லக்ஷ்மி சிலை தான் வுள்ளது. பல வீட்டு லட்சுமிகள் தங்கம் இன்றி முதிர்கன்னிகளாய் உலவுகையில், இங்கு, அவ்வளவு பெரிய தங்க கோவில்? இது அவசியம் தானா?
இந்த கோவில் இவ்வளவு பெரியதாக வளர்வதற்கு காரணம் மக்கள் தான். உங்களுக்குள்ள இருக்கிற திறமைகள், எண்ணங்கள்,செயல்களை நம்பாம, சாமி அப்படின்னு எவனோ ஒருத்தன் சொல்றதன்னு கேக்க போறீங்களே. இது சரியா?
இந்த கோவில்ல பிரசாதம் ஒன்னாவது இலவசமா தருவார்களேனு சந்தோஷ பட்டுவிடாதீர்.பிரசாதத்த வாங்கிட்டு திரும்பும் போதே ஓர் ஆச்சர்யமான விஷயம் கண்ணில் படும்.பிரசாதம் வழங்கிய இடத்துக்குப் பக்கத்திலேயே, நாலு பேர் உட்கார்ந்திருப்பார்கள். கைல நோட், பேனாவோட.பக்கத்திலேயே அரிசி மூட்டைகளும், அரிசி பக்கெட்டுகளும்.
எங்ககிட்ட காணிக்கை போடாம எஸ்கேப் ஆகிடலாம்னு பாத்தீங்களானு கேட்கிறமாதிரி, காணிக்கை செலுத்த வில்லை என்றால் பரவாயில்லை, காசாக கொடுக்காமல்,அங்கு வைத்துள்ள அரிசியை வாங்கி, காணிக்கையாக செலுத்தலாமாம்.
இதிலெல்லாம் ஒரு நல்ல செய்தி என்னவென்றால்?
இதில் எதுவுமே கட்டாயமில்லை,ஆனால் அங்கு செல்வோர் இவ்வித முறைமுக கட்டாயத்தை நிச்சயம் எதிர்நோக்கலாம்,உணரலாம்.பணம்!!!!.........திரும்பும் திசையெல்லாம் பணம் பெற ஆட்கள்.
இப்படி மக்களின் மூடத்தனத்தை முதலீடாக்கி,மூர்க்க சுகம் காணும் இவர்களை பணத்தாசை பிடித்த பிசாசுகள்!! என்று எண்ண எத்தணிப்பது தவறா?
நாம் வேண்டுகிறோம்,
கடவுளே, நான்சொன்னதெல்லாம் நடந்தது என்றால், 1000 ரூபாய் காணிக்கை போடறேன்னு(சிலர் பத்து ரூபாய் கூட). பணத்தை உண்டியல போடறதுக்கு பதிலா, அனாத ஆசிரமத்துக்கோ இல்ல வேற நல்ல காரியங்களுக்கோ பயன் படுத்தலாமே. நீங்க உண்டியல்ல போடற காசு சொர்கத்துக்கு போய் உங்க
கடவுள் கிட்ட யார் குடுக்கப் போறானு நினைக்கிறீங்க???
அந்த காசு,முறையற்று, கோவில் அதிகாரிகளின் அரிப்படங்கா கைக்கும் பின் அவர் வற்றாத வயிற்றிக்கும் தான் போய் சேரும்.
ஆன்மிகம் என்பது கண்ணாடிகளைப் போல, அறிவு என்பது கண்களைப் போல, எப்போ காண்ணாடி கண்களை மறைக்க ஆரம்பிக்கிறதோ,அப்போதே அக்கண்ணாடியை வீசிவிட்டு,நம் கண்களாலேயே பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும்.ஆனால் அவ்வாறில்லாது,இற்றைய மக்களுடைய அறியாமைக்கு அளவே இல்லையேனு நினைக்கும் போது, வருத்தமாக இருக்கிறது, நெஞ்சில் நெருஞ்சி தைக்கத்தான் செய்கிறது.
தமிழன் ஒன்று மதுவில் மயங்குகிறேன்,இல்லைஎன்றால் மதத்தில் மயங்குகிறான்.இவை இரண்டுமே கண்களை கட்டி,அவனைக் குருடாக்கும் என்று அறியாமலேயே,மயக்கத்தின் போதையில்,நாம் என்ன தான் எடுத்துச் சொன்னாலும் ஏற்க மறுப்பர், கெண்டி மலரில் தேனுக்காக வந்து மடியும் வண்டைப் போலவே!!
இதற்கெல்லாம் முடிவு,தேன்மழைத்தோழர்கள் அடிக்கடி குறிப்பிடுவதைப்போல் இனி வரும் தலைமுறையாவது அறியாமை இருள்கிழிக்கும் அறிவொளிச்சுடராய் மாற்றினால்,இதைப் போன்ற விட்டில்பூச்சிகள் அச்சுடரில் மாண்டே போகும் என்பது திண்ணம்!
அதுவரையில் கோயில் கோயிலாக சென்று ஆசாமிகளின் பதம் தொழும் அப்பாவிகளுக்கு, நாம் சொல்வதனென்ன,பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலில் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்:
காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!!
-எழுத்தாளர் தேன்
சாமியை ஆட்டிப்படைக்கும் ஆசாமிகள்-பறந்து பட்ட விவாதப்பொருள் பொதிந்த வார்த்தைகள் இவை!
ஆனால்,அங்கு வானுர்தி ஏற்றி வழியனுப்புவதற்காக நாம் இங்கு வந்திலோம்!!
கறுப்பு சட்டையின் கரம் பிடித்து நடந்த நம் கண்முன் கண்ட கோலத்தை,ஜலத்தை இனம் பிடித்து காட்டவே தேன்மழை வழியாக இணைகிறோம்!!
சாமி = நல்ல எண்ணங்கள் + நல்ல செயல்கள் + தன்னம்பிக்கை
ஆசாமி = நல்ல/கெட்ட எண்ணங்கள் + நல்ல/கெட்ட செயல்கள் + நிறைய தன்னம்பிக்கை + மக்களை ஏமாற்றி சம்பாதிக்கும் குணம் + சில மேஜிக் திறமைகள்
இந்த கணக்கைப் பிணக்கு என்று எண்ணி, ஆசாமியை சாமி என்று நம்பி ஏமாறும் அப்பாவித் தமிழினமே ஒரு நிமிடம்!!!
இவர் தான் சக்தி அம்மாவாம் ????!! |
ஸ்ரீபுரம் கோவில் - தங்கக் கோவில் என்று அழைக்கப்படும் பெரிய மாளிகை!!!!ஆம் ,மாளிகை! வசந்தமாளிகை என்று எண்ணுகிறீர்களா அதுவும் சரிதான்!ஆதிகாலம் தொட்டே கடவுள் ஒரு நல்ல வர்த்தகப்பொருள்!
கடவுளை விற்பனை செய்யும், அந்த வர்த்தகத்தில் ஈடுபடும், அவ்விடத்தை வேறென்னவென்று அழைப்பது?
தொலைக்காட்சி விளம்பரங்களே தோற்கும்!!!,அந்த அளவிற்கு கோவிலை சுற்றி (நாடோடிகள் பட சின்னமணி போல) அக்கோவிலை நடத்தி வரும் சக்தி அம்மாவின் புகழ் தட்டிகள்!அங்கு மட்டுமல்ல, சினிமா சுவரொட்டிகள் போல் தமிழகத்தின் பல பகுதிகளிலும் நீங்கள் அதைக் காண நேரலாம்!
சுற்றி வரும் இடமெல்லாம் டீ, காபி, பிஸ்கட், கூல்டிரிங்க்ஸ், விற்கும் சின்னசின்னகடைகள், காணிக்கையை வாங்கி எழுதி வைப்பதற்கு நாலு பேர் வேற. இவற்றையெல்லாம் பார்க்கும் மனதுக்கு என்ன தோன்றும்???
அமைதி பரப்பி , நம்மதி இளைப்பாறி நிம்மதியை இடம்பெயர்க்கும் தெய்வபீடமென்றா????
இல்லை!!,உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளுவோர்க்கு தோன்றுவதெல்லாம்..................,
இது என்ன பிக்னிக் ஸ்போட்டா?
கோவிலில் நுழைய இலவசமாக இருந்தாலும், அங்கு பணிபுரியும் அதிகாரிகளே, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கூறுவது "ஒருத்தருக்கு 250 ருபாய் நுழைவு கட்டணம் செலுத்தினால் போதும் நீங்கள் ஒரு மணி நேரத்திலேயே வெளியே திரும்பி விடலாம்". ஆனால் உண்மை என்னவோ? இலவச கட்டணத்தில் உள்ளே சென்றாலே ஒரு மணி நேரத்தில் திரும்பலாம்.
அவ்வளவு பெரிய கோவிலில், ஒரே ஒரு லக்ஷ்மி சிலை தான் வுள்ளது. பல வீட்டு லட்சுமிகள் தங்கம் இன்றி முதிர்கன்னிகளாய் உலவுகையில், இங்கு, அவ்வளவு பெரிய தங்க கோவில்? இது அவசியம் தானா?
இந்த கோவில் இவ்வளவு பெரியதாக வளர்வதற்கு காரணம் மக்கள் தான். உங்களுக்குள்ள இருக்கிற திறமைகள், எண்ணங்கள்,செயல்களை நம்பாம, சாமி அப்படின்னு எவனோ ஒருத்தன் சொல்றதன்னு கேக்க போறீங்களே. இது சரியா?
இந்த கோவில்ல பிரசாதம் ஒன்னாவது இலவசமா தருவார்களேனு சந்தோஷ பட்டுவிடாதீர்.பிரசாதத்த வாங்கிட்டு திரும்பும் போதே ஓர் ஆச்சர்யமான விஷயம் கண்ணில் படும்.பிரசாதம் வழங்கிய இடத்துக்குப் பக்கத்திலேயே, நாலு பேர் உட்கார்ந்திருப்பார்கள். கைல நோட், பேனாவோட.பக்கத்திலேயே அரிசி மூட்டைகளும், அரிசி பக்கெட்டுகளும்.
எங்ககிட்ட காணிக்கை போடாம எஸ்கேப் ஆகிடலாம்னு பாத்தீங்களானு கேட்கிறமாதிரி, காணிக்கை செலுத்த வில்லை என்றால் பரவாயில்லை, காசாக கொடுக்காமல்,அங்கு வைத்துள்ள அரிசியை வாங்கி, காணிக்கையாக செலுத்தலாமாம்.
இதிலெல்லாம் ஒரு நல்ல செய்தி என்னவென்றால்?
இதில் எதுவுமே கட்டாயமில்லை,ஆனால் அங்கு செல்வோர் இவ்வித முறைமுக கட்டாயத்தை நிச்சயம் எதிர்நோக்கலாம்,உணரலாம்.பணம்!!!!.........திரும்பும் திசையெல்லாம் பணம் பெற ஆட்கள்.
இப்படி மக்களின் மூடத்தனத்தை முதலீடாக்கி,மூர்க்க சுகம் காணும் இவர்களை பணத்தாசை பிடித்த பிசாசுகள்!! என்று எண்ண எத்தணிப்பது தவறா?
நாம் வேண்டுகிறோம்,
கடவுளே, நான்சொன்னதெல்லாம் நடந்தது என்றால், 1000 ரூபாய் காணிக்கை போடறேன்னு(சிலர் பத்து ரூபாய் கூட). பணத்தை உண்டியல போடறதுக்கு பதிலா, அனாத ஆசிரமத்துக்கோ இல்ல வேற நல்ல காரியங்களுக்கோ பயன் படுத்தலாமே. நீங்க உண்டியல்ல போடற காசு சொர்கத்துக்கு போய் உங்க
கடவுள் கிட்ட யார் குடுக்கப் போறானு நினைக்கிறீங்க???
அந்த காசு,முறையற்று, கோவில் அதிகாரிகளின் அரிப்படங்கா கைக்கும் பின் அவர் வற்றாத வயிற்றிக்கும் தான் போய் சேரும்.
ஆன்மிகம் என்பது கண்ணாடிகளைப் போல, அறிவு என்பது கண்களைப் போல, எப்போ காண்ணாடி கண்களை மறைக்க ஆரம்பிக்கிறதோ,அப்போதே அக்கண்ணாடியை வீசிவிட்டு,நம் கண்களாலேயே பார்க்கப் பழகிக்கொள்ளவேண்டும்.ஆனால் அவ்வாறில்லாது,இற்றைய மக்களுடைய அறியாமைக்கு அளவே இல்லையேனு நினைக்கும் போது, வருத்தமாக இருக்கிறது, நெஞ்சில் நெருஞ்சி தைக்கத்தான் செய்கிறது.
இது தான் நம் நிலை மக்களே! இதை முதலில் நன்கு உணருங்கள்!! |
மது,மதம் இரண்டும் மனிதனைக் குருடாக்கும்!!!புத்திமதியை ஏற்க மறுக்கச்செய்யும்!!! |
இதற்கெல்லாம் முடிவு,தேன்மழைத்தோழர்கள் அடிக்கடி குறிப்பிடுவதைப்போல் இனி வரும் தலைமுறையாவது அறியாமை இருள்கிழிக்கும் அறிவொளிச்சுடராய் மாற்றினால்,இதைப் போன்ற விட்டில்பூச்சிகள் அச்சுடரில் மாண்டே போகும் என்பது திண்ணம்!
அதுவரையில் கோயில் கோயிலாக சென்று ஆசாமிகளின் பதம் தொழும் அப்பாவிகளுக்கு, நாம் சொல்வதனென்ன,பல ஆண்டுகளுக்கு முன்பே ஒரு பாடலில் சொல்லிவிட்டு சென்று விட்டார்கள்:
காசேதான் கடவுளப்பா!
அந்த கடவுளுக்கும் இது தெரியுமப்பா!!
-எழுத்தாளர் தேன்
"nach" Pathivu
ReplyDeleteஇலவச தரிசனம் போறவங்களுக்குத் துளி குங்குமம் கூடக் கொடுப்பதில்லையாம். அந்த 250 இல்லை 300க்குத்தான் குங்குமப்பிரஸாதம்.
ReplyDeleteஉள்ளே போகும்போது கைப்பை, கேமெரான்னு எதுவும் கொண்டுபோகக்கூடாது. அதேபோல் காசும் கொண்டு போகாமல் கைவீசிப்போய் சாமியைக் கும்பிட்டு வரணும். சாமிக்கு இல்லாத செல்வமா? நாம் கொடுத்தா நிறையப்போகுது!
நன்றிகள் நண்பர்களே!
ReplyDeleteகடவுளின் பெயரால் மக்கள் மூடர்கள் ஆக்கப்படுவதை, ஏமாற்றப் படுவதை எதார்த்தமாகச் சாடியிருக்கிறீர்கள்.
ReplyDelete’தமிழன் மதுவிலும் மதத்திலும் மயங்கிக் கிடக்கிறான்’ ...எத்தனை ஆழமான, 100% உண்மையான கருத்துப் பதிவு!
பாராட்டுகிறேன் நண்பரே.
அருமையான analysis .
ReplyDeleteஇங்கு என்று இல்லை...எங்கு ஒரு சாமியார் கடை போட்டாலும் இது தான் நடக்கிறது
"கடவுள் ஏன் கல்லானான்
ReplyDeleteமனம் கல்லாய்ப் போன மனிதர்களாலே"
பல வருடங்களுக்கு முன் பாடியது.
இன்று அக்கல் பாசிபடிந்து வாழ்க்கையையே வழுக்கிவிடும் நிலையில் தான் உள்ளது.
இவை காலத்தின் கோலம்,அந்த காலமே இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும்.நம்மால் இயன்ற அளவு பகுத்தறிவு திரி தூண்டுவோம்!!
பாராட்டுகளுக்கு நன்றிகள் நண்பர்களே!!!
இந்த பிக்னிக் ஸ்பாட்டை கட்டத் தேவையான டன்கள் கணக்கிலான தங்கம் அதற்க்கான பணம் எங்கேயிருந்து வந்தது- என்பது குறித்து தங்களுக்கு ஏதாவது தெரியுமா? [மற்ற சாமியார்கள் கொஞ்சம் கொஞ்சமாகத்தான் வளர்ந்தார்கள், ஆனால் இந்த 'அம்மா' திடீர்னு எங்கேயோ இருந்து வந்தார், கோவிலைக் கட்டினார் என்கிறார்கள், அதனால் தான்!!]
ReplyDeleteவீட்டில் ஒரு கரப்பான்பூச்சி உலவுகிறதென்றால்,குடும்பத்தலைவனுக்கோ,'தலைவிக்கோ' தெரியாமலா நடக்கும்?????.
ReplyDeleteபுரிகிறவர்கள் புரிந்துகொள்ளுங்கள்.
கடவுள் எல்லோருக்கும் பொது என்று சொல்வது ஏமாற்று வேலை. கடவுள் பணக்காரர்களுக்கு ம்ட்டுமே என்பது எல்லாக் கோவில்களுக்கும் பொது விதி.
ReplyDelete