Wednesday, February 29, 2012

பேனர்களின் ஆட்டம் !!!

இளநெஞ்சே வா!

ஒரு விஷயத்தை மக்களிடம் சேர்க்க வேண்டும் என்றால், அதற்கு பல வழிகள் உண்டு. ரேடியோ, டிவி, இணையதளங்கள், செய்தித்தாள்கள் மற்றும் கதை புத்தகங்கள் போன்றவை. ஆனாலும், இந்த பேனரை வைத்து விளம்பரம் பண்றாங்களே அடேயப்பா !!!!! (இவங்க இம்சை தாங்கல)



மக்களுக்கு விவரம் தெரிஞ்சதுகு அப்புறமும் கூட, இப்படி தெரு தெருவா, ரோடு ரோடா பேனர் போட்டு என்ன பயன்? இதை செஞ்சதுக்கு நூறு பேருக்கு சோறு போட்டுருக்குலாமே!!




என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்தவேண்டும் அயல்நாட்டில்
 உண்மையான பாடல்.
ஆனால் எப்படி எல்லாம் பணத்தை வீணடிக்கனும், அப்படிங்கற தெல்லாம் இந்தியாவில் தான் கத்துக்கணும். இவங்க பேனர் போட்டு சொல்ல வர விஷயம் தான் என்ன? "64 ஆம் பிறந்தநாள்". இந்த மூணு வார்த்தைக்கு மூவாயிரம் போஸ்டர் போட வேண்டியது.




எவன் ஒருவனுக்கு வெற்றியும், புகழும் கேட்காமல் வருகிறதோ, அவனே உயர்ந்தவன் ஆகிறான். அதைவிடுத்து  இப்படி தம்பட்டம் அடித்து பெரிய இடத்துக்கு போவோர் நிலை எப்படி இருக்கும் என்பதை நாம் சொல்வதை விட,இந்த வரிகளே சொல்லட்டும்,
அடிக்கிற காற்றில் காகமும் பறக்கும்;காகிதமும் பறக்கும்
அடித்த காற்று நின்றால் தான்;
உண்மையில் பறப்பது காக்கையா அல்லது காகிதமா என்று!!!!



படங்கள்:கூகிள்

-எழுத்தாளர் தேன்

3 comments:

  1. நீங்கள் சொல்வது சரிதான்... ஆனால், என்றைக்கு இவர்கள் திருந்தப் போகிறார்கள்...

    ReplyDelete
  2. நன்றி நண்பர்களே!இவர்களை நாம் திருத்தமுடியாதுதான்!திருடனாய் பார்த்துத்திருந்தாவிட்டால் திருட்டைஒழிக்க முடியாதல்லவா?
    ஆனால் இவர்கள் அறியாமையில் இவ்வாறு செய்கின்றனர்.இனி வரும் தலைமுறையாவது,அறிவார்ந்த நாம் தலைமுறையாய் செய்துவிட்டாலே இவ்வகை தொல்லைகளில் பாதியாவது குறையுமல்லவா?

    ReplyDelete