சென்னையில் குற்றவாளிகள் என்று கருதி காவல்துறை எந்தவித விசாரணையும் இல்லாமல் குருவி சுடுவதுபோல 5இளைஞர்களை சுட்டுத் தள்ளியது அனைவரும் அறிந்ததே.ஆனால் அந்த என்கௌன்ட்டர் பற்றி ஆணையர் அளித்த விளக்கமும்,அதில் நிலவும் ஓட்டைகளும்,மனதில் உறுத்தாத நெஞ்சங்களும் சிலவே!
அந்த என்கௌன்ட்டர் பின்னணி பற்றி புதிதாக வெளியாகியுள்ள தகவல்கள் இதோ,
காவல்துறையினர், ஏற்கனவே இந்த வங்கிக் கொள்ளையில் ஈடுபட்டவர்கள் என்று சந்தேகிக்கப்பட்ட 5 நபர்களை வேளச்சேரியிலேயே பிடித்துள்ளனர். பிடிக்கப்பட்டவர்களை விசாரிக்கையில், அவர்களோடு தங்கியிருந்தவர்களை காட்டுமாறு போலீசார் கூறியதையடுத்து, மற்ற ஐந்து நபர்கள் தங்கியிருந்த 335, எஸ்.என்.முதலி தெரு வீட்டை பிடிபட்ட நபர்கள் அடையாளம் காண்பித்துள்ளனர்.
காவல்துறையினர் அந்த வீட்டுக்குள் நுழைந்ததும், வீட்டினுள் இருந்த அனைவருமே சரண்டர் ஆகியிருக்கின்றனர். சரணடைந்தவர்களை, அருகே இருந்த துணியை எடுத்து, கைகளை பின்புறம் கட்டி, போலீஸ் வேனில் ஏற்றியுள்ளனர்.
அனைவரையும் போலீஸ் வேனில் ஏற்றி, கொண்டு செல்லுகையில், ஒரு 100 மீட்டர் தூரத்தை கடந்த பிறகு, பிடிபட்டவர்களை என்கவுண்டரில் கொல்லுமாறு உத்தரவு வருகிறது. இந்த உத்தரவை வழங்கியது திரிபாதிதான் என்றும் கிடைத்த தகவல் கூறுகிறது. வேன் மீண்டும் எஸ்.என்.முதலி தெருவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, 5 பேரை வேனிலேயே வைத்து விட்டு, 5 பேரை அந்த அறைக்குள்ளேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டதாகத் தெரிகிறது.
நன்றி: சவுக்கு தளம்

எது உண்மை என்று எடுத்துக் கொள்வது??
ReplyDeleteமரணதண்டனையே இல்லாது ஒழிக்கப்படவேண்டுமென்ற குரல் ஓங்கி ஒலிக்கும் இன்றையகாலத்தில் இப்படி நடப்பதை கண்டிப்பார் இல்லையா?
ReplyDeleteகண்டிப்பதற்கு புதிதாக யாரும் பிறந்து வரப்போவதில்லை அம்பலத்தாரே!
ReplyDeleteஇந்த இழிநிலைகளை காணுறும் நாம்தான் கண்டிக்கவேண்டும்-அவரவருக்கு இயன்ற அளவில்;
நம்மால் இயன்றது இவ்வகை பதிவுகளிலாவது கண்டிக்க முடிந்தது!!!