இளநெஞ்சே வா!
கங்காணிக்கு பேத்தி பிறந்து,நேற்றோடு ஒரு வருஷம் முடிந்தது..
பரிதியின் ஆளுமையால் அவன் சார்ந்த மருத்துவமனையில் அக்குழந்தை பிறந்தது,அல்லது குயிலி பிறந்தாள்.
குயிலிக்கு மூணு சக்கர மரத் தள்ளுவண்டி பரிசு கொண்டு வந்தான் பரிதி.சேர்ந்து போனோம் ,கொடுத்தோம்,ஜி ஜி ஜி ஜூ ஜூ ஜூ ஜூ கொஞ்சல்களை முடித்துத் திரும்பினோம்.கங்காணிக்கு பேத்தியை நல்ல ஆங்கிலப் பள்ளிக்கு அனுப்பி பரிதி போல் பெரிய ஆள் ஆக்க வேணும் என ஆசை!எனக்கு அதில் துளியும் விருப்பமில்லை.நான் ஆரம்பம் முதலே தமிழ் வழியில் தான் கற்றேன்.பரிதியும் அப்படித்தான்.
நடந்து போய்கொண்டிருந்தோம்,குப்பையக்கா வீடு கடந்தது.பிள்ளைக்கு பேண் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.எங்களைப்பார்த்ததும்,அதிலும் பரிதியைப் பார்த்ததும்,வரவேற்று,விருந்தோம்பி,கண்ணு சாமிக்கு அந்த பாப்பா பாட்டு பாடிக்காட்டு என்றார்.அந்த பிஞ்சும் பாபா பிளாக் ஷீப் ஆவ்வ்யு எணி வுல் என ஆரம்பித்து அழகா பாடிமுடிக்க,பரிதி குலாவி கன்னத்தில் தட்டிக் கொடுத்து ,ஒரு "ஆசை" மிட்டாய் கொடுத்தான். குப்பாயக்காவிடம் சொல்லிவிட்டு கிளம்பினோம்.
"என் குழந்தைக்கு நிச்சயமாக தமிழ் வழி கல்வி தான்" நான் ஆரம்பித்தேன்!"இதென்ன பிஞ்சிலேயே நஞ்சு போல் பரங்கி மொழி.ச்சே ச்சே இதையெல்லாம் ஒத்துக்கவே முடியாது"என்றேன்.
பரிதி சிரித்தான்.
பைத்தியம்!(அடப் பாவி நானா?)தமிழ மட்டும் படிச்சு மயி*யா புடுங்கப் போற என்றான்.
மற்றவர்களிடம் பேச தயங்கும் வார்த்தைகளை எல்லாம் என்னிடம் பொசுக்கென்று பேசிவிடுவான்,சிறு வயதிலிருந்தே அப்படித்தான்!அதனால் இதை பெரிதாய் எடுத்துக் கொள்ளத்தேவை யில்லை.
என்ன இப்படி சொல்ற,தமிழ் நம்ம தாய் மொழியில்லையா?நாம படிக்காட்டி வேற யார் படிப்பா? என்றேன்.
சரி நீயும் நானும் ஒண்ணாவதில் இருந்தே பன்னிரெண்டாவது வரைக்கும் தமிழ்ல தான படிச்சோம்.அதனால உனக்கும் எனக்கும் என்ன பெருசா கிடைச்சது அதனால என்ன பெருசா சாதிச்ச?சமீபத்துல கூட வட இந்தியா போயிருந்தேனே,எல்லா இடத்திலயும் இந்திதான்.எனக்கோ பொட்டுக்குக் கூட இந்தி தெரியாது.அங்க நான் பாட்ட கஷ்டம்.அப்பபப்பா!!!!!!!! ஊஹும்!!!!!!!!!!!நான் என் குழந்தைகளை தமிழ் மட்டும் படிக்க வைக்க மாட்டேன் அவுங்க நெறய மொழி கத்துக்கணும் என்றான் பரிதி.
ஏலே!காசு பணம் சம்பாதிச்சுக் கொடுத்தா தான் நம்ம தாய் மொழியக்கூட நாம படிக்கனுமா என்ன ? என்றேன்.கொஞ்சம் கோபம் மெல்லிதாக எட்டிப்பார்த்தது.
அப்படியில்ல மொழிங்கறது ஒரு கருவி!
நம்மலோட எண்ணத்த நமக்குத் தோணுறத இன்னொருத்தனுக்கு புரிய வைக்கிற கருவி அவ்வளவு தான்.ஒருத்தனுக்கு ஒரு மொழி தெரிஞ்சிக்கிறத விட நாலஞ்சு மொழி தெரிஞ்சிகிறது தான நல்லது?அதுவும் இங்க ஹிந்தி,இங்கிலீஷ் னு நிறையா தெரிஞ்சிகிட்டா தான வேற எந்த வூருக்குப் போனாலும் பொழைக்க முடியும்,இப்படியே தமிழ் தமிழ்னு உக்கார்ந்துகிட்டு இருந்தா அப்றம் நாம எல்லாரும் கிணத்துத் தவளைகளாத்தான் இருப்போம்,பாத்துக்க!அந்த காலத்துல ராசாக்கள பாராட்டி பாட்டெழுதினா பணம் கிடைக்கும்,நிறைய பேர் தமிழ் படிச்சாங்க,ஆனா இப்போ!???என்றான்.
அப்படியே பாத்தாலும் பள்ளில தமிழ் படிக்கட்டும்.பள்ளிப் பாடத்துல தமிழ் முதன்மையா இருக்கட்டும்.மத்த மொழிகள விருப்பப் பாடமா படிக்கலாம் இல்லையா? என்றேன்.
என்னப் பொறுத்த வரை ஒரு மொழிய எழுதி, படிச்சு, பேசி,புரியற அளவுக்குத் தெரிஞ்சிக் கிட்டாப் போதும். , அதுக்கு மேல மொழிக்கு பெரிதா வேற வேலையும் இல்ல.அப்படி பாக்கும் போது,பன்னிரண்டு வருசம் ஒரே மொழியை படிப்பதற்கு,நாலஞ்சு மொழி தெரிஞ்சிக்கிட்டா நமக்கு தானே லாபம்?இப்போ என்னையே எடுத்துக்கோ,நானெல்லாம் எட்டாவதிலேயே கவிதை எழுதற அளவுக்கு மொழிய ,தமிழ தெரிஞ்சிக்கலையா? ஏன் நேரிசை வெண்பா,குறள் வெண்பா னு எல்லாம் கூட எழுதினேனே! எட்டாம் வகுப்பிலேயே?அவ்வளவு ஆழமா எதுக்கு ஒரு மொழியை தெரிஞ்சிக்கணும்,ஓரளவுக்கு தெரிஞ்ச பின்னாடி,அடுத்த மொழியப் படிக்கப் போலாம் இல்லையா?என்று அவன் சொன்னதும் என் வீட்டை அடைந்திருதோம்.எங்கள் வனத்தில் வெயில் அதிகம் இருக்காது.கங்காணி வூடும் மூணு மேடு தூரம் தான்,அரை மணியில் நடந்தே போய்வந்திடலாம்.ஆனாலும் ரொம்ப களைப் பாயிருந்தது.பரிதி கூட பேசி ஜெயிக்க முடியாது.நாங்கள் வந்து சேர்ந்ததும் அம்மா -மிளகு மஞ்சள் உப்பு தூவி மோர் கொடுத்தார்கள்,ரெண்டு பேருக்கும் தான்.
இங்க பாரு,இந்த குவளைய உன் மேல வீசி மண்டைய ஒடசிடுவேன்,நீ சொல்ற மாதிரி படிச்சா பிச்சைக்காரன் பாத்திரத்தப் போல பல வீட்டு சோத்தத் தின்னு ஏப்பம் விடும் போது என்ன தின்னோம் ங்கறதே தெரியாம போயிடும்.நீ சொல்ற மாதிரி பல மொழிகள் படிக்கிறேன் பேர் வழின்னு சான்ஸ்கிரிட்,பிரெஞ்சு ,ஹிந்தி னு படிச்சா நம்ம பஞ்சாயத்தோட தம்பி பொண்ணு.அவ கூட நம்ம வனத்துல இருந்து பொழிச்சூர் போக பேருந்து நிறுத்ததுக்குப் போனோம்.என்ன ஆச்சு? பேருந்து வந்துச்சு,
பொ..........ழி................ச்...........சூ.............ர்........
இப்படி படிக்கிறா.இந்த லட்சணத்துல அவ கல்லூரில பொறியியல் படிக்கிறா!எல்லாருமே உன்ன மாதிரி எட்டாம் வகுப்பிலேயே கவிதை எழுதற அளவுக்கு திறம வந்திடறதுஇல்ல பரிதி!என்னயே பாரு,பன்னிரெண்டாவது வரை தமிழ்லேயே படிச்சும் இன்னும் எழுத,படிக்க,பேச,புரிஞ்சிக்க மட்டும் தானே தெரியுது.உன்ன மாதிரியே எல்லாரும் இப்படி போய்ட்டா நம்ம தாய் தமிழே அழிஞ்சிடாதா?இப்படி வேற யார் சொல்லி இருந்தாலும் பரவயில்ல ஆனா தமிழ்ல ஆர்வமா படிச்சு,புலவன் தமிழன் லாம் பள்ளில பேருஎடுத்து,நல்லாப் படிச்சு மருத்துவனா இருக்கிற நீயே சொல்ல எப்படி மனசு வருது பரிதி?உன் மனசாட்சிக்கு விரோதமில்லாம சொல்லு,நீ படிச்ச,வாசிச்ச,சுவாசிச்ச,விசுவாசிச்ச,நேசிச்ச,தமிழ் உனக்கு கொஞ்சம் கூட எங்கயும் உதவினதே இல்லையா?என்று அவன் மூக்கின் நுனி அருகே ஆள் காட்டி விரலை நீட்டிக் கேட்டேன்.என் படிப்பறையில் நாற்காலியில் தான் உட்கார்ந்திருந்தான்.
போட்ட சத்தத்தில் அம்மாவே ஓடி வந்து விட்டார்.பரிதி என் புத்தக அலமாரியைப் பார்த்தான்..நான்கு வருடங்களுக்கு எனது பிறந்த நாளுக்கு அவன் பரிசளித்த சிக்மன் ப்ராய்டு வின் சைக்கோஅனலிசிஸ் புத்தகம் அலமாரியில் தான் இருந்தது.எடுத்தான்.அது,ஆங்கிலப் பதிப்பு.
"ஆனா!!!இவ்வளவு வருஷம் நான் மருத்துவம் படிச்சிருக்கேன்.அத்தனையும் ஆங்கிலம் தான்.அத எல்லாம் ஆங்கிலமா படிக்கிறத விட,தமிழ்ல அர்த்தம் பண்ணினா தான்,என்ன படிக்கிறோம்ங்கற தே தெரியுது.சுலபமா புரியுது.இதைவிட வேற என்ன வேணும்,இதுக்காவே காலம் பூரா தமிழ்ல படிக்கலாமே.தமிழ் ஆளுமைய வளர்த்துக்கலாமே!தமிழ் வார்த்தைகள் நிறைய கத்துகலாமே!"என்று அவன் சொன்னதும்........
"டேயீஈஈஈஈஈஈ"எங்க அம்மா மட்டும் தடுத்திருக்காவிட்டால்,எங்கள் வீட்டில் அன்று விளக்குமாறு துவம்சம் ஆகியிருக்கும்!!!!!!!!!!!!!!!!
ஹிந்தி -நமக்கு எடுப்பு சோறு மாதிரி,ஆங்கிலம்-சமையல்`கறான் மாதிரி,நமக்கு வேணும்ங்கற மாதிரி சமைச்சு கொடுப்பான்.வேணும்னா அவன வேலைக்கு வெச்சுக் களாம் வேண்டாட்டி ஒடனே துரத்தி விடரலாம்.ஆனா நம்ம உணர்வுகளை,மனசப் புரிஞ்சிகிட்டு,அந்த சோத்த நமக்கேத்த படி ஊட்டி விடுறாளே தாய்-அவள் தான் தமிழ்..பேரறிஞரின் வார்த்தைகள் எத்தனை உண்மையானது பாருங்கள்!!!!!!!!!!!!!!
இந்த அழகில் மீண்டும் ஒரு ஹிந்தி திணிப்பு ஆரம்பமாம்.
எருமை வாலட்டுதுனா எதுக்கு ஆட்டுதுன்னு தெரிஞ்சிக்கலாம்,ஆனா, சில அரசியல் சாக்கடையில் உள்ள பன்னிகள் வாலாட்டுவது தான் ஏன் என்றே தெரியவில்லை.
தெரிந்தவர்கள் கூறலாம்......
உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளச்சுத்தியுடன்,
காட்டுச்சிறுக்கி,
தேன்மழை.

தி ஹிந்து-20-06-2014 |

இப்ப நீங்கா மாத்தி எழுதிருந்தா கமெண்ட்ஸ் குவிந்திருக்கும் ஆதரவாக .....அருமை
ReplyDeleteபதிவின் இறுதி வரிகள் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
ReplyDeleteநன்றி.
பதிவு அருமை தெளிந்த உண்மை!
ReplyDelete