Wednesday, November 30, 2011

கூந்தல்

காதலுக்கும் கீதம் உண்டு:
வார்த்தை இல்லா ஓசையது.

வட்ட விழி பார்வையினால்,
தேன்நிலவே  தோற்றுவிடும்!
 
சில்லென பூக்குது பூவாய், நெஞ்சம்-
வளர்பிறை போலும்,  எம்பாவாய் !!

மல்லிகைக்கு மணமுண்டு,
கூந்தலிலே இடம்பிடிக்கும்.
 
என் மார்கழிப்பூவே உன் மணமோ
மனதிலேயே இடம்பிடிக்க,
மல்லிகையும் அற்பம் தானே!!

அள்ளி முடியும் கொண்டையிலே
அவிழாது பிண்ணி முடிந்தாய்,
 
கள்ளி நீ காணலையோ? அள்ளியதில் கூந்தலல்ல,
கந்தலான என் மனமென்று  !!

ஊரார் சொல்வார் வளவள வென்று
 
மயிலிறகாய் வருடுது என்று , பாவம்!!
உன் பிண்ணாத குழலுணர்வு ,
அறியாத மாந்தர் உரைப்பது- மன்னித்திடு!! மின்சாரம் புகுத்துமுன் கூந்தல்முன்
இறகொடிந்த அம்மயிலிரகெங்கே!!!!!!!!!!!




0 comments:

Post a Comment