எண்ண அலைக் கூரையிலே
என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
நட்ட இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
கடவுளும் நம் அகமல்லோ !!
என் மனமோ அகல் விளக்கு ,
வண்ண வொளி வாழ்வாகும்
நட்ட இடம் நடுவாக,
கண்ணிரண்டும் கதவணையாய்
கசடனுப்பும் திறந்திருந்தே,
திண்ணையோடு சுவரெல்லாம்
சுடரொளியை காத்திடவே
எரிநீரை வீசிவிட்டால்
உன்னகமும் என்னாகும்
திரிதீயும் நெருப்பல்லோ !!
தொட்டவுடன் பற்றாதோ !!
வரிப்புலி போல் விலங்காக
வந்தது நம் உடல்லலோ !!
கரியில்லா வெளியாக
கடவுளும் நம் அகமல்லோ !!
0 comments:
Post a Comment