Friday, December 9, 2011

ஆபத்பாந்தவன்-ஐய்யோ பாவம் நாடு!!

இன்று டெல்லி சிபிஐ நீதிமன்றம் சுப்ரமணியன் சுவாமியை டிசம்பர் 17 அன்று 2ஜி வழக்கில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு எதிராக சாட்சி சொல்ல உத்தரவிட்டிருக்கிறது.  சுப்ரமணியன் சுவாமி 17 அன்று சொல்லும் சாட்சியின் அடிப்படையில், சிபிஐ இணை இயக்குநர் ஒருவரும் நிதி அமைச்சக அதிகாரி ஒருவரையும் விசாரிக்க வேண்டுமா இல்லையா என்பது டிசம்பர் 17 அன்று முடிவு செய்யப் படும். அதன் அடிப்படையிலேயே ப.சிதம்பரத்தை 2ஜி வழக்கில் குற்றவாளியாக சேர்க்க வேண்டுமா இல்லையா என்பது குறித்து இறுதி முடிவு எடுக்கப் படும்.

 DSC_5276
இந்த முடிவு டெல்லி நீதிமன்றத்தால் வெளியிடப் பட்ட அதே நாளில், ஆண்டுதோறும் சுப்ரமணியன் சுவாமி ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் வழங்கும் லெக்சர்களை ரத்து செய்யும் முடிவும் வெளி வந்திருக்கிறது.   டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் மத விரோதத்தைத் தூண்டும், நிற வெறித் தன்மை படைத்த டிஎன்ஏ நாளேட்டில் வெளி வந்த அந்தக் கட்டுரையின் அடிப்படையிலேயே, இந்த முடிவை ஹார்வர்ட் பல்கலைகழகம் எடுத்திருக்கிறது. 

ஜுலை மாதத்தில் அந்தக் கட்டுரை வெளி வந்த போது ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் பிஎச்டி மாணவர்களான உமாங் குமார் மற்றும் சஞ்சய் பின்டோ ஆகிய இரு மாணவர்கள் சுவாமியின் விரிவுரையை தடை செய்ய வேண்டும் என்று ஒரு கையெழுத்து இயக்கத்தை தொடங்கினார்கள்.  ஆனால் அப்போது ஹார்வர்ட் பல்கலைகழகம் அந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தது.   தற்போது அதே விவகாரத்தை மீண்டும் விவாதித்த ஹார்வர்ட் பல்கலைகழக ஆசிரியர் நிர்வாகக் குழு, சுவாமியின் கட்டுரை, நாகரீக எல்லைகளை தாண்டி, வகுப்பு வாதத்தையும் வன்முறையையும் தூண்டுவதாக உள்ளது என்று முடிவெடுத்து, ஹார்வர்ட் பல்கலைகழகத்தின் ஆண்டு விரிவுரை பட்டியலில் இருந்து சுவாமியின் ‘Quantitative Methods in Economics and Business’ and ‘Economic Development in India and East Asia’ என்ற இரண்டு விரிவுரைகளை ரத்து செய்துள்ளது.
டாக்டர் சுப்ரமணியன் சுவாமியின் டிஎன்ஏ நாளிதழின் கட்டுரை, அவருடைய நீண்ட கால திட்டத்தின் அடிப்படையில் எழுதப்பட்டதாகவே தெரிகிறது.  டாக்டர் சுப்ரமணியன் சுவாமிக்கு பிஜேபியின் தலைவராகவும், பிரதமர் வேட்பாளராகவும் ஆக வேண்டும் என்பது நீண்ட நாளைய கனவு.  அந்தக் கனவை செயல்படுத்தும் ஒரு உத்தியாகவே சுவாமியின் அந்தக் கட்டுரை பார்க்கப் படுகிறது.

சுவாமியின் பிரதமர் கனவு” என்ற தலைப்பில் ஒரு ஆங்கில இணைய தளத்தில் வெளியான ஒரு கட்டுரையின் இணைப்பு சுவாமியின் ட்விட்டர் தளத்தில் கொடுக்கப் பட்டிருந்தது.   ஆனால் சுவாமி அதற்கு எவ்வித மறுப்பும் தெரிவிக்கவில்லை.  டாக்டர் சுவாமி பிரதமர் பதவிக்கான தனது வேட்கையின் வெளிப்பாடாகவே டிஎன்ஏ கட்டுரையை எழுதியிருக்கிறார் என்று அந்த இணைய தளத்தில் செய்தி வெளியாகியிருந்தது.

சுவாமிக்கு பிரதமர் கனவு உண்டா, அதன் அடிப்படையில்தான் அவர் தன்னுடைய ஊழல் எதிர்ப்புப் பணிகளில் ஈடுபடுகிறாரா என்பதை சுவாமிதான் விளக்கவேண்டும்.  ஆனால் ட்விட்டர் பேஸ் புக் போன்ற இணைய தளங்களில், “டாக்டர் சுவாமி இல்லையென்றால் இந்தியா என்ன ஆகியிருக்கும், சுவாமி நீங்கள் தான் இந்தியாவின் விடிவெள்ளி, இந்தியாவை ஊழல் முதலைகளிடமிருந்து காக்க வந்த ஆபத்பாந்தவன்” என்றெல்லாம் ஏராளமான கருத்துக்கள் தொடர்ந்து வெளியிடப் பட்டு வருகின்றன.

சுப்ரமணியன் சுவாமி என்ற நபரின் செயல்பாடுகள் வெளிப்படைத் தன்மை வாய்ந்தன அல்ல. இவருக்கு எங்கிருந்து வருமானம் வருகிறது, இவருக்கு நன்கொடை கொடுப்பவர்கள் யார் என்பது போன்ற விபரங்கள் இது வரை பொதுத் தளத்தில் வரவில்லை.   ஒரு வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை டெல்லிக்கு விமானத்தில் முதல் வகுப்பில் செல்கிறார் சுவாமி.  இவருக்கு இரண்டு உதவியாளர்கள் இருக்கிறார்கள்.  சென்னை, பட்டினப் பாக்கத்தில் உள்ள பாபனாசம் சிவன் சாலையில் இவருக்கு சொந்தமாக பெரிய பங்களா உள்ளது. இந்தப் பங்களாவில் பணியாற்றும் வேலைக்காரர்களுக்கு சம்பளம் கொடுக்க வேண்டும்.
இது போகவும், சுவாமியின் அன்றாடச் செலவுகள், தொலைபேசிக் கட்டணங்கள், நீதிமன்றத்தில் சுவாமி தொடுக்கும் பல்வேறு வழக்குகளுக்கு ஆகும் செலவுகள் ஆகியவற்றுக்கு இவருக்கு பணம் எங்கிருந்து வருகிறது என்பது மர்மமாகவே உள்ளது.
 DSC_5156
ஒவ்வொரு தேர்தலிலும், அது பாராளுமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, சட்டமன்றத் தேர்தலாக இருந்தாலும் சரி, டாக்டர் சுவாமியோ, அல்லது அவர் சார்பாகவோ யாராவது ஒருவர் போட்டியிடத்தான் செய்கிறார்கள்.  அவர் நடத்தும் ஜனதா கட்சியில், சுவாமியையும், சந்திரலேகாவையும் தவிர வேறு யாரும் உறுப்பினர்களாக இருப்பதாகத் தெரியவில்லை.  தேர்தலில் போட்டியிடுவதற்கும், கட்சி நடத்துவதற்கும் அவருக்கு யார் நன்கொடை கொடுக்கிறார்கள் என்ற விபரமும் வெளியிடப் படுவதில்லை.  சுவாமியை தேசத்தின் மனசாட்சி என்கிறார்கள்.  மனசாட்சி என்றால் உண்மையைத் தானே பேச வேண்டும்.  ஆனால் சுவாமி இது குறித்த உண்மைகளை வெளியிடுவதில்லை. இதில் விசித்திரமான விவகாரம் என்னவென்றால் யாரும் இது குறித்த கேள்விகளையும் எழுப்புவது இல்லை. ஊரில் உள்ள ஊழல்கள் குறித்தெல்லாம் கேள்வி எழுப்பும் சுப்ரமணியன் சுவாமி தன்னைப் பற்றி எழுப்பப் படும் இந்த சந்தேகங்களுக்கு விடை சொல்வாரா என்பது சந்தேகமே…
 பல நேரங்களில் சுப்ரமணியன் சுவாமி வெளியிடும் அறிக்கைகள் பெரும் நகைப்புக்கு இடம் கொடுக்கும் வகையில் அமைவது மட்டுமல்லாமல் விஷமத்தனமாகவும் இருப்பதுண்டு.
 03.11.2010

The framing of the Kanchi Shankaracharya in the Sankaraman murder case was also on the instruction of Ms.Sonia Gandhi to Ms.Sasikala. Ms.Jayalalitha the then CM, being a performing ‘circus lion’ in front of the ‘ring master’ Ms.Sasikala, obliged and hence the Shankaracharya was arrested.
gal14
The foreign Christian missionary lobby has been against the Shankaracharya because he had tried to co-opt Scheduled Castes and Backward Classes into the Hindutva movement.

11/07/2010

I condemn the Income Tax raid carried out at the behest of Ms. Sonia Gandhi on the residences and institutions of His Holiness Mermattur Adigalar Swami. What ever money and wealth found in these premises during this illegal raid are willing donations of the public and cannot constitute a criminal offense for which I-T raids are provided for in I-T Act. There are no charges by any of his devotees of deceit or defrauding, and hence I demand to know how the Finance Minister sanctioned such an illegal raid unless Ms. Sonia Gandhi had ordered him to do so.

Adigalar Swamiji has been working for a united Hindu society based on a Vedic concept of equality of all souls. He has millions of followers from the downtrodden people of India. But this was not to the liking of foreign Christian missionaries who felt the Adigalar Swamiji made it difficult for them to get Christian converts by financial inducement. Hence this raid has been carried in an attempt to defame him. But it will be a fiasco that will boomerang on the his detractors.

I demand all Tamil Nadu MPs tender their resignation form Parliament in protest unless the Prime Minister makes a public apology to the Adigalar Swami, and returns the seized properties along with Rs.10 crores as compensation for the mental anguish caused to his fiollowers. Otherwise I will move the Hindu Dharma Acharya Sabha to take this matter to the level of agitation throughout the country.

Targeting of Hindu sants and sadhus is a part of the Sonia Gandhi-directed and Vatican-ordered campaign against Hindu society to coerce Hindus to convert to Christianity.

21.05.2009

I demand that the Tamil Nadu Government withdraw the bogus murder case pending against the Shankaracharya of Kanchi. It is a waste of public funds to continue with this now defunct case. The Supreme Court while granting bail to the Shankaracharya has already observed that the case lacked prima facie evidence. No new evidence has been unearthed since then.

Moreover, in a recent judgment [(2009) 4 SCC 437], the Supreme Court has held that “arrest is not a must” in all murder cases. The Apex Court held that principle guiding the arrest laid down in its earlier 1994 judgment, is that to require arrest, the suspect could disappear or melt into a crowd, and hence become unavailable. Therefore such accused have to be held in custody for purpose of investigation. This principle does not apply to the Shankaracharya even in the wildest of imagination, and hence the Jayalalitha-led Tamil Nadu Government broke the law laid down by the Supreme Court, by throwing the Shankaracharya into Vellore Jail along with criminals and killers of Rajiv Gandhi. She must now express public regret for this illegal action.

இதெல்லாம் சாம்பிள்கள். இப்போது முக்கியமாக எழுந்துள்ள கேள்வி.  சுப்ரமணியன் சுவாமிக்கு இஸட் ப்ளஸ் பாதுகாப்பு வழங்கப் பட்டு வருகிறது.  இந்தப் பாதுகாப்புக்கு சொல்லப் பட்ட காரணம் சுப்ரமணியன் சுவாமிக்கு  விடுதலைப்புலிகளால் ஆபத்து இருக்கிறது என்பதுதான்.  இஸட் ப்ளஸ் என்றால் இரண்டு குண்டு துளைக்காத வாகனங்களோடு, 24 மணி நேரமும் 36 தேசியப் பாதுகாப்புப் படை கமாண்டோக்கள் பாதுகாப்பு வழங்கி வருகிறார்கள்.    ஒவ்வொரு கமாண்டோவுக்கும் ஒரு மாதத்துக்கு ஏறக்குறைய எல்லா அலவன்சுகளையும் சேர்த்து ஒரு லட்ச ரூபாய் வரும்.   இது போக வாகனங்களுக்கு ஆகும் செலவையும் அரசே ஏற்கிறது.

சுப்ரமணிய சுவாமி, பிரதமரோ, மத்திய அமைச்சரோ அல்ல.   அவருக்கு இருக்கும் வாழும் உரிமை, இந்தியாவில் உள்ள அனைத்துக் குடிமக்களுக்கும் உண்டு.  அப்படி இருக்கையில் இவருக்கு மட்டும் மக்கள் வரிப்பணத்தில் மாதத்துக்கு 50 லட்சம் செலவில் எதற்காக பாதுகாப்பு வழங்க வேண்டும்.  மேலும், சுப்ரமணியன் சுவாமியின் கூற்றுப் படியே, விடுதலைப் புலிகள் இயக்கம் அழிக்கப் பட்டு விட்டது.  அப்படி இருக்கும் போது, இன்னும் எதற்காக இவருக்கு இந்தப் பாதுகாப்பு தொடர்ந்து வழங்கப் பட வேண்டும் என்பது புரியாத புதிராக உள்ளது.

ஊழல் குற்றச் சாட்டுக்களை வெளிப்படுத்துபவர்கள், முதலில் தங்கள் கணக்கு வழக்குகளை பொதுப்படையாக தெரிவிக்க வேண்டும்.  அது போலவே சுப்ரமணியன் சுவாமியும், தனக்கு வரும் வருமானம் குறித்த விபரங்களை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
நன்றி : சவுக்கு தளம் 

0 comments:

Post a Comment