Wednesday, November 19, 2014

The Triumph - (கவனக்குறை உள்ளவர்கள் இதைப் படிக்க வேண்டாம்!)




--------------------------------தயவுசெய்து கவனமாக படிக்கவும்------------------------------------




"Any Reading trick or act  consists of four parts:

*The Reader recognises the words and makes those words vocalise or echo in his mind, that's called Recite.*
 
**The Reader adds colours, feelings, emotions, images, motion pictures, senses to what he recognised, that's Imagination.**

 
***He has to store those datasets in his mind in the format that he can easily retrieve, we call that -Memorisation. ***

 
****But that cannot complete,
He have to bring out or reproduce what he read from his storage,that's called the Triumph..
****




**மூச்சு முட்டுகிறது .அலையடிக்கவில்லை ஆற்றுநீர்தான் அது.ஆமாம்!!பாரமாக உள்ளது .எப்படி??எப்படி????

 எப்படி னா??? பத்து மாடிக் கட்டிடம் மேலே விழுந்தால் எப்படி இருக்குமோ அப்படி !.


ஏழாம் அறிவு

'முன் அந்தி சாரல் நீ
முன் ஜென்ம தேடல் நீ
நான் தூங்கும் நேரத்தில் தொலை
தூரத்தில் வரும் பாடல் நீ
' பாட்டுல ஸ்ருதி கூட இப்படி தானே நீச்சலடிப்பாங்க..ம்ம்ம்..சூப்பரா இருக்கும்.டே நாதாரி!
இந்த ரணகளத்துல உனக்கு கிளுகிளுப்பு கேட்குதா ..ஒழுங்கா வேலையப்பாரு ..

சரீஈ ...சரி.. !கை ய நான் மேல தூக்கல .கீழ் நோக்கித் தான் அழுத்துகிறேன்.தண்ணீருக்குள் நடப்பது போல கால்கள் இரண்டையும் அசைக்கிறேன்.ஆமாம் மேலே வருவது போல தான் உள்ளது.


ஆஆஆஆஆஆஆ!!!!!!!!!!!!!!!!!!!!!..குஞ்சாமீன் கடித்து விட்டது .இந்த ஆற்றில் இந்த வகை மீன்கள் நிறைய இருக்கும்.சரி.!

இதுஉடலில் கடிக்கும் இடம் வில்லங்கமானது ஆகையால் அந்த இடத்தையே மீனின் பேரில் இணைத்திருக்கின்றனர்.கரண்ட் (மின்சாரம் தான்) தாக்கியது போல வெடுக்கு வெடுக்கு என்று இருக்கும் .
வெடுக்கு வெடுக்கு..
ம்ம்ம்..சரி.இதில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு எளிய வழியும் இருக்கிறது ..இது ஆற்று நீரில் மட்டுமே வளரும் .அதாவது உப்பு ஆகாது.

ஓஓஓஓ!!!!!..சரிசரி..புரிகிறது ..
உப்பு அப்படித்தானே?
சரி பிடித்துக் கொண்டேன் .

ஆனால் கடித்த வலி உயிர் போகிறதே!..உயிர் மட்டுமா?
திரிஷா கூட தான் போகப் போகிறாள் .யாருகூடத் தெரியுமா? ரேடியன்ஸ் கட்டிடக் கம்பெனி ஓனர் வருணுக்கு.ஏன் வருண் மணியன் சார்! நீங்க கட்டுகிற கட்டிடம் தான் அதற பழசு மாதிரி இருக்குனா .?
நீங்க கட்டப் போற .................த் தூ!
வாய மூடு.!!முட்டாள் !எங்க இருந்திட்டு என்ன பேசுற?..


மெதுவாக அதே போல கைகால் களை அசைத்துப் போய்க் கொண்டிருந்தால்,பக்கத்திலேயே ஒரு பாறாங்கல்!
 'அய்யோ அம்மா!!!!!!!'பாறாங்கல்!இந்த ஆற்றில் இதுவும் அதிகம்.

அதுக்குன்னு இந்த பெருசா !

தண்ணீர் குறைவாக இருந்தால் நல்லாத் தெரியும் .ஆனால் இப்போது நீர் நிறைய இருப்பதால் பல பாறைகள் தெரிவதில்லை .சரி! ..

அதனால் தலையில் அடிவிழுந்து ரத்தம் கொட்டும்.ஆமாம் கொட்டுகிறது.முடிந்த மட்டும் 'ரிவர்ஸ் நீச்சல்' -அதாவது கால்களை முன் பக்கம் செல்லும்படி கைகளைப் பின் பக்கம் அசைத்தால் போதும் .

கைகளைப் பின் பக்கம் சுற்றுகிறேன் அப்படித்தானே !..ம்ம்ம்!சூப்பர் !!
சரி இப்போது இரத்தம் மண்டையில் இருந்து ரத்தம் ஊற்றுகிறதே அதற்கு நான் என்ன செய்ய .?.

அடக் கடவுளே !அடுத்து இதென்ன  சுழலா ??..

Whirlpool..!

 பலரும் இந்த சுழலில் சிக்கித்தான் செத்துள்ளனர்!.
பயமாக உள்ளது..ஆஆ!!!..சிக்கி விட்டேன்..ஐயோ !!உள்ளே இழுக்கிறதே!

கடவுளே!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!! காப்பாற்று!.கை கால்கள் நடுங்குகிறது.ஆம் நடுங்குகிறது.!பயப்படக் கூடாது.பயம் போக்க  நான் தான் ஏதாவது செய்து கொள்ள வேணுமா?.
என்ன கருமம்டா இது!
சரி!ஆரம்பிடா அனந்து!!

"அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடைமையடா
ஆறிலும் சாவு நூறிலும் சாவு 



அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!
உச்சிமீது வான்இடிந்து
வீழுகின்ற போதினும்
அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!."


(நல்லது !!..நீ எஸ்கேப்!! ஏன் தெரியுமா ?
நீ பயப்பட வில்லை.!!!)

ஒருவன் சுழலில் சிக்கி சாகிறான் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் பயம்..பயந்தால் கை கால்களைத் தாறுமாறாக அசைப்போம் .தண்ணீர் மூக்கு வாய்க்குள் எல்லாம் போகும் .பொறவு சங்கு தான் .அதே அந்த சுழலின் போக்கிலேயே விட்டுவிட்டால் கீழே தான் தள்ளும் ஆனால் ஒரு அளவுக்குப் பிறகு சராசரி ஆகி விடும்.

அந்த பயம் தானே ..?..
ம்ம் ..!பயத்த மட்டும் கண்ல காட்டீறாத கொமாரு!
அவ்வளவு தான்.

கரை வந்து விட்டது .மேலே போய் கடிகளுக்கும் அடிகளுக்கும் மருந்து போட்டுக்குவேன்.!....................

அப்பாடா!!!.........................**




***டொக் !(சத்தம் கேட்கிறது).

பரிசல் ஒரு பாறையில் முட்டி ஓட்டையாகி விட்டது.
 பரிசல் கவிழ்கிறது.

நான் கீழே தண்ணீரில் விழுகிறேன்.தண்ணீர் என்னை அழுத்துகிறது.பாரம்.இருப்பினும் கால்களை நடப்பது போல முன்னும் பின்னுமாக அசைக்கிறேன் .கைகளைக் கிழ் நோக்கி அழுத்துகிறேன்..மீன்கள் என்னை நோக்கி வருகின்றன .நான் மூத்திரமடித்துக் (உப்பு!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!)கொண்டே வட்டமடிக்கிறேன்,நீருக்குள் தான் .மீன்கள் வந்த வழியே திரும்பி ஓடுகின்றன.
பாறை போல் தெரிகிறது .'ரிவர்ஸ் நிச்சல்' அடிக்க ஆரம்பிக்கிறேன்.பாறையை எனது கால்களால் தொடுகிறேன்.பாறையின் ஓரத்தில் என் கால்களை அதன் மீது வைத்தேக் கடக்கிறேன்.
அடடா சுழல் !
'அச்சம் இல்லை அச்சம் இல்லை அச்சம் என்பது இல்லையே!'பாட ஆரம்பிக்கிறேன்.கீழே இழுத்தது .நான் திமிர வில்லை.அதன் போக்கிலேயே போனேன்.சிறிது நேரத்திலேயே இழுவை நீங்கி விட்டது.
வேகமா கைகளைக் கீழே அழுத்த மேலே வந்து விட்டேன் .மூச்சு விடுகிறேன்.கரையை அடைந்து விட்டேன் .அமரந்து பார்க்கிறேன் ..

அம்மாடி!!!..................................


என்னோடு வந்த எல்லோரும் இறந்து விட்டனர்!
பரிசல்காரர் ,மெல்ல கரையடைந்து எனதருகில் வந்தமர்ந்தார்.
நான் அனந்த பத்மநாபன் .நாங்கள் மென்பொருள் பொறியாளர்கள் .நாங்கள் ஐந்து பேர் விடுமுறைக்கு தர்மபுரி-ஹொகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு சுற்றுலா வந்தோம் .முத்துகிருஷ்ணன் ,ரங்கநாதன் ,பெருமாள் பிச்சை ,ஆராதனா - என் நண்பர்கள்.எனக்கு பரிசல் பயணம் செய்ய ரொம்ப ஆசை .பிச்சையிடம் சொன்னேன் .சரி இரு போவோம் .முதலில் ரெண்டு மீனை உள்ளே தள்ளுவோம் என மீன் கடைக்கு இழுத்துப் போனான் .செவச்செவ என மீன்கள் ஒவ்வொன்றும்,
ச் சே!!!எங்கள் ஒவ்வொருவர் வாயிலும் தனியாக ஒரு ஆறே உற்பத்தி ஆக ஆரம்பித்து இருந்தது .ரங்கா 'அவா ஆத்து அம்பி'ஆதலால் இந்த கோதாவில் அவன் இறங்க வில்லை .வயிற்றுக்குள் போனதும் மீன் துள்ளி குதித்து விளையாடியது .உற்சாகம் தாள முடியவில்லை .பரிசல் பயணம் .ஆனால் நாம யாருக்கும் நீச்சல் தெரியாதே! என்றான் முத்து .அவன் குண்டன்.தண்ணீரில் விழுந்தால் என்னாவது என்ற பயம் அவனுக்கு .நாங்கள் ஒரு பரிசல் அருகே சென்றோம் .பக்கத்திலேயே இருந்த பரிசல் காரரிடமே அதைக் கேட்டோம் .அவ்வளவு தானே தம்பிகளா!..நான் இருக்கேன் வாங்க என எங்களை இழுத்துப் போட்டுக் கொண்டு பரிசலை ஓட்டலனார் .

பரிசல் காவிரிக்குள் கொஞ்ச தூரம் போனது .அவரது பையில் இருந்து ஒரு புத்தகத்தை எடுத்துக் கொடுத்தார் .நீட்டிய உடன் ரங்கா டபக்கென்று வாங்கிக் கொண்டான் .
மனசுக்குள் ஏதோ மள மள வென படித்துவிட்டு சொன்னான் ஃப்பூ இவ்வளோ தானா?என்று .முத்துவிடம் கொடுத்தான் .அவனும் அதே போல படித்துவிட்டு,"ஏ ஆரா நீயும் படியேன் ."கொடுத்து விட்டு காவிரி கர்நாடகத்துக்கா தமிழகத்துக்கா யாருக்கு சொந்தம் எனக் கேட்டான்.ரங்கா என்ன சொன்னான் என நான் கவனிக்க வில்லை,ரெண்டு பேரும் சண்டை போட்டுக் கொண்டனர் .

நான் ஆராவைத் தான் கவனிக்கலாயிருந்தேன்.
ஆராதனா வாசித்தாள் ,அவளுக்குள் தான்.சத்தமாக அல்ல! (அவள் இதழசைவின் காற்று,என் முகத்தில் தேன் தூறும் தென்றலாய்!!ஆஹா!!!)


"முடிந்த வரை,இந்த பரிசல் உங்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்லும்.ஒரு வேலை,கவிழ்ந்தால்,
நீங்கள் செய்ய வேண்டியவை இவை.அதனால்,

--------------------------தயவு செய்து கவனமாகப் படிக்கவும்----------------------------------

இது காவிரி ஆறு.அலை அதிகம் இருக்காது.நீரில் விழுந்தவுடன் பாரமாக இருக்கும்.பெரிய கட்டிடம் நம் மேல் விழுந்தது போல!

நீச்சல்:
அது தெரியாவிட்டால் கூட பரவாயில்லை,கீழ்கண்டவற்றை செயல் படுத்துங்கள் போதும்.முக்கியமாக கையை எது காரும் மேலே தூக்கக் கூடாது.அது உங்களை நீருக்குள் மூழ்கடித்துவிடும். .கீழ் நோக்கித் தான் அழுத்த வேண்டும்.தண்ணீருக்குள் நடப்பது போல கால்கள் இரண்டையும் அசைக்க வேண்டும்.உங்களுக்கு மேலே வருவது போல இருக்கும்.

குஞ்சாமீன்:
இந்த ஆற்றில் இந்த வகை மீன்கள் நிறைய இருக்கும்.
இதுஉடலில் கடிக்கும் இடம் வில்லங்கமானது,ஆகையால் அந்த இடத்தையே மீனின் பேரில் இணைத்திருக்கின்றனர்.அது கடித்த இடம் மின்சாரம் தாக்கியது போல இருக்கும் .இதில் இருந்து தப்பிப்பதற்கு ஒரு எளிய வழியும் இருக்கிறது ..இது ஆற்று நீரில் மட்டுமே வளரும் .அதாவது உப்பு அதுக்கு ஆகாது.

பாறாங்கல்:
இந்த ஆற்றில் இதுவும் அதிகம் .தண்ணீர் குறைவாக இருந்தால் நன்றாகக் கண்களுக்குத் தெரியும் .ஆனால் இப்போது நீர் நிறைய இருப்பதால் பல பாறைகள் தெரிவதில்லை.இப்பாறைகளில் தலை முட்டியும் பலர் இறந்துள்ளனர்.முடிந்த மட்டும் ரிவர்ஸ் நீச்சல் அதாவது கால்களை முன் பக்கம் செல்லும்படி கைகளைப் பின் பக்கம் அசைத்தால் போதும்!தப்பித்து விடலாம்.


சுழல்:
Whirpool..!பலரும் இந்த சுழலில் சிக்கித்தான் செத்துள்ளனர் .
ஒருவன் சுழலில் சிக்கி சாகிறான் என்றால் அதற்கு மிக முக்கிய காரணம் பயம் ..பயந்தால் கை கால்களைத் தாறுமாறாக அசைப்போம் .தண்ணீர் மூக்கு வாய்க்குள் எல்லாம் போகும் .பிறகு மரணம் தான்.அதே அந்த சுழலின் போக்கிலேயே விட்டுவிட்டால் கீழே தான் தள்ளும் ஆனால் ஒரு அளவுக்குப் பிறகு சராசரி ஆகி விடும்.பயம் போக்க நீங்கள் தான் ஏதாவது செய்து கொள்ள வேணும்.

அவ்வளவேதான்.
இவற்றை பின்பற்றினாலேயேபோதும்,நீங்கள்  தப்பித்துக் கொள்ளலாம்.

தங்களின் பரிசல் பயணம் இனிதாய் அமைய வாழ்த்துகிறோம்.


-இவண்
குஞ்சாந் துரை பரிசல்  ஓட்டுனர் சங்கம்."



அவள் படித்து முடித்ததும் பிச்சையிடம் கொடுத்தாள்.அவன் இதெல்லாம் எவன்டா படிப்பான் என்று என்னிடம் தூக்கிக் கொடுத்து விட்டான் .


நான் படித்து முடித்த போது தான் இந்த அசம்பா விதம் நிகழ்ந்தது..........................................................................

பிச்சைக்கும் ஆராவுக்கும் தலையில் அடி.முத்துவும் ரங்காவும் சுழலில் சிக்கி!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!...............................,எனக்கு அழுகை வருகிறது .அதனால் விடை பெறுகிறேன்.

I triumphed !,But ,why not my friends ???
 

Because ,

"Any Reading trick or act consists of four parts:

*The Reader recognises the words and makes those words vocalise or echo in his mind, that's called Recite. *


**The Reader adds colours, feelings, emotions, images, motion pictures, senses to what he recognised, that's Imagination. **


***He has to store those datasets in his mind in the format that he can easily retrieve, we call that -Memorisation.***


****But that cannot complete,
it will be useless if stopped at this level ,

He have to bring out or reproduce what he read from his storage,that's called 

The Triumph..****






அருமை!.மச்சி நீயும் இதைப்படிச்சிப் பாரேன் .
இல்ல இல்ல நிச்சயம் நீ படிச்சுதான் ஆகணும்,என அவனிடம் திணித்தேன்.

"டேய் அனந்து ! படுத்தா டா !!!" என்றான் பிச்சை...........................................***






****டொக் (சத்தம் கேட்கிறது)


பரிசல் கவிழ்கிறது.!!!!









-தேன் !

0 comments:

Post a Comment