Tuesday, November 18, 2014

மவனே மாட்டிகினியா?





உங்கள் வீடு தான்.
சமையலறையில் நீங்கள் வைத்த டப்பாக்கள், கிண்ணங்கள், டம்பளர்களோ வைத்த இடத்தில் இல்லை.

இடம் பெயர்ந்திருக்கிறது.


மளிகைக் கடையில் பிளாஸ்டிக் கவருக்குக் கூடுதலாக  மூன்று ரூபாய் என்று தலையில் மிளகாய் அறைப்பான் .



என்ன செய்ய என அதிலேயே மளிகையும் வாங்கி வந்து வைத்து விட்டு அடுத்த நாள் விடிந்து பார்த்தால் ,அந்த கவரும் கிழிந்து கிடக்கும், நாய் பிராண்டியது போல .ஆனால் பிராண்டியது நாயல்ல !
என்னவாய் இருக்கும் என யோசிக்கிறீர்கள்.என்னவாய் தான் இருந்திடலாம் ?


இதுவாய் தான் இருக்கும் என பாசான மருந்து வைக்கிறீர்கள் .
அடுத்த நாள் காலை மீண்டும்  இடப் பெயர்ச்சி .அடங்கித் தொலைந்த பாடில்லை.


வேறு வழி யில்லை தேங்காய் மிதமாய் சுட்டு பொறி வைக்கிறீர்கள் .







அடுத்த நாள் காலை.எழுந்ததும் மாட்டிக்கிச்சு என்பார் விருந்தினி.நீங்கள் பார்க்கிறீர்கள் .சுண்டக்கா அளவிருந்து கொண்டு இது என்ன வேலை செய்துள்ளது என வியப்பீர்கள் .

 Rattus norvegicus.(sewar rat)




ஏக மனதாக உச்ச பட்ச தண்டனையை அளித்து அந்த பிரச்சினையில் இருந்து உங்கள் விரும்பினியோடு நீங்கள் விடுபடுகிறீர்கள் .




'பின்ன அடுத்தவர் சொத்தை அபகரிப்பது குற்றமல்லவா?,குற்றமே செய்தாலும் இப்படியா  ஆசை வலையில் விழுந்து மாட்டிக் கொள்வது ?மாட்டிக்கிட்டா அப்புறம் இப்படி தான் 'என்று கொன்ற குற்றத்திற்கு சமாதானம் சொல்லிக் கொள்வீர்கள் .அப்படி தான் நானும் .நீங்களும் அப்படி தான் மாட்டினீர் !"என்று கடைசி ஆசையை நிறைவேற்றும் பொருட்டு இறக்கும் முன்  எயிட்ஸ் நோயாளியிடம் விளக்கிக் கொண்டிருந்தார் கடவுள் .








அவன் கிட்ட மாட்டிக்காம தப்பு பண்ணுங்க !மாட்னா சங்குதான்!





உண்மைதான் இந்த உலகை நானா படைத்தேன் ?அல்லது உங்களில் எவருடைய பரம்பரை சொத்திந்தப் பிரபஞ்சம்?





"                              -பருத்ததொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் !
நாப்பிளக்க பொய்பேசி நவநிதியம் தேடி
நலமொன்னும் இல்லாத நாரியரை கூடிப்
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல்
பொலபொலவெனக் கலகலவெனப் புதல்வர்களைப் பெறுவீர்
காப்பதற்கும் வழியறியீர் கைவிடவும் மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையில் கால் நுழைத்துக்கொண்டு
ஆப்பதனை அசைதிட்ட குரங்கதனை போல
அகபட்டீர் கடந்துழல அகபட்டீர் நீரே"
-பட்டினத்தார் !


 




தேன்! 

0 comments:

Post a Comment