பட்டியிலிருந்து மந்தைகளை ஒட்டி ரொம்ப நாள் ஆகி விட்டது.தாய் கிழவி தான் இத்தன நாளா மேய்ச்சிக் கொண்டிருந்தாள்.
அப்படியே ஓட்டிக்கொண்டு மேய்ஞ்சமேடு பக்கமா போய்கொண்டிருந்தேன்.
வழியில் பச்சியக்காவும் குப்பாயக்காவும் வழக்கம் போல புரளி பேசிக்கொண்டுமந்தையோட கால் நடையா இருந்தார்கள்.மேட்டிலிருந்து வூட்டுக்கு போறாங்கனு நினைக்கிறேன்.
"யக்கோவ் ...."
கூப்பிட்டால் கூட திரும்பி பார்க்கவில்லை..
காது கேட்டிருக்காதுன்னு நினைக்கிறேன்.
மேய்ஞ்சமேடு--அழகா சொல்லணும் னா ...கலைஞர் சொன்னது மாதிரி பச்சைப் பட்டாடை உடுத்தி நின்றாள்..
தூரத்துல தேனத்தங்கரை தெரியும்.வோரட்டங்கைப் பக்கமா பாத்தா நம்ம வனம் முழுசையும் பாத்திடலாம்.
சொத்தாங்கைப் பக்கமா கொஞ்சம் கீழ இறங்கினா தேனாத்தோட மடு,,அதோட மடுவின் கரைஇருக்கும்,அதத் தாண்டினா மலங்காடு தான் ..நஞ்சாங்கரடும் பாங்க,அதுக்கு பின்னால கத்துவாங்கரடு,சித்தேரிக் கரடு னு முழுக்க காடுதான்.
எப்பவுமே கரேல்னே இருக்குமாம்.நம்ம வனத்துல இருந்து பச்சிளைப்புடுங்கி,கங்காணி , அப்றோம் தேம்பிளிஞ்சி(தேன் எடுக்கும் இனம்) கூட்டத்த தவற ,வேற யாரும் பெருசா அங்க போய் நான் பாத்ததில்ல,நம்ம பஞ்சாயத்து கூட போமாட்டாப்ள.
"டேய்.........",கத்தினேன்
நஞ்சாங்கரட்டிலிருந்து,மடுவைக்கடந்து,வனம் நோக்கி போய்க் கொண்டிருந்தான் கொசு விரட்டி.கூட நம்ம பரிதி சாமி வேற இருந்தாரு.
பரிதி சாமி ரொம்ப பெரிய படிப்பெல்லாம் படிச்சவரு.காட்டுசிறுக்கிக்கு நல்லத் தெரியும்.வனத்து பக்கம் எப்பயாச்சும் தான் வருவாரு.அப்படியே வந்தாலும் ஊமைச்சாமிய பாக்காம போகமாட்டாரு.மத்த படி பட்டினத்துல தான் அவருக்கு வேலை.ஆனாலும் நம்ம வனத்து மேல அவருக்கு கொள்ளைப்பிரியம்.நம்ம வனத்துல யாருக்காவது ஒடம்புக்கு ஒன்னுனா அவருக்கிட்ட தான் கூட்டிட்டுப் போவோம் தங்கமா பாத்துக்குவாரு.நல்ல மனுசர்.
மீண்டும் பலத்த சத்தத்தோடு கத்தினேன்.
"டேய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்யி..................."
கேட்டுவிட்டதென்று நினைக்கிறேன்.என்னை நோக்கிதான் வருகிறான்.
சோர்ந்து போய்இருந்தான்.

!...பிறகு
0 comments:
Post a Comment