இளநெஞ்சே வா!,
ஒப்பாரி,கால சுழற்சியில் காணாமல் போகும் அல்லது போய்க்கொண்டிருக்கும் தமிழனின் ஒரு பண்டை நாகரிகம் .ஒரு சொல் வழக்கு உண்டு ,'மேற்கத்திய நாடுகளில் கட்டிடங்கள் பெரிது ,மனமோ சிறிது.நம்மூரிலும் அது அரும்பியுள்ளதன் தடங்கள் தெரிகிறது .அதன் விளைவு பலபழக்கவழக்கங்களோடு ஒப்பாரியும் வழக்கொழிகிறது.நான் கேள்விப்பட்டிருக்கிறேன்,ராஜீவ் காந்தி ,எம்ஜியார் ,அண்ணா ,ஏன் காந்தியடிகள் மறைந்த போது கூட தமிழகத்தின் மூலை முடுக்குளில் எல்லாம் ஒலிப்பெருக்கி போட்டு ஒப்பாரியை ஒலிபரப்பினார்களாம்.சிறு வயதில் என் தாத்தா இறந்த போதுகூட ஒப்பாரியைக் கேட்டிருக்கிறேன் .
"ராசாதி ராசாவே உலகாள வந்தீரே உடல் வுட்டுப்போனீரே,உன்னாட்டும் ஒப்பு ஆரு?"
என பலவாறு பாராட்டி பின் உடல்தகனம் செய்தனர் .
இன்று அப்படி யெல்லாம் பல இடங்களில் காணோம் .மலர் வலையத்தோடு சடங்கு முடிந்துவிடுகிறது.
என் தாத்தா பாட்டியைப் புதைத்ததோடு பண்டைய தமிழ் பழக்கங்களையும் ,அதில் அவர்கள் புகுத்திய நுணுக்கங்களையும் புதைத்து விட்டோமோ ?என எண்ணத்தோண்றுகிறது.
ஒப்பாரியில் என்ன நுணுக்கம் இருந்து விடப்போகிறது ?
இருக்கிறது !
உயிர் பிரிந்த பின் அந்த ஆவி அங்கேயே சிறிது அலையும் அந்த உயிர் மகிழ்வுடன் வழிய
வழியனுப்பவே ஒப்பாரி பாடுவாதாக சில பெரியவர்கள் கூறுகிறார்கள் .
அதற்கு அறிவியல் விளக்கமும் உண்டு .மூளை செயல் மறைவதை சாவு என்கிறோம் அது உடல் சாவு.
ஆனாலும் உடலிலுள்ள ஏனைய செல்கள் 3-4மணிநேரம் உயிருடனே இருக்கும் ,பிறகு அவைகளின் செயலும் மறையும் இதை நுண்ணுயிர் சாவு அல்லது molecular death என்கிறோம் .அப்படி இறந்த பின்னும் உயிருடன் இருக்கும் செல்கள் கேட்கப்பதற்காகப்பாடபடுவதே ஒப்பாரி!
பிறந்தபோது ஆரி ரா ரோ! இறந்த பின் இந்த ஒப்பு ஆரி!!
காரணம் இல்லாமல் காரியமில்லை உயிர் நட்பே!!!
அன்புடன் கனிவுடன்,
தேன்!
0 comments:
Post a Comment