Monday, July 9, 2012

அவர்கள் கடவுளுமல்ல,அது கோவிலுமல்ல

உயிரைக் காக்கும் இடம் கோவில் போல.ஆனால் கோயில் குப்பை மேடானால் எப்படி இருக்கும் யோசித்துப் பாருங்கள்.


 அப்படி ஒரு இடம் தான் மருத்துவமனை.ஆனால் சொந்தகாசைப்போட்டு போட்டப்பணத்தை எடுக்க தவியாய் தவிக்கும் தனியார் மருத்துவமனை பற்றியல்ல.அரசு மருத்துவமனை.

என்னுடையது,உங்களுடையது நம் எல்லோருடைய பணத்தையும் முதலீடாகக் கொண்டு இயங்கும் அரசு மருத்துவமனை.

ஒரு மருத்துவமனை என்பதை விட்டுவிடுங்கள்,ஓர் இடம் எப்படி இருக்க கூடாது என்பதை வெளிநாட்டுக் காரனுக்கு எடுத்துக்காட்ட வேண்டுமானால் அரசு மருத்துவமனைகள் சிறந்த உதாரணம்.

சுத்தம் சோறு போடும் என்பதை சமூகத்திற்கு கற்றுக் கொடுவேண்டியது யார் பொறுப்பு????????????????
வாங்கும் பொருளில் இருந்தும் ,நாயாய் அல்லல் பட்டு அவதியுற்று சம்பாதிக்கும் பணத்தில் இருந்தும் வரிஎன்ற பெயரால் சுரண்டித் தத்தம் கொழுப்பைபெருக்கும் அரசின் பொறுப்பல்லாது வேறு யார் பொறுப்பு?
தர்மத்தில் தான் இயங்குவதாயினும் இங்கு எல்லாக் கோயிலும் சுத்தமாகத் தானே உள்ளது.அப்புறம் இந்த தர்மாஸ்ப்பித்திரிகளுக்கு மட்டும் ஏன் இந்த நிலை!!!???


உள்ளே நுழையும் போதே,நீயெல்லாம் எதுக்குடா பொறந்து துலச்சே என்று கேட்கிற தோரணையில் அதிகாரிகளின்-----மனப் போக்கு.



பிச்சைக்காரன் கூட தனியார் மருத்துவமனையை தேட வைக்கிற---சூழல்.
எல்லாவற்றிலும் ஒரு அலட்சியம்.



இவையனைத்தின் மொத்த உருவம் -அரசு மருத்துவமனைகள்.
இதுல ISO 9002-2012 certificate வேற கொட்ட எழுத்துல முன்னாடி தொங்க விட்டுக்க வேண்டியது---த்தூதெறி...

நம் காசை சம்பளமாய் வாங்கி திங்கும் நாதாரிகளுக்கு இருக்கும் திமிரை----எந்த மீட்டர் கொண்டு அளப்பது??இந்த தே********க்கு, மதம் பிடித்த யானைகள் கூடத் தேவலாம்..
நம்மால் வாழ்பவர்கள் அந்த அதிகாரிகள்---உனக்காக நாங்க இருக்கோம் என்று சொல்ல வேண்டியவர்கள்.ஆனால் நடப்பது என்ன?
-அவமதிப்பு; இகழ்ச்சி;வசையுரை;ஏளனம்.

சுடுகாட்டுக்கும்,இதைப் போன்ற அரசு மருத்துவமனைக்கும் உள்ள ஒரே வேறுபாடு---சுடுகாட்டில் பிணம்தான் எரியும்,இங்கோ நடைபிணங்களின் வாயும் வயிறும் எரிகிறதே.
எதிர்ப்பாற்றல் குறைந்து,சுயநல தொற்றுகள் பல கூடி மனிதத்தை மரணத்திற்கு இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது.
தன்னைப் போல பிறரை நினைக்க என்று பலஆயிரம் ஆண்டுகளுக்கு முன் அற்புதமாய் பாடிவைத்த தமிழர் நாட்டில்தான் இன்று இத்தகைய இழிநிலை.



உலகமே ஆயிரம் கிலோமீட்டர் வேகத்துல ஓடிக்கிட்டு இருக்கும் போது,மூவாயிரம் கிலோமீட்டர் வேகத்துல பின்னோக்கி இவைகள் போய்கிட்டு இருக்கே ---இதையெல்லாம் கேட்பார் யாரும் இல்லையா?? .



அதுதான் நம்ம கலக ஆட்சி இருக்கே,அதுகூட ஏன் இவற்றை யெல்லாம் கண்டுக்காம இருக்கு???
அடப்போங்க,குறட்டையுடும் நாய்களை நாடாளவிட்டு,திங்குதே, தூங்குதேனா எப்படி?

இதைப்போன்ற நிலை உள்ளதைத் தெரிந்தும்,வேறு வழியில்லாமல் அம்மருத்துவமனைகளையேநாடும் ஏழை மக்கள் ஒரு வகையில் சபிக்கப் பட்டவர்களாகவே இருக்கலாம் ,ஆனால்,
அடே அரசு மருத்துவ அதிகார நாதாரிகளே!!!
நன்றாக தெரிந்துகொள்ளுங்கள்.
நேற்று,இன்று தமிழ்நாட்டை ஆண்டவர்கள் வேண்டுமானால் உங்கள், தப்புத்தாளங்களை கண்டும்காணாதது போல் இருந்து, நீங்கள் தப்பிவிடலாம்,ஆனால் நம் எல்லோருக்கும் பொதுவான ஆண்டவன் இருக்கிறான். அவனிடன் உங்களின் எந்த பாச்சவும் பலிக்காது,பாவங்களுக்குயெல்லாம் பதில்சொல்லாமல் மரணம்கூடஉங்களுக்கு கிடைக்காது.



உடலால் வாழ இயலாத நிலையில் வாழும் வாழ்க்கை ---- சாபம்.


உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளசுத்தியுடன்,


காட்டுசிறுக்கி
தேன்மழை.

0 comments:

Post a Comment