Thursday, April 5, 2012

என் மாலை!

சுற்றிலும் புகைமண்டலம்-
கால்கள் தரையில் இல்லை என்பது மட்டும் நன்றாக தெரிந்தது!
ஏதோ ஒரு வகையான விசை நெஞ்சையும் முதுகையும் மெல்ல அழுத்தியது-
காற்றே  இல்லாமல் போனது போல் இருந்தது.
ஆனால்,மனம் மட்டும் ஏனோ நல்ல விழிப்பு நிலையில் இருந்தது!
திடீரென ஒரு பிரளய ஒளி தோன்றியது.
இடுக்கண் உதவும் நட்பாய்,மேல் இமை கண்களைக் காத்தது.
வெண்கலக் கலனில் விழுந்த கல் கொடுத்த ஒலி போல் இதுவரை கேட்ட சத்தம் நின்றது.
பிறகு ஒரு குரல் ஒலித்தது.சிறிது நேரம் ஒன்றும் புரியவில்லை.
கண்கள்  அது என்னவென பார்க்க முயன்றபோது,கூசிடும் ஒளியால் பழைய நிலைமைக்கே சென்றது.

நான் எங்க இருக்கேன்-கேட்டேன்
நீ என்னுடன் உள்ளாய்-அது சொன்னது.

இது யார்?-கேட்டேன்.
நீ யாராக நினைக்கிறாய்? - அதுவும் கேட்டது.

நான் ஏன் இங்கு இருக்கிறேன்- கேட்டேன்.
உன்  தேடலால் - சொன்னது.

நீ  என்ன செய்கிறாய்-கேட்டேன்.
மாந்தர்க்கு காற்றைப்போல் இருக்கிறேன்-அதன் பதில்.

புரியலையே-இது நான்.
பலருக்கும்  புரியாது-அவ்வொளி சொன்னது.

புரியாது+ஒன்னும் கண்ணுக்குத்தெரியாது+மக்களுக்குக் காற்றாய் இருப்பது,So Are You கடவுள்?-கேட்டேன்.
ஒளி மட்டும் பிரகாசமாய் இருந்தது பதில் இல்லை.
Hello இருக்கீங்களா?
கேட்டவுடன்,
இருக்கலாம்...உனக்கு இங்கு என்ன வேண்டும்-அது சொன்னது.

அப்படியானால்..நானும் உங்கள் பணியையே செய்ய விரும்புகிறேன்-என்று சொல்லி மீண்டும் பார்க்க முயன்றேன்..

அந்த ஒளியின் சிரிப்பலையில் என் உடல் அதிர்ந்தது.பிறகு அது அருகில் வருவதை உணர முடிந்தது.
நறுமனத்தோடு ஏதோ ஒன்று...மாலை என்று நினைக்கிறேன்..விழுந்தது!!!!!
ஒளி மறைந்தது.......................
மறைந்துவிட்டது.

டாக்டர்...டாக்டர்.....

விழித்தேன்!!!
இரவு 3மணி.

அந்த Patient desaturate ஆகிறாங்க என்றாள் செவிலி!
என் கழுத்தினில் இரு கைகளாலும் தடவிப் பார்த்தேன்-

STETHOSCOPE!!!!!!!!!!!!!!!!!



-அரண் பரிதிக் குமரன்

0 comments:

Post a Comment