கொலைவாளினை எடடா!
மிகுகொடியோர் செயல் அறவே!!
குகைவாழ்வரிப்புலியே!
உயர் குணமேவிய தமிழா!
வலியோர் சிலர் எளியோர்தமை
வதையே புரிகுவதா?
உதவாதினி ஒரு தாமதம்
உடனே விழி தமிழா!!
போரின் போது கூட இத்தகைய கூப்பாடுகள் வெளியாயினவா என தெரியவில்லை.
ஆனால்,Channel 4 ஆவணப்படம் இத்தகைய ஒரு பேரதிர்வலையை தமிழன் மனதில் உருவாக்கத்தான் செய்திருக்கிறது.
உனக்காக நான் கொன்றேன்.எனக்காக நீ ஜெனீவாவில் ஆதரிக்கவேண்டும் என்று நகர்ந்துகொண்டுள்ள இந்தியஅரசியலில், #killingfields என ட்விட்டரில் ஒலிக்கும் குரல்கள் நிச்சயம் ஒரு மாற்றத்தை உண்டாக்கும்.
இந்தியனின் சார்பில் நிச்சயம் அக்குரல் உலக நாடுகளின் சபையில் ஓங்கிஒலிக்கும்.இது திண்ணம்!!!
தமிழனாய் வேண்டாம் ஒரு மனிதாய் இருந்து யோசித்துப்பாருங்கள்.மேற்கண்டபடங்கள் உங்கள் ஈரகொலையை அசைக்கவில்லை?
விடுதலை வேண்டித்தானே போராடினர்,எதற்காக விடுதலை?கன்னித்திரைகிழிக்கும் கயவர்களின் கைவிலங்கிலிருந்து,
கட்டுடல் காளைகளை புழுவினைப்போல் நசுக்க என்னும் கால்களிலிருந்து
இம்மென்றால் சிறைவாசம்,ஏன் என்றால் வனவாசம் அனுப்பத்துடிக்கும் கருநாவிலிருந்து,
ஆனால் கிடைத்ததா??கிடைத்ததா அவ்விடுதலை????
கிடைத்தது!!!!!என்ன??
ஆம் கிடைத்தது,
உலகிலிருந்தே விடுதலை கிடைத்தது!!
மகிந்தா கொடுக்கவேண்டிய விடுதலை,மரணம் கொடுத்தது!!
எங்கோ எவர்க்கோ நடப்பது,நமக்கென்ன என்பவர்களே கேளுங்கள்!
தமிழென்னும் நம் உடலில் ஒட்டிய இரு கால்களில்.ஒன்று தமிழகம்,மற்றொன்று ஈழம்.அவ்விரு கால்களையும் கடல்தான் ஏனோ பிரித்தது.அதில்,நம் ஒருகால் வெட்டுப்பட,மறுக்கால் வேடிக்கைப்பார்ப்பது தகுமோ???!
ஆதியில் தோன்றிய இனம்,நாதியற்று மாண்டதே,ஏ தமிழினமே!! கொளுத்தும்வெயிலில் உன் நெஞ்சின் ஈரமும் வறண்டே விட்டதா?
ஆனால்,தீமையிலும் ஒரு நன்மையாய்,அப்போரில் நாம் கண்டது,உண்மையான தமிழினத்தலைவன் யாரென்று?
நாம் கேட்பதெல்லாம் இதுதான்,வக்கற்ற இனமானோம் குறைந்தபட்சம் வாக்குற்ற இனமாகவாவது இருப்போம்.
ஆம்,முடிந்தமட்டும் நம் குரலை உலகிற்கு ஓங்கி ஒலிக்கசெய்வோம்!
அரக்கனை நாடாள வைத்த இலங்கைவாசிகளே!நன்றாகக்கேளுங்கள், எங்கள் 8கோடிபேரின் கண்ணீர் நிச்சயம் சுனாமியாய் உங்களைத் தாக்கும்,எச்சரிக்கையோடிருங்கள்
உண்மையுடன்,உறுதியுடன்,உள்ளச்சுத்தியுடன்,
காட்டுச்சிறுக்கி
தேன்மழை

கலங்கிப் போய் நிற்கின்றேன். செய்வதறியாமல்
ReplyDelete.\\அரக்கனை நாடாள வைத்த இலங்கைவாசிகளே!நன்றாகக்கேளுங்கள், எங்கள் 8கோடிபேரின் கண்ணீர் நிச்சயம் சுனாமியாய் உங்களைத் தாக்கும்,எச்சரிக்கையோடிருங்கள்//
நிச்சயமான வார்த்தைகள்
இந்தப் படத்தை என் ப்ளாக் இல் பயன்படுத்தியிருக்கிறேன் தங்கள் அனுமதியின்றி
ReplyDeleteநோக்கம் ஒன்றே என்பதால் . தவறாக எண்ண மாட்டீர்கள் என் நம்புகிறேன்.