Wednesday, March 14, 2012

குறுக்குவழியில் வாழ்வைத்தேடிடும் திருட்டு உலகமடா!

திருட்டு பல வகைப்படும்.
பிறர் நன்மைக்காக திருடுபவர்களும் உண்டு-???வீரப்பன்,மம்பட்டியான் போல்!!!
ஆனால்,இது கொஞ்சம் வேறு வகையான திருட்டு!

பகல் திருட்டைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா?அதை உணருவோருக்குத்தான் தெரியும், அதன் வலி இல்லையா?
சமீபத்தில்கூட யாரென்றே தெரியாதவர்களை சுட்டுக்கொன்று பீத்திக்கொள்கிறதே காவல்த்துறை,அதில் பலியானவர்கள் தான் திருடர்கள் என நினைத்துக்கொண்டிருக்கும் அப்பாவித்தமிழ்க்குடிமகனே ஒரு நிமிடம்!!!!!!!!!


பயணங்களில் தண்ணீர் வாங்கிக்குடித்திருக்கிறாயா?
அப்போது கண்ணைமூடிக்கொண்டு கடைக்காரன் கேட்ட விலையைக் கொடுப்பாயே!!!!அதில் குறிப்பிட்டிருக்கும் விலையை கவனித்துள்ளாயா?
பிறமாநிலங்களைப் பற்றித்தெரியவில்லை,ஆனால் நீ ஒரு "தமிலா"னாக இருந்திருந்தால் நிச்சயம் ஒரு ரூபாய் ஏமாந்திருப்பாய்!இனியாவது கவனி!!!


 


இது தண்ணீருக்குத்தான் என்றில்லை-பால்,தின்பண்டங்கள்,புகையிலைச்சுருட்டுகள்,அதிமுக்கியமாக அனைத்து குளிர்பானங்கள்!!!!!
பால்,பேருந்து கட்டண உயர்விற்குப்பின் அதை ஒரு சாக்காகவே எடுத்துக்கொண்டு இப்போதெல்லாம் 2-10ருபாய் கூடுதாலாக கேட்க்கிறார்கள்!
அதிலும் சில கடைகள் இரண்டு வகையாக பிடுங்குகிறார்கள்.
ஒரு எடுத்துக்காட்டுக்கு ஒருகடையில் சென்று  1/2 லிட்டர் Coca-Cola கேட்கிறீர்கள்.நீங்களாகவே ஒரு ரூ.50 கொடுத்துவிட்டால் உங்களுக்கு மீதம் ரூ.22தான் வரும்.1/2 லிட்டர் Coca-Cola வின் M.R.P ரூ.25.இதுஒரு வகை.
இன்னொரு வகை எப்படின்னா,M.R.P பாத்துவிட்டு ரூ.25கொடுத்தால்,கடைக்காரன் மேலும் ஒரு ரூபாய் கேட்பான்,அது அந்த பாட்டில் இருந்த Fridgeக்காம்.இதாவது பரவாயில்ல,முதல்வகைய யோசிச்சுப்பாருங்க ரூ3 அபேஸ்!!!
இதில் சிலர் கண்ணைமூடிக்கொண்டு வாங்கிச்செல்வது பரிதாபம்!

 (இப்போ சொல்லுங்க இது பகல் திருட்டா இல்லையா?)
 



 ஒரு ரூவா fridgeக்குண்ண சரி,மீதி ரூ.2 எதுக்குடான்னா-

1.வெலவாசி ஏறிப்போச்சு
(அல்லது)
2.அப்படித்தான் வாங்கசொல்லிருக்காங்க.
(அல்லது)
3.இங்க இப்படித்தான்.
இதில ஏதாவது ஒரு பதில் உங்களுக்கு வரும்.
 

சரிடா!நீ கேட்கறதயே கொடுக்கிறோம் Bill கொடுன்னு மட்டும் கேளுங்களேன்.
அவ்வளோதான், எண்ணையில கடுகுபோட்டு பாத்திருகீகளா,
இல்லாட்டி அந்த கடக்காரான் மூஞ்சிலா பாத்திடலாம்!
நீ ஒரு வெளக்கெண்ண காசயும் கொடுக்கவேண்டாம் பாட்டில வச்சிட்டு போயான்னுட்டுருவான்.


 


Under the Consumer Goods (Mandatory Printing of Cost of Production and Maximum Retail Price) Act, 2006படி இவனின் இத்தகைய அனைத்துசெயலும் சட்டப்படி குற்றம்.இது எத்தனை பேருக்குத்தெரியும்????
நமக்குத்தெரிந்தே இருந்தாலும்,
 யார்ரா பொழப்பக்கெடுத்துக்கிட்டு Consumer Courtக்கெல்லாம் போயிகிட்டு!!!!!!!!
இந்த உணர்வு தானே அனைவருக்குள்ளும் மேலோங்குகிறது.
அதனால்தான் இதைப்போன்ற கடக்கார பேமானிகளுக்கு(!!!!???) இளக்காரமாப்போச்சு!!!!
 

இதே நாம அந்த 1ரூவா,2ரூவா கொடுக்கலனா,அந்த கடக்காரன் என்னென்ன ஆர்ப்பாட்டம் பண்ணுவான்?,யோசிச்சுப்பாருங்க!!!

யாரவது அவன் கடையில் திருடிட்டா அப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்படி பதறராணுவளே,அப்ப தினம் தினம் தெனாவட்டா ஒவ்வொருத்தன் பாக்கெட்ல இருந்தும் லவட்டம்போது, பெருள வாங்கறவங்கவங்களுக்கு எப்படி இருக்கும்??
இந்தநேரத்துல திருட்டுப் பசங்களுக்கு ஒரு அறிவுரை,பேசாம நீங்க ஏன் ஒரு bakery,Tea stall,Theatre Canteen,இந்த மாதிரி Tryபண்ணக்கூடாது?
தொழிலுக்கு தொழிலுமாச்சு,Court,caseனு அலையாம குழந்த,குட்டிகளோட வாழ்ந்தமாதிரியும் ஆச்சு!!!இல்லைங்களா?? 






இவனுங்கள என்னதான் பண்ணலாம்,
We are Powerless and the power of the powerless is ??????????????????just  to Adjust with anything and everything!
 

ஒரு அழகான தாமரையாய் இருந்தது நம் சமூகம்.
மெல்லமெல்ல இதைப்போன்றபல பேராசைப் பாசி படிந்து,
இன்று முழுதாமரையும் சேற்றுக்குள்!!!!




பொருளை தயாரிப்பவனே கொள்ளை லாபத்தில் தான் விற்கிறான்.
இருந்தும், இதுதான் விலைஎன்று நிர்ணயம் செய்து,உறுதி செய்து,இறுதி செய்து அச்சடிச்சுக் கொடுக்கிறான்.
அதிலும் ரெண்டு ரூபா,நாலு ரூபானு புடுங்கிதிங்கீறீங்களே!பிச்சைக்காரத்தனமா!!

எத நினைச்சிட்டு இப்படி புடுங்கறீங்க?
இங்கே  எல்லாரும் சேர்ந்து சாப்படனுமா,அல்லது எல்லாத்தையும் சேர்த்து ஒருத்தனே சாப்படனுமா?
இதற்கு  விடையறிந்தோர், அப்படிப்பட்ட கடைக்காரர்களிடம் கூறிடுமாறு தேன்மழை சார்பில் கேட்டுக்கொள்கிறோம்!




சிறு குறிப்புகள்:

1.ஒரு விதி விலக்கு!
டெல்லி  உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள ஒரு தீர்ப்பில்,
மரச்சாமான்கள் மற்றும் அலங்காரம், linen, பீங்கான் பாண்டங்கள் and வெட்டுக்கருவிகள், and in the eating places of today he may add music and a specially provided area for floor dancing and in some cases a floor show போன்ற பல கூடுதல் வசதிகள் தருவதால் உணவுவிடுதிகள் MRP யை விட விலையை கூட்டிகொள்ளலாம்.[இணைப்பு].
அப்படியே  போனாலும்,பைசாவுக்கு ப்ரோஜனமில்லாதா லொடுக்கு tea கடையெல்லாம் விலையேத்தறத எப்படிப் பொறுத்துக்கிறது?????!!!

2.இதைப்போன்ற லேபெல்களைப் பாருங்கள்.அதில் மின்அஞ்சல் முகவரிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன,குறைந்தபட்சம் இதிலாவது புகார் செய்வோம்!ஏதோ நம்மால முடிஞ்சது!






-கொக்குவிரட்டி
தேன்மழை

5 comments:

  1. நீங்கள் சொல்லும் கன்ஸ்யூமர் கோர்ட்டில் ஆதாரமாக பில் கேட்பார்கள்... ஆகையால் நீங்கள் முதலிலேயே தோற்று விடுகிறீர்கள்... ஆனால் ஒரு கன்ச்யூமராக உங்களிடம் ஒரு பெரும் ஆயுதம் இருக்கிறது... அது புறக்கணிப்பு... இந்த மாதிரி கடைகளை புறக்கணிக்க சொல்லுங்கள்... மெயில் அனுப்பி யாரும் வந்து தட்டி கேக்க போவதில்லை..

    you dont know how much power you have, but of course all hands must join together... till then boycott these shops

    ReplyDelete
  2. However we boycott, its all lies in the hands of government to ban these kinds of products.

    Of course, this may happen if we join hands together.

    ReplyDelete
  3. என்னையும் பொருளாய் எண்ணி
    எழுதரும் அங்க யற்கண்

    அன்னைஎன் கனவில் தோன்றி
    அடிகள்நும் வரவும்,

    சொன்னநற் றமிழும் பற்றி நீவிர்
    சொன்னதால்....(-பாவேந்தர்!)

    மேன்மைமிகு கந்தசாமி ஐயாவிற்கு தேன்மழையின் பணிவான நன்றிகள்!

    ReplyDelete
  4. நன்றிகள் தோழர் சூரிய ஜீவா,நீங்கள் புறக்கணிப்பு பற்றி சொன்னீர்கள்.ஊரில் ஏதோ ஒரு கடை இப்படி இருந்தால் பரவாயில்லை,புறக்கணித்து விட்டு வேறு கடையில் வாங்கலாம்.ஆனால் எல்லாக்கடைகளும் அப்படி இருந்தால் என்ன செய்ய?

    Power பற்றி சொன்னீர்கள்,தீக்குச்சியை விட,அவை இணைந்து உருவாகும் தீப்பந்ததுக்கு மதிப்பதிகம்.

    ஆனால் பதிவில் கூறியது போல்,தம் அலுவல்கள்விடுத்து யார் இதற்காக குரல் கொடுக்கத்தயார்?அண்டைநாட்டில் இனமே அழியும்போது,மௌனசாட்சிகளாகத்தானே நம்மால் இருக்க முடிந்தது??!!

    காலம் நமக்கு உணர்த்திய பாடம் - "தமிழினத்திடம் ஒற்றுமைஉணர்வு குறைவு"

    தோழி அணு "தடை" பற்றிக்கூறியிருந்தார்.
    நீங்கள் தடை விதிப்பதாய் இருந்தால் எத்தனைப்பொருள்களுக்கு தடைவிதிப்பீர்.

    முதலில் இப்பிரச்சனையை முன்னெடுத்து சென்றால் தானே மற்றஎதுவும் நடக்கும்.
    அதற்கே இங்கு ஆள் இல்லையே!

    ReplyDelete