Sunday, January 1, 2012

முதல்ல இவங்க மேல பாறாங்கல்ல போடணும்!


மக்களின் நம்​பிக்​கையை வைத்து லாப​கர​மாக வியாபாரம் செய்வது எப்படி என்பதை நமது தொலைக்​காட்சி சானல்க​ளைப் பார்த்​துத்​தான் கற்​றுக்​கொள்ள வேண்​டும்.
காலை​யில் எழுந்தவுடன், அவசர அவசரமாகக் குழந்தைக​ளைப் பள்​ளிக்கோ கல்லூ​ரிக்கோ தயார் செய்து அனுப்பி​விட்​டுக் கணவரை அலுவலகத்​திற்​குப் புறப்படச் செய்வதற்​குள் குடும்பத்தலைவிக​ளுக்கு போதும் போது​மென்​றாகி விடுகிறது. இடையே மூச்சுவிடக் கூட நேரம் இருப்ப​தில்லை என்ப​தால், தொலைக்​காட்சி​யின் பக்கம் கவனம் செலுத்துவது என்​கிற பேச்​சுக்கே இட​மில்லை.​ அத​னால்​தான் பெரும்​பா​லான சானல்க​ளில் ஆன்மிகம், செய்திகள் போன்ற அனைவ​ருக்​கும் பொது​வான நிகழ்ச்சிகள் அந்த நேரத்​தைப் பங்கு​போட்​டுக் கொள்​கின்றன.




இந்தக் காலை​நேர அவசரங்கள் முடிந்த பிறகு, நிதானமாகத் தொலைக்​காட்சி​யைத் திருப்​பும் குடும்பத் தலைவிகள் மீது தங்கள் தாக்குத​லைத் தொடங்கு​கின்றன நமது சானல்கள். பொது​வாக, ஒவ்​வொரு குடும்பத்தி​லும் ஏதாவது ஒரு பிரச்னை குறித்த கவலை குடும்பத் தலைவிக​ளுக்கு இருப்ப​துண்டு. இந்தக் கவலை​யைத் தங்க​ளுக்​குச் சாதகமாகப் பயன்ப​டுத்தி, அவர்களது அறியாமையை​யும் நம்​பிக்கையை​யும் காசாக்க முயல்​கின்றன சில வர்த்தக நிறுவனங்கள். உங்கள் பிரச்னை தீர​வேண்​டுமா? இந்தக் கல்லை வாங்​குங்கள், அந்தக் கவசத்தை வாங்​குங்கள் என்று சானல்க​ளில் ஜோராகக் களை கட்டுகிறது இந்த நம்​பிக்கை வியாபாரம். காசு ஒன்றே குறி என்​கிற உன்னத​மான குறிக்கோ​ளோடு, கண்ணை மூடிக்​கொண்டு சானல்க​ளும் இதற்​குத் துணை போவது கொடுமையி​லும் கொடுமை!

விஜய் தொலைக்​காட்சி​யில், அதிர்ஷ்டக் கற்களை விற்பனை செய்வதற்​காக வரும் நகைக்க​டைக்காரர், போக​ரின் பாஷா​ணம், சித்தர் திருவள்ளுவர், காமா கதிர்கள், இரும்பு தங்க​மாக மாறுவது (தெரிந்​தால் இவரே தங்கம் தயா​ரிக்க வேண்டியது​தானே!) என்பது போன்ற ஒன்​றுக்​கொன்று சம்பந்த​மில்​லாத விஷயங்களை அதிர்ஷ்டக் கற்களுடன் தொடர்​புப்ப​டுத்​திப் பேசி​யும், ஜெம்மாலஜி, க்ராஃபாலஜி, அஸ்ட்ராலஜி, ஃப்​யூச்சராலஜி, நியூமராலஜி என்று ஏகப்பட்ட 'லஜி'களைக் கூறி​யும், ஏற்கெனவே குழப்பத்​தில் இருப்பவர்களை மேலும் குழப்பத்​தில் ஆழ்த்தி​னார்.



உங்கள் ஜாதகத்துடன் நகைக்க​டைக்​குள் செல்வது, மாஸ்டர் செக்கப்​பிற்​காக மருத்துவம​னைக்​குச் செல்வ​தைப் போன்றது என்று தனது வியாபாரத்​திற்கு வலு சேர்க்​கும் இவர் சொல்ல வருவது என்ன​வென்​றால், 'எங்கள் கடை​யில், நாங்கள் கூறும் ரத்தினக் கற்களை வாங்கி அணி​யுங்கள், உங்கள் பிரச்னைகள் அனைத்​தும் தீர்ந்துவி​டும்' என்பது​தான். கல் ஒன்று, மாங்​காய் இரண்டு என்பது பழ​மொழி. கல் ஒன்று, பலன்கள் பல என்பது இந்த நிகழ்ச்சி மூலம் நாம் தெரிந்து​கொண்ட புது​மொழி!

அதிர்ஷ்டக்கல் வியா​பாரி தனது வியாபாரத்தை முடித்து​விட்​டுச் சென்றவுடன் அந்த இடத்தை விரைந்து நிரப்புகி​றார் கட​வுள் பெய​ரில் கவச விற்பனை செய்​யும் சாமி​யார் வேட​மிட்ட ஒரு வியா​பாரி.​ செல்வச் செழிப்பு, புகழ், நோயற்ற ஆரோக்​கிய வாழ்வு ஆகியவற்​றோடு எதிரிகளை வீழ்த்துவது, விபத்திலி​ருந்து காப்பது, வழக்குக​ளில் வெற்றி பெற வைப்பது போன்ற உப பலன்களை​யும் நல்குகிற​தாம் இந்தக் கவசம் (ராணுவத்தினர், வாகன ஓட்டிகள், வழக்குறைஞர்கள் கவ​னிக்க)​. குழந்தைக​ளுக்​குப் பள்​ளிக் கட்டணம் கூடக் கட்ட முடி​யாத நிலை​யில் இருந்த ஒருவர், இந்தக் கவசத்தை வாங்​கிய பின்னர் (கவசம் வாங்க மட்​டும் காசு எங்கி​ருந்து வந்த​தென்று தெரிய​வில்லை!) செல்வச் செழிப்​பில் திளைப்பதாகப் பேட்டி​யும் உண்டு.இதைத் தொடர்ந்து - கண் திருஷ்​டியிலி​ருந்து காக்​கும் மெகா சுரக்ஷா கவர். கண் திருஷ்டி பற்றி பைபிளி​லும் குரானி​லும் கூடக் குறிப்பிடப்பட்டி​ருப்பதாகக் கூறித் தங்கள் வியாபாரத்​திற்கு வலு சேர்த்​தார்கள் இந்நிகழ்ச்சி​யில். கல்யாணமா​காத பெண்கள் இதை வாங்கி​னால் உடனே திருமணம் நிச்சயமாகு​மாம் (பலன​டைந்தவ​ரின் பேட்டி​யும் உண்டு). இத்த​னைக்​குப் பிற​கும் நீங்​கள் ஏமாளியாகாமல் இருந்​தால் ஆச்சரியம்​தான்!

மக்கள் தொலைக்​காட்​சிப் பக்கம் போனால், 'உங்க​ளைச் சொட்டை, வழுக்கை, கிரிக்​கெட் கிர​வுண்டு என்று கிண்டல் செய்கி​றார்களா? கவ​லைப்​பட வேண்​டாம், எங்க​ளுக்கு போன் செய்​யுங்கள்' என்று அழைத்​துக்​கொண்டி​ருந்​தார் ஒருவர். ஏதோ காவல்துறையின​ரின் அறி​விப்பு இது என்று நினைத்​தால், அது உங்கள் தவறு. குறிப்​பிட்ட தைலத்தை வாங்​கிப் பூசி​னால், இத்த​கைய கிண்டல் பேச்சுகளிலி​ருந்து தப்​பும் அள​விற்கு உங்கள் சொட்டை, வழுக்கை​யெல்​லாம் மறைந்து முடி கருகரு​வென்று வளரு​மாம். மக்க​ளின் பலவீனங்க​ளில் இது​வும் ஒன்றல்லவா? அதைக் காசாக்க முயல்பவர்க​ளுக்கு உத​விக்​கொண்டி​ருந்தது மக்கள் தொலைக்​காட்சி. நீங்க​ளுமா?

மெகா தொலைக்​காட்சி​யிலோ, கருப்பானவர்க​ளைச் சிவப்​பாக மாற்​றும் மந்திரக் களிம்பு விற்பனை... அந்தக்​கால முனிவர்க​ளின் கடுமை​யான உழைப்​பின் பல​னாம் இது (முனிவர்கள் இதற்காகத்​தான் கடுந்தவம் புரிந்​தார்கள் போலி​ருக்கிறது!). ஜெயா, ராஜ், பொதிகை எனப் பெரும்பா​லான சானல்களை ஆக்கிர​மித்​துள்ள இந்த வியா​பார வில்லங்கங்கள் எவ்வளவு விபரீதமானவை என்பது பற்றி யாருக்​கென்ன கவலை? Magical remedy பற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்று, ஏதோ விதி இருப்ப​தாக, எப்​போதோ, யாரோ சொல்லக் கேட்ட ஞாபகம்! அப்படி ஏதாவது இருக்​கும் பட்சத்​தில், அந்த விதி எங்கே தூங்​கிக்​கொண்டி​ருக்கிறது என்ப​தைக் கண்டுபி​டித்​துக் கொடுப்பவர்க​ளுக்​குப் பரிசு அறி​விக்க​லாம்!

கல், தகடு, அதிர்ஷ்டம் என்ற நம்​பிக்கைகள் ஒருபுறம் என்​றால், பங்​குச்சந்தை மீதான நம்​பிக்கை மறுபுறம். இந்த நம்​பிக்கை​யைப் பங்கு​போட்​டுக்​கொண்டு விற்பதி​லும் சளைத்தவையல்ல நமது சானல்கள். வணிகம் வசப்ப​டும் (கலைஞர்), வளாகம் (மக்கள்), வர்த்தக உலகம் (சன் நியூஸ்), மார்க்​கெட் டிப்ஸ் (ஜெயா பிளஸ்) என்று எல்​லாச் சானல்களி​லும் ஏதாவது ஒரு வடி​வில் நுழைந்து விடுகிறது பங்​குச்சந்தை.

எந்தப் பங்கை வாங்க​லாம்? என்ன விலைக்கு வாங்க​லாம்? சந்தை ஏறுமா, இறங்​குமா? என்பது போன்ற கேள்விக​ளுக்​குப் பதில​ளிக்கக் காத்தி​ருக்கி​றார்கள் பங்​குச் சந்தை வல்லுனர்கள். குடுகு​டுப்​பைக்காரன் குறி சொல்வது போல இவர்கள் கொடுக்​கும் பரிந்து​ரையை நம்பி, பங்​குச் சந்தை​யில் பணம் போடுபவர்க​ளைப் பார்த்​துப் பரிதாபப்படாமல் வேறென்ன செய்ய? பங்​குச்சந்தையை​யும் பரிந்துரைகளை​யும் நம்பு​வோர் இருக்​கும் வரை, இந்நிகழ்ச்சிகளை வழங்​கும் சானல்க​ளின் வியாபாரம் அமோகம்​தான்!

எல்லா நம்​பிக்கைக​ளும் ஏதோ ஒருவகை​யில் வியாபாரமா​கிக் கொண்டி​ருக்க, ஜனநாயகத்​தின் மீது மக்கள் கொண்டி​ருக்​கும் நம்​பிக்கை​யும் வியாபாரமா​கிக் கொண்டி​ருந்த​தைச் செய்திக​ளில் பார்க்க முடிந்தது. வாக்காளர்க​ளுக்கு மதுபானம், வேட்டி சட்டை வழங்கப்பட்டதை ஒரு சான​லில் பார்த்த அதிர்ச்சி அடங்​கும் முன்​னரே, வாக்காளர்க​ளுக்கு வழங்குவதற்​காக வைக்கப்பட்டி​ருந்த கட்​டுக்கட்​டான பணம் பறிமுதல் செய்யப்பட்டது மற்​றொரு சான​லில் ஒளிபரப்பானது. கட்சிகளுடன் சானல்க​ளும் சேர்ந்து செய்த தேர்தல் வியாபார​மும், நேயர்க​ளின் நம்​பிக்​கையை அடிப்படையாகக் கொண்டதே என்ப​தைச் சொல்லத் தேவை​யில்லை.

என்றே​னும் ஒரு​நாள், இவை​யெல்​லாம் மாறக்கூ​டும்... நம்​பிக்கை வியாபாரிகளிடம் சிக்​காத நாள் கூட வர​லாம்...​ நம்​புங்கள்...!

0 comments:

Post a Comment