கடலை நோக்கி ஒரு கட் எறும்பு வந்துட்டிருந்தது.
'வேறு வழியே இல்லை தற்கொலை செய்திடத்தான் வேணுமின்னு' , வெடுக் வெடுக் னு நடந்தால் விடிஞ்சிடும் என்ற காரணத்தால் குடு குடு வென்று குறுக்கும் மறுக்குமாக ஓடி வந்திட்டுதான் இருந்தது .
வழியில் ஒரு நண்டு.
கட் எறும்பு செல்லும் பாதைக்கு நேர் எதிரே , அழுதுட்டு வருவதைக் கண்டதும் இறக்கம் பொத்துக்கொண்டு வந்தது அந்த கட் எறும்புக்கு.
வழியில் ஒரு மேடு ,
அதில் தனது தாத்தனைப் பொரித்துத் தின்னுட்டு இருப்பதாகவும் , அதுவும் நெருப்பைக் கண்டு பிடித்த ஒசந்த சாதிக் கார நாயிவே தின்னுட்டு கொக்கரிப்பதாவும் சொன்னது நண்டு .
ஆளு தான் வளந்திக்கிறியே தவிர ,உனுக்கெல்லாம் மண்டைல கறியே வளர்ல .
நல்லா சொல்லறேன் ,கவனிச்சுக் கேளு என தட்(that) கட் எறும்பு சொல்கிறது,
உன்ன சீண்டினவன் சின்னாபின்னம் ஆவறவரைக்கும் விடக்கூடாது .சீவக் கட்டையா மாறியாவது சிதைச்சரனும்.
அவனுங்கள நான் என்ன பண்கிறேன் பாரு ,என்று நண்டை இழுத்துக்கொண்டு சென்றது கட் எறும்பு .
நிற்க .
நேற்று கூடப்பாருங்கள் .
அந்த அபிஷ்ட்டு இந்துக் காரர்கள் , கோட்சேக்கு சிலை வைத்தால், நாங்கோ அப்சல் குருவுக்கு சிலை வைப்போம் பாத்துக்கிடுங்க என்கிறார்கள்
கோட்சே சிலை வைப்பது வடிகட்டின முட்டாள் தனம் கேனத் தனம் பைத்தியக்காரன் தனம் என்றால்,
அவ்வாறு வைப்பவன் மென்டல் அறிவு கெட்டவன் என்றால்,
அதற்கு எதிர் வினையாற்ற ....................
அதை எதிர்க்க....................எத்தனையோ வழியிருக்க மனிதரில் மாணிக்கம் பார்லிமென்டில் பட்டாசு கொளுத்தி தீபாவளி கொண்டாடிய பச்ச மண்ணு அப்சல் குரு சிலை தானா கிடைத்தது .
அந்த இந்துக் காரன் அறிவிலி, தாங்கள் ஓர் ஒப்பற்ற அறிவாளி .
அட டா என்னே நிங்களது வியாக்கியானம் .
இல்ல
தெரிந்தேதான் கேட்கிறேன்,
ஏன் யா ? ஏன்?
எங்களையெல்லாம் பார்த்தால் எப்படித் தெரிகிறது .?
ஆடுங்கள் வழித் தோன்றல்களே ஆடுங்கள் .உங்களின் மார்க்கத்திலும் மேடுகள் பல உண்டு .அங்கு உங்களை எல்லாம் வறுத்துத் தின்ன ஒருத்தன் நிச்சயமாக சத்தியாமாக உறுதியாக இருப்பான் .
மேலே இருந்து எல்லாத்தையும் பாத்துக்கொண்டிருக்கும் எல்லாம் வல்லவா Mr.786, இதையெல்லாம் நன்னா பார்த்துக்கொள்ளுங்கள் .
நகர்க..
அந்த நண்டு நிலமை என்ன ஆச்சென சொல்ல வேண்டும் .
பஞ்ச் எல்லாம் பேசி இழுத்துக்கொண்டு போனதல்லவா ?தட் எறும்பு.
கொஞ்ச தூரத்தில் அந்த மேடு தென்பட ஆரம்பித்ததும் ,நண்டக்காணோம் துணியக்காணோம் என மூச்சை அழுத்திப் பிடித்து , ஓட்டம் எடுத்துக் கொண்டது .பாதியில் அத்துவுட்டுட்டு போறியே இது நியாயமா?எலே கட் எறும்பு மூதி! என நண்டு கத்த,
sorry bro அதனாலதான் I am called cut எறும்பு என சொல்வது காதுகளை அடையும் முன்னரே தட் cut எறும்பு கரையை அடைந்திருந்தது..
நண்டின் நிலமை அய்யோ பாவம் .தாத்தனுக்குப் போட்ட அதே மசாலா.அதே தேவ்சா(a big vessel for cooking).
நெருப்பு மூட்டப் படுகிறது .நண்டு வறுவல் தொடங்கிற்று.
-கொக்குவிரட்டி
தேன்மழை
0 comments:
Post a Comment