பெரியார் அண்ணா காலம் , அதற்கு முன்பாக கூட இருக்கலாம் . மக்கள் பணி , பொது சேவை என்று எப்பிள்ளையாவது கிளம்பினால், அவ்வளவு தான் சீவக்கட்டையை தூக்கிக் கொண்டு வந்து விடுவார் அன்னையார்.
ஏன் என்றால் அன்றிருந்த காலம் அப்படி , காமராசர் , ஜிவானந்தம் போன்ற வாழத் தெரியாதவர்கள் அந்த நிலையை ஏற்படுத்தி விட்டிருந்தார்கள், "ஊருக்கு உழைப்பவன் ஆண்டி"
இன்றோ , ஒன்றரை கோடி ரூவாய் Land Rover Discovery மகிழ்வுந்தில் வந்தேனும் மக்களுக்கு சேவை புரிய துடிக்கும் ஆண்டிமுத்து ராசாக்கள் மலிந்த காலத்தில் ,
ஞாயிற்று கிழமை கறிக்கடைகளில் முய்க்கும் ஈக்களைப் போல பொதுப்பணியாற்ற எத்தனைப் பேர்டா யப்பா!.அந்த அன்னைமார்களுக்கும் நன்றாகப் புரிந்துள்ளது .கொம்பு சீவி அவர்களே கூட ஏற்றியும் விடுவார்கள் .
இப்போது கூடப் பாருங்கள் ,இல.வேலுபிரபாகரன் , பெரியார் அண்ணா திராவிடர் கழகம் என்றொரு கட்சியைப் புதிதாகத் "தூக்கி"யிருக்கிறார் , இருக்கிற திராவிடர் கலகங்கள் போதாதென்று.அந்த மனிதர் யார் என அறிய விரும்பும் நெஞ்சங்களுக்கு இந்த இணைப்பு .
அங்ஙனே போய்ப் பார்க்க நேர வசதிப்படாதவர்களுக்கு, வேலுபிரபாகரன் யாரென்று ஓரே வரியில் சொல்லி விடுகிறேன் ,'கடவுள் ,காதல் கதை ' போன்ற காண்பதற்கு அரிய , காணக்கிடைக்காத , காண சகியாத அமர காவியங்களைப் படைத்துத் தள்ளியவர் .
இவர்கள் எல்லாம் எனக்கு இப்போது நன்றாக உணர்த்துவது இது தான் , "ஊருக்கு உழைத்தால் , ஊருதான் போண்டி!"
*************------------------*************
மதுவை அருந்து
மரணமே மருந்து .
கூடவே இருந்து,
கொன்றதும் விருந்து ;
அதிகாரப் பருந்து,
கவ்வும் காத்திருந்து!
மக்களை மறந்து ,
போலாமோ திருந்து!
***********---------------------***********
சாக்கடையில் எதற்காவது வாய் வைப்போமா?
நம் வாய் தான் அந்த சாக்கடையின் ஆரம்பம் என்பதை அறிவோமா?
மூளைக்கார முத்தப் போராட்டதாரர்கள் இதை அறிவார்களா?
"இரு தூளைக்குள் இடையே துளைந்து போகும் வாழ்வில் மூன்றாம் பாதைக்குள் வாழ்வொளி தந்தனையே!
நும் நெற்றிச் சூட்டின் வெப்பத்தில்
என் கழுத்தின் நாளம் படபடக்கும்
எத்தனைப் பொருத்தம் பார்த்தென்ன
என் கழுத்துன் நெற்றியின் பொருத்தம் போல்
எதுதான் மெய்க்கும் இறுதி வரை
பஞ்சனைய நின் விரல்கள் துயிலு
மென் கண்ணம் தான் பஞ்சணையாம்
படுத்தாலும் நிலமாக
என் கால்கள் மேல் நின்றிடுவாய்!
மைவிழியே! மயில் மொழியே !"
என்று அகமகிழ்வோடு அள்ளி யிடுங்களய்யா ஆயிரம் முத்தம் ,கட்டிய மனைவிக்கு ,யார் கேட்பது? ,எவர் தடுப்பது ??
அவ்வாறின்றி ,அவுத்துவிட்ட பொதிகாளையாட்டம் ஆட்டம் போட்டால் ?,என் செயக் கடவது எந்தமிழ் சமூகமே!
***************--------------------***************
நதி யோடும் கரையோரம்
நரை தோன்றிக் கிழவன்தன்
உடை வீசிக் கிடந்தானே!
சுடுகாட்டில் பிணம் போல,
சுகமாக வெயில் காய,
உடலை, ரவி சுடலை !!!
ஆவியாகிப் போகின்றாள்!
அன்னையவள் சாகின்றாள் !
கண்முன்னம் நிகழ்ந்தாலும்
காப்பதற்கோர் வழியிலையே!
நீர்தானே!ஹும் தொலைகிறது!
நீளமழை பொழியாதோ !
நீர் நிலையும் நிரம்பாதோ ?
மற்றோர்போல் இவ்வாறு ,
வற்றுதலோ சகியவில்லை!
ஊற்றி மட்டுமோ
வளர்த்தாள்,அன்பால்
போற்றிப் பேணிக்
காத்தவளன்றோ ! காவிரி !!

In Summary:
Clean Pearls2:
*Movie Director VeluPrabhakaran came up with a new dravidian party.
*Only Death cures Alcoholism.Governments enjoy people dying of alcohol.
*If urged marry and kiss wives,not the collegues.Only that can give good feel.Not "kiss of love"
*Dried river may appear as sand bed for us but not for all especially for a man who loved river as his mother.
-தேன்!

0 comments:
Post a Comment