Monday, August 27, 2012

கடவுள் எங்கே இருக்கிறார்???

நான் நாதீகன்.ஈரோட்டுக்காரனின் எண்ணத்தைப்பற்றி எப்பொழுதும் எத்தனிப்பவன்.
வீட்டில் சின்ன சண்டை.என்ன சண்டை என்று இக்கணத்தில் சொல்வதால் பயனேதும் விளையப்போவதில்லை.வீட்டிலிருந்து கொடைக்கானலுக்கு சென்றேன்.எட்டிவிடும் தூரம் இல்லை என்றாலும்  இருசக்கர வாகனத்தில்தான் சென்றேன்.கொஞ்சம் வேகம் அதிகமாகத் தான்.

பழனி தாண்டிய சிறிது தூரத்தில் நிறைய மாங்கொல்லைகள்.வேலிகளையும் தாண்டி என் கண்கள் அம்மாங்காய்களை உப்பு சேர்த்து அதன் உவர்ப்பை ருசித்துகொண்டது.போகும் போதே சின்னதாய் தூறல் ஆரம்பித்திருந்தது.இருந்தும் சென்றேன்.

என் செல்கைக்கு நோக்கம் எதுவுமில்லை.வேண்டுமானால் மனபாரத்தை இயற்கை அன்னையின் மடியில் இறக்கிவைக்க விரைந்தேன் எனலாம்.போனேன்.கோடையின் கொடையை ரசித்தேன்.அரும்பிய தூறல் கொடி போல் படர ஆரம்பித்தது.மலையில் மழை என்ற சொற்றொடரை இங்கு பிரயோகிப்பது சாலப் பொருத்தம்.நல்ல மழை!.
என்னை ஏதோ விரட்டுவது போல் மழை அடி அடி என்று அடித்தது.

வண்டியில் வேகம் கூடியது.
மழையின் போது தார்சாலையில் மழைநீர் மெல்லிய படலம் போல் உருவாகி  தரைக்கும் வண்டியின் சக்கரத்திற்கும் இடையில் உள்ள பிடிமானத்தை வெகுவாக குறைத்து விடும்.ஆகவே மழையில் வாகனம் ஓட்டுவது பனிசறுக்கிற்கு ஈடானது.கவனமாக அல்ல மிக மிக கவனமாகவே ஓட்ட வேண்டும்.
ஆனால் நான் எப்படி ஓட்டினேன் என்று சொன்னேன்-வேகமாக அல்லவா?

அதனால் விளைந்தது என்னவென்று கேளுங்கள்;
கொடைக்கானலை விட்டு கிளம்பிய கொஞ்ச நேரத்திலேயே மழையில் வண்டி சறுக்கிவிட்டது.பொடேலென்னு நான் வண்டியிலிருந்து விழுந்து மழை நீரோடு தார் சாலையில் கொஞ்ச தூரம் சறுக்கி சென்று புரண்டு கிடந்தேன்.

எத்தனையோ மகிழுந்துகள்,இரு சக்கரவண்டிகள் சென்றன,ஒன்றும் பரிவு காட்டவில்லை.ஏன் என்று கேட்கவே நாதி யற்றுக் கிடந்தேன்.எழ முயற்சித்தேன் முடியவில்லை.அருகில் மாடுமேய்த்துக்கொண்டிருந்தவர்,(ஒரு நாப்பது வயது இருக்கும்), மழையால் வீடு நோக்கி விரைந்துகொண்டிருந்தார் போலும்.என்னைக் கொண்டதும்,வேகமாக அருகில் வந்து, கை கொடுத்து தூக்கி விட்டு,விழுந்திருந்த வண்டியையும் எடுத்து நிறுத்தி (நல்ல வேலை வண்டிக்கு பெரிய சேதம் ஒன்றுமில்லை,சிறு சிறு கீறலோடு தப்பித்தது),மெல்ல என்னை அழைத்துச் சென்று அருகிலிருந்த தேநீர்க்கடையில் வெந்நீர் வாங்கி என் மேல் படிந்திருந்த சேற்றைக் கழுவி விட்டார்.

உடலில் நிறைய காயங்கள் இருந்தன.
பயங்கர வலி.
என் நன்றியை எப்படிக்காண்பிப்பது என்று தெரியவில்லை.
பணப்பையிலிருந்து நூறு ரூபாய் எடுத்துக் கொடுத்தேன்.

அதற்கு அவர் சொன்னார்,
"பணமெல்லாம் வேணாம் சாமி , நீங்க பத்திரமா வூடு போய் சேருங்க , அது போதும் என்று!!!!"

அங்கு நான் கடவுளைக் கண்டேன்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!.





கொக்கு விரட்டி,
தேன்மழை.

1 comments: