இந்த கொசுவிரட்டிப் பயல எங்கனுதான் தேடறது,எத்தன நாளு தான் தேடறது?சரி சும்மா கூகிள் ஆண்டவர்கிட்ட போய் கேட்டுப் பாப்போமேனு பாக்கும்போது,முகநூலில் ஒரு செய்தி தட்டுப்பட்டது, நம் எண்ணத்தை அது அப்படியே பிரதிபலிப்பதால் அதை அப்படியே பதிவிடுகிறோம், கேரளா கடற்பரப்பில் இத்தாலிய கப்பல் படையால் கொல்லப்பட்ட இரண்டு தமிழக மீனவர்கள். இதில் அலச வேண்டிய விடயங்கள் என்னவென்றால்.,
1. இந்த நிகழ்விற்கு உடனே இந்திய ஊடகங்கள் அதிக முக்கியத்துவம் கொடுத்தது.2. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஏ கே அந்தோனி உடனே தலையிட்டு இத்தாலிய தூதரகத்திற்கு கண்டனம் தெரிவித்தது.
3. கேரளா காவல் துறை உடனே விரைந்து இத்தாலிய கப்பல் வாசிகளை விசாரித்தது.
4. கேரளா காவல் துறை இத்தாலிய கப்பலை தங்கள் பாதுகாப்பில் கொண்டு வந்தது .
5. கேரளா அரசும் தமிழ்நாட்டு அரசும் உடனே தலா 5 லட்சம் இறந்த மீனவர்களுக்கு இழப்பீடு அறிவித்தது.
6. இந்திய அரசு இத்தாலிய அரசிடம் தங்கள் ராஜதந்திர உறவை முறிக்க நேரிடும் என பயமுறுத்தியது.
7. கேரளா அரசு தன்னுடைய அரசு உயர்மட்ட குழுவை இத்தாலிய உயர்மட்ட குழுவுடன் இழப்பீடு குறித்து ஆலோசனை நடத்தியது..
மேலே குறிப்பட்ட நிகழ்வுகள் ஓரிரு நாட்களில் நிறைவேறியது மிகப்பெரிய ஆச்சர்யத்தை தமிழக மீனவர்களுக்கு கொடுக்கிறது. இப்படிப்பட்ட எந்த நிகழ்வும் இலங்கை கடற்படையால் தமிழக மீனவர்கள் கொல்லப்பட்ட போது நடக்கவில்லை என்பதை எதை குறிக்கிறது. கேரளா அரசின் சாமர்த்தியமும் தமிழக அரசின் கையாலாகாத்தனமும் வெட்ட வெளிச்சமாகிறது. கேரளா அரசிடம் தமிழக அரசு கற்றுக் கொள்ளவேண்டிய பாடமும் தெளிவாகிறது.
எத்தனை உண்ண விரதங்கள்,போராட்டங்கள்,ஆர்ப்பாட்டங்கள், இருந்தும் என்ன பயன்? சிங்களவன் துப்பாக்கிக்கு இரையாகி,பின் அவன் வீட்டில் எலவானது தான் மிச்சம்,தமிழகத்தில்.
நம்மை விட அமைப்பில்கூட சிறிய மாநிலமான கேரளா,போனதும் ஒரு உயிரே,நம்மைப் போல் 600கூட அல்ல-ஆனால் அதற்கு அவர்களின் நடவடிக்கையைப் பாருங்கள்.
சிங்களக் கடற்படையால் உருவான 600 கைம்பெண்களும் ஏனைய தமிழ் மக்களும் , இச்சேதி கேட்டு மனதில் என்ன நினைத்திருப்பார்கள?.போக்கத்தவனுக்கு பொண்டாட்டியா இருக்கறதவிட,வச்சு காப்பாத்தறவனுக்கு வப்பாட்டி இருந்திடலாம்
-கொக்குவிரட்டி
0 comments:
Post a Comment